சில ஓடாத படங்களுக்கும் சீக்வல் பாகங்கள் வருமே... அதுபோல் டூஸானுக்கும் ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. டூஸானை ஓடாத கார் என்று சொல்வதில் தவறில்லை. டிசம்பர் மாதம் இந்தியா முழுதும் சுமார் 92 கார்கள்தான் விற்பனையாகி இருக்கிறது. ஓகே! புது டூஸான் எப்படி என்பதைப் பார்க்கலாம்.

2018 நியூயார்க் ஆட்டோ ஷோவில்தான் முதன்முதலாக வைக்கப்பட்டது டூஸான். இப்போது BS-6 மாடலில், நொய்டா எக்ஸ்போவில் நம் கண்முன்னே பளபளவென நின்று கொண்டிருந்தது டூஸான். புதுசில் இன்ஜின் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்.

இதன் BS-6 2.0 லிட்டர் இன்ஜின், 182 bhp பவரைத் தருகிறது. இதன் டார்க் 40kgm. இதெல்லாம் ஒரு பெரிய செடான் அல்லது பல்க்கியான எஸ்யூவிகளுக்கு இணையான பவர். இதில் இருப்பது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன். 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. இதில் 150bhp பவர். டார்க் 19.2kgm. இது NA இன்ஜின்தான். டர்போ இல்லை; இதுவும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக். இனி டூஸானில் மேனுவல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இத்தனை காஸ்ட்லி காருக்கு மேனுவல் என்றால், அந்தஸ்து குறையத்தானே செய்யும்! வெளிப்பக்கத்தில் வழக்கம்போல காஸ்கேடிங் கிரில். இது இப்போது இன்னும் பெரிதாகி இருக்கிறது. பம்பரை ரீ–டிசைன் செய்திருக்கிறார்கள். பனிவிளக்கு ஹவுஸிங்கை இடம் மாற்றியிருக்கிறார்கள். இவை முழுக்க LED மயம். பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள் இருந்தன. மேலே கேமராவைத் திருப்பினால், பளபள கறுப்பு நிற ரூஃபில் பெரிய பனோரமிக் சன்ரூஃப் பளிச்சிட்டது. க்ரெட்டாவிலேயே பனோரமிக் வருகையில், டூஸானுக்கு நிச்சயம் இது சாதாரணம்தான்.

க்ரெட்டா மாதிரி கெடுபிடி பண்ணவில்லை. ஹூண்டாய் பெவிலியனில் டூஸானுக்குள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருந்தார்கள். பார்த்தால், டேஷ்போர்டு டிசைனே மொத்தமாக மாறியிருந்தது. காரணம், புதிய ஃப்ளோட்டிங் 8 இன்ச் டச் ஸ்க்ரீன்.

இதில் ஹூண்டாயின் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டியும் இடம் பெற்றுள்ளது. எனவே எலெக்ட்ரானிக் சிம் கார்டு மூலமாக, காரின் நிறைய வேலைகளைச் செய்து கொள்ளலாம். ஏ.சி வென்ட்களும் மாறியிருந்தன.

வயர்லெஸ் சார்ஜிங் இப்போது ஹூண்டாயின் ஃபேவரைட் வசதியாகி விட்டது. டூஸானில் இது ஏற்கெனவே இருந்தது. அதேபோல கோ–டிரைவர் சீட்டும், பவர் கன்ட்ரோல் கொண்டிருந்தது. பட்டன் மூலம் 8 வழிகளில் இதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அதேநேரம் ஹூண்டாய், ஏனோ வென்டிலேட்டட் சீட்டை டூஸானில் மறந்து விட்டது. GL(O), GLS - என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது டூஸான். ஒரு விஷயம் – டூஸானில் ஆஃப்ரோடு பண்ண முடியாதா என்பவர்கள், வேறு வழியே இல்லை; டாப் மாடலான GLS வேரியன்ட்டைத்தான் வாங்க வேண்டும். இதில்தான் ஆல்வீல் டிரைவ். மற்றவை எல்லாமே ஃப்ரன்ட் வீல் டிரைவ் மட்டுமே. ஜீப் காம்பஸுக்கும், ஹோண்டா CR-V–க்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்த வந்திருக்கும் டூஸான், விலையில் மனது வைத்தால் போட்டியில் முன்னேறலாம்.