Published:Updated:

நெக்ஸானில் 2... வென்யூவில் 6... ஆனால் நெக்ஸானுக்கு 5*

டாடா நெக்ஸான்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான்

ஒப்பீடு: டாடா நெக்ஸான் VS ஹூண்டாய் வென்யூ

நெக்ஸானில் 2... வென்யூவில் 6... ஆனால் நெக்ஸானுக்கு 5*

ஒப்பீடு: டாடா நெக்ஸான் VS ஹூண்டாய் வென்யூ

Published:Updated:
டாடா நெக்ஸான்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான்
நீங்கள் இங்கே பார்க்கும் காம்பேக்ட் எஸ்யூவி ஒப்பீடுகள் புதியதில்லை. என்றாலும், ஸ்டைல் மற்றும் காசுக்கேற்ற மதிப்பில் உயர்ந்து நிற்கும் நெக்ஸான், BS-4 அவதாரத்தில் சில மைனஸ்களுடன் இருந்தது. குறைவான சிறப்பம்சங்கள், சுமாரான கேபின், ஃபிட் & ஃபினிஷ், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் ஆகியவை அதற்கான உதாரணங்கள். கடந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய BS-6 வெர்ஷனில், நெக்ஸானை ஒரு புதிய தயாரிப்பு போல மாற்றியிருந்தது. சன்ரூஃப், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், டிஜிட்டல் மீட்டர் என லேட்டஸ்ட் அம்சங்கள் இடம்பெற்றன என்பதுடன், போட்டி கார்களுக்கு இணையாக இன்ஜின் திறனும் அதிகரிக்கப்பட்டது (120 bhp). இதனால் வென்யூவை வெல்லும் திறனை நெக்ஸான் பெற்றிருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விலை: 13.16 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை: 13.16 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
J T THULASIDHARAN

டிசைன்

ஃபேஸ்லிஃப்ட் ஒரு காரை எந்தளவுக்கு ஃப்ரெஷ்ஷாக மாற்றும் என்பதற்கு, நெக்ஸான் மற்றுமொரு சிறப்பான எடுத்துக்காட்டு. Pedestrian Safety விதிகள் காரணமாக, காரின் முன்பகுதி முற்றிலுமாக மாறிவிட்டது. உயரமான பானெட், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், தடிமனான க்ரில், ஸ்கஃப் ப்ளேட் உடனான முன்பக்க பம்பர் ஆகியவை சூப்பர். அதிலும் பம்பரின் கீழ்ப்பகுதியில் உள்ள Tri-Arrow Detailing, மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை நினைவுபடுத்துகிறது. பக்கவாட்டுப் பகுதியில் அலாய் வீல்கள் மற்றும் கறுப்பு நிற பில்லர்கள் புதிது. பின்பக்கத்தில் உள்ள டெயில் லைட்ஸில் உள்ள Union Jack Detailing மற்றும் கட்டுமஸ்தான பம்பர், நெக்ஸானின் தோற்றத்தை முழுமைப்படுத்திவிடுகிறது. எனவே இந்த டாடா எஸ்யூவி, முன்பைவிட கெத்தாகக் காட்சியளிக்கிறது.

எஸ்யூவிக்கே உரித்தான வடிவம் - உப்பலான வீல் ஆர்ச்கள் - விசாலமான kஇரில் என ஈர்க்கும் வென்யூ, நெக்ஸானிடம் Road Presence-ல் தோற்றுவிடுகிறது. ஏனெனில் நீளம்/உயரம்/வீல்பேஸ்/வீல் சைஸ் ஆகியவற்றில் இரு கார்களிடையே அதிக ஒற்றுமை இருந்தாலும், அகலத்தில் டாடா, ஹூண்டாயை வீழ்த்திவிட்டது. லேட்டஸ்ட் கார்களில் பின்பற்றப்படும் ஸ்ப்ளிட் ஹெட்லைட் பாணி, வென்யூவைக் கொஞ்சம் தனித்துக் காட்டுகிறது. மற்றபடி, காரின் பின்பக்கத் தோற்றத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

விலை: ரூ.11.25 (சென்னை ஆன்ரோடு)
விலை: ரூ.11.25 (சென்னை ஆன்ரோடு)
JT THULASIDHARAN

கேபின்

வெளிப்புறத்துடன் ஒப்பிடும்போது, நெக்ஸானின் உள்பக்கத்தில் இருக்கும் மாற்றம் குறைவுதான். அதாவது கேபினின் வடிவமைப்பு அதேதான் என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் வேறுபாடு தெரிகிறது. அதற்கேற்ப லைட் கிரே கலர் மற்றும் Gloss Black ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு, முன்பைவிடச் சிறப்பான ஃபிட் & ஃபினிஷில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், சன்ரூஃப், டிஜிட்டல் மீட்டர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. என்றாலும், டிஜிட்டல் மீட்டர் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் ஸ்க்ரீன் Refelctive ஆக இருக்கிறது. தவிர ஓரமாக இருக்கும் டேக்கோமீட்டரின் லே-அவுட்டும் வசதியாக இல்லை. இவ்வளவு பெரிய கேபினில், ஸ்மார்ட்ஃபோன் வைக்கச் சரியான இடம் இல்லை என்பதும் மைனஸ்.

வென்யூவின் கேபின், சிறப்பான எர்கானமிக்ஸ் உடன் கவர்கிறது. மேல்நோக்கிய பில்லர்களால், வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. மேலும் டச் ஸ்க்ரீன் மற்றும் ஆடியோ/ஏசி கன்ட்ரோல்கள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன. கேபின் தரம் டாடாவைவிட நன்றாக இருந்தாலும், உள்பக்கம் கொஞ்சம் இருட்டாக இருப்பது போலத் தோன்றுகிறது. புதிதாக வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் பேக்கேஜில், சீட்கள் & ஏசி நாப்பில் சிவப்பு எட்டிப் பார்க்கிறது. ஆனால் இது மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் கிடையாது. எதிர்பார்த்தபடியே, கேபின் இடவசதியில் வென்யூ பின்தங்கிவிடுகிறது. அதிக லெக்ரூம், முதுகுக்கான நல்ல சப்போர்ட், 3 பேருக்கான சொகுசான இடம் என நெக்ஸான் அசத்துகிறது. சன்ரூஃப் காரணமாக Head Liner தாழ்வாக இருந்தாலும், ஹெட்ரூமில் எந்தச் சரிவும் இல்லை. 350 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் சீட் இரண்டுக்கும் பொது. இதனால் லக்கேஜ் ஸ்பேஸ் போதுமான அளவில் உள்ளது.

 1. நெக்ஸானைவிட வென்யூவின் 8.0” டச் ஸ்க்ரீன் பெருசு.  2. அனலாக் மீட்டர்கள்தான் வென்யூவில். பேக்லிட் பளிச்.  3. வென்யூவின் ஸ்ப்ளிட் ஹெட்லைட், காரைத் தனித்துக் காட்டுகிறது.  4. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் துல்லியமாகச் செயல்படுகிறது.
1. நெக்ஸானைவிட வென்யூவின் 8.0” டச் ஸ்க்ரீன் பெருசு. 2. அனலாக் மீட்டர்கள்தான் வென்யூவில். பேக்லிட் பளிச். 3. வென்யூவின் ஸ்ப்ளிட் ஹெட்லைட், காரைத் தனித்துக் காட்டுகிறது. 4. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் துல்லியமாகச் செயல்படுகிறது.

சிறப்பம்சங்கள்

டாடா மற்றும் ஹூண்டாயின் டாப் மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்களையே இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துள்ளோம். எனவே ஒருவர் எதிர்பார்க்கும் வசதிகள் இங்கே நிறைந்திருக்கின்றன. ஆட்டோ ஹெட்லைட்ஸ், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் ஏசி வென்ட்கள், கீ-லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இரண்டிலுமே உள்ளன. நெக்ஸானில் பிரத்யேகமாக டிரைவிங் மோடுகள், டிஜிட்டல் மீட்டர், Rain Sensing வைப்பர்கள் இருக்கின்றன. மேலும் ஏசியில் உள்ள Xpress Cool அம்சத்தைப் பயன்படுத்தும்போது, அது கதவுக் கண்ணாடிகளைத் தானாகவே கீழிறக்கிவிட்டு, உள்ளேயிருக்கும் வெப்பமான காற்றை வெளியே தள்ளிவிடும். மேலும் விரைவாகவே ஏசி தனது Optimum இயங்குநிலைக்கும் வந்துவிடும். உங்கள் கார் வெயிலில் நிற்கும் என்றால், இந்த வசதி உங்களுக்கு அதிகமாகப் பயன்படும்.

வென்யூவில் வயர்லெஸ் சார்ஜர் ஸ்பெஷல் என்பதுடன், இதில் பெரிய டச் ஸ்க்ரீனும் உள்ளது. டாடாவில் உள்ள 7 இன்ச் ஸ்க்ரீனைவிட, ஹூண்டாயில் இருக்கும் 8 இன்ச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது. iRA எனப்படும் தொழில்நுட்பம், காரின் உரிமையாளர் அதனைத் தொடர்ச்சியாக கண்காணிக்க உதவுகிறது. சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியது தெரிந்ததே! இன்னும் வென்யூ க்ராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை என்றாலும், அதில் 6 காற்றுப்பைகள் இருப்பது செம! நெக்ஸானில் 2 காற்றுப்பைகளே உண்டு என்றாலும், இரண்டிலும் ESC - TPMS - ISOFIX ஆகியவை உண்டு.

1.  கேபினின் வடிவமைப்பில் மாற்றம் இல்லை. சில வேறுபாடுகள் உண்டு. ஃபிட் அண்ட் ஃபினிஷ், முன்பை விடப் பிரமாதம். ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஸ்டைல்.  2. டிஜிட்டல் மீட்டர் செம ஸ்போர்ட்டி.  3. ஹெட்லைட்ஸ் செம ஷார்ப். பானெட்டின் உயரத்தை ஏற்றியிருக்கிறார்கள்.  4. வென்யூ போலவே இதிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்.
1. கேபினின் வடிவமைப்பில் மாற்றம் இல்லை. சில வேறுபாடுகள் உண்டு. ஃபிட் அண்ட் ஃபினிஷ், முன்பை விடப் பிரமாதம். ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஸ்டைல். 2. டிஜிட்டல் மீட்டர் செம ஸ்போர்ட்டி. 3. ஹெட்லைட்ஸ் செம ஷார்ப். பானெட்டின் உயரத்தை ஏற்றியிருக்கிறார்கள். 4. வென்யூ போலவே இதிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

BS-4 நெக்ஸானில் பெரிய குறையாக இருந்தது, அதிலிருந்த 1,199சிசி - டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். இந்த Revotron - 3 சிலிண்டர் இன்ஜின் சீரற்ற பவர் டெலிவரியைக் கொண்டிருந்ததுடன், இந்த வகை இன்ஜினில் ஒருவர் எதிர்பார்த்த பஞ்ச்சும் கிடைக்கப் பெறவில்லை. BS-6 அப்டேட்டில் Driveability விஷயத்தில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தாலும், இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது டாடா! குறைவான வேகங்களில், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில், இன்ஜினை இயங்கவிடாமல் யாரோ கட்டுப்படுத்துவது போன்ற உணர்வே மேலோங்குகிறது. தவிர க்ளட்ச்சும் எதிர்பார்த்த ஃபீட்பேக்கைத் தரவில்லை. மிட்ரேஞ்ச்சுக்கு வரும்போது பெர்ஃபாமன்ஸ் நன்றாக இருந்தாலும், அந்த அதிரடி முற்றிலும் மிஸ்ஸிங். சிட்டி டிரைவிங் மோடு, நகர்ப்புறங்களில் பயன்படுத்த ஓகே! எக்கோ மோடு, அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்களைத் திருப்திப்படுத்தும். ஆனால் ஸ்போர்ட் மோடில் கூட, முன்பைவிட அதிகமாகக் கிடைக்கும் 10bhp பவர் பெரிதாகத் தெரியவில்லை. 17kgm டார்க் மற்றும் 17.4கிமீ அராய் மைலேஜ் ஓகேதான்!

நெக்ஸானில் 2... வென்யூவில் 6... ஆனால் நெக்ஸானுக்கு 5*

இதனுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாயின் 998சிசி - டர்போ பெட்ரோல் இன்ஜின் முழுமையான உணர்வைத் தருகிறது. இந்த 3 சிலிண்டர் இன்ஜின், டாடாவைவிட அளவில் சிறியது. என்றாலும் அதைப் போலவே இதுவும் 120bhp பவரைத் தருவதுடன், நெக்ஸானைவிடக் கொஞ்சம் அதிக டார்க்கையும் (17.2kgm) - அராய் மைலேஜையும் வென்யூ கொடுக்கிறது (18.1கிமீ). இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், எடை குறைவான க்ளட்ச் மற்றும் துல்லியமான கியர்பாக்ஸ் ஆகியவை, நல்ல கூட்டணியை அமைத்துள்ளன. 2,000 ஆர்பிஎம்மைத் தாண்டியபிறகு, வென்யூவின் மற்றுமொரு பரிணாமம் பளிச்சிடுகிறது. மிட்ரேஞ்ச் அசத்தலாக இருப்பதுடன், டாப் எண்டும் மனநிறைவைத் தருகிறது. மேலும் இன்ஜின் சத்தமும், ஹூண்டாயில் ரசிக்கும்படி இருப்பது போனஸ். எனவே எதிர்பார்த்தபடியே, 100 கிமீ வேகப்போட்டியில் வென்யூ வெல்கிறது. (நெக்ஸான்: 13.01 விநாடிகள், வென்யூ: 11.24 விநாடிகள்). 140 கிமீ வேகப்போட்டிக்கும் இது பொருந்துகிறது (நெக்ஸான்: 27.37 விநாடிகள், வென்யூ: 24.02 விநாடிகள்) தவிர கியர்களுக்கு இடையேயான வேகத்திலும் இதுவே முன்னிலை வகிக்கிறது.

நெக்ஸானில் 2... வென்யூவில் 6... ஆனால் நெக்ஸானுக்கு 5*

ஓட்டுதல் அனுபவம்

நம் ஊர்ச் சாலைகளை மனதில் வைத்து, நெக்ஸானின் சஸ்பென்ஷனை டியூன் செய்திருக்கிறது டாடா. எனவே எப்படிப்பட்ட கரடுமுரடான சாலைகளில் பயணித்தாலும், குறைவான வேகத்தில்தான் அதனை உணர முடிகிறது. இதுவே வேகமாகச் செல்லும்போது, சாலை தரும் அதிர்வுகளைச் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக் கொள்கிறது. கச்சிதமான எடையில் துல்லியமாக இயங்கும் ஸ்டீயரிங் மற்றும் சூப்பரான சேஸி ஆகியவற்றால், திருப்பங்களில் நெக்ஸானைச் செலுத்துவது நல்ல அனுபவம். காரின் நிலைத்தன்மையும் பக்கா மாஸ் ரகம்.

பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றபடி, வென்யூவின் ஓட்டுதல் அமைந்துள்ளது. எடை குறைவான ஸ்டீயரிங் மற்றும் தெளிவாகத் தெரியும் வெளிச்சாலை காரணமாக, ஒரு டால்பாய் ஹேட்ச்பேக் போல இந்த ஹூண்டாயை எளிதாகக் கையாள முடிகிறது. இறுக்கமான சஸ்பென்ஷன் உள்ளதால், திருப்பங்களில் காரைச் செலுத்துவதும் ஓகே ரகம்தான். ஆனால் இதே செட்-அப்பால், சீரற்ற சாலைகளில் செல்லும்போது வென்யூ கொஞ்சம் அலைபாய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் விகடன் தீர்ப்பு

நெக்ஸானில் பலருக்குப் பிடித்த விஷயங்கள், அதன் BS-6 அப்டேட்டிலும் தொடர்ந்தன. உறுதியான கட்டுமானம், அதிக இடவசதி, ஸ்டைலான டிசைன் ஆகியவை அதனை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில பல குறைகளும் களையப்பட்டிருப்பது வரவேற்கத்த அம்சமே! முன்பைவிட அதிக வசதிகளும் உண்டு! இதனால் டாப் வேரியன்ட்டின் விலை, கொஞ்சம் காஸ்ட்லியான உணர்வைத் தருவது நெருடல் (11.25 லட்ச ரூபாய், சென்னை ஆன்ரோடு விலை). தவிர இன்றுமே, இந்த டாடா காரில் மைனஸாக இருப்பது, அதிலிருக்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் இருந்தாலும், அதில் இன்னும் பஞ்ச் வேண்டும். குறைவான இடவசதியையும் அதிக விலையையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நெரிசல்மிக்க நகர்ப்புறங்களில் பயன்படுத்துவதற்கு வென்யூ நல்லதொரு தயாரிப்பாகக் காட்சியளிக்கிறது (13.16 லட்ச ரூபாய், சென்னை ஆன்ரோடு விலை). அதிகப்படியான வசதிகள், பவர்ஃபுல் இன்ஜின், எளிதான ஓட்டுதல் ஆகியவை, இந்த ஒப்பீட்டின் வெற்றியாளராக ஹூண்டாயை மாற்றுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism