மஹிந்திராவின் அடுத்த எலெக்ட்ரிக் ஆட்டம், குவாட்ரிசைக்கிள் வடிவத்திலும் ஆரம்பித்துவிட்டது. குவாட்ரிசைக்கிள் என்றால், ஆட்டோ என்றும் சொல்ல முடியாது; கார் என்றும் சொல்ல முடியாது; ஆனால் 4 வீல்கள் இருக்கும். மைக்ரோ கார் என வைத்துக் கொள்ளுங்களேன்.

பஜாஜில் க்யூட் என்றொரு குவாட்ரிசைக்கிள் பெட்ரோல்/CNG-ல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு குவாட்ரி சைக்கிள் இதுதான். அதற்குப் போட்டியாகத்தான் மஹிந்திரா, ஆட்டம் (Atom) எனும் குவாட்ரிசைக்கிளைக் காட்சிப்படுத்தியது.

ஆட்டம், எலெக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் என்பது இன்னும் ஸ்பெஷல். போன மாசம் ஸ்பை போட்டோவிலேயே ‘ஆட்டம்’ இப்படித்தான் இருக்கும் என்கிற யூகத்துக்கு வந்துவிட்டோம். அதை நிஜப்படுத்திவிட்டது மஹிந்திரா. முழுக்க முழுக்க பெங்களூருவிலேயே தயாரிக்கப்படுவதால், இதன் விலை நிச்சயம் ஷாக் அடிக்காது.

எக்ஸ்போவில் இருந்த கான்செப்ட், சும்மா பளபளவென மின்னியது. புள்ளிப் புள்ளியான 13 இன்ச் வீல்கள் ஸ்டைல்தான். எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், ரோட்டரி கியர் செலக்டர், ஏ.சி, பவர் ஸ்டீயரிங் என்று கலக்குகிறது ஆட்டம். இதன் பீஜ் நிற கேபின், கார்களுக்கே சவால் விடுகிறது. ஆனால், சீட்கள்தான் பழைய டவுன் பஸ்ஸில் இருப்பதுபோல டிசைன் செய்திருந்தார்கள்.

இதன் பவர் ட்ரெயினைப் பற்றிப் பார்ப்போம். 48kW எலெக்ட்ரிக் மோட்டார் இருக்க வேண்டும் என்பதுதான் மஹிந்திராவின் ஆசை. ஆனால், சட்டதிட்டப்படி 15kW மோட்டார்தான் இதன் ப்ரொடக்ஷன் மாடலில் வரும். பவர் 20 bhp இருக்கலாம். அப்போ டாப் ஸ்பீடு... பறக்கவெல்லாம் முடியாது. 70 கி.மீ என்றளவில் இதன் டாப் ஸ்பீடு இருக்கும். ரேஞ்ச் பற்றி எதுவும் சொல்லவில்லை மஹிந்திரா. இதில் இன்னொரு பிடித்த அம்சம் – பேட்டரி ஸ்வாப்பிங். சார்ஜ் இல்லாத பேட்டரியைக் கழற்றி சார்ஜ் போட்டுவிட்டு, சார்ஜ் உள்ள ஃபுல் பேட்டரியை ஃபிக்ஸ் செய்து கொண்டு கிளம்பலாம். இதுபோக, இன்டலிஜென்ட் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் என்றொரு அம்சமும் உண்டு. புக்கிங், பேமென்ட் என எல்லாமே இதன் மூலம் செய்து கொள்ளலாம்.

ரேஞ்சும், விலையும் தெரிந்தால், ஆட்டம் க்யூட்டை ஆட்டம் காண வைக்கும்.