மாருதி சுஸூகியின் நெக்ஸா கார்களில் ஒன்றாக இக்னிஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட், ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டு அதன் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டன. 4.89 லட்சம் ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில், என்னென்ன அம்சங்கள் புதிதாக இருக்கின்றன?

பழைய இக்னிஸை ஒப்பிடும்போது, டிசைனில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. பக்கவாட்டிலிருந்து காரைப் பார்த்தால் புதுசா, பழசா என்பதுகூட தெரியாது. ஆனால், முகப்புப் பகுதியில் மாறியிருக்கும் பம்பர், ஸ்கஃப் பிளேட், ரியர் பம்பர் இதெல்லாம் இது ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இரண்டு புதிய நிறங்களையும், மூன்று டூயல்டோன் கலர் ஆப்ஷன்களையும் கொடுத்திருக்கிறார்கள். டூயல்டோன், ஆல்ஃபா, ஜீட்டா வேரியன்ட்களில் மட்டுமே! காரின் அழகை மேலும் கூட்ட, இரண்டு கஸ்டமைசேஷன் ஆப்ஷனும் கொடுக்கிறார்கள்.

இந்தக் காரில் இருப்பது, 1.2 லிட்டர் K12 BS-6 பெட்ரோல் இன்ஜின். இது 83bhp பவர் - 11.3kgm டார்க்கைக் கொடுக்கும். 5 ஸ்பீடு மேனுவல் - 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. பவர் - மைலேஜ் இரண்டுமே இந்த BS-6 இன்ஜினில் மாறவில்லை. இன்டீரியரிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், மாருதியின் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் அப்டேட் ஆகிவிட்டது. வாய்ஸ் கமாண்ட் மற்றும் நேவிகேஷன் வசதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையென்றால், மாருதியின் கனெக்ட்டிவிட்டி சர்வீஸான, S கனெக்ட்டை வாங்கிக்கொள்ளலாம்.

இக்னிஸ் - சிக்மா, டெல்ட்டா, ஜீட்டா, ஆல்ஃபா என நான்கு வேரியன்ட்டில் கிடைக்கிறது. டாப் 3 வேரியன்ட்டில் மட்டும் AMT ஆப்ஷன் உண்டு. BS-4 மாடலை ஒப்பிடுகையில், அனைத்து வேரியன்ட்டும் 6,000 ரூபாய் வரை விலை கூடியுள்ளது.