ஜனவரி 2021-ல் புத்தாண்டுப் பரிசாக நம் நாட்டில் மேக்னைட் களமிறங்கப் போவதாகத் தகவல் வந்திருக்கும் நிலையில், இது சென்னையில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. அதன் ஸ்பை படங்களை நமக்கு அனுப்பியிருக்கிறார், ElectricVehicleWeb.in இணையதளத்தை நடத்திவரும் ஷ்ரவன் ராஜா.

காரின் முன்பக்கத்தை எடுக்க முடியவில்லை ஷ்ரவனால். கான்செப்ட் போலவே இருக்க வாய்ப்பு உண்டு. கிக்ஸில் இருப்பதுபோன்ற ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், வளைவுகளுடன் கூடிய பானெட், டட்ஸன் கார்களை நினைவுபடுத்தும் அகலமான க்ரோம் க்ரில் மற்றும் L வடிவ LED DRL - மேக்னைட்டின் ஸ்டைலான தோற்றத்துக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கின்றன. ஆனால், கான்செப்ட் காரின் கிரில்லில் இருந்த சிவப்பு நிற வேலைப்பாடுகள் இங்கே இருக்காது. அதற்குப் பதில் கிரில்லுக்குக் கீழே Skid Plate பொருத்தப்படும். அதேபோல முன்பக்க நம்பர் ப்ளேட், Skid Plate-க்கு மேலே பொருத்தப்படும். மேலும் கான்செப்ட் காரில் இருந்த பெரிய ஆஃப் ரோடு டயர்களுக்குப் பதிலாக, வழக்கமான சைஸில் (16 இன்ச்) ஆன் ரோடு டயர்கள் இடம் பெறும். டாப் வேரியன்ட்களில் LED ஹெட்லைட்ஸ் இருந்தால், மற்ற வேரியன்ட்களில் ஹாலோஜன் ஹெட்லைட்தான்.

நிஸானின் புதிய லோகோவுடன் வரப்போகும் மேக்னைட்டின் ப்ரொஃபைல், க்ராஸ்ஓவரைப்போல உள்ளது. மேலும் காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் வீல் ஆர்ச்சுகள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கின்றன. கறுப்பு நிறக் கதவு பில்லர்கள் மற்றும் ரூஃப் - ரூஃப் ரெயில் ஆகியவை மேக்னைட்டில் ஸ்போர்ட்டி டச். கான்செப்ட் காரில் இருந்த க்ரோம் வேலைப்பாடு உடனான கதவுக் கைப்பிடிகள் மற்றும் Door Sills - டைமண்ட் கட் அலாய் வீல்கள், இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் உள்ளேன் ஐயா! பின்பக்கத்தைப் பொறுத்தவரை, கான்செப்ட் காரில் இருப்பதுபோலவே LED டெயில் லைட்ஸ் & Scuff Plate, ஸ்பாய்லர் & வைப்பர் இடம்பெற்றிருக்கும். மற்றபடி ட்ரைபரில் இருக்கும் 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் (72bhp), 95bhp பவரைத் தரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய 3 சிலிண்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இவை 5 ஸ்பீடு மேனுவல்/AMT (NA), 5 ஸ்பீடு மேனுவல்/CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும் (டர்போ).

உத்தேசமாக 5.35 லட்ச ரூபாய் எனும் ஆரம்ப விலையில் வரப்போகும் மேக்னைட்டின் கேபின் படங்களை வெளியிட்டுவிட்டது நிஸான். வெளிப்புறத்துக்கு இணையாக உட்புறமும் செம ஸ்டைல். டேஷ்போர்டின் கீழ்ப்பகுதி ட்ரைபரை ஞாபகப்படுத்தினாலும், மேல்பகுதி Faux Aluminium வேலைப்பாடுகள் மற்றும் Textured ஃபினிஷுடன் ப்ரீமியமாக உள்ளது. லேட்டஸ்ட் கனெக்ட்டிவிட்டி உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன், புஷ் பட்டன் ஸ்டார்ட், அனைத்து கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் மீட்டர், எலெக்ட்ரிக் மிரர்கள், 360 டிகிரி கேமரா, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்பக்க ஆர்ம் ரெஸ்ட் & ஏசி வென்ட் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது. மற்றபடி முன்பக்க இருக்கைகள், கெத்தான சீட்டிங்கைக் கருத்தில் கொண்டு, கச்சிதமான உயரத்தில் பொசிஷன் செய்யப்படும். அகலமான கேபினின் பின்பக்கத்தில், அதிகமான லெக்ரூம் இருக்கக் கூடும்.

நிஸான் மேக்னைட் வாகனத்தைப் படம் பிடித்த வாசகர் ஷ்ரவன் ராஜாவுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com