Published:Updated:

ஹெக்ஸா... எஸ்யூவி லைனில் மிஸ்ஸானது ஏன்?

டாடா ஹெக்ஸா
பிரீமியம் ஸ்டோரி
டாடா ஹெக்ஸா

ஃப்ளாப் கார்: டாடா ஹெக்ஸா

ஹெக்ஸா... எஸ்யூவி லைனில் மிஸ்ஸானது ஏன்?

ஃப்ளாப் கார்: டாடா ஹெக்ஸா

Published:Updated:
டாடா ஹெக்ஸா
பிரீமியம் ஸ்டோரி
டாடா ஹெக்ஸா

டாடாவின் கடைசி 4வீல் டிரைவ் எஸ்யூவியான டாடா ஹெக்ஸா வீழ்ந்த கதையைப் பார்ப்பதற்கு முன்னர், அதற்கு விதை போட்ட ஆரியாவைப் பார்த்து விடுவோம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று அதிகமாக இருந்தாலே எஸ்யூவிதான் என கார் நிறுவனங்கள் அழைக்கின்ற தற்போதைய சூழலில், 2010-ல் 4x4 ஆப்ஷனுடன் ஆரியாவை வெளியிட்டபோது டாடா அதை ‘க்ராஸ்ஓவர்’ என அழைத்தது விநோதம்தான். இத்தனைக்கும் ஆரியா பாடி-ஆன்-ஃப்ரேம் சேஸியில் கட்டப்பட்டிருந்தது.

யாருடைய ஏரியா?

2010-ல் ஆரியா வெளிவந்தபோது, அதன் பேஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை 12.91 லட்சமாக இருந்தது. அதேசமயம் டொயோட்டா இனோவாவின் டாப் வேரியன்ட்டான VX 8 சீட்டர் 12.08 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு விற்பனையானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்போது போல் மார்க்கெட்டில் அப்போது டாடாவுக்கு பிராண்ட் இமேஜ் எல்லாம் இல்லை. இதனால் டொயோட்டாவின் ஏரியாவான MPV செக்மென்ட்டில், இனோவாவை விட விலை அதிகமாக வைத்து மூக்குடைந்ததுதான் மிச்சம்.

விண்ணைத் தாண்டிய விலையினால் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டது போதாது என்று, டாடாவின் பரம எதிரியான மஹிந்திரா 2011-ல் எஸ்யூவி செக்மென்ட்டில் ஒரு சம்பவம் செய்தது. கண்கவரும் டிசைனில், சிறப்பம்சங்களை நிரப்பி 11.95 லட்சத்திற்கு XUV 500-ன் டாப் எண்ட் W8 வேரியன்ட்டை அறிமுகபடுத்தியது மஹிந்திரா.

அத்தோடு போனதுதான் ஆரியா. அதன் பின் 2014-ல் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தி விலையையும் சரி செய்தது. ஆனால், விற்பனை மட்டும் எழவே இல்லை.

வெர்ஷன் 2.0...

2 வருடம் பொறுத்துப் பார்த்தது டாடா. பின்னர் 2016-ல் ஹெக்ஸாவை அறிமுகப்படுத்தியது. ஆரியாவின் மற்றொரு ஃபேஸ்லிஃப்ட் ஆக இல்லாமல், ஹெக்ஸா புதிய காராக இருந்தது. ஆரியாவை இனோவாவுடன் போட்டியிட MUV போல தயார் செய்த டாடா, ஹெக்ஸாவை எக்ஸ்யூவி 500 உடன் போட்டி போட எஸ்யூவிபோல வடிவமைத்தது. கிளாம்ஷெல் பானெட், நிமிர்ந்த கிரில் (பெயருக்கு ஏற்றவாறு அறுங்கோணங்களுடன் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது) மற்றும் நீட்டிக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், ஹெக்ஸாவை ஆக்ரோஷத்துடன் காட்சியளிக்க உதவின. ஒரு பெரிய சென்ட்ரல் ஏர் டேம் மற்றும் கவர்ச்சிகரமான LED DRL விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட முன்பக்க பம்பர், ஸ்டைலாக இருந்தது.

பக்கவாட்டில் தேவையற்ற வெட்டுக்கள் மற்றும் மடிப்புகள் எதுவும் இல்லை, இதன் விளைவாக ஆரியாவை நினைவு கொள்ள வைத்தது. பிரேக் விளக்குகளுக்கான LED ஸ்ட்ரிப், டெயில்கேட்டுடன் இணைவது மிகவும் நன்றாக இருந்தது. 2021-ல் வெளிவந்த ஹூண்டாய் அல்கஸாரும் அதே டிசைனைக் கொண்டுள்ளதை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் பம்பரில் பூமராங் வடிவ ரிஃப்ளெக்டர்கள், டூயல் எக்ஸாஸ்ட்கள் மற்றும் பெரிய ஸ்கஃப் பிளேட் ஆகியவை பின்பக்கத்தின் மற்ற டிசைன் அம்சங்கள்.

ஹெக்ஸாவின் 4,788 மிமீ நீளம், 1,791 மிமீ உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 19-இன்ச் வீல்கள், பார்ப்பவர்களிடம் முரட்டுத்தனமாக இது எதையும் கடந்து செல்லும் எனும் பிம்பத்தை ஏற்படுத்தியது. ஆரியாவின் அசெம்பிளி லைனில் தயாரானதால், ஹெக்ஸாவும் ‘ஹைட்ரோ ஃபார்ம்’ செய்யப்பட்ட கடினமான லேடர் சேஸியுடன் 4x4 ஆப்ஷனைப் பெற்றிருந்தது.

இதனால் வெறும் எஸ்யூவி பிம்பத்தை மட்டும் உருவாக்காமல், மஹிந்திரா வைத்துள்ள எஸ்யூவி ஓனர் கிளப் போல, SOUL என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃப் ரோடு அனுபவத்தைத் தருவதற்காக டாடாவும் ஒரு ஓனர் கிளப்பை உருவாக்கியது.

ஹெக்ஸா... எஸ்யூவி லைனில் மிஸ்ஸானது ஏன்?
ஹெக்ஸா... எஸ்யூவி லைனில் மிஸ்ஸானது ஏன்?

இன்ஜின் & பெர்ஃபாமன்ஸ்

ஹெக்ஸாவில் இருந்தது 2.2லி டர்போ டீசல் வேரிகோர் இன்ஜின். இது இரண்டு ட்யூன்களில் வெளிவந்தது. பேஸ் வேரிகோர் 320 இன்ஜின் சுமார் 148.3hp@4,000rpm பவரையும், 320Nm@1,500-3,000rpm டார்க்கையும் உற்பத்தி செய்தது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தியைப் பின்புறச் சக்கரங்களுக்கு கடத்தியது.

சக்தி வாய்ந்த வேரிகோர் 400 இன்ஜின் 153.9hp@4,000rpm பவரையும், அதிகபட்சமாக 400Nm@1,750rpm டார்க்கையும் உற்பத்தி செய்தது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனில், வேரியன்ட்டைப் பொருத்து ரியர் வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் கொண்டிருந்தது.

ஏன் தோல்வியைத் தழுவியது?

டாடா வரிசையில் உள்ள அனைத்து மாடல்களையும் BS-6 விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அப்டேட் செய்து, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது டாடா. ஹெக்ஸாவும் சஃபாரி எடிஷன் என்ற பெயரில் சிறுசிறு வெளிப்புற டிசைன் அம்சங்களைச் சேர்த்து நின்று கொண்டிருந்தது.

இந்நிலையில், 2020 ஏப்ரல் மாதம் ஹெக்ஸாவின் உற்பத்தியை நிறுத்தியது டாடா. இது நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் அகில இந்திய அளவில் ஒரு கார்கூட விற்கப்படவில்லை என்பது தான் உண்மையான காரணம்.

இன்று அதே ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்ஸா அருகே நின்று கொண்டிருந்த கிராவிட்டாஸ் கான்செப்ட் கார்தான் சஃபாரி என்ற பெயரில், டாடாவில் ப்ரீமியம் எஸ்யூவியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்றளவும் ஹெக்ஸாதான் பழைய சஃபாரிக்கு உண்மையான ஆரம்பம் என்கின்றனர் டாடா ரசிகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism