2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட மஹிந்திராவின் எலெக்ட்ரிக் Quadricycle கான்செப்ட்டான ஆட்டம் (Atom), விரைவில் அறிமுகமாக இருக்கிறது. தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த வாகனத்தை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜெயவேல் செங்கல்பட்டில் படம்பிடித்திருக்கிறார்.

முன்பக்கத்தில் டிரைவர் இருக்கை மட்டுமே தெரிகிறது. அதற்கு அருகேயுள்ள இடம் காலியாக உள்ளது. முன்பக்கக் கதவின் உள்பக்கமாக ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். பின்பக்க பெஞ்ச் சீட்டில், மூன்று பேர் உட்காரலாம். கான்செப்ட்டில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டச் ஸ்க்ரீன், ரோட்டரி கியர் செலெக்ட்டர், LED லைட்டிங், ஏரோடைனமிக்ஸ் திறனை அதிகரிக்கும் விதமாக ரியர்வியூ மிரர்களுக்குப் பதில் ரியர் வியூ கேமரா எனப் பல வசதிகள் இருந்தன. ஆனால் இந்த எலெக்ட்ரிக் Quadricycle-ன் விலையைக் கட்டுக்குள் வைக்க, இதில் எத்தனை சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்பதில் தெளிவில்லை. இதில் டிரைவரின் பக்கம் வழக்கமான ரியர்வியூ மிரரைப் பார்க்க முடிந்தது. மேலும் எக்ஸாஸ்ட் பைப் இல்லாததால், இது எலெக்ட்ரிக் செட்-அப்பைத்தான் நிச்சயம் கொண்டிருக்கும். மற்றபடி பெரிய ஒற்றை வைப்பர், 13/14 இன்ச் ஸ்டீல் வீல், வழக்கமான ஹெட்லைட் & டெயில் லைட், ஹெட்ரெஸ்ட் இல்லாத இருக்கைகள் இருந்தன.

Atom-ல் அனேகமாக, 48kw எலெக்ட்ரிக் மோட்டார் இருந்தால் சூப்பர். ஆனால் Quadricycle விதிமுறைகளின்படி, இதில் 15kw எலெக்ட்ரிக் மோட்டாரே இடம்பெறும். டாப் ஸ்பீடும் 70கிமீ என்றளவில்தான் இருக்கும். Battery Swapping, On Board Connectivity System போன்ற வசதிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற Low Voltage வாகனங்களைக் கட்டமைப்பதற்காக, பெங்களூரில் இருக்கும் தனது தொழிற்சாலையில் 400 கோடி ரூபாயை மஹிந்திரா முதலீடு செய்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் CNG-ல் இயங்கும் பஜாஜின் Qute வாகனத்துடன் Atom போட்டி போடும்.

ஆட்டம் வாகனத்தைப் படம்பிடித்த வாசகர் ஜெயவேலுக்கு, ஓர் அற்புதமான பரிசு அனுப்பி வைக்கப்படுகிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com