Published:Updated:

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

சர்வே: விற்பனை விவரம்

பிரீமியம் ஸ்டோரி

காம்பேக்ட் செடான்கள்

ந்த நாளில் இருந்தே இந்த செக்மென்ட்டின் ரூட்டு தலயாக இருக்கும் டிசையர், எதிர்பார்த்தபடியே முதலிடத்தைத் தன்வசம் வைத்திருக்கிறது. ஆனால், இதர மாருதி சுஸூகி கார்களைப் போலவே, டீசல் இன்ஜின் இல்லாத குறை கொஞ்சம் எதிரொலித்திருக்கிறது (1,79,159 கார்கள் - 29.43% வீழ்ச்சி). இதனாலேயோ என்னவோ, கடந்த ஆண்டிலேயே டிசையரின் BS-6 வெர்ஷன் வந்துவிட்டாலும், ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தவிர, டாக்ஸி செக்மென்ட்டில் பெட்ரோல் இன்ஜினுடன் டிசையர் டூர் என்ன சாதிக்கும் என்பதைப் பார்க்க ஆர்வமாகவே இருக்கிறோம். இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அமேஸுக்கு, BS-6 டீசல் இன்ஜினால் எக்ஸ்ட்ராவாக ஒரு லைஃப் லைன் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது (57,471 கார்கள் - 32.42% வீழ்ச்சி). மற்றபடி காம்பேக்ட் செடானாகவே இருந்தாலும், டிசையரைப் போலவே ஒரு முழுமையான தோற்றத்தில் இந்த கார் இருப்பது தெரிந்ததே! டீசல் - CVT இருப்பது, குறைவான பராமரிப்பைக் கொண்டிருக்கும் அமேஸின் பெரிய பலம்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

எக்ஸென்ட்டுக்கு மாற்றாக இந்த ஆண்டில் வெளிவந்த ஆரா, சிறப்பான ஓப்பனிங்கைப் பெற்றிருக்கிறது. ஒருவேளை கொரோனா வராமல் இருந்திருந்தால், இது அமேஸுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கலாம் (13,512 கார்கள்). நியோஸில் இருந்த அத்தனை ப்ளஸ் பாயின்ட்களும், அப்படியே இந்த காருக்கும் பொருந்தும். அவை கொஞ்சம் ப்ரீமியம் பேக்கேஜிங்கில் வருவது ஆராவின் அம்சம். டாக்ஸி செக்மென்ட்டுக்குப் பழைய எக்ஸென்ட், டீசல் இன்ஜினுடன் தொடர்வது நிச்சயம் நல்ல விஷயம்தான்.

‘வாங்குற காசுக்கு மேலே கூவுறான்யா’ - இது டிகோருக்கு அப்படியே பொருந்தும். தற்போதைக்கு காம்பேக்ட் செடான்களிலேயே விலை குறைவான மாடலாக இருக்கும் இது, ஏனோ கடந்தாண்டில் விற்பனையில் அதிரடிக்காதது ஏமாற்றமே (10,049 கார்கள் - 61.06% வீழ்ச்சி). இந்த ஆண்டு வெளிவந்த டிகோரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்த நிலைமையை மாற்றும் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை பிராக்டிக்கலான இந்த காரின் Fastback போன்ற பின்பக்கம், அனைவருக்கும் பிடிக்கவில்லையோ? க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பெற்றிருப்பது, டிகோரின் விற்பனைக்குக் கைகொடுக்கலாம். என்ன.... மைலேஜ் & டீசல் இன்ஜின் இல்லாதது மைனஸாக இருக்கலாம்.

குறைவான விலை உயர்வைப் பெற்ற ஆஸ்பயர், கொடுக்கும் காசுக்கான மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் & 6 காற்றுப் பைகளைக் கொண்டிருக்கும் இந்த காம்பேக்ட் செடானில், டிசையரின் மைனஸே இதற்கு ப்ளஸ்ஸாகி விட்டது. மேலும் ஃபேமிலி கார்களாக அறியப்படுபவை, டிரைவர்ஸ் காராகவும் இருக்கலாம் என அறிவுறுத்தியது இந்த ஃபோர்டு கார்தான்! ஆனால் ப்ரீமியம் ஃபீல் இல்லாதது மற்றும் கொஞ்சம் பழைய மாடல் என்ற எண்ணம் வந்திருப்பது இதன் பெரிய மைனஸ்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

சிறப்பான தயாரிப்புகளாக இருந்தாலும், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ மற்றும் டாடா ஜெஸ்ட் ஆகியவை நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுவிட்டன! டாக்ஸி மார்க்கெட், இதனால் மற்றுமொரு ஆப்ஷனை இழந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிட்சைஸ் செடான்கள்

ண்மையைச் சொல்வதென்றால், எஸ்யூவிகளின் வளர்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது இந்த செக்மென்ட்தான். ஒரு காலத்தில் லக்ஸுரி மற்றும் தனிநபர் அந்தஸ்த்தின் உயர்வுக்கான தொடக்கமாகப் பார்க்கப்பட்ட மிட்சைஸ் செடான்கள், தங்கள் இருப்பையே தக்க வைத்துக் கொள்ளத் திணறுவது பெரிய முரண்.

இதிலும் மார்க்கெட் லீடராக இருக்கும் மாருதி சுஸூகி, சியாஸின் விலையை அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய அளவில் வைத்ததிலேயே பாதி வெற்றி உறுதியாகிவிட்டது. இதனுடன் இந்த நிறுவனத்தின் பலங்கள் அனைத்தும் சேரும்போது, இந்த இடம் எதிர்பார்த்ததுதான் (25,258 கார்கள் - 45.29% வீழ்ச்சி). என்ன... டீசல் இன்ஜின் இல்லாமல் போனது நிச்சயம் வருத்தமான விஷயம்தான். போட்டியாளர்களுக்குச் சமமாகச் சில வசதிகள் மட்டும் சேர்ந்து விட்டால், சியாஸ் எட்டிப்பிடிக்க முடியாத இடத்துக்குப் போய்விடக் கூடும். மொத்த விற்பனையே சரிந்திருக்கும் சூழலில், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கும் கார்களிடையேயான வித்தியாசம் குறைவுதான்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

ஐந்தாம் தலைமுறை சிட்டி இன்னும் வெளிவராத நிலையிலேயே, டீசன்ட்டான அளவில் சிட்டி விற்பனையாகி இருக்கிறது (20,921 கார்கள் - 49.08% வீழ்ச்சி). ஹோண்டா தரப்பிலிருந்து தரப்பட்ட ஆஃபர்களும், சிட்டி மீதான நம்பகத்தன்மையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம். சிறப்பான NA பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் சிட்டியின் புதிய மாடலில், BS-6 டீசல் இன்ஜின் இருக்கும் என்பது வெர்னாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் நகர்வுதான். இதன் விலை விஷயத்தில் ஹோண்டா கொஞ்சம் உஷாராகச் செயல்படுவது நலம்.

ஃபேஸ்லிஃப்ட்தானே என எளிதாகக் கடந்துவிடாத அளவுக்கு, வெர்னாவின் BS-6 மாடலில் விளையாடியிருக்கிறது ஹூண்டாய். பல்வேறு First In Class & Best In Class வசதிகளால், இந்த நிறுவனம் விலை உயர்வைச் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் - ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் கூட்டணி, கார் ஆர்வலர்களையும் தன்பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு ஹூண்டாய்க்குக் கிடைத்திருக்கிறது (20,894 கார்கள் - 47.19% வீழ்ச்சி). பல்வேறு வேரியன்ட்கள் மற்றும் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருப்பதால், அனைவரது பட்ஜெட்டுக்கு ஏற்றபடியான மாடல் கிடைக்கப் பெறுவது ப்ளஸ்தான். ஒரே குழும நிறுவனத்தைச் சேர்ந்த வென்ட்டோ (4,657 கார்கள் - 20.80% வீழ்ச்சி) மற்றும் ரேபிட் (8,956 கார்கள் - 12.85% வீழ்ச்சி), புதிய 1.0 லிட்டர் TSI BS-6 இன்ஜினால் புத்துணர்வு பெற்றுள்ளன. 10 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் இவற்றின் தோற்றம் மற்றும் கேபினில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம், இரு நிறுவனங்களுக்குமே உள்ளன. என்றாலும், சர்வீஸ் மற்றும் டீலர்கள் விஷயத்தில் இவர்கள் கொஞ்சம் முன்னேற்றம் காட்டியிருந்தாலும், கடந்த நிதியாண்டில் இதன் விற்பனையில் அது எதிரொலிக்காமல் போய்விட்டது நெருடல். இப்போது டீசல் இன்ஜின் வேறு இல்லாததால், நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

மினி கரோலா எனப் பொசிஷன் செய்யப்பட்ட யாரிஸ், டொயோட்டா எதிர்பார்த்த அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. இது அறிமுகமான புதிதில், அதிக வசதிகளால் காரின் விலை அதிகமாக இருந்ததே சரிவின் தொடக்கம். தவிர டீசல் இன்ஜின் இல்லை என்றபோதே, அதன் மீது விழுந்திருக்க வேண்டிய பார்வைகள் அப்படியே திசை மாறிச் சென்று விட்டன (3,602 கார்கள்- 69.55% சரிவு). இதனை மீட்டெடுக்கும் முயற்சியில், டொயோட்டா தீவிரமாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சொகுசான பின்சீட்டுக்குப் பெயர்பெற்ற டொயொட்டா எட்டியோஸ் மற்றும் நிஸான் சன்னி, காலத்துக்கேற்ற மாற்றத்தைப் பெறாமல் மரணித்துவிட்டன. இதனால் டாக்ஸி செக்மென்ட்டில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இவை வரவேற்பைப் பெறக்கூடும்.

எக்ஸிக்யூட்டிவ் செடான்கள்

ஸ்யூவிகளின் வளர்ச்சிக்கு முன்பே, இந்த செக்மென்ட்டில் வீரியம் குறைந்துவிட்டது. செவர்லே க்ரூஸ், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ரெனோ ஃப்ளூயன்ஸ் ஆகியவற்றின் மறைவு அதற்கான உதாரணம். ஆனால் இதில் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த ஹோண்டாவின் சிவிக், இந்தப் பிரிவில் எதிர்பார்த்தபடியே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது (3,024 கார்கள் - 31.99% வளர்ச்சி). முன்பிருந்த மாடலைப் போலவே ஸ்போர்ட்டியான டிசைனில் இருந்தாலும், கார் கொஞ்சம் பிராக்டிக்கலாக மாறியதும் இதற்கான காரணி. என்ன... சிவிக்கின் தோற்றத்துக்கும் கையாளுமைக்கும் ஈடுகொடுக்கும் விதத்தில், இரு இன்ஜின் ஆப்ஷன்களுமே அமையவில்லை என்பது மைனஸ்.BS-6-ல் டீசல் இன்ஜின் தொடரும் என்பது ஆறுதல்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

மிட்சைஸ் செடான் செக்மென்ட் டில் கிடைக்காத வரவேற்பு, இங்கே ஸ்கோடாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆம், ஆக்டேவியாதான்... (2,374 கார்கள் - 12.91% வீழ்ச்சி). ஆனால் இதன் BS-4 மாடல், BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படவில்லை. ஏனெனில் சர்வதேச சந்தைகளில் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகமாகிவிட்டதால், 2013-ம் ஆண்டில் வந்த இந்த மாடலை மேம்படுத்தி விற்பனை செய்ய ஸ்கோடா விரும்பவில்லை. ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் காலூன்றுவதற்கு உதவி செய்த ஆக்டேவியாவின் லேட்டஸ்ட் வெர்ஷன், நம் நாட்டுக்கு வரக் கொஞ்சம் காலம் பிடிக்கும். இங்கே குறைவான எண்ணிக்கை யில் அறிமுகமான RS245 மாடல், கார் ஆர்வலர்களின் அதிகப்படியான வரவேற்பால் Sold Out ஆகிவிட்டது தெரிந்ததே!

உலகின் டாப் செல்லிங் காராக இருந்தாலும், இந்தியாவில் அந்தப் பெயரைக் காப்பாற்ற கரோலா முயற்சி செய்யவில்லை (806 கார்கள் - 71.04% வீழ்ச்சி). என்றாலும், இதுவும் BS-6 அவதாரத்தில் வரவில்லை. மக்கள் வரவேற்பு சொற்பமாக இருந்ததால், இதனை அடிப்படையாகக் கொண்ட எக்ஸிக்யூட்டிவ் செடானை மாருதி சுஸூகி களமிறக்கவே இல்லை (கியாஷி கண் முன்னே வந்து போகும் இல்லையா?). டொயோட்டாவின் பலங்களுடன் கரோலா ஆல்ட்டிஸ் இருந்தாலும், எந்தவிதமான தனித்தன்மையும் இல்லாமல் போனது.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராக இருந்தாலும், ஹூண்டாய் எலான்ட்ராவின் விற்பனையில் அது எதிரொலிக்காமல் போய்விட்டது (692 கார்கள் - 41.06% வீழ்ச்சி). பெரிய வெர்னா போன்ற ஃபீலிங் இருந்தது பிரதான காரணம். ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், பரவலான கருத்துகளையே பெற்றுவரும் சூழலில், இதன் BS-6 வெர்ஷனில் புதிய டீசல் இன்ஜின் வரப்போகிறது.

ப்ரீமியம் செடான்கள்

டொயோட்டா போலவே, விலை அதிகமான செக்மென்ட்களில் அடித்து ஆடுகிறது ஸ்கோடா. சூப்பர்ப் அதனை நிரூபித்து விட்டது எனச் சொல்லலாம் (1,524 கார்கள் - 7.25% வளர்ச்சி). இதன் BS-6 வெர்ஷனில், டீசல் இன்ஜின் இல்லாமல் போய்விட்டது கொஞ்சம் வருத்தம்தான். ஜெர்மானிய லக்ஸூரி கார்களுக்கு இணையான அனுபவத்தைத் தரக்கூடிய இந்த ப்ரீமியம் செடானில், RS மாடலைக் கொண்டு வரலாமே ஸ்கோடா? இந்த நிறுவன லோகோவைப் பார்க்கும்போது கொஞ்சம் விலை அதிகமோ என்ற எண்ணம் எழுந்தாலும், காரை ஓட்டும்போது அந்த ஃபீலிங் வராமல் போய்விடுவதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

ஹோண்டாவின் அக்கார்டு ஹைபிரிட் போட்டியிலிருந்து விலகிவிட்ட நிலையில், டொயோட்டாவின் கேம்ரி ஹைபிரிட்டுக்கு அது வசதியாக அமைந்துவிட்டது (709 கார்கள் - 74.20% வளர்ச்சி). மோட்டார் விகடன் விருது வென்ற லெக்ஸஸ் ES300h காருக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எனவே செக்மென்ட்டுக்கு ஏற்றபடியே ப்ரீமியம் திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் கேம்ரி அசத்தியது. இதன் BS-6 வெர்ஷன் வந்துவிட்டது. டீசல் இன்ஜின் இருந்திருந்தால், ஜெர்மன் தயாரிப்புகளுக்கு இது கடும் சவாலைத் தந்திருக்கும்.

செடான்... எது விற்குது... ஏன் விற்குது?

ஃபோக்ஸ்வாகனின் பஸாத், இந்தியாவில் இருப்பதே சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்லீப்பர் செல் போலவே சைலன்ட்டாக இந்த காரை இந்த நிறுவனம் கையாண்டிருக்கிறதோ? போலோ மற்றும் வென்ட்டோவுக்குக் கிடைத்த முக்கியத்துவம் (விளம்பரங்கள்), இதன் மீதும் விழுந்திருந்தால் நிலை மாறியிருக்கலாம் (60 கார்கள் - 91.49% வீழ்ச்சி). இடையே விலைக் குறைப்பு செய்ததும் பலன் அளிக்காமல் போய்விட்டது. இது BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படவில்லை. இதன் இடத்தை டிகுவான் ஆல் ஸ்பேஸ் பிடித்துக் கொண்டது என்பதே உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு