கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்!

டாடா டியாகோ எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா டியாகோ எலெக்ட்ரிக்

ஃபர்ஸ்ட் லுக்: டாடா டியாகோ எலெக்ட்ரிக்

ஹூண்டாய் கோனா, MG ZS, மஹிந்திரா XUV 400, டாடா நெக்ஸான் EV, டாடா டிகோர் EV என்று மின்சார கார்கள் சந்தையில் மிக சிலக் கார்கள்தான் விற்பனையில் இருக்கின்றன. இதில் முன்னணியில் இருப்பது டாடா மோட்டார்ஸ். அதிகமாக விற்பனையாகும் கார் என்றால் அது டாடா நெக்ஸான். இப்போது ரூபாய் 10 லட்சத்துக்குக் குறைவாக, இந்தியாவின் விலை குறைந்த முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது டாடா. ஏற்கனவே ICE-ல் ஓடும் டியாகோதான் அது. டியாகோவின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்படி இருக்கிறது?

வெளித்தோற்றம்

ICE இன்ஜின் கொண்ட டியாகோ காருக்கும் இந்த டியாகோ EV-க்கும் டிசைன் மற்றும் உள்ளலங்கார த்தில் அதிக வேறுபாடு இல்லை. மின்சாரக் கார் என்பதால் முகப்பு புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மின்சாரத்தின் குறியீடான நீல நிறம், கிரில் இருக்க வேண்டிய இடத்தில் வியாபித்திருக்கிறது. டாடாவுக்குரிய TRI Arrow பேட்டர்ன் காரின் முகப்பு எங்கும் நிறைந்திருக்கிறது.

உள்ளலங்காரம்:

காரின் பேட்டரியை கால் வைக்கும் இடத்தில் வைக்காமல், பின் சீட் மற்றும் டிக்கியின் அடியில் வைத்திருக்கிறார்கள். அதனால் காரின் கேபினில் ஸ்பேஸ் குறையவில்லை. ஆனால், டிக்கியில் இடம் சுருங்கிவிட்டது. காரின் உட்புறம் பீஜ் வண்ணத்துக்கு மாறி இருப்பதால், கார் ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளிக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் டிசைன் மாறியிருக்கிறது. ஸ்டீயரிங் வீலின் லெதரெட் கவர் கம்பீரமாக இருக்கிறது. கனெக்டெட் கார் என்பதால், ZConnect APP வாயிலாக 45 புதிய அம்சங்களை போனின் உதவியோடு பயன்படுத்திக் கொள்ள முடியும். ரெயின் சென்ஸிங் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல், 4 லெவல் ரீ-ஜெனரேஷன் மோடு என்று பல அம்சங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ரோட்டரி நாப் கொண்டு சிட்டி, ஸ்போர்ட்ஸ் என்று இரண்டு டிரைவ் மோடுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ZConnect APP கனெக்டிவிட்டி ஆப்ஷன் உண்டு.
ZConnect APP கனெக்டிவிட்டி ஆப்ஷன் உண்டு.
இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்!
டேஷ்போர்டில் புளூ ஆக்சென்ட்கள்... அருமை!
டேஷ்போர்டில் புளூ ஆக்சென்ட்கள்... அருமை!
ரோட்டரி ஸ்டைல் டிரைவிங் மோடுகள்...
ரோட்டரி ஸ்டைல் டிரைவிங் மோடுகள்...
இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்!

பேட்டரி:

டாடாவின் ஜிப்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில்தான் இந்த டியாகோவும் செயல்படுகிறது. டாடா டியாகோவுக்கு டாடா மோட்டர்ஸ் 19.2 Kwh, 24 KWh என்று இரண்டுவிதமான பேட்டரி ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். இதில் 19.2 KWh பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், அது 250 கிமீ வரை ஓடும். இந்த பேட்டரியோடு இணைக்கப்பட்டிருக்கும் PMSM (Permanent Magnet Synchronous Motor) மோட்டார் 61bhp சக்தியையும், 110Nm டார்க்கையும் கொடுக்கும். இதுவே 24 KWh பேட்டரி என்றால், 315 கிமீ வரை சிங்கிள் சார்ஜில் ஓடும். இது 74 bhp சக்தியையும், 114 Nm டார்க்கையும் அளிக்கிறது. இந்தப் பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட டியாகோ 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 5.7 விநாடிகளில் எட்டிவிடும் என்கிறது டாடா. இதுவே சிறிய பேட்டரி கொண்ட டியாகோவாக இருந்தால், 0 - 60 கிமீ வேகத்தை எட்ட 6.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

பேட்டரி கார் என்றால், அடுத்து வரும் கேள்வி - சார்ஜிங் டைம் எவ்வளவு என்பதாகத்தான் இருக்கும். பெரிய பேட்டரியாக இருந்தாலும் சரி, சிறிய பேட்டரியாக இருந்தாலும் சரி, 50kW DC ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 10- 80%-க்கு வெறும் 57 நிமிடங்கள்தான் ஆகும். `எங்கேயும் எப்போதும் இந்த ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்காதே!' என்று உதட்டைப் பிதுக்கினால், 3.3kW ஹோம் சார்ஜர் கொண்டு 19.2kWh பொருத்தப்பட்ட டியாகோவை சார்ஜ் செய்யலாம். 10 - 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 5 மணி 5 நிமிடம் ஆகும். இதுவே 24KWh பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட காராக இருந்தால் 6 மணி 20 நிமிடம் ஆகும். IP67 ரேட்டிங் என்பதால் தண்ணீர், தூசி ஆகியவற்றால் இந்த பேட்டரி பழுதடையாது என்கிறது டாடா.

கேபின் செம சாந்தம்... இட வசதியும் சூப்பர்...
கேபின் செம சாந்தம்... இட வசதியும் சூப்பர்...
இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்!

இரண்டுக்கும் இடையில் ஏதாவது ஆப்ஷன் உண்டா என்று கேட்டால், 7.2Kw AC ஃபாஸ்ட் Wall சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்தால், சிறிய பேட்டரி பொருத்தப்பட்ட டியாகோ 2 மணி 35 நிமிடத்திலும், பெரிய பேட்டரி கொண்ட டியாகோ 3 மணி 35 நிமிடங்களும் எடுத்து கொள்ளும்.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்கு முன்பே 10,000 புக்கிங்ஸ் வந்துவிட்டது என்பதில் இருந்தே, டியாகோ EV-க்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள முடியும். இப்போதைக்கு டியாகோ EV-க்குப் போட்டிகள் இல்லை என்பதும், இதன் விலையும்தான் இதன் பலம்.

இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்!