ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா

ஸ்கார்ப்பியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கார்ப்பியோ

புது ஸ்கார்ப்பியோவின் இன்டீரியர்!

டந்தாண்டு சென்னையில், Z101 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட புது ஸ்கார்ப்பியோ டெஸ்ட்டிங்கில் இருந்தபோது, இதன் பிரத்யேக ஸ்பை படங்களை மோட்டார் விகடன் முதன்முறையாக இணைய உலகில் பகிர்ந்தது.

தற்போது புதிய ஸ்கார்ப்பியோவின் கேபின் படங்கள் மோ.விக்குக் கிடைத்திருக்கின்றன. பாண்டிச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இந்த கார் டெஸ்ட் செய்யப்பட்டபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜூன்.

எதிர்பார்த்தபடியே கேபினில் புதிய டேஷ்போர்டு இடம்பிடித்திருக்கிறது. இது முன்பைவிட அகலமாகவும் உயரமாகவும் இருப்பது, ஸ்பை படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. சென்டர் கன்சோலில் டச்ஸ்க்ரீனுக்கான இடத்தைப் பார்க்கும்போது, அதில் அல்ட்டுராஸ் எஸ்யூவியில் உள்ள 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இடம் பெயரலாம். விலை குறைவான வேரியன்ட்களில், மராத்ஸோ மற்றும் XUV3OO-ல் இருக்கக்கூடிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்தப்படலாம். Vertical ஏசி வென்ட்கள் புதிது. மேலும் காரின் விலையைக் கட்டுக்குள் வைக்க, பட்டன்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் - 6 ஸ்பீடு கியர் லீவர் - கன்ட்ரோல் Stalks - ஸ்விட்ச்கள் - ஏசி கன்ட்ரோல் Knobs - MID உடனான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் மராத்ஸோவிலிருந்து பெறப்படும். ஆனால் மராத்ஸோபோல இல்லாமல், இதில் வழக்கமான பார்க்கிங் பிரேக் லீவர் இருப்பது ஆறுதல். சமீபத்திய பாதுகாப்பு விதிகள் காரணமாக, ஸ்கார்ப்பியோவின் மூன்று வரிசை இருக்கைகளும் Forward Facing பாணியில்தான் இருக்கும்.

ஸ்கார்ப்பியோ
ஸ்கார்ப்பியோ

காரின் வடிவமைப்பில், மஹிந்திராவுக்குச் சொந்தமான Pininfarina-வின் தாக்கம் இருக்குமா என்பதில் தெளிவில்லை. ஆனால், டெட்ராய்ட்டில் இருக்கும் இந்த நிறுவனத்தின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னையில் உள்ள MRV ஆகியோர் இணைந்தே இதில் பணிபுரிகிறார்கள். அடுத்த ஏப்ரல் – ஜூன் மாதவாக்கில், புதிய ஸ்கார்ப்பியோ வரலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாகனத்தைப் படம்பிடித்த வாசகர் அர்ஜூனுக்கு, ஓர் அற்புதமான பரிசு அனுப்பி வைக்கப்படுகிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com