Published:Updated:

எகிறும் பழைய கார் மார்க்கெட்.... கைகொடுத்த லாக்டெளன்!

 யூஸ்டு கார் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
யூஸ்டு கார் மார்க்கெட்

சர்வே: யூஸ்டு கார் மார்க்கெட்

னக்குத் தெரிந்த ஒரு பழைய கார் டீலர் இப்படிச் சொன்னார்.

``இந்த கொரோனா லாக்டவுனால் எங்களுக்குக் கொஞ்சம் அடிதான். ஆனால், அடுத்த மாசத்துக்குள்ள நாங்க மீண்டு எழுந்திடுவோம்! ஆமாங்க, எப்படிப்பட்ட ஊரடங்காக இருந்தாலும் கார், பைக்ஸ் ரோட்ல ஓடித்தானே ஆகணும்!’’ - இப்படி அவர் சொன்னதில் அத்தனை நம்பிக்கை தெரிந்தது.

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த நம்பிக்கை நிஜம்தான். லாக்டவுனால் பொதுப் போக்குவரத்து கம்யூட்டிங் பார்ட்டிகள் எல்லோரும் இப்போது கார்களைத்தான் நம்பியாக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பழைய கார் மார்க்கெட் இப்போது மீண்டு கொண்டிருக்கிறது. `வெந்ததோட போய் விடிய விடிய தைச்சுட்டு வந்தது’ என்று வடிவேலு சொல்வதுபோல், இந்த ஊரடங்கு நேரத்திலும் ஒருவர் அவசரப் பயணத்துக்காக 80,000 ரூபாய்க்கு, யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஒரு பழைய ஆல்ட்டோ வாங்கிவிட்டார்.

“சார், அவசரமா கார் வாங்கணும். எது வாங்கலாம்?’’ என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் நமக்கும் ஏகப்பட்ட வாசகர்கள் போன் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பட்ஜெட் 2 முதல் 3 லட்சத்துக்குள் இருப்பதால், இவர்கள் எல்லாமே முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் என்பதும் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்படியென்றால், பழைய கார் மார்க்கெட்டுக்கு இந்த லாக்டெளன் - வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா?

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

2019 நிதியாண்டின் பழைய கார் மார்க்கெட் விற்பனை மதிப்பு, 2020-2025 ஆண்டுக்குள் 15.12% விகிதம் அதிகரிக்கலாம் என்று கணிக்கிறது Grant Thornton எனும் அமெரிக்க ஆடிட்டிங் நிறுவனம். இது நிஜம்தான் போல!

யூஸ்டு கார் மார்க்கெட்டின் ஜாம்பவான்களான மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் மற்றும் மாருதி ட்ரூ வேல்யூ போன்றவர்கள், இந்த லாக்டெளனிலும் பரபரப்பாக இருக்கிறார்கள். 2019-2020 இந்த அரைகுறை நிதியாண்டில் மட்டுமே ட்ரூ வேல்யூ 4.19 லட்சம் கார்களையும், ஃபர்ஸ்ட் சாய்ஸ் 2.5 லட்சம் கார்களையும் விற்றுத் தீர்த்திருக்கிறார்கள்.

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

“இந்‑தியா முழுதும் மொத்தம் 42 லட்சம் பழைய கார்கள் எக்ஸ்சேஞ்ச் ஆகியுள்ளன. அதாவது, ஓனர்ஷிப் மாறியிருக்கின்றன.’’ என்று ஆதாரத்துடன் சொல்கிறது மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ். இது போன ஆண்டை எடுத்துக்கொள்ளும்போது (40 லட்சம்) 5 சதவிகிதம் அதிகம். அட இதை விடுங்கள்; புது கார் சேல்ஸைவிட 1.5 முதல் 1.7 மடங்கு வரை இது அதிகம். இதற்கு இன்னொரு காரணம், 28%-ல் இருந்து 12-18% வரை ஜிஎஸ்டி வரி குறைந்ததும்கூட இருந்திருக்கலாம்.

அஷுடோஷ் பாண்டே, மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், “கோவிட் காலத்துக்கு முன்பிருந்தே 3-6 லட்சம் பட்ஜெட் கொண்ட கார்கள்தான், பழைய கார் விற்பனையில் பாதி சதவிகிதம் இருக்கும். இந்த கோவிட்-19 காலத்திலும் இந்த பட்ஜெட்டில்தான் மக்கள் பழைய கார் செலக்ட் செய்கிறார்கள்.’’ என்கிறார்.

சென்னை போரூரில் பழைய கார் ஷோரூம் வைத்திருக்கும் அஹமது, “எங்களுக்கு அதிகமாக விற்பனையாகிற கார்கள் இந்த பட்ஜெட்டில்தான். அதாவது 3- 5 லட்சம் வரைக்கும்தான். ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களும், காம்பேக்ட் செடான்களும்தான் இதில் அதிகம்.’’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்காக எம்பிவி, எஸ்யூவிகளும் விற்பனையில் சோடை போகவில்லை. ஈரோட்டில் பழைய கார் மார்க்கெட்டில் தனிநபர் டீலராகச் செயல்படும் சரவணக்குமார், “லாக்டெளனில் இந்தத் தொழில் என்னைக் கைவிடவே இல்லை. போன இந்த 2 மாசத்தில் மட்டும் 25 கார் விற்பனை ஆகியிருக்கு. இதில் இனோவா க்ரிஸ்ட்டா கார் மட்டுமே 16 கார்கள் போயிருக்கு. பழைய இனோவாவுக்கு இப்போ மவுசு போயிடுச்சுனு நினைக்கிறேன். க்ரிஸ்ட்டாதான் இப்போ கெத்து. அதுக்கப்புறம் ஹோண்டா சிட்டி பெட்ரோலுக்குத்தான் மவுசு!’’ என்கிறார்.

சரவணக்குமார்,  பாபு
சரவணக்குமார், பாபு

திருநெல்வேலியில் யூஸ்டு கார் டீலராக இருக்கும் பாபு, “எனக்கும் அதேதான். சோஷியல் டிஸ்டன்ஸிங்தான் இந்த விற்பனைக்குக் காரணம்னு நினைக்கிறேன். மாருதி ஈக்கோ காருக்கெல்லாம் இப்போ டிமாண்ட் அதிகமாகி இருக்கு. மத்தபடி ஐ10, ஃபிகோ, ஸ்விஃப்ட், ஆல்ட்டோனு கலந்துகட்டி எல்லாமே விற்பனை ஆகுது!’’ என்கிறார்.

இந்த அதிகபட்ச விற்பனைக்கு, மக்களின் தேவையைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அது தள்ளுபடியும், குறைந்த வட்டித் தவணையும். “2.5 லட்சத்துக்கு இந்தப் பழைய ஸ்விஃப்ட் வாங்கினேன். இனிஷியலும் கம்மி; இன்டரஸ்ட்டும் கம்மியா இருந்துச்சு!’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த பெருமாள்.

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

சில தள்ளுபடிகளில் வாங்கிய குதூகலமானவர்களையும் பார்க்க முடிந்தது. “கள்ளக்குறிச்சியில் இருக்கேன். விழுப்புரத்தில்தான் வேலை. எனக்கு கார் ஓட்டத் தெரியும். இப்போ அதுக்காகவே ரொம்பக் குறைஞ்ச விலைக்கு ஒரு ஃபிகோ டீசல் கார் வாங்கிட்டேன்.’’ என்றார் நந்தகுமார் என்பவர்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் உண்டு. BS-6 டெட்லைனுக்கு முன்பே புக் செய்யப்பட்ட சில BS-4 கார்களை, அந்தப் புது காரின் ஸ்டிக்கர் விலையைவிட 20 – 25% குறைந்த விலைக்கு எடுத்துச் செல்லலாம் எனும் வசதி, பலரைக் குதூகலமாக்கி விட்டிருக்கிறது. அதாவது, 0 கி.மீ ரீடிங் ஓடிய ஒரு பிராண்ட் நியூ காரை, பழைய கார் விலைக்கு வாங்கிச் செல்லும் சிலரும் இந்த லிஸ்ட்டில் அடக்கம். இதுவே பெட்ரோல் என்றால், சதவிகிதம் இன்னும் கூடும். ப்ரீமியம் லக்ஸூரி கார்கள் என்றால், இன்னும் அதிர்ஷ்டம்தான்.

இந்தியாவில் மட்டுமில்லை; உலக அளவிலும் யூஸ்டு கார் விற்பனைதான் ட்ரெண்டு ஆகியிருக்கிறது. “ப்ளீஸ், பொதுப்போக்குவரத்தைத் தவிருங்கள்; சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். சொந்த கார் பயன்படுத்துங்கள்’’ என்று லண்டன் பிரதம மந்திரியே சொல்லிவிட்டார்.

AICDA (All India Cars Dealers Association) நிறுவனத்தின் அசோஸியேட் டைரக்டர் இந்த லாக்டெளனின்போது நடத்திய வெபினாரில் இப்படிச் சொன்னார். “கொரோனா லாக்டெளன் மற்ற துறைகளுக்கு எப்படியோ… பழைய கார் மார்க்கெட்டுக்குத் திருவிழாதான்!”

படங்கள்: ராஜேந்திரன்