Published:Updated:

0 - 100 kmph, எது வேகம்?

எது வேகம்?
பிரீமியம் ஸ்டோரி
எது வேகம்?

எது வேகம்?

0 - 100 kmph, எது வேகம்?

எது வேகம்?

Published:Updated:
எது வேகம்?
பிரீமியம் ஸ்டோரி
எது வேகம்?

புதிதாக ஒரு வாகனத்தை வாங்கும்போது, அது நம் தேவையைப் பூர்த்தி செய்யுமா என்றுதான் முதலில் பார்க்க வேண்டும். பிராண்ட் மற்றும் டிசைன் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். நமது மோட்டார் கிளினிக் கேள்வி - பதில் பகுதிக்கு அடிக்கடி வரும் கேள்விகளை வைத்து, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தேவைக்கான சிறந்த 5 வாகனங்களை, இந்த டாப் 5 பகுதியில் பார்க்கப் போகிறோம்.

குறைந்த விலையில் சீறிப் பாயும் கார்கள் ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் செல்லப் பிள்ளைகள். 10 லட்ச ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) பட்ஜெட்டில் 100 கிமீ வேகத்தை 10 விநாடிகளில் அடையும் டாப் 5 கார்களுடன் இந்தத் தொடரை இனிதே ஆரம்பிப்போம்.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டிதான் இந்த லிஸ்ட்டில் இருக்கும் வித்தியாசமான கார். ஏனென்றால், மற்றவை எல்லாம் புதிய டர்போ இன்ஜினைக் கொண்டிருக்க, சிட்டி இன்னும் ஹோண்டாவின் ட்ரேடு மார்க் i - VTEC இன்ஜினுடன் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் 1.5 லி பெட்ரோல் இன்ஜின் 118 bhp பவரை உற்பத்தி செய்து 6,600rpm -ல் வழங்குவதுடன், நான்காவது ஜென் மாடலின் ஆன்ரோடு விலை 10.89 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியாஸ் டர்போ

ஹூண்டாய் கிராண்ட் i10 நியாஸ் டர்போ
ஹூண்டாய் கிராண்ட் i10 நியாஸ் டர்போ

பெப்பியான இன்ஜினும் ஒரு ஹேட்ச்பேக் டிசைனும் உற்சாகமாக ஓட்டத் தூண்டும் காம்போ. i10 நியாஸ் டர்போவும் அப்படி ஒரு கார்தான். இதன் சிறிய 1.0-லிட்டர் டர்போ GDi இன்ஜின் 98bhp பவரையும், 172 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆன்ரோடு விலை 9.23 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

ஃபோக்ஸ்வாகன் போலோ

ஃபோக்ஸ்வாகன் போலோ
ஃபோக்ஸ்வாகன் போலோ

போலோவின் GTI மாடல்தான் உண்மையில் இந்தியாவில் ஹாட் ஹேட்ச்பேக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கார். தற்போது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ இன்ஜினுடன் வரும் போலோ TSI, 110bhp பவர் மற்றும் 175Nm உச்சபட்ச டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதிகமாக விற்பனையாகும் ஹைலைன் ப்ளஸ் வேரியன்ட் ₹10.26 லட்ச ரூபாயில் இருந்து வருகிறது. போலோவின் தயாரிப்பை நிறுத்தப் போவதாகச் செய்திகள் அடிபடுகின்றன. எனவே போலோ ரசிகர்கள் ஷோரூமுக்கு விரைந்திடுங்கள்.

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா

i10 நியாஸில் இருக்கும் அதே 1.0 லிட்டர் GDi இன்ஜின்தான் ஆராவில் வேலை செய்கிறது. கூடுதல் பூட் காரணமாக அதன் ஹேட்ச்பேக் மாடலைவிட இந்தப் போட்டியில் சற்றுப் பின் தங்குகிறது ஆரா. இந்த அழகான செடானில் வசதிகள் எக்கச்சக்கம். நியோஸ் போலவே ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை. பதிவு முடிந்து ரோட்டுக்கு வரும்போது, ஆன்ரோடு விலையாக, ₹10.20 லட்ச ரூபாய் நீங்கள் செலவழிக்க வேண்டும்.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்


நீண்ட காலமாகவே டஸ்ட்டர் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. 2020-ல் ஃபேஸ்லிஃப்ட்டுடன், புதிய 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் வெளியிட்டது ரெனோ. இந்த இன்ஜின் 154 bhp பவரையும், 254 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. மேலும் விலையைப் பொறுத்தவரை, ₹13.73 லட்சம் என்கிற ஆன்ரோடு விலையில் கொடுக்கும் காசுக்கு ஏற்ற மிட் சைஸ் SUV-களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் சில கார்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்ட காரணத்தினால், பழைய மார்க்கெட்டில் கவனிக்க வேண்டிய கார்கள் : ஃபோர்டு பிகோ / ஆஸ்பயர் (1.5 லி டீசல்) 9.72 விநாடிகளிலும், 1.0 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ 100 கிமீ வேகத்தை முறையே 9.77 & 10.42 விநாடிகளில் அடைகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism