Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா

SPY PHOTO - ரகசிய கேமரா
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO - ரகசிய கேமரா

டெஸ்ட்டிங்கில் ரெனோ க்விட் பேஸ்லிஃப்ட்.... என்ன எதிர்பார்க்கலாம்?

SPY PHOTO - ரகசிய கேமரா

டெஸ்ட்டிங்கில் ரெனோ க்விட் பேஸ்லிஃப்ட்.... என்ன எதிர்பார்க்கலாம்?

Published:Updated:
SPY PHOTO - ரகசிய கேமரா
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO - ரகசிய கேமரா

க்விட்... மாருதி சுஸூகி ஆல்ட்டோவுக்குப் பிரதானப் போட்டியாளராக வெளிவந்த இந்த பட்ஜெட் ஹேட்ச்பேக், எஸ்யூவி/க்ராஸ் ஓவர் டிசைனில் கடந்த 2015-ம் ஆண்டு கலக்கலாகக் களமிறங்கியது. இடையே 1.0 லிட்டர் SCe இன்ஜின், Creep வசதியுடன்கூடிய AMT கியர்பாக்ஸ், க்ளைம்பர் வேரியன்ட், பல ஸ்பெஷல் எடிஷன்கள் என இதில் ரெனோ மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்ததால், க்விட்டின் விற்பனை தேக்கமடையாமல் இருந்தது. க்விட்டின் பேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரியவந்துள்ளது. செங்கல்பட்டில் இதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோ.வி வாசகர் ஜெகதீஷ் பிரபாகரன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் ரெனோ காட்சிப்படுத்திய K-ZE எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்போல கார் இருப்பது தெளிவாகிறது. இதில் ஹேரியர் - வென்யூ - ஹெக்டர் ஆகியவற்றில் இருப்பதுபோலவே, LED DRL கிரில்லுக்கு அருகேயும் - பம்பரின் கீழ்ப்பகுதியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டும் உள்ளன. முன்பக்க-பின்பக்க பம்பர்கள், வீல்களில் பொருத்தப்பட்டுள்ள Hub Caps, டெயில் லைட்ஸ் ஆகியவை புதிது. விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Safety விதிகளின்படி, காரின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். இதிலும் Defogger மற்றும் வைப்பர் உடனான பின்பக்க விண்ட் ஷீல்டு ஆகியவை மிஸ்ஸிங். டேஷ்போர்டு அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. எனினும், கேபின் அப்ஹோல்சரியில் மாற்றமிருக்கலாம். K-ZE/ட்ரைபர் ஆகிய கார்களில் இருப்பதுபோன்ற டிஜிட்டல் மீட்டர், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், புதிய ஸ்டீயரிங் வீல், பின்பக்க பவர் விண்டோ ஆகியவை இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. 3 சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. என்றாலும் அவை BS-6 விதிகளின்படி இருக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

க்விட் காரைப் படம்பிடித்த வாசகர் ஜெகதீஷுக்கு

ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com