Published:Updated:

நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி… ரேஞ்ச் கூடிடுச்சு!

டாடா நெக்ஸான் EV மேக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் EV மேக்ஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா நெக்ஸான் EV மேக்ஸ்

நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி… ரேஞ்ச் கூடிடுச்சு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா நெக்ஸான் EV மேக்ஸ்

Published:Updated:
டாடா நெக்ஸான் EV மேக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் EV மேக்ஸ்
நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!

எக்ஸ் ஷோரூம் விலை ரூ.17.74 லட்சம் முதல் 19.24 லட்சம் வரை

ப்ளஸ்: 5 ஸ்டார் ரேட்டிங் கட்டுமானம், எக்ஸ்ட்ரா ரேஞ்ச், பாதுகாப்பு, பெர்ஃபாமன்ஸ்

மைனஸ்: டிரைவிங்கிலேயே நியூட்ரல் கொண்டு வர முடிவது, கார் ஓடும்போது சைடு டோர் லாக் ஓப்பன் செய்ய முடிவது.

‘அவின்யா’ டீஸர் ரிலீஸ் ஆகும்போது, ‘ஏதோ பெரிய பேட்டரி வெச்ச லாங் ரேஞ்ச் நெக்ஸான் ஆக இருக்கும்’ என்று நினைத்தோம். ஆனால், உண்மையிலேயே ஒரு லாங் ரேஞ்ச் தரக்கூடிய, பெரிய பேட்டரி கொண்ட நெக்ஸானை லாஞ்ச் செய்தபோது, அசால்ட்டாக நினைக்க முடியவில்லை. பார்க்கும்போதே பரவசமாகவும், ஓட்டும்போது என்ஜாய்மென்ட் ஆகவும் இருந்தது. அந்தப் பெரிய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பெயர் நெக்ஸான் EV Max.

பெரிய நெக்ஸான் என்றால், ஒரு 7 சீட்டர் நெக்ஸானோ, 6 சீட்டர் நெக்ஸானோ இல்லை. இந்த மாற்றம், பேட்டரியில். நெக்ஸான் EV மேக்ஸ் காரை ஓட்ட பெங்களூரு வரை பறந்தேன்.

டாடாவின் மிகப் பெரிய டீலர்ஷிப்பில் நெக்ஸான் EV மேக்ஸ் ரெடியாக இருந்தது. ‘‘எங்கே வேணாலும் சுத்துங்க. முடிந்தால் 10% பேட்டரி இருக்கும்போது, காரை ரிட்டர்ன் கொடுத்து விட முடியுமா’’ என்று டாடா, நம்மிடம் வேண்டுகோள் வைத்திருந்தது. அதன்படி, பெங்களூரு முழுக்க நந்தி ஹில்ஸ் வரை… கோலார் என்று சில ஏரியாக்களை டிக் அடித்துவிட்டு, நான் நெக்ஸானை ஒப்படைக்கும்போது, 18% மீதமிருந்தது. நிஜமாகவே இது பெரிய ரேஞ்ச் நெக்ஸான்தான். EV மேக்ஸ், எத்தனை கிமீ ரேஞ்ச் தருகிறது என்று பார்க்க ஆவலாக உள்ளீர்கள்தானே! போலாம்!

வெளிப்பக்கம் என்ன மாற்றம்?

வழக்கம்போல், வெளிப்பக்கத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. நெக்ஸான் EV–க்கும், EV மேக்ஸுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். வேண்டுமானால், காரின் ரூஃபை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ரெகுலர் நெக்ஸான் எலெக்ட்ரிக்கில் சன்ரூஃப், வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் கறுப்பு நிற ரூஃப், ஸ்போர்ட்டியாக இருந்தது. மற்றபடி, ஏற்கெனவே இருக்கும் நெக்ஸானின் டீல் புளூ கலரை இப்போது Intensi-Teal என்று மாற்றியிருக்கிறார்கள். அதாவது, புளூ ஷேடு கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. அதுதான் இந்த இன்டென்ஸி டீல் புளூ. உற்றுப் பார்த்தால் இதன் ஆம்பியன்ட் புரியும்.

அப்புறம், பெரிய வித்தியாசம் – இதன் ரியரில் டிஸ்க் கொடுத்திருந்தார்கள். சாதா நெக்ஸான் எலெக்ட்ரிக்கில் டிரம் கொடுத்திருப்பார்கள். எக்ஸ்ட்ரா பேட்டரிக்காகவும், பவருக்காகவும் இந்த மாற்றமாக இருக்கலாம். இதை வைத்துத்தான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், EV Max என்றொரு பேட்ஜாவது வைத்திருக்கலாம் டாடா!

மற்றபடி அதே 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய பேட்டரி என்றாலும் பூட் இடவசதியைக் குறைக்காமல் அதே 350 லிட்டர் என கலக்கலாக இருக்கிறது.

நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!

உள்ளேயும் மாற்றம் இருக்கா?

காரின் உள்ளேயும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. அதே டச் ஸ்க்ரீன், அதே பட்டர்ஃப்ளை கன்ஸோல், அதே ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் என எல்லாமே அதே! சட்டெனக் கவர்ந்தது – அந்த எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக். ப்ரீமியம் தரத்துக்கு இன்னுமொரு சான்று – ஜாகுவார் ஸ்டைலில் மின்னும் அந்த Illuminated ரோட்டரி கியர்நாப். கியர் மாற்றவே ஆசையாக இருக்கிறது.

மெமரி சீட் இருக்குமா என்று தேடினேன். ஆனால், அடித்தது இன்னொரு லக். அட, சீட்டுக்குக் கீழே வென்டிலேட்டட் சீட் வசதிக்கான பட்டன். கோ–டிரைவருக்கும் சேர்த்து, சீட்டில் உள்ள அந்த ட்ரை ஆரோ வடிவ ஓட்டைகள் வழியாக ஜில்லென்று காற்று வந்தது. இந்த சம்மருக்குச் சில்லென்று இருக்கும். கூடவே, இந்த நெக்ஸான் EV Max–ல் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொடுத்திருந்தார்கள். Tata ZConnect எனும் ஆப் – மொபைலிலும் காரை கன்ட்ரோல் செய்வது, சார்ஜிங் ஸ்டேஷன்களைத் தெரிந்து கொள்வது போன்ற விஷயங்களுக்கு வசதியாக இருக்கிறது. நெக்ஸான் EV Max ஒரு கனெக்டட் கார். டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ ஆப்பிள் கார் ப்ளே என எல்லாமே உண்டு. ரிவர்ஸ் கேமரா மட்டும் இன்னும் தெளிவாக இருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

சீட்கள் நல்ல வசதியாக இருக்கின்றன. டெட் பெடலும் இருந்தது ஓட்டுவதற்கு வசதியாக! சென்டர் ஆர்ம் ரெஸ்ட் கையில் இடிக்கவில்லை. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், கப்பி ஹோல்டர்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், ஆட்டோ டிம்மிங் ORVM, ஏர் ப்யூரிஃபையர் இருந்தன.

பின் பக்க இடவசதியிலும் மாற்றமில்லை. வீல்பேஸ் அதே அளவு என்பதால், உட்கார்வதிலும் அதே! ரியர் ஏசி வென்ட், பின் பக்க சீட்டுக்கு மேலே ஒரு சார்ஜிங் போர்ட் இருந்தன. குட்டி சன்ரூஃப் செம!

பேட்டரி மற்றும் சார்ஜிங்

இதைத்தான் பெரிய நெக்ஸான் என்று சொல்கிறோம். ஆம், ரெகுலர் நெக்ஸானின் அதே ஜிப்ட்ரான் தொழில்நுட்பம், அதே ப்ளாட்ஃபார்ம் என்றாலும் – இதன் பேட்டரியை நன்றாகப் பெரிதாக்கி இருக்கிறது டாடா. பழசில் 30.2kWh இருந்த பேட்டரி, இதில் 40.5kWh ஆக உயர்ந்திருக்கிறது. இது சுமார் 30% வரை பேட்டரி செல்கள் அதிகம். அப்படியென்றால், இதன் ரேஞ்சும் நிச்சயம் உயரத்தான் வேண்டும். இந்த பேட்டரியின் அளவுகளிலும் வித்தியாசம் தெரிகிறது.

இதன் சார்ஜிங்கிலும் சொல்லியடித்திருக்கிறது டாடா. இதில் 7.2kW AC சார்ஜர் கொடுக்கிறார்கள். இது கொஞ்சம் பவர்ஃபுல். ரெகுலர் நெக்ஸானில் 3.3kW சார்ஜர் கொடுத்திருப்பார்கள். அது நெக்ஸான் மேக்ஸுக்கும் உண்டு. ஆனால், இதில் 14–15 மணி நேரம் வரை ஃபுல் சார்ஜுக்கு ஆகும். இதுவே 7.2kW சார்ஜரில் 5 – 6 மணி நேரத்தில் சட்டென ஏற்றி விடலாம். டாடா சார்ஜிங் ஸ்டேஷன்களை உங்கள் மொபைல் ஆப்பில் கண்டுபிடித்து, 50kW DC ஃபாஸ்ட் சார்ஜில் போட்டால்… வெறும் ஒரு மணி நேரத்துக்குள் 80% ஏற்றிக் கொள்ளலாம் என்கிறது டாடா.

ரெகுலர் நெக்ஸானில் ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும்தான். ஆனால், அதில் லெவல்கள் இருக்காது. இவி மேக்ஸில் 0 லெவலோடு சேர்த்து 4 லெவல்கள் கொடுத்திருக்கிறார்கள். இதை நாமே செலெக்ட் செய்து கொள்ளலாம். நமது Deceleration–ன் போதும், பிரேக்கிங்கின்போதும் ரீ–ஜென் ஆவதை நன்கு உணர முடிகிறது.

இதில் ஆட்டோ பிரேக் லேம்ப் ஃபங்ஷன் என்றொரு வசதி உண்டு. பதற்றமான நேரங்களில், அதாவது போதுமான ரீ–ஜென் லெவலை அடைந்ததும், இது தானாக பிரேக் லைட்ஸை ஆன் செய்து, மற்ற கம்யூட்டர்களை அலெர்ட் செய்யும்.

E-பார்க்கிங் பிரேக் செம! கியர்நாப் ஸ்டைல்!
E-பார்க்கிங் பிரேக் செம! கியர்நாப் ஸ்டைல்!
நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!
EV Max  எனும் பேட்ஜ் எங்காவது இருந்திருக்கலாம்.
EV Max எனும் பேட்ஜ் எங்காவது இருந்திருக்கலாம்.
ரெகுலர் EV-ல் டிஸ்க் இருக்காது. மேக்ஸில் உண்டு.
ரெகுலர் EV-ல் டிஸ்க் இருக்காது. மேக்ஸில் உண்டு.
நெக்ஸானைவிட பேட்டரி பெருசு. 40.5Kwh
நெக்ஸானைவிட பேட்டரி பெருசு. 40.5Kwh
நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!

பவர் மற்றும் பெர்ஃபாமன்ஸ்

பேட்டரி கூட்டிய கையோடு அப்படியே பவரையும் நெக்ஸான் மேக்ஸில் அதிகரித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதன் பவர் 143bhp. டார்க் 250Nm. இது ரெகுலர் நெக்ஸானைவிட 14bhp பவரும், 5Nm டார்க்கும் அதிகம். இதனால், பவர் வெறித்தனமாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் நெக்ஸானை விரட்டினால், எந்த இடத்திலும் ஒரு எலெக்ட்ரிக் கார் ஓட்டுகிறோம் என்கிற உணர்வே இல்லை.

அதிலும், பெங்களூரு நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்து பார்த்தேன். அட, எந்த இடத்தில் ஆக்ஸிலரேஷன் கொடுத்தாலும், அந்த இடத்தில் இருந்து பவர் டெலிவரி கொப்புளிக்கிறது. பல டீசல்/பெட்ரோல் கார்கள் நெக்ஸான் மேக்ஸுக்குப் பின்னால்தான் போங்கள்!

இதன் 0–100 கிமீ ரெவ்வும் இப்போது குறைந்திருக்கிறது. ரெகுலர் நெக்ஸான், 9.8 விநாடிகள் ஆகும். இது 9 விநாடிகளுக்குள் போகும் என்றது டாடா. நிஜம்தான்; எனக்கு 9.3 விநாடிகளுக்குள் அடைய முடிந்தது.

சிட்டிக்குள்ளும் இதன் ஓட்டுதல் அற்புதம். பட்டன் ஸ்டார்ட் செய்து, ஆக்ஸிலரேட்டர் ஜிவ்வென க்ரீப் ஆகிறது. அதிலும் அந்த 3 டிரைவ் மோடுகள். ஸ்டார்ட் செய்தால் ஸ்டாண்டர்டாகவே ‘சிட்டி’ மோடில்தான் ஓடுகிறது நெக்ஸான். எக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு உள்ளன. எக்கோ மோடில் ஓட்டினால், கார் ரொம்பப் பம்மும் என்று நினைத்தேன். அவ்வளவாக இல்லை. ரேஞ்சிலும் பெரிதாகக் குறையவில்லை. டிஸ்ப்ளேவில் எக்கோ மோடு வைத்தால், 6 கிமீ கூடியது; அவ்வளவுதான்.

ஸ்போர்ட்ஸ் மோடு தெறி ரகம். சில IC இன்ஜின் கார்களே தோற்கும்போல! ஆக்ஸிலரேட்டர் மிதித்தால், ஜிவ்வெனப் பறக்கிறது. இதில் ஓவர்டேக்கிங், பிரமாதம். நம்மை சீட்டுக்குப் பின்னால் தள்ளி, கார் முன்னால் பறக்கிறது. ஆனால், ரேஞ்ச் நன்றாகக் குறைகிறது டிஸ்ப்ளேவில்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

ஓட்டுதலில் பயங்கர முன்னேற்றம் நெக்ஸான் இவி மேக்ஸில். ரொம்பவும் கவர்ந்தது, எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கின் ஃபீட்பேக். எந்த இடத்திலும் நம் சொல்பேச்சுக் கேட்கிறது ஸ்டீயரிங். கார்னரிங்கில் திரும்ப ஜாலியாக இருக்கிறது. இதுவே நெடுஞ்சாலைகளில் கிச்சென நிற்கிறது.

பெரிய பேட்டரி காரணமாக, இதன் எடை சுமார் 70 கிலோ வரை கூடியிருக்கிறது. கூடவே எக்ஸ்ட்ரா எக்யூப்மென்ட்களுக்காக ஒரு 30 கிலோ ஏற்றியிருக்கிறார்கள். அதனால், இதன் சஸ்பென்ஷன் டேம்பர்களை ட்யூன் செய்திருக்கிறது டாடா. இது ஓட்டும்போது நன்றாகவே உணர முடிகிறது.

இதன் கி.கிளியரன்ஸை சுமார் 10 மிமீ வரை குறைத்திருக்கிறார்கள். ரெகுலர் நெக்ஸானின் அளவு 205 மிமீ. இதில் 195 மிமீதான். ஆனால், நான் பாறைகளும், புற்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த ஏரியாவில் நெக்ஸானை ஒரு குட்டி ஆஃப்ரோடு செய்து பார்த்தேன். அத்தனை பிரமாதமாக இருந்தது இதன் ஆஃப்ரோடிங். கி.கிளியரன்ஸ் குறைந்தது பெரிய குறையாக இல்லையோ என்று தோன்றியது. அதிலும் ஆட்டோ ஹோல்டு பட்டன், டவுன் ஹில் அசிஸ்ட் போன்றவை மலைப்பாதைகளில் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்.

என்ன குறை?

ஒரு சில எர்கானமிக்ஸ் குறைகள் தென்பட்டன. ஆக்ஸிலரேட்டர் மிதித்துக் கொண்டே – என்னால் ரோட்டரி கியர் நாப் லீவரை D மோடிலிருந்து நியூட்ரலுக்குக் கொண்டு வர முடிந்தது; அதாவது பிரேக்கில் கால் வைக்காமல்! நல்லவேளையாக – ரிவர்ஸ் விழவில்லை. கார் நிற்கும்போதெல்லாம், பிரேக் லீவரில் கால் வைத்தால் மட்டுமே வேலை செய்யும் கியர் நாப், ஓடிக் கொண்டிருக்கும்போது மாறுவது கொஞ்சம் ஆபத்துதான். கோ–டிரைவர் சீட்டில் குழந்தைகள் அல்லது சேட்டைப் பார்ட்டிகள் இருந்தால்... கியர் பாக்ஸில் கை வைக்க விடாதீர்கள்!

அதேபோல், ஸ்பீடு டோர் சென்ஸிங் லாக்குகள் இருந்தாலும்… இதையும் கார் ஓடும்போதே அன்லாக் செய்ய முடிகிறது என்பதும் பயத்தை வரவழைக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும் டாடா!

என்ன வேரியன்ட்… என்ன விலை?

எது வாங்கலாம்?

மொத்தம் 2 வேரியன்ட்களில் வந்திருக்கிறது நெக்ஸான் இவி மேக்ஸ். XZ+ மற்றும் XZ+ Lux. இதில் இரண்டுக்குமே 3.3kW மற்றும் 7.2kW AC சார்ஜர் ஆப்ஷன்களோடு மொத்தம் 4 ட்ரிம்கள். 8 ஆண்டுகள் மற்றும் 1,60,000 கிமீ வரை பேட்டரிக்கும் மோட்டாருக்கும் வாரன்ட்டி கொடுத்திருக்கிறது டாடா. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 17.74–ல் இருந்து 19.24 லட்சம் வரை பொசிஷன் செய்திருக்கிறது டாடா. இது ஸ்டாண்டர்டு நெக்ஸானைவிட சுமார் 2.5 – 3 லட்சம் வரை அதிகமாக வரலாம்.

3.3kW சார்ஜரைவிட ஃபாஸ்ட் சார்ஜர் மாடல் என்றால், எக்ஸ்ட்ராவாக சுமார் 70,000 கொடுக்க வேண்டும். அதனாலென்ன… ஓட்டுவதற்கு ஜாலியான, ஆஃப்ரோடு செய்வதற்கு ஏதுவான எலெக்ட்ரிக்காக, ஒரு ஃபுல்லி பேக்கேஜ்டு EV ஆக ஜொலிக்கிறதே நெக்ஸான் இவி மேக்ஸ்!

நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!
நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நெக்ஸானில் இப்போ பெரிய பேட்டரி…
ரேஞ்ச் கூடிடுச்சு!

நெக்ஸான் EV மேக்ஸின் ரியல் டைம் ரேஞ்ச் என்ன?

ரெகுலர் நெக்ஸான் EV-ன் அராய் ரேஞ்ச் – 312 கிமீ. ஆனால், ரியல் டைம் ரேஞ்சாக சுமார் 208 –220 கிமீ வரை நம்முடைய ஓட்டுதலுக்குக் கிடைத்தது. இதுவே நெக்ஸான் EV மேக்ஸின் அராய் ரேஞ்ச் 437 கிமீ என்கிறது டாடா. 100% ஃபுல் சார்ஜ் போட்டு காரை எடுத்ததில் இருந்து மோடுகளை மாற்றி, ரீ–ஜென் லெவலை மாற்றி மாற்றி பெங்களூரு சிட்டி, ஹைவேஸ் என்று ஓட்டியதில், நமது ட்ரிப் ரீடிங் 198 கிமீ காட்டியது. மீதம் நமக்கு 32% சார்ஜிங் இருந்தது. இன்னும் சுமார் 100 – 120 கிமீ வரை ஓட்டலாம். அப்படியென்றால், இதன் ரியல் டைம் ரேஞ்ச் சுமார் 300 – 310 கிமீ கிடைக்கும் என்று தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism