கார்ஸ்
Published:Updated:

நெக்ஸானில் மின்சாரக் கருப்பன்!

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் Dark Edition
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் Dark Edition

அறிமுகம்: டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் Dark Edition

நெக்ஸானில் மின்சாரக் கருப்பன்!

டாடா நெக்ஸான் EV MAX Dark Edition. டாடா யுனிவர்ஸில் இப்போது இதுதான் புதியது. மின்சார கார் சந்தையில் டாடா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் - டாடா நெக்ஸான் EV. போட்டியை சமாளிக்க இதைவிட அதிக சக்தி, அதிக ரேஞ்ச் கொண்ட ஒரு நெக்ஸான் EV தேவைப்பட்டதால், நெக்ஸான் EV MAX கொண்டுவந்தார்கள். அதையும் இப்போது ப்ரீமியம் காராக முன்னிறுத்த டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

19.04 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) பட்ஜெட்டில் வந்திருக்கும் நெக்ஸான் EV மேக்ஸ் டார்க் எடிஷனின் சிறப்பு என்பது அதன் `மின்நைட் பிளாக்' கலர்தான். இதில் கூடுதலாக Chalk Coal கிரே வண்ணத்தில் அலாய் வீல் கொடுத்திருக்கிறார்கள். கிரில் அருகே சாட்டின் ப்ளாக் வண்ணத்தில் ஒரு அழகிய பட்டை கொடுத்திருப்பதுடன், அதற்கு ஹுமானிட்டி லைன் என்ற பெயரையும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல காரின் பக்கவாட்டிலும் ஒரு பெல்ட் லைனைப் பார்க்க முடிகிறது. மற்றபடி ப்ரொஜெக்டர் ஹெட்லாம்பஸ், DRL, LED டெய்ல் லாம்ப்ஸ், #DARK என்று பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, ரூஃப் ரெய்ல்ஸ் ஆகியவை கறுப்பு காருக்குக் கம்பீரத்தைச் சேர்கின்றன.

கறுப்பு என்பது பிரீமியம் என்று புரிந்து கொள்ளப்படுவது, காரின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தால்... எங்கும் எதிலும் கவர்ச்சியான கறுப்பு வண்ணம்தான்! டேஷ்போர்டு பியானோ பிளாக் ஃபினிஷிலும், லெதரைட் இருக்கைகள் நீல நிறத் தையல்களுடன் கறுப்பு வண்ணத்திலும் இருக்கின்றன. தவிர ஏசி வென்ட், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற இடங்களைச் சுற்றி நீல நிறத்தை இழையோட விட்டிருப்பது கிளாஸ். முன்னிருக்கைகள் இரண்டும் குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தக்கூடிய சிறு துவாரங்கள் கொண்ட பர்ஃபரேட்டட் சீட்ஸ். ஸ்டீயரிங்கில் அதே லெதரைட் கவர்தான்.இதுவும் பொருத்தமாக இருக்கிறது.

நெக்ஸானில் மின்சாரக் கருப்பன்!

இதுவரை சொன்னதெல்லாம் ஜஸ்ட் ட்ரெய்லர். இந்த டார்க் எடிஷனின் முக்கிய அம்சமே இதன் தொடுதிரைதான். 7 இன்ச் டச் ஸ்கிரீன் இப்போது 10.25 இன்ச் அளவுக்குப் பெரிதாகி இருக்கிறது. அதோடு, இந்த Harman HD தொடு திரை 1920X720 ஆக மேம்பட்டிருக்கிறது. இதன் செயல்பாட்டிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ரிவர்ஸ் கேமராவின் தரமும் மேம்படுத்தப்பட்டிருப் பதால் ரிவர்ஸ் எடுக்கும்போது இந்தத் தொடுதிரை மேலும் துல்லியமாக, பின்னால் இருக்கும் காட்சிகளைக் காட்டுகிறது. ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றின் RED Edition-ல் இருக்கும் அதே தொடுதிரைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, இந்தத் தொடுதிரை காரை ஓட்டுகிறவர் பார்ப்பதற்கு வசதியாக நல்ல பொசிஷனுக்கு இடம் மாறியிருக்கிறது.

முன்பு வொயர் மூலம் இயங்கி வந்த ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை இதில் ஒயர்லஸ் ஆகவே இயங்குகின்றன. இது தமிழ் உட்பட ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, இந்தி என்று ஆறு மொழிகளில் வாய்ஸ் கமாண்ட்ஸ் ஏற்றுச் செயல்படுத்துகிறது.

மற்றபடி நெக்ஸான் மேக்ஸில் இருக்கும் அதே 40.5Kw கொண்ட IP67 தரமுத்திரை கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரிதான். இது வழக்கம்போல 143Bhp அளவுக்கு சக்தியையும், 250Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இதை 453 கிமீ வரை ஓட்டலாம் என்று டாடா சொன்னாலும், நிச்சயமாக 300 கிலோமீட்டர் ஓட்டலாம். இதுவே ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டினால் ரேஞ்ச் குறைய வாய்ப்புண்டு.