Published:Updated:

C-HR... வருது டொயோட்டாவின் புது ஹைபிரிட்!

 ஸ்பை போட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பை போட்டோ

ஸ்பை போட்டோ: டொயோட்டா C-HR

C-HR... வருது டொயோட்டாவின் புது ஹைபிரிட்!

ஸ்பை போட்டோ: டொயோட்டா C-HR

Published:Updated:
 ஸ்பை போட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பை போட்டோ
வழக்கமான டிசைன்களுக்குப் பெயர் பெற்ற டொயோட் டாவை, சர்வதேச அளவில் அதிரடியான டிசைனுக்கான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்ததில் C-HR எஸ்யூவியின் பங்கு பெரியது. தற்போது அந்த கார், இந்தியாவில் டெஸ்ட்டிங்கில் இருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது. பெங்களூருவில் அமைந்திருக்கும் எலெக்ட்ரானிக் சிட்டியில் இதனைப் படம் பிடித்திருக்கிறார், ஓசூரைச் சேர்ந்த மோ.வி வாசகர் எம்.நித்தீஷ். ஹைபிரிட் செட்-அப்புடன் கூடிய இந்த எஸ்யூவியை, புதிய ப்ரையஸ் தயாராகும் அதே TNGA ப்ளாட்ஃபார்மில் (Toyota New Global Architecture) தயாரித்துள்ளது டொயோட்டா. அடுத்த ஆண்டில் இங்கே வருவதற்கான சாத்தியங்களுடன் இருக்கும் C-HR, கான்செப்ட் கார் போன்ற தோற்றத்துடன் கெத்தாக உள்ளது. அகலமான ஏர் டேம், உப்பலான வீல் ஆர்ச், கூபே போன்ற ரூஃப் லைன், பூமராங் வடிவ டெயில் லைட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய ஸ்பாய்லர், கதவு பில்லரில் இருக்கும் பின்பக்க கைப்பிடி ஆகியவை அதற்கான உதாரணம். 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கூட உண்டு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேபினுக்குள்ளே லெதர் அப்ஹோல்சரி மற்றும் மெட்டல் வேலைப்பாடுகள், Floating 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் எல்லாமே ப்ரீமியம். சரிவடையும் ரூஃப் இருந்தாலும், பின்பக்க ஹெட்ரூம் நன்றாகவே உள்ளது. ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இடவசதி கொஞ்சம் குறைவுதான். இதிலிருக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (120bhp), எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் அமைப்பு, காரின் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் மற்றும் அதிக மைலேஜுக்கு வழிவகுக்கலாம். இன்னும் சொல்லப் போனால், டீசல் இன்ஜின்களுக்கு இணையான ரன்னிங் காஸ்ட்டை C-HR கொண்டிருக்கக் கூடும். 113bhp பவரைத் தரும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் இதில் உண்டு. இவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ்களுடன் கிடைக்கின்றன. இந்த எஸ்யூவியை டொயோட்டா நம்நாட்டில்அசெம்பிள் செய்யுமா அல்லது உற்பத்தி செய்யுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

C-HR... வருது டொயோட்டாவின் புது ஹைபிரிட்!

டொயோட்டா C-HR காரைப் படம் பிடித்த வாசகர் நித்தீஷுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism