Published:Updated:

நெக்ஸான் மோட்டாருடன் எலெக்ட்ரிக் டிகோர்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஃபர்ஸ்ட் லுக்: டாடா டிகோர் Ziptron EV

நெக்ஸான் மோட்டாருடன் எலெக்ட்ரிக் டிகோர்!

ஃபர்ஸ்ட் லுக்: டாடா டிகோர் Ziptron EV

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

சில வாரங்களுக்கு முன்பு டிகோரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக XPres-T எனும் எலெக்ட்ரிக் டிகோரை டாடா அறிமுகப்படுத்தியது. ஆனால், இது அரசாங்க ஏஜென்ஸிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் ஃப்ளீட் மார்க்கெட்டுக்கு மட்டும்தான். `எங்களுக்கெல்லாம் டிகோர் EV இல்லையா’ என்று தனியார் வாடிக்கையாளர்கள் கேட்டதை அடுத்து… இப்போது குடும்பத்தினரை மனதில் வைத்து கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான டிகோரின் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா.

டாடா மோட்டார்ஸின் இதயமான Ziptron பவர்ட்ரெயின் தொழில்நுட்பத்தில் இருந்துதான் இந்த டிகோர் உருவாக்கப்பட்டிருக்கிறது. நெக்ஸான் EV-ல் இருப்பது இந்த Ziptron டெக்னாலஜிதான்.

பார்ப்பதற்கு அப்படியே IC இன்ஜின் கொண்ட டிகோரின் ஃபேஸ்லிஃப்ட் மாதிரியேதான் இருக்கிறது டிகோர் Ziptron EV. சில மாற்றங்களைக் கவனிக்கலாம். டாடாவின் பாரம்பரியமான கிரில்லில், கிளாஸி பிளாக் பேனல் கொடுத்திருக்கிறார்கள். எலெக்ட்ரிக்கின் அடையாளமாக நீலவண்ண ஆக்ஸென்ட்டை அடிக்கோடிட்டு இருக்கிறார்கள். ஷார்ப்பான ஹெட்லைட்ஸ் மற்றும் 15 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றிலும் அந்த புளூ வேலைப்பாடுகள் இருக்கின்றன. ஃப்ளீட் மார்க்கெட் XPres-T-யை ஒப்பிடும்போது, இதில் புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ் கொடுத்திருக்கிறார்கள். கீழே மாற்றம் செய்யப்பட்ட பனி விளக்குகள், பம்பரில் இன்டக்ரேட் செய்யப்பட்ட LED DRL அருமை.

உள்ளேயும் அப்படியே டிகோர்தான். வழக்கம்போல், அந்த நீல நிற வேலைப்பாடுகள் இருந்தால் எலெக்ட்ரிக் என்று அர்த்தம். வசதிகளைப் பொருத்தவரை 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, iRA கனெக்டட் தொழில்நுட்பம், மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என்று வசதிகள் ஏராளம். பாதுகாப்பிலும் இரட்டைக் காற்றுப்பைகள், ABS உடன் EBD, ரியர் பார்க்கிங் சென்ஸார், ரியர் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர் என்று முடிந்தவரை வசதிகள் கொடுத்திருக்கிறார்கள்.

Tata Tigor EV
Tata Tigor EV
இன்டீரியர் டிசைன், அப்படியே ரெகுலர் டிகோர்தான். நீல நிற வேலைப்பாடுகளும், மிஸ் ஆகும் கியர் லீவரும்தான் வித்தியாசம். இந்த எலெக்ட்ரிக் டிகோரில் வசதிகள் சூப்பர்.
இன்டீரியர் டிசைன், அப்படியே ரெகுலர் டிகோர்தான். நீல நிற வேலைப்பாடுகளும், மிஸ் ஆகும் கியர் லீவரும்தான் வித்தியாசம். இந்த எலெக்ட்ரிக் டிகோரில் வசதிகள் சூப்பர்.

பெரிய மாற்றம் என்றால், பானெட்டுக்குள தான். அதாவது, எலெக்ட்ரிக் மோட்டாரில்தான். தனது நெக்ஸானில் அறிமுகப்படுத்திய Ziptron தொழில்நுட்பத்தில் இயங்கும் சிங்க்ரனைஸ்டு மோட்டாரைத்தான் டிகோர் EV-யிலும் பயன்படுத்தி இருக்கிறது டாடா. இந்த அட்வான்ஸ்டு ஜிப்ட்ரான் 300V+ ஹை வால்ட்டேஜ் மோட்டார், 75 bhp சக்தியையும், 17.0kgm டார்க்கையும் கொடுக்கிறது. பவர் குறைவு போல் தெரிந்தாலும், 0-60 கிமீ-யை இந்த டிகோர் எலெக்ட்ரிக், வெறும் 5.7 விநாடிகளில் கடந்து விடுகிறது.

இதில் 26kWh லித்தியம் அயன் பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டரி பேக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரும், IP67 (Ingress Protection) ரேட்டிங் கொண்டவை. மழை நீர் மற்றும் சேறு சகதி போன்ற ஆல் டெரெய்ன்களில் பயணித்தாலும், பேட்டரிக்கும் மோட்டாருக்கும் ஏற்படும் குறைந்தபட்ச சேதாரத்தைக் குறிப்பது இந்த ரேட்டிங். மேலும் இவை இரண்டுக்கும் 8 ஆண்டுகள் / 1,60,000 Km வாரன்ட்டியும் கொடுக்கிறது டாடா.

டிகோரில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு. 60 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் இந்த டிகோரில். டிகோரின் ரியல் டைம் ரேஞ்ச் இன்னும் தெரியவில்லை. இந்த Ziptron EV டிகோரை, IC இன்ஜின் டிகோரைவிட சுமார் 1.5 - 2 லட்சம் வரை அதிகமாக பொசிஷன் செய்யலாம் டாடா.