Published:Updated:

டியாகோ NRG... இப்போது இன்னும் எனர்ஜியாக!

டாடா டியாகோ NRG 2021
பிரீமியம் ஸ்டோரி
டாடா டியாகோ NRG 2021

ஃபர்ஸ்ட் லுக்: டாடா டியாகோ NRG 2021

டியாகோ NRG... இப்போது இன்னும் எனர்ஜியாக!

ஃபர்ஸ்ட் லுக்: டாடா டியாகோ NRG 2021

Published:Updated:
டாடா டியாகோ NRG 2021
பிரீமியம் ஸ்டோரி
டாடா டியாகோ NRG 2021

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.7.78 - 8.37 லட்சம்

மென்மையாக இருந்த டியாகோவை இப்போது கொஞ்சம் முரட்டுத்தனமாக மாற்றி NRG எனும் வேரியன்ட்டில் களமிறக்கி இருக்கிறது. NRG என்றால் Energy என்று அர்த்தம். சின்ன ஹேட்ச்பேக்கில் ஒரு க்ராஸ்ஓவரோ, எஸ்யூவியோ இல்லை என்று இனி சொல்ல முடியாது. முழுக்க முழுக்க ஸ்போர்ட்டியாக, டியாகோவின் NRG வேரியன்ட்டை செம எனர்ஜியாக டிசைன் செய்திருக்கிறது டாடா.

முன் மற்றும் பின் பக்க ரீ-ப்ரொஃபைல் செய்யப்பட்ட பம்பர்கள், கீழே Faux சில்வர் ஸ்கிட் ப்ளேட், வீல் ஆர்ச் மற்றும் காரைச் சுற்றியுள்ள அந்த கிளாடிங் போன்றவைதான் டியாகோ NRG-யின் மெயின் அட்ராக்ஷன். இந்த கிளாடிங் செட்-அப்பால் பழைய டியாகோவில் இருந்து கார் 37 மிமீ நீளமாகி இருக்கிறது. கொஞ்சம் கரடுமுரடான டிரைவிங் வேண்டும் என்பவர்களுக்காக, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கணிசமாகக் கூட்டியிருக்கிறது டாடா. 181 மிமீ என்பது இந்த ஹேட்ச்பேக்கில் குட்டி ஆஃப்ரோடு செய்யக்கூடிய அம்சம். பழசில் பாடி கலரிலேயே டோர் ஹேண்டில்கள், விங் மிரர்கள் கொடுத்திருப்பார்கள். இதில் கறுப்பு ஷேடு கொடுத்திருப்பது ஸ்போர்ட்டி. D பில்லர்களும் கறுப்பில் இருப்பது இன்னும் அழகு. மற்றபடி ஹெட்லேம்ப் டிசைன், கிரில் டிசைன் எல்லாம் பழைய டியாகோவேதான்.

உள்ளே...

இன்டீரியரும் அப்படியே டியாகோதான். பழசில் டூயல் டோனில் இருக்கும். இங்கே கறுப்பு நிறத்தில் டேஷ்போர்டு ஸ்போர்ட்டியாக இருக்கிறது. சீட்களும் கறுப்பு. டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட் இருந்தது. டிஜிட்டல் மீட்டர் செம அழகு! டியாகோவின் டாப் வேரியன்ட் போல் இந்த NRG-யிலும் ஏகப்பட்ட வசதிகள். 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, ஹர்மான் ஸ்பீக்கர் சரவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்ஸ், பவர்டு விங் மிரர்ஸ், இரட்டைக் காற்றுப்பைகள், ஸ்டாண்டர்டாக வரும் ஏபிஎஸ், Day-Night ரியர்வியூ மிரர் என்று சூப்பரான வசதிகள் உண்டு. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த NRG-யில் கீலெஸ் என்ட்ரியோடு, பட்டன் ஸ்டார்ட் கொடுத்திருந்தார்கள். ஆனால், டியாகோவில் இருந்த ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் இதில் மிஸ்ஸிங்.

Tata Tiago NRG
Tata Tiago NRG
இன்டீரியர், கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. NRG-ல் கீலெஸ் என்ட்ரி, பட்டன் ஸ்டார்ட் புதுசு!
இன்டீரியர், கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. NRG-ல் கீலெஸ் என்ட்ரி, பட்டன் ஸ்டார்ட் புதுசு!


எக்ஸ்ட்ரா வசதியாக டாடா டியாகோவில், பஞ்சர் ரிப்பேர் கிட் ஒன்றும் கொடுத்திருந்தார்கள். டயர் பஞ்சர் ஆனால், ஸ்டெஃப்னி மாற்றத் தேவையில்லை. காரில் உள்ள பவர் ஸாக்கெட் மூலம் ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தி லிக்விட் சீலன்ட்டை வைத்து அடைத்துவிட்டால் போதும். அப்படியே 100 கிமீ வரை ஓட்டலாம். இது பெண்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஜினைப் பொருத்தவரை அதே 1.2லிட்டர், 3 சிலிண்டர் NA இன்ஜின்தான் இந்த NRG-யிலும். 86bhp பவர் மற்றும் 11.3kgm டார்க். எனவே, பெர்ஃபாமன்ஸில் பழைய டியாகோவை ஓட்டுவதுபோல்தான் இருக்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுத்திருந்தார்கள். சஸ்பென்ஷன் செட்-அப்பும் அதே டியாகோதான் என்பதால், ஓட்டுதலிலும் பெரிய மாற்றம் இருக்காது.

அதேபோல், NRG-ல் டீசல் இன்ஜின் கிடையாது. டீசல் விரும்புபவர்கள் அல்ட்ராஸுக்குப் போகலாம். NRG-ன் மேனுவல் ஆன்ரோடு விலை 7.78 லட்சம்; ஆட்டோமேட்டிக் விலை 8.37 லட்சம். ரெகுலர் டியாகோவைவிட சுமார் 23,000 ரூபாய் அதிகம். 4 ஸ்டார் ரேட்டிங்குக்காகவே இந்த ரேட் கொடுக்கலாம். நல்ல பில்டு குவாலிட்டி கொண்ட, சிட்டி மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்கள் தவிர்த்து, ஒரு குட்டி ஆஃப்ரோடும் செய்ய ஒரு குட்டி ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் வேண்டும் என்றால், இந்த NRG பெஸ்ட் ஆப்ஷன்.