Published:Updated:

பெட்ரோல்/டீசல்… எலெக்ட்ரிக்… இப்போ சிஎன்ஜி! எல்லாவற்றிலும் இருக்கு டிகோர்!

டாடா டிகோர் சிஎன்ஜி
பிரீமியம் ஸ்டோரி
டாடா டிகோர் சிஎன்ஜி

அறிமுகம்: டாடா டிகோர் சிஎன்ஜி

பெட்ரோல்/டீசல்… எலெக்ட்ரிக்… இப்போ சிஎன்ஜி! எல்லாவற்றிலும் இருக்கு டிகோர்!

அறிமுகம்: டாடா டிகோர் சிஎன்ஜி

Published:Updated:
டாடா டிகோர் சிஎன்ஜி
பிரீமியம் ஸ்டோரி
டாடா டிகோர் சிஎன்ஜி

நாளைக்கு என்று தள்ளிப் போடுவதெல்லாம் டாடாவுக்குப் பிடிக்காது போல! டியாகோவில் சிஎன்ஜி வேரியன்ட் கொண்டு வந்த கையோடு, டிகோரையும் சிஎன்ஜி ஆக்கிவிட்டிருக்கிறது டாடா.

டிகோருக்கு முதலில் ஒரு பெரிய தம்ஸ் அப்! ஒரு கார் எலெக்ட்ரிக்… பெட்ரோல்… டீசல்… சிஎன்ஜி என்று எல்லா வேரியன்ட்களிலும் ஒரு மாடல் இருக்கிறதென்றால்… அது டாடாவின் டிகோர்தான். டியாகோ மட்டும்தான் நம் கைக்குக் கிடைத்தது; (அடுத்த பக்கங்களில் - டியாகோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இருக்கு!) டிகோரை ஓட்ட வாய்ப்பு அமையவில்லை. அதனால், டிகோரின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ஹைலைட்டையும் மட்டும் பார்த்து விடலாம்.

டியாகோவைப்போலவேதான் டிகோரும். தனது பெட்ரோல் அண்ணனின் அதே உருவத்தில்தான் வந்திருக்கிறது டிகோர். என்ன, இதில் நீளம் மட்டும்தான் அதிகம். இதிலும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்கள், அதே அலாய் வீல்கள் ஸ்டைலாக இருக்கின்றன. டியாகோவுக்கு மிட்நைட் ப்ளம் என்றால், டிகோருக்கு ‘மேக்னெட்டிக் ரெட்’ என்றொரு சிவப்பு நிறம்தான் இதில் ஸ்பெஷல். அந்த கறுப்பு நிற ரூஃப்… இந்த காருக்குக் கவர்ச்சியாக இருக்கிறது. பின் பக்கம் அதே i-CNG பேட்ஜ். மற்றபடி நீள/அகலங்களில் தேவையான அளவுக்கு ஓர் அற்புதமான செடானாகக் காட்சியளிக்கிறது. இந்த டிகோரின் கட்டுமானமும் கிண்ணென்று இருக்கிறது. இதுவும் குளோபல் க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய டாடாவின் கார்தான்.

உள்ளேயும் அதேதான்! டியாகோவைப் பார்த்தாலோ… பெட்ரோல் டிகோரைப் பார்த்தாலோ… இந்த சிஎன்ஜி டிகோரைப் பார்க்க வேண்டியதில்லை. அந்த பட்டர்ஃப்ளை கன்சோலில் இருந்து எல்லாமே அதே! கதவுக் கைப்பிடிகளுக்குக் குரோம் ஃபினிஷ் கொடுத்திருந்தார்கள். டியாகோவில் இக்னிஷன் சாவி என்றால், இதில் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி டாப் எண்டில் கொடுத்திருக்கிறார்கள்.

இதிலும் அதே இரட்டை ஃப்யூல் மீட்டர்கள் இருந்தன. சென்டர் கன்சோலுக்கு நடுவே அந்த சிஎன்ஜி பட்டன்; அந்த உயர்தர ஸ்ட்ரென்த் ஸ்டீல் சிலிண்டர்; சிஎன்ஜியிலேயே ஸ்டார்ட் செய்து கொள்ள முடியும் வசதி; அதே லீக்கேஜ் டிடெக்ஷன் ECU இந்த டிகோரிலும் உண்டு. இப்படி எல்லாமே டியாகோ சிஎன்ஜியின் குணநலன்கள்தான் டிகோர் சிஎன்ஜியிலும். அட, அந்த சிலிண்டரின் கொள்ளளவு கூட மாறவில்லை; அதே 60 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட டேங்க்தான். 8.5 கிலோ சிஎன்ஜி நிரப்பிக் கொள்ளலாம். இதுவும் 300 கிமீ ரேஞ்ச் சொல்கிறார்கள். காரின் எடை காரணமாக சின்ன வித்தியாசம் வேண்டுமானால் டியாகோவுக்கும் டிகோருக்கும் இருக்கலாம்.

டியாகோவைவிட பெரிய காராக இருந்தாலும், இதன் வீல்பேஸ் 4,500 மிமீ. அதாவது, டியாகோவைவிட 50 மிமீதான் அதிகம். அதனால், இன்னும் கால் நீட்டி மடக்க, ஹெட்ரூம் என்று தாராளமாக இடவசதி கிடைக்கிறது. வசதிகளைப் பொருத்தளவிலும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டூயல் டோன் கூரை, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர்கள் போன்றவை எக்ஸ்ட்ரா வசதிகள்.

பெட்ரோல்/டீசல்… எலெக்ட்ரிக்… இப்போ சிஎன்ஜி!
எல்லாவற்றிலும் இருக்கு டிகோர்!
பெட்ரோல்/டீசல்… எலெக்ட்ரிக்… இப்போ சிஎன்ஜி!
எல்லாவற்றிலும் இருக்கு டிகோர்!

டிரைவிங்கிலும் அப்படித்தான். இதன் இன்ஜின் அதே 1.2லிட்டர் NA 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். அதே 73.4bhp பவர்; அதே 9.5kgm டார்க். அதனால், ஓட்டுதலில் பெரிய வித்தியாசம் தெரியாது என்று நம்பலாம். காரணம், டியாகோவைவிட இதன் எடை அதிகம். ரொம்பவெல்லாம் இல்லை… சும்மா 100 கிலோ வரை அதிகம். (1,092/1,126 கிலோ.) இதிலும் அந்த சிலிண்டர் எடையால் 100 கிலோ அதிகரிப்பு உண்டு. சஸ்பென்ஷன் இதற்கேற்றபடி வழக்கம்போல் ட்வீக் செய்திருக்கிறது டாடா. அதே டிஸ்க்/டிரம் காம்பினேஷன் பிரேக்குகள். எனக்குத் தெரிந்து ஓட்டுதலிலும் சரி; சஸ்பென்ஷனிலும் சரி, ஸ்டெபிலிட்டியிலும் சரி – எல்லாவற்றிலும் டியாகோவைப்போல்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மட்டும் டியாகோவைவிட 3 மீமீ குறைவு. அதாவது, 165 மிமீ.

IC இன்ஜின் டிகோர் மாடலில் 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருப்பார்கள். இதில் டியாகோ சிஎன்ஜியில் உள்ள அதே 14 இன்ச் ஹைப்பர் ஸ்டைல் ஸ்டீல் வீல்கள் கொடுத்திருந்தார்கள். இதில் டியாகோ அளவு இல்லையென்றாலும், இதன் பூட் ஸ்பேஸில் கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இரண்டிலும் ஒரே ஒரு சிக்கல் – இதன் ஸ்டெஃபனி டயரை சிலிண்டருக்குக் கீழே வைத்திருக்கிறார்கள். இது பஞ்சரான நேரங்களில் சிலிண்டரைக் கழற்றி… ஸ்டெஃப்னியைக் கழற்றி… என்று வீல் மாற்றுவது பெரிய டாஸ்க்காக அமையலாம்.

இந்த டிகோர் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தும்போது, டாடா மோட்டார்ஸின் துணைத் தலைவர் சவர்க்கார் சொன்னார். ‘‘இதற்கு முன்பு சிஎன்ஜி கார் வாங்குபவர்கள், பட்ஜெட் வாடிக்கையாளர்கள்தான் என்கிற ஒரு கருத்து நிலவி வந்தது. ஆனால், சிலரிடம் நாங்கள் கருத்துக் கேட்டபோது, சிஎன்ஜி கார்களை ப்ரீமியம் வாடிக்கையாளர்களும் விரும்புவது தெரிய வந்தது. வசதிகளைக் கொடுக்க முடிவு செய்தோம். எனவே, டியாகோவை நான்கு வேரியன்ட்களிலும், டிகோரை கடைசி இரண்டு டாப் வேரியன்ட்களிலும் வெளியிட்டிருக்கிறோம்!’’ என்றார்.

டியாகோ – செலெரியோ, வேகன்–ஆர் போன்றவற்றுக்குப் போட்டியாக வந்தால்… டிகோரை – ஹூண்டாயின் ஆரா சிஎன்ஜி காருக்குப் போட்டியாகக் கொண்டு வந்திருக்கிறது டாடா. XZ, XZ+ எனும் இரண்டு டாப் வேரியன்ட்களில் வருகிறது டிகோர். அதனால், வசதிகளில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருக்காது வாடிக்கையாளர்கள். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.69 லட்சம் முதல் 8.41 லட்சம். ஆன்ரோடுக்கு வரும்போது சுமார் 8.6 லட்சத்திலிருந்து 9.6 லட்சம் வரை வரலாம்.

‘‘எலெக்ட்ரிக், சிஎன்ஜி, பெட்ரோல், டீசல் என்று எல்லாவற்றிலும் இருக்கும் டிகோர் – சிஎன்ஜியைப் பொருத்தவரை மேனுவலில் மட்டும்தான் கிடைக்கிறது. வெகுவிரைவிலேயே சிஎன்ஜி டிகோர் ஆட்டோமேட்டிக்கை எதிர்பார்க்கலாம்.

மைக்ரோ ஸ்விட்ச்
மைக்ரோ ஸ்விட்ச்

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு சிஎன்ஜி மாடல்களையும் பலவித டெஸ்ட்டிங்குகளுக்குப் பிறகே கொண்டு வந்திருக்கிறது டாடா. இதிலுள்ள மைக்ரோ ஸ்விட்ச், ஒரு அசத்தலான ECU கொடுக்கும் சென்ஸாரின் இயக்கத்தில் வேலை செய்கிறது. காரின் டேங்க் மூடி திறந்திருந்தாலோ… கேஸ் லீக்கேஜ் இருந்தாலோ… இக்னிஷன் தானாக ஆஃப் ஆகிவிடுமாம். ‘தெர்மல் இன்சிடெண்ட்’ என்று சொல்லக்கூடிய டெம்பரேச்சர் அதிகமாகும் பட்சத்தில் சிஎன்ஜி சப்ளையையும் கட் ஆஃப் செய்துவிடுமாம். ‘‘அதனால் தைரியமாக எங்களின் சிஎன்ஜி கார்களை வாங்கலாம்!’’ என்கிறது டாடா.ஆன்ரோடு விலை: சுமார் 8.6 லட்சம் 9.6 லட்சம் வரை

பெட்ரோல்/டீசல்… எலெக்ட்ரிக்… இப்போ சிஎன்ஜி!
எல்லாவற்றிலும் இருக்கு டிகோர்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ: 3,993/1,677/1,532 மிமீ

வீல்பேஸ்: 2,450 மிமீ

கி.கிளியரன்ஸ்: 165 மிமீ

சிஎன்ஜி டேங்க்: 60 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு

பெட்ரோல் டேங்க்: 35 லிட்டர்

இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், NA, 3 சிலிண்டர்

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு

பவர்: 73.4bhp@6,000rpm

டார்க்: 9.5bhp@3,500rpm

டயர்: 175/65 R14 இன்ச்

பிரேக்ஸ்: டிஸ்க்/டிரம் (மு/பி)

ஏபிஸ்: EBD உடன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism