Published:Updated:

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

கார்கள் 2021
பிரீமியம் ஸ்டோரி
News
கார்கள் 2021

பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர்பெற்ற தனது N பிராண்டை, மூன்றாம் தலைமுறை i20 வாயிலாக இந்தியாவுக்குக் கொண்டுவர உள்ளது ஹூண்டாய்.

`2020 முடியட்டும். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்' என்று பலரும் கார் வாங்கும் திட்டத்தை இந்த ஆண்டுக்காக நகர்த்தி வைத்திருந்தார்கள். 2021 பிறந்துவிட்டது. மலர்ந்திருக்கும் வாய்ப்பைப் பயபடுத்திக்கொள்ள கார் கம்பெனிகள் முழு மூச்சில் தயாராகி வருகிறார்கள். ஆக்கப் பொறுத்த வாடிக்கையாளர்கள் ஆறவும் பொறுத்தால், ``இந்தக் கார் இந்த வருடம் வரப்போகிறது என்று தெரியாமல் போய்விட்டதே... தெரிந்திருந்தால் காத்திருந்து இதையே வாங்கியிருப்பேனே!" என்று வருத்தப்படத் தேவை இருக்காது. அத்தகைய வாசகர்களின் வசதிக்காகத்தான் வரப்போகும் கார்களின் பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹேட்ச்பேக்ஸ்

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஹூண்டாய் i20 N Line

பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர்பெற்ற தனது N பிராண்டை, மூன்றாம் தலைமுறை i20 வாயிலாக இந்தியாவுக்குக் கொண்டுவர உள்ளது ஹூண்டாய். i20 N Line என அழைக்கப்படும் இந்த காரின் தோற்றம், வழக்கமான மாடலைவிட ஸ்போர்ட்டியாக இருக்கும் என்பது உறுதி. எனவே புதிய பம்பர்கள், Chequered Flag ஃபினிஷ் கொண்ட கறுப்பு கிரில், முக்கோண வடிவ பனி விளக்குகள், டபுள் பேரல் க்ரோம் எக்ஸாஸ்ட், 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், N Line பேட்ஜிங்.... இந்த i20-யை அலங்கரிக்கப் போகின்றன. இதிலிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் 204bhp i20 N, நம் ஊருக்கு வந்தால் எப்படி இருக்கும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மாருதி சுஸூகி செலெரியோ

கடந்த 2015-ம் ஆண்டில் அறிமுகமான பெலினோ, ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே! இதனால் ஒவ்வொரு மாதமும் இங்கே அதிகமாக விற்பனையான கார்களில், பெலினோ தவறாது இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த காரின் இரண்டாம் தலைமுறை மாடலை மாருதி சுஸூகி வெளியிட முடிவு செய்திருக்கிறது. தற்போது விற்பனையாகும் பெலினோ போலவே, இதுவும் Made in India for Global Markets என்ற கோட்பாட்டின்படி இருக்கும் என்பது செம. முன்பைவிட ப்ரீமியமான கேபின் கிடைத்தால், இது ஒரு முழுமையான காராகிவிடும். இதில் டீசல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மாருதி சுஸூகி பெலினோ

கடந்த ஆண்டிலேயே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாம் தலைமுறை செலெரியோவைக் களமிறக்க உள்ளது மாருதி சுஸூகி. இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களில் பின்பற்றப்படும் டிசைன் கோட்பாடுகளே இதிலும் இடம்பெறும். பட்ஜெட் கார் என்றாலும், இதிலும் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். டேஷ்போர்டின் தோற்றம், தற்போதைய மாடலைவிட வித்தியாசமாகவே இருக்கக்கூடும். மாருதி சுஸூகியின் Heartect ப்ளாட்ஃபார்மில், புதிய செலெரியோ கட்டமைக்கப்படும். இதனால் இது பெரிய காராக வளர்ந்திருப்பதற்கான சாத்தியம் உண்டு. எனவே முன்பைவிட இடவசதியை காரில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். வேகன்-ஆர் போலவே, புதிய செலெரியோவிலும் இரு இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அதன்படி 1.0 லிட்டர் - 3 சிலிண்டர் மற்றும் 1.2 லிட்டர் - 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் இணைக்கப்படும்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

டாடா அல்ட்ராஸ் டர்போ

காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், அல்ட்ராஸின் பெர்ஃபாமன்ஸ் வெர்ஷனைக் களமிறக்க உள்ளது டாடா. அல்ட்ராஸ் டர்போ என அழைக்கப்படும் இதில், நெக்ஸானில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும். JTP மாடல்களைப் போலவே, இங்கும் 110bhp பவரே கிடைக்கும். வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, புத்தம் புதிய டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை, டாடா இந்த காரில் அறிமுகப்படுத்த இருக்கிறது. காரின் வெளிப்புறம் & உட்புறத்தில், கொஞ்சம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நெக்ஸானில் உள்ள டர்போ டீசல் இன்ஜின் கொண்ட மாடல் வந்தால், டபுள் டமாக்கா தான்!

எம்பிவி

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

கியா மிட்சைஸ் எம்பிவி

கடந்தாண்டில் ப்ரீமியமான கார்னிவல் எம்பிவியைக் களமிறக்கிய கியா, மிட்சைஸ் எம்பிவி செக்மென்ட்டில் ஒரு மாடலை வெளியிட இருக்கிறது. இது பெட்ரோல்/டீசல் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரு வகையான இன்ஜின்/கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பது செம. எர்டிகா மற்றும் மராத்ஸோவுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த 7 சீட்டர், செல்ட்டோஸை விடப் பெரிதாக இருக்கும். கியாவின் லேட்டஸ்ட் டிசைன்தான் இதிலும் எதிரொலிக்கும். 115bhp பவரைத் தரும் இன்ஜின் ஆப்ஷன்கள் போலவே, வசதிகளிலும் செல்ட்டோஸை இந்த எம்பிவி நகல் எடுக்கும். எனவே டாப் வேரியன்ட்களில் சன்ரூஃப், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வென்டிலேட்டட் சீட்கள், 360 டிகிரி கேமரா, HUD போன்ற ப்ரீமியம் வசதிகள் இடம்பெறக்கூடும்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மஹிந்திரா மராத்ஸோ பெட்ரோல்

மராத்ஸோவின் BS-6 டீசல் வெர்ஷனைத் தொடர்ந்து, அதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்க மஹிந்திரா முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய mStallion இன்ஜின் சீரிஸில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், இந்த எம்பிவியில் பயன்படுத்தப்படும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ள இது, 163bhp பவர் & 28kgm டார்க்கை வெளிப்படுத்தும். எர்டிகா & இனோவா க்ரிஸ்ட்டா ஆகியவற்றின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு இடையே, மராத்ஸோ பெட்ரோல் பொசிஷன் செய்யப்படும். இதன் தோற்றத்தில் வித்தியாசங்கள் இருக்காமல் போகலாம். இந்த எம்பிவியை அடிப்படையாகக் கொண்டு, ஃபோர்டு நிறுவனமும் ஒரு காரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ரெனோ ட்ரைபர் டர்போ

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ட்ரைபர், தனது பன்முகத்திறமையால் பலரது மனதையும் கவர்ந்தது. என்றாலும், இந்த காரில் மைனஸாக இருந்தது, அதிலிருந்த பவர் குறைவான இன்ஜின்தான். அதற்கான தீர்வாக, மேக்னைட் மற்றும் Kiger ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, இந்த எம்பிவியில் பொருத்த உள்ளது ரெனோ. டாப் வேரியன்ட்களில் மட்டுமே இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், இந்த 3 சிலிண்டர் இன்ஜினுடன் இணைக்கப்படும். பேட்ஜிங்கைத் தாண்டி, காரின் டிசைனில் எந்த மாறுதலும் இல்லாமல் போகலாம்.

எலெக்ட்ரிக் கார்கள்

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மஹிந்திரா eKUV 1OO

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட்டாகவும், 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் Prototype ஆகவும் eKUV 1OO காட்சிபடுத்தப்பட்டது. FAME II மானியத்தைச் சேர்த்து, அப்போது 8.25 லட்ச ரூபாய் எனும் விலையை இதற்கு மஹிந்திரா நிர்ணயித்தது. என்றாலும், இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான அறிமுகம் இன்னும் நடக்கப்பெறவில்லை. eKUV 1OO-ல் இருக்கும் 40kw எலெக்ட்ரிக் மோட்டார், 54.4bhp பவரைத் தருகிறது. லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியின் உதவியுடன், ஃபுல் சார்ஜில் 150கிமீ தூரம் செல்லமுடியும். வழக்கமான சார்ஜரில் 5.45 மணி நேரமும், ஃபாஸ்ட் சார்ஜரில் 55 நிமிடங்களிலும், இந்த பேட்டரியைச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, இதில் கிரில் கிடையாது. மேலும் பின்பக்கத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் மூடிக்குப் பதிலாக, முன்பக்க ஃபெண்டருக்கு அருகே சார்ஜிங் போர்ட் இடம்பெற்றுள்ளது. நம் நாட்டின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இது இருக்கலாம்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மஹிந்திரா eXUV 3OO

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் eXUV 3OO கான்செப்ட்டாகக் காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் கார்களுக்கான MESMA ப்ளாட்ஃபார்மில் இதைத் தயாரிக்க உள்ளது மஹிந்திரா. 350V எலெக்ட்ரிக் மோட்டார் இதில் பொருத்தப்படும் என்றாலும், பின்னாளில் பவர்ஃபுல்லான 380V எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இதனைத் தொடர்ந்து, இருவிதமான பேட்டரி Pack உடன் eXUV 3OO வரக்கூடும். அதன்படி 200கிமீ ரேஞ்ச் தரும் சிறிய பேட்டரி கொண்ட மாடல், நெக்ஸான் EV-க்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்படும். மேலும் 375கிமீ ரேஞ்ச் தரும் பெரிய பேட்டரி கொண்ட மாடல், MG ZS EV & ஹூண்டாய் கோனா EV-க்குப் போட்டியாக வரும். இந்த இரு பேட்டரி Pack-களையும், கொரியாவைச் சேர்ந்த LG Chem நிறுவனம் பிரத்யேகமாகத் தயாரித்துள்ளது.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ரெனோ க்விட் EV

சர்வதேச சந்தைகளில் City K-ZE என அறியப்படும் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக், இந்தியாவில் க்விட் EV என்ற அடைமொழியுடன் வரலாம். 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இது, பார்க்க வழக்கமான மாடல் போலவே உள்ளது. என்றாலும், கிரில்லில் வித்தியாசம் இருக்கலாம். உள்பக்கத்தில் டிஜிட்டல் மீட்டர், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் தொடரலாம். இதில் இருக்கும் 26.8kWh பேட்டரி Pack கொண்டு, காரில் ஃபுல் சார்ஜில் 225கிமீ தூரம் பயணிக்க முடியும் (WLTP விதிகள்படி). 30kW CCS DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது, ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே பேட்டரியை 80% வரை சார்ஜ் ஏற்றமுடியும். மற்றபடி காருடன் வழங்கப்படும் 7.4kW Wall Box சார்ஜரைப் பயன்படுத்தும்போது, பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்ற 5 மணிநேரம் ஆகும். 44bhp பவர் & 12.5kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 100கிமீ வேகம் வரை K-ZE செல்வதற்குத் துணைநிற்கிறது.

பெர்ஃபாமன்ஸ் கார்

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட்

சர்வதேசச் சந்தைகளில் 2019-ம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டாலும், ஒருவழியாக இந்தியாவுக்கு இந்த GT காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரப்போகிறது. பானெட், பம்பர்கள், LED லைட்டிங், டெயில்கேட் ஆகியவை புதிது. கடந்த 2016-ல் நம் நாட்டில் அறிமுகமான மஸ்டாங், 401bhp பவரையே வெளிப்படுத்தியது. ஆனால் இந்த லேட்டஸ்ட் மாடல், 450bhp@7,000rpm பவரைத் தரும். இந்த Naturally Aspirated V8 இன்ஜின், 7,500 ஆர்பிஎம் ரெட்லைனைக் கொண்டிருக்கும். இதனுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒன்றுசேர்ந்து, ஸ்போர்ட்டியான அனுபவத்துக்கு வழிவகை செய்கின்றன. இப்படி காரின் செயல்திறன் கூடியிருப்பதால், மஸ்டாங்கின் பிரேக்குகளையும் அப்டேட் செய்திருக்கிறது ஃபோர்டு. இதன் முன்பக்கத்தில், பெரிய 353மிமீ டிஸ்க் - 4 பிஸ்டன் கேலிப்பர் பொருத்தப்பட்டுள்ளது.

செடான்

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஆடி A3

இரண்டாம் தலைமுறை A3, கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சர்வதேசச் சந்தைகளில் அறிமுகமாகிவிட்டது. இந்தியாவில் காம்பேக்ட் லக்ஸூரி செடான் செக்மென்ட்டைத் தொடங்கிவைத்த இந்த செடான், முன்பைவிட ஷார்ப்பான டிசைனில் அசத்துகிறது. காரின் அளவுகள் முன்புபோலவே இருந்தாலும், இடவசதியில் முன்னேற்றம் இருக்கும் என்கிறது ஆடி. மற்றபடி LED லைட்டிங், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 10.25 இன்ச் Virtual Cockpit, HUD, Shift by Wire, டச்பேடு போன்ற லேட்டஸ்ட் அம்சங்கள், புதிய A3-ல் இடம்பிடித்துள்ளன. 35TFSI எனும் வேரியன்ட்டில் வரப்போகும் இந்த செடானில் இருப்பது, 150bhp பவரைத் தரும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். இது 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மைலேஜுக்காக, Cylinder Deactivation & 48V Mild Hybrid தொழில்நுட்பங்கள் இதில் இருக்கின்றன.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஹூண்டாய் எலான்ட்ரா

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சர்வதேசச் சந்தைகளில் 7-வது தலைமுறை எலான்ட்ராவை அறிமுகப்படுத்திவிட்டது ஹூண்டாய். சிவிக்கின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், புதிதாக வரப்போகும் ஆக்டேவியாதான் இதற்குப் பிரதான போட்டியாளராக இருக்கும். 'Parametric Dynamics’ எனும் டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ள எலான்ட்ரா, 4 கதவுகளைக் கொண்ட கூபே போல ஸ்டைலாக உள்ளது. ஹூண்டாயின் லேட்டஸ்ட் K3 ப்ளாட்ஃபார்மில் தயாராவதால், காரில் கூடுதல் இடவசதியும் எடைக் குறைப்பும் ஒருசேர நிகழ்ந்திருக்கிறது. டேஷ்போர்டு i20-யை நினைவுபடுத்தினாலும், அதைப்போலவே இங்கும் அதிகப்படியான வசதிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிறுவனத்தின் சமீபத்திய மாடல்களைப் போலவே, இதிலும் டர்போ வெர்ஷன் வெளிவரலாம் (N Line/ஹைபிரிட் வேரியன்ட்டும்தான்). மற்றபடி தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் 4 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன்கள், புதிய எலான்ட்ராவிலும் தொடரும்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஆடி A4 ஃபேஸ்லிஃப்ட்

2020-ல் அமைதியாக இருந்த ஆடி, 2021-ல் அதிரடியான திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறது. அதன் தொடக்கப் புள்ளியாக A4 ஃபேஸ்லிஃப்ட் இருக்கப் போகிறது. BS-6 விதிகளுக்குக்கேற்பத் தயாராகியுள்ள இதில் புதிய பம்பர்கள், அகலமான Single Frame கிரில், மேம்படுத்தப்பட்ட LED ஹெட்லைட்ஸ், டெயில் லைட்டுக்கு இடையே க்ரோம் பட்டை, பக்கவாட்டில் பாடி லைன்கள் ஆகியவை புதிது. கேபினில் Virtual Cockpit, இன்டீரியர் லைட்டிங், 10.1 இன்ச் MMI டச் ஸ்க்ரீன் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. BS-4 மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருந்த நிலையில், BS-6 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 190bhp பவரைத் தருவதால் (முன்பைவிட 40bhp அதிகம்), பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸை எதிர்பார்க்கலாம். Quattro சிஸ்டம் இல்லாவிட்டாலும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த இன்ஜின் இணைந்திருக்கிறது.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் LWB

பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் GT பார்க்க வித்தியாசமாக இருந்தாலும், அது இந்தியாவில் அதிரிபுதிரி ஹிட் அடித்தது ஆச்சர்யமான விஷயமே! அதிகப்படியான பின்பக்க இடவசதியைக் கொண்டிருந்த அந்த கார், 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸுக்கு இடையே பொசிஷன் ஆகியிருந்தது ஹைலைட் அம்சம். தற்போது விற்பனை செய்யப்படும் 3 சீரிஸில், GT வகை கார் தயாரிக்கப்படப் போவதில்லை எனத் தகவல் வந்திருக்கிறது. எனவே அதற்கான மாற்றாக, 3 சீரிஸ் LWB மாடல் களமிறக்கப்பட உள்ளது. வலதுபுற ஸ்டீயரிங் செட்-அப்பில், இது நம் நாட்டுக்குத்தான் முதலில் வரப்போவது என்பது ஸ்பெஷல். பெயருக்கேற்றபடியே, இது வழக்கமான மாடலைவிட 110மிமீ அதிக வீல்பேஸைக் கொண்டுள்ளது. எனவே கூடுதல் பின்பக்க இடவசதியுடன், இன்னும் சொகுசான பின்பக்க இருக்கைகள் இங்கே சேர்ந்துள்ளன. 330i (258bhp பெட்ரோல்) மற்றும் 320d (190bhp டீசல்) எனும் வேரியன்ட்களில் 3 சீரிஸ் LWB விற்பனை செய்யப்படும்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஹோண்டா சிட்டி ஹைபிரிட்

பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைத் தொடர்ந்து, ஐந்தாம் தலைமுறை சிட்டி ஹைபிரிட் ஆப்ஷனுடனும் வரவிருக்கிறது. இதிலுள்ள 1.5 லிட்டர் Atkinson Cycle பெட்ரோல் இன்ஜின், 98bhp பவரை வெளிப்படுத்துகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள ISG மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி, 109bhp பவரைத் தருகிறது. எனவே ஒருவர் கார் ஓட்டும் விதத்தைப் பொறுத்து, இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் அல்லது இரண்டும் சேர்ந்து இயங்கும். எனவே இதன் மைலேஜ், வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் (27கிமீ-க்கும் அதிகமான அராய் மைலேஜ்). ஆனால் இதன் விலை, அதன் வகையிலே காஸ்ட்லியான காராக இருக்கும் சிட்டியின் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பது நெருடல்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

மெர்சிடீஸ் பென்ஸ் A-க்ளாஸ் செடான்

CLA நிறுத்தப்பட்ட நிலையில், A-க்ளாஸ் செடான் அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறது. ஆனால் 4 Pillar-Less கதவுகள் - டைட்டான ரூஃப் - காம்பேக்ட் வீல்பேஸ் கொண்ட கூபே காராக CLA இருந்த நிலையில், வழக்கமான கதவுகள் மற்றும் ரூஃப் லைன் - அதிக வீல்பேஸ் கொண்ட காராக A-க்ளாஸ் செடான் இருக்கிறது. எனவே டிசைனில் கவர்ச்சி இல்லாவிட்டாலும், முன்பைவிட பிராக்டிக்காலிட்டியில் இது ஸ்கோர் செய்யும் எனலாம். இன்னும் சொல்லப்போனால், பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் Gran Coupe-வை விட இது நீளமான கார் என்பது செம. A220d வேரியன்ட்டில் 190bhp பவரைத் தரும் டீசல் இன்ஜின் இருந்தால், A200 வேரியன்ட்டில் 185bhp பவரைத் தரும் பெட்ரோல் இன்ஜின் உண்டு. ஒரே டாப் வேரியன்ட்டில் கார் வரும் என்பதால் MBUX - கனெக்ட்டிவிட்டி அம்சம் கொண்ட டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், LED ஹெட்லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், Powered முன்பக்க இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இடம்பெறலாம்.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஸ்கோடா ரேபிட்

ரேபிட்டுக்கு மாற்றாக, ஒரு புதிய மிட்சைஸ் செடானைக் களமிறக்க உள்ளது ஸ்கோடா. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், நம் நாட்டுக்கு வரப்போகும் இரண்டாவது ஸ்கோடா மாடல் இதுதான். இதுவும் புதிய வென்ட்டோ போலவே MQB AO IN ப்ளாட்ஃபார்மில்தான் தயாராகும் என்பதால், மெக்கானிக்கலாக இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கலாம். தற்போதைய ரேபிட்டைவிட இது அளவில் பெரிதாக இருக்கும் என்பதுடன், அதிக வசதிகளும் இடம்பெறும். LED லைட்டிங், டிஜிட்டல் மீட்டர், பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் அதற்கான உதாரணம். இதிலுள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வரும். புதிய வென்ட்டோ மற்றும் ரேபிட் ஆகிய இரண்டிலும், டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது என்பது ஏமாற்றமே!

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஸ்கோடா ஆக்டேவியா

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் மேம்படுத்தப்பட்ட MQB ப்ளாட்ஃபார்மில் தயாராகும் இது, முன்பைவிட 19மிமீ அதிக நீளம் மற்றும் 15மிமீ அதிக அகலம் உடன் வருகிறது. முந்தைய மாடலில் இருந்த ஸ்ப்ளிட் ஹெட்லைட்க்குப் பதிலாக, இதில் வழக்கமான ஹெட்லைட்ஸ் இருக்கின்றன. ஆனால் சூப்பர்ப் போலவே, இதன் டிசைனும் ஷார்ப்பாக இருப்பது நைஸ். 10.25 இன்ச் Virtual Cockpit, 10 இன்ச் Free Standing டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், HUD, கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், Gesture கன்ட்ரோல், லாரா என அழைக்கப்படும் டிஜிட்டல் அசிஸ்டன்ட், வயர்லெஸ் சார்ஜிங் என அதிக வசதிகள் இருக்கின்றன. டாப் மாடல்களில் 2.0 லிட்டர் TSI இன்ஜின் இருந்தால், ஆரம்ப மாடல்களில் 1.5 லிட்டர் TSI இன்ஜின் உள்ளது. ஆக்டேவியாவின் பொசிஷனிங்கைக் கருத்தில் கொள்ளும்போது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இங்கே உண்டு.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட்

புதிய கேம்ரி இங்கே அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதன் ஃபேஸ்லிஃப்ட்டைச் சரியான நேரத்தில் கொண்டு வருகிறது டொயோட்டா. மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர், புதிய அலாய் வீல்கள், மேம்படுத்தப்பட்ட LED டெயில் லைட்ஸ் ஆகியவை வெளிப்புறத்தில் இருக்கின்றன. உள்பக்கத்தில் தற்போது 8 இன்ச் சிஸ்டம் இருக்கும் நிலையில், இதில் 9 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் உண்டு. மற்றபடி காரில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது.

இந்த 21 கார்களுக்காகக் காத்திருக்கலாம்! - கார்கள் 2021 - ஒரு சிறப்புப் பார்வை!

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ

10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட வென்ட்டோவுக்கு மாற்றாக, ஒரு மிட்சைஸ் செடானை இந்தியாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். தென் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் Virtus காரை அடிப்படையாகக் கொண்டு, புதிய வென்ட்டோ தயாரிக்கப்படலாம். தற்போதைய மாடலைவிட இது நீளம், அகலம், வீல்பேஸ் ஆகியவற்றில் முன்னேறியிருக்கிறது. LED லைட்டிங், டிஜிட்டல் மீட்டர், பெரிய டச் ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெறலாம். 110bhp பவர் - 17.5kgm டார்க்கைத் தரும் 1.0 லிட்டர் TSI இன்ஜின்தான் இங்கேயும்!