Published:Updated:

அட... BS-6 எக்கோபூஸ்ட் எக்கோஸ்போர்ட்!

SPY PHOTO
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO

SPY PHOTO ரகசிய கேமரா

அட... BS-6 எக்கோபூஸ்ட் எக்கோஸ்போர்ட்!

SPY PHOTO ரகசிய கேமரா

Published:Updated:
SPY PHOTO
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO

க்கோஸ்போர்ட்டின் BS-6 வெர்ஷனைத் தீவிரமாக டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறது ஃபோர்டு. இதனை சென்னையில் படம் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோ.வி வாசகரான எஸ்.பி. பாலசுப்ரமணியன்.

இதைப் பார்க்கும்போது, ஏற்றுமதிச் சந்தைகளில் (Europe, Middle-East, Sub-Saharan Africa, Asia, North America, Australia) விற்பனையாகக்கூடிய மாடலாக இருக்கலாம். இதன் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் இல்லை. பதிலாக நம்பர் பிளேட் இருக்கிறது. ஒருவேளை இதே செட்-அப் இந்தியாவிலும் வரலாம்; ஆனால் கார் வலதுபுற ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருந்ததுடன், கேபின் & அலாய் வீலின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. Petrol Tank Lid-ல் 'Stage 6 Fuel Petrol' என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததுடன், டெயில்கேட்டில் எக்கோஸ்போர்ட், டைட்டானியம் பேட்ஜ் தவிர எக்கோபூஸ்ட் பேட்ஜ் இருந்ததுதான் பெரிய ட்விஸ்ட்! எக்கோபூஸ்ட்டை BS-6 விதிகளுக்கேற்ப அப்டேட் செய்வதற்கு அதிக தொகை செலவாகும் என்பதால், இதற்கு எண்ட்கார்டு போட ஃபோர்டு முடிவெடுத்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அட... BS-6 எக்கோபூஸ்ட் எக்கோஸ்போர்ட்!
அட... BS-6 எக்கோபூஸ்ட் எக்கோஸ்போர்ட்!

இதற்கான மாற்றாக, தனது இந்தியக் கூட்டாளியான மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்திக் கொள்ள ஃபோர்டு தீர்மானித்திருக்கிறது. இதுவும் எக்கோபூஸ்ட்டைப் போலவே டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், அதைவிட அதிக பவர் மற்றும் டார்க்கை இது வெளிப்படுத்தும் எனத் தகவல் வந்திருக்கிறது. ஆனால், இது எப்போது அமலுக்கு வரும் என்பதில் தெளிவில்லை. மற்றபடி 1.5 லிட்டர் டிராகன் & 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின், BS-6க்கு அப்டேட் ஆகும். கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அப்படியே தொடரலாம்.

எக்கோஸ்போர்ட் காரைப் படம்பிடித்த வாசகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.