Published:Updated:

பேபி எஸ்யூவிக்கள்... எது பெஸ்ட்!

போட்டி, எது பெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
போட்டி, எது பெஸ்ட்

போட்டி, எது பெஸ்ட்: டாடா பஞ்ச் Vs ரெனோ கைகக் Vs நிஸான் மேக்னைட்

பேபி எஸ்யூவிக்கள்... எது பெஸ்ட்!

போட்டி, எது பெஸ்ட்: டாடா பஞ்ச் Vs ரெனோ கைகக் Vs நிஸான் மேக்னைட்

Published:Updated:
போட்டி, எது பெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
போட்டி, எது பெஸ்ட்

‘பட்ஜெட் ரொம்ப டைட்டா இருக்கு; ஆனா அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவி வேணும்’ என்பவர்களுக்கு இப்போது லேட்டஸ்ட்டாக டாடா பஞ்ச் வந்திருக்கிறது. பஞ்ச் புறப்பட்டதே சப் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தத்தான். ‘என்னா பில்டு குவாலிட்டி’ என்று வியக்க வைக்கும் அதேவேளையில், ரெனோவின் கைகர் மற்றும் நிஸானின் மேக்னைட் போன்றவற்றையும் இந்த செக்மென்ட்டில் சும்மா எடை போட்டு விட முடியாது. காம்பேக்ட் எஸ்யூவியில் இந்த 3 பேபிகளும் முக்கியமானவர்கள்.

அசத்தலான பில்டு மற்றும் டிசைன்…

பஞ்ச்: இங்கிருப்பதில் உயரமான டால்பாய் என்று டாடாவின் பஞ்ச்சைச் சொல்லலாம். இந்த ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், ஹேரியரையோ – சஃபாரியையோ நினைவுபடுத்துகிறது. கார் முழுக்க கறுப்பு பாடி கிளாடிங்குகள், ஒரு டஃப் லுக்கைக் கொடுக்கிறது. கிண்ணென்ற இதன் கட்டுமானத்துக்கு, அந்த 16 இன்ச் வீல்களும் துணை புரிகின்றன. டெயில் லைட்ஸ் சின்னதாகக் கொடுத்திருக்கிறார்கள். பஞ்ச்சைப் பொறுத்தவரை செம ரோடு பிரசன்ஸ் என்றும் சொல்ல முடியாது; அப்பாவி என்றும் சொல்ல முடியாது. இந்த மூன்றில் குறைவான 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பது பஞ்ச் மட்டும்தான்.

டாடா பஞ்ச்
டாடா பஞ்ச்

கைகர்: அப்படியே க்ராஸ்ஓவரை மனதில் வைத்தே கைகரை டிசைன் செய்திருக்கிறார்கள். தூரத்தில் இருந்து இந்த ரெனோ லோகோ கொண்ட காரைப் பார்க்கும்போது, ஒரு காட்டு விலங்கு பாயத் தயாராக இருப்பது போல் வருகிறது. ஒரு கூபே கார் போன்று ஸ்போர்ட்டியாக இருக்கிறது கைகர். இதிலும் 16 இன்ச் அலாய் வீல்கள்தான். டெயில் லைட்ஸ் – 3டி வடிவத்தில் ஜொலிக்கிறது. கைகரை முதன் முறையாகப் பார்க்கும்போது, ‘க்விட் காரைத்தான் பெருசாக்கி இருக்கிறார்களோ’ என்று நான் நினைத்ததையே – நிறைய வாசகர்களும் சொன்னார்கள். ஆம், டிசைனில் பெரிய க்விட்தான் கைகர்.

ரெனோ கைகர்
ரெனோ கைகர்

மேக்னைட்: ஒரு போல்டான எஸ்யூவி, ஜாலியான க்ராஸ்ஓவர் – இரண்டுக்கும் நடுவில் பேலன்ஸ் செய்வதுபோல், மேக்னைட்டைக் கச்சிதமாக டிசைன் செய்திருக்கிறது நிஸான் டிசைன் டீம். ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள் (இதிலும் 16 இன்ச்தான்), கதவுகளுக்கு சில்வர் கிளாடிங்குகள் என்று இதன் கஸின் ஆன கைகரைவிடக் கொஞ்சம் போல்டாகவே இருக்கிறது மேக்னைட். இங்கிருப்பதிலேயே நீளம் அதிகமானது மேக்னைட் மட்டும்தான். (3,994 மிமீ). கைகரைவிட 3 மிமீதான் அதிகம். பஞ்ச்சைவிட 167 மிமீ அதிகம் என்பதைக் கவனிக்க வேண்டும். அதேபோல் கைகரைப்போலவே மேக்னைட்டும் ஒரு எஸ்யூவிக்கு ஏற்றபடி 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது.

நிஸான் மேக்னைட்
நிஸான் மேக்னைட்

இடவசதி, பூட் எதில் சூப்பர்?

கைகர்: ஒரு எஸ்யூவியை 4 மீட்டருக்குள் தாராளமாகத் தயாரிப்பது என்பது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றும் சாதாரண டாஸ்க் இல்லை. அதிலும் சீட் இடவசதியில் கொஞ்சம் சொதப்பினாலும் அவ்வளவுதான். இதில் கைகரும் மேக்னைட்டும் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. காரணம், இவற்றின் நீளம் மட்டுமில்லை; அகலமான கேபினும், தாராளமான வீல்பேஸும்தான். இவை பஞ்ச்சைவிட 55 மிமீ நீளம். இந்த மூன்றில் கைகரில்தான் பூட் வசதி தாராளம். 405 லிட்டர்.

கைகரின் பூட் ஸ்பேஸ் தான் இங்கே அதிகம் - 405 லிட்டர்
கைகரின் பூட் ஸ்பேஸ் தான் இங்கே அதிகம் - 405 லிட்டர்

மேக்னைட்: 2,500 மிமீ வீல்பேஸுக்குள் 5 பேர் உட்காரும் அளவுக்கு இடசவதியை நன்றாகவே கொடுத்திருக்கிறார்கள். ஹெட் ரூம் மற்றும் லெக் ரூம் நிறைவாகவே இருக்கிறது. ஆனால், இரண்டும் ஒரே அளவு கிடையாது. மேக்னைட்டைவிட கைகரில் விண்டோ சின்னதாக இருப்பதாலும், தரை லோயராக இருப்பதாலும், தொடைக்கான சப்போர்ட் குறைகிறது. சீட்டும் கொஞ்சம் இறுக்கம். மேக்னைட்தான் பின் பக்க இடவசதியில் கைகரைவிட தாராளமாகவும் விசாலமாகவும் இருக்கிறது. மேக்னைட்தான் பூட் வசதியில் கம்மி; 336 லிட்டர்.

மேக்னைட்டின் பூட் ஸ்பேஸ் 336 லிட்டர் தான்
மேக்னைட்டின் பூட் ஸ்பேஸ் 336 லிட்டர் தான்

பஞ்ச்: பின் பக்கம் பஞ்ச்சில் ஏசி வென்ட் இல்லாததாலோ என்னவோ, இதில் காலை நீட்டி மடக்க வசதியாக இருக்கிறது. சீட்கள் உயரமாக இருப்பதால், வெளியே நன்றாக வேடிக்கை பார்க்கலாம். சீட்கள் சொகுதான்; ஆனால், இடவசதியில் ஒப்பிடும்போது மற்ற இரண்டு கார்களைவிட சுமார். இதன் வீல்பேஸ் மற்றவற்றைவிடக் குறைவு. உட்காரும்போதே சின்ன காரில் உட்கார்வதுபோல் இருக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், பின் பக்க இடவசதியைப் பொருத்தவரை, ஒரு உயரமான ஹேட்ச்பேக்கில் அமர்ந்திருக் கிறேன்; அவ்வளவுதான்! பஞ்ச்சின் பூட் 366 லிட்டர்.

பானெட்டுக்குள் எது பவர்?

கைகர், மேக்னைட்: இந்த மூன்றில் இருப்பதுமே 3 சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின்தான். இதில் கைகரிலும் மேக்னைட்டிலும் இருப்பது 999சிசியும், 72bhp பவரும், 96 Nm டார்க்கும் கொண்ட இன்ஜின்தான். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இரண்டிலுமே. ஆக்ஸிலரேஷன் போட்டியிலும் மேக்னைட்தான் வேகம். இதைவிட பவர்ஃபுல் இன்ஜின்கள் வேண்டுமென்றால் நிஸானிலும் ரெனோவிலும் டர்போவை முயற்சித்துப் பாருங்கள். கைகரிலும் மேக்னைட்டிலும் லாங் ட்ராவல் க்ளட்ச் பெடல்கள் என்பது, கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். இரண்டிலும் டெட் பெடல் இல்லை என்பது மைனஸ். லாங் டிராவலில் இது சிரமத்தை ஏற்படுத்தலாம்.

கைகரின் இன்டீரியர் ஸ்போர்ட்டி. ஆனால் சில எர்கனாமிக்ஸ் சிக்கல்கள் இருக்கின்றன.
கைகரின் இன்டீரியர் ஸ்போர்ட்டி. ஆனால் சில எர்கனாமிக்ஸ் சிக்கல்கள் இருக்கின்றன.
நிஸான் மேக்னைட்டில் 360 டிகிரி கேமரா வயர்லெஸ் சார்ஜிங் என வசதிகள் ஏராளம்
நிஸான் மேக்னைட்டில் 360 டிகிரி கேமரா வயர்லெஸ் சார்ஜிங் என வசதிகள் ஏராளம்

பஞ்ச்: இங்கிருப்பதிலேயே பவர் அதிகமான, சிசி அதிகமான இன்ஜின் பஞ்ச்சில்தான். 1.2 லிட்டர்… அதாவது 1,199 சிசி கொண்டிருக்கிறது பஞ்ச்சின் 86 bhp பவரும் 113 Nm டார்க்கும் கொண்டிருக்கிறது. ஆனால்… மற்ற இரண்டைவிட பஞ்ச்தான் பவராக இருக்க வேண்டும். ஆனால், இங்கிருப்பதில் மெதுவான காராக இருப்பது டாடா பஞ்ச்தான். 0–20 கிமீ–க்கு 1.48 விநாடிகள் ஆகிறது. அதற்காக வேகப் போட்டியில் ரொம்பவும் பின்தங்கிவிடவில்லை டாடா. 0–- 100 கிமீ–க்கு மற்ற இரண்டைவிட 1 விநாடிதான் குறைவு. 16.14 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொடுகிறது பஞ்ச். டாடாவின் லைட் க்ளட்ச்சும் கியர் ஷிஃப்ட்டிங்கும் பஞ்ச்சின் ஓட்டுதலை எளிமையாக்குகிறது. இங்கே பஞ்ச்சில் மட்டும்தான் டெட் பெடல் இருக்கிறது.

டாடாவின் இன்டீரியர் நல்ல தரம்
டாடாவின் இன்டீரியர் நல்ல தரம்

ஓட்டுதல், கார்னரிங் திறன்

கைகர், மேக்னைட்: நிஸானிலும் ரெனோவிலும் லைட் வெயிட் ஸ்டீயரிங்தான்; ஆனால், ஸ்டீயரிங் ரேக் கொஞ்சம் ஸ்லோ. அதனால்… டர்ன் டு டர்ன் லாக்கில் திருகு திருகு எனத் திருக வேண்டும். இதன் சஸ்பென்ஷன் செட்–அப் கொஞ்சம் இறுக்கம். அதனால் இவற்றில் ஹேண்ட்லிங் திறன், பஞ்ச்சை ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவுதான். இதில் கைகரை விட மேக்னைட் இன்னும் கொஞ்சம் இறுக்கம். ஆனால், இரண்டும் பயணிகளின் சொகுசில் குறை வைக்கவில்லை. கைகரில் க்ளட்ச்சும் கொஞ்சம் ஹெவி. ரெனோ நிஸானின் சவுண்ட் இன்சுலேஷன், பஞ்ச்சை ஒப்பிடும்போது இன்னும் சத்தம் குறைவாக இருக்க வேண்டும். டைனமிக்ஸிலும் ரிஃபைன்மென்ட்டிலும் சத்தத்திலும் டாடா போல் ப்ரீமியமாக இல்லை. ஒரு பட்ஹெட் ஹேட்ச்பேக் ஓட்டுவதுபோல்தான் இருக்கிறது.

5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஓகே. ஆனால், ஹெவி கிளட்ச் சிட்டிக்குள் ஓட்டக் கொஞ்சம் கஷ்டம் | கைகர்
5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஓகே. ஆனால், ஹெவி கிளட்ச் சிட்டிக்குள் ஓட்டக் கொஞ்சம் கஷ்டம் | கைகர்
பவர்புல் பெர்ஃபாமன்ஸை விரும்புபவர்கள் 
டர்போ CVT-க்குப் போகலாம் | மேக்னைட்
பவர்புல் பெர்ஃபாமன்ஸை விரும்புபவர்கள் டர்போ CVT-க்குப் போகலாம் | மேக்னைட்

பஞ்ச்: அற்புதமான சேஸி செட்அப் பஞ்ச்சை, ஓட்டுதலுக்கான காராக மாற்றுகிறது. டாடாவின் ஆல்ஃபா ப்ளாட்ஃபார்ம்தான் இதற்குக் காரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கை ஓட்டுவதுபோல் வளைத்து வளைத்து ஓட்ட முடிகிறது. இங்கிருப்பதில் சின்ன காராக இருந்தாலும், பெரிய மனுஷத்தனமாக.. எல்லா மேடு பள்ளங்களையும் சமாளிக்கிறது. பயணிகளுக்கு நல்ல குஷனிங் தன்மையையும் வழங்குகிறது பேபி பஞ்ச். நிலைத்தன்மையிலும் பஞ்ச்சே கிங்! மற்ற இரண்டையும் விட 100 கிலோ எடை அதிகம் டாடா. உயரமாக இருந்தாலும் பாடி கன்ட்ரோலும் நச்!

உயரமான ஹேட்ச்பேக்கில் அமைந்திருப்பது போல் இருக்கும்
உயரமான ஹேட்ச்பேக்கில் அமைந்திருப்பது போல் இருக்கும்

மூன்றில் எது ஓகே?

கைகர்: க்ராஸ்ஓவர் டிசைன், ஏகப்பட்ட வசதிகள் என கொஞ்சம் முயற்சிக்கிறது ரெனோ. உங்களுக்குத் தோற்றமும், ரோடு பிரசன்ஸும்தான் முக்கியம் என்றால், உங்கள் சாய்ஸ் கைகராகத்தான் இருக்கும். எக்யூப்மென்ட் லிஸ்ட்டிலும், 4 காற்றுப்பைகள் என பாதுகாப்பிலும் அசத்துகிறது கைகர். கேபினுக்குள் நிலவும் எர்கானமிக்ஸ் சிக்கல்களிலும், பின் பக்க சீட் இடவசதியிலும் பின் தங்க வைக்கிறது கைகர். எடை அதிகமான க்ளட்ச்சும் கைகரை சிட்டிக்குள் ஓட்ட சுமாராக இருக்கிறது.

கூபே கார் டிசைனில் கலக்குகிறது கைகர்
கூபே கார் டிசைனில் கலக்குகிறது கைகர்

மேக்னைட்: ஃப்ரண்ட்லியான எர்கானமிக்ஸ், விசாலமான கேபின் சூழல், நல்ல சொகுசு, டயர் ப்ரஷர் மானிட்டர், ஒயர்லெஸ் சார்ஜிங் (ஆப்ஷனல்), 360 டிகிரி கேமரா, எல்இடி ஹெட்லைட்ஸ் என வசதிகளில் நிஸான் வேற லெவலில் கலக்குகிறது. இதன் விலையும் மற்றவற்றைவிடக் குறைவு. ஆனால், பஞ்ச்சையும் கைகரையும் தோற்கடிக்க இது மட்டும் போதவில்லை என்று தோன்றுகிறது.

போல்டான எஸ்யூவியாகக் காட்டுகிறது இதன் கிரில்
போல்டான எஸ்யூவியாகக் காட்டுகிறது இதன் கிரில்

பஞ்ச்: மற்றவற்றை ஒப்பிடும்போது இடவசதி, கேபின், எக்யூப்மென்ட் லிஸ்ட் என்று டாடா பின் தங்குகிறதுதான். ஆனாலும், இந்தப் போட்டியில் பஞ்ச்தான் வின்னர். தோற்றத்தில் சிறுசாக இருந்தாலும், செயல்பாடுகளில் மெச்சூர்டாக இருக்கிறது டாடா பஞ்ச். ஓட்டுதலிலும் சரி – எளிமையான ஹேண்ட்லிங்கிலும் சரி – பஞ்ச்… செம பஞ்ச்! அந்த 5 ஸ்டார் ரேட்டிங் ஒன்றே போதும் பஞ்ச், இந்தப் போட்டியில் ஜெயிக்க வைக்க! 10 லட்சத்துக்குள் ஒரு சுட்டித்தனமான பேபி எஸ்யூவி என்றால்… பஞ்ச் பெஸ்ட் சாய்ஸ்!

மற்றவற்றை ஒப்பிடும் போது குறைவான க்ரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது பஞ்ச். 180 மிமீ.
மற்றவற்றை ஒப்பிடும் போது குறைவான க்ரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது பஞ்ச். 180 மிமீ.
ஸ்பிளிட் ஹெட்லைட் ஹேரியரை சஃபாரியை நினைவுபடுத்துகிறது
ஸ்பிளிட் ஹெட்லைட் ஹேரியரை சஃபாரியை நினைவுபடுத்துகிறது

டாடா பஞ்ச்

நீ/அ/உ - 3,827/1,742/1,615மிமீ

வீல்பேஸ் - 2,445மிமீ

கி.கிளியரன்ஸ் - 180மிமீ

பூட் ஸ்பேஸ் - 366லி

ஃப்யூல் டேங்க் - 37லி

டயர்ஸ் - 195/60 R16

இன்ஜின் - 1,199சிசி, 3 சிலிண்டர்

பவர் - 86bhp

டார்க் - 113Nm

கியர்பாக்ஸ் - 5 ஸ்பீடு MT

0–100 கிமீ - 16.14Sec

ரெனோ கைகர்

நீ/அ/உ - 3,991/1,754/1,605மிமீ

வீல்பேஸ் - 2,500மிமீ

கி.கிளியரன்ஸ் - 205மிமீ

பூட் ஸ்பேஸ் - 405லி

ஃப்யூல் டேங்க் - 40லி

டயர்ஸ் - 195/60 R16

இன்ஜின் - 999சிசி, 3 சிலிண்டர்

பவர் - 72bhp

டார்க் - 96Nm

கியர்பாக்ஸ் - 5 ஸ்பீடு MT

0–100 கிமீ - 16.12Sec

நிஸான் மேக்னைட்

நீ/அ/உ - 3,994/1,758/1,572மிமீ

வீல்பேஸ் - 2,500மிமீ

கி.கிளியரன்ஸ் - 205மிமீ

பூட் ஸ்பேஸ் - 366லி

ஃப்யூல் டேங்க் - 40லி

டயர்ஸ் - 195/60 R16

இன்ஜின் - 999சிசி, 3 சிலிண்டர்

பவர் - 72bhp

டார்க் - 96Nm

கியர்பாக்ஸ் - 5 ஸ்பீடு MT

0–100 கிமீ - 15.33 Sec

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism