மாருதி சுஸூகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், அடுத்து வரப் போகிறது விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட். இந்தப் புதிய மாடல், மாருதி சுஸூகியின் ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இதில் அப்படி என்ன அப்டேட்டாகி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டின் முக்கியமான அப்டேட் இதன் இன்ஜின். இனி பிரெஸ்ஸாவில் டீசல் கிடையாது; பெட்ரோல் மட்டுமே! BS-6, 1.5 லிட்டர் K15B இன்ஜின் இதில் வருகிறது. இது 103bhp பவர் - 14kgm டார்க் தரக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது இந்த இன்ஜின்.

எர்டிகாவில் இருக்கும் அதே 12V ஸ்மார்ட் ஹைப்ரிட் இன்ஜின்தான் இது. ஆனால் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் மட்டும்தான் ஹைபிரிட் வசதி. பிரெஸ்ஸாவின் பழைய 1.3 லிட்டர் DDIS 190 இன்ஜின், இனி கிடையாது.

BS-6 அப்கிரேடுகளுடன் சேர்த்து, மாருதி பிரெஸ்ஸாவின் வெளிப்புற டிசைனையும் கொஞ்சம் மாற்றியுள்ளது.

எஸ்-ப்ரெஸ்ஸோவில் இருப்பதுபோன்ற கிரில், புது LED ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், LED டெயில் லைட், புது பம்பர் எனச் சின்னச் சின்ன மாற்றங்கள் பிரெஸ்ஸாவின் டிசைனில் கொஞ்சம் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மூன்று புதிய டூயல் டோன் நிறங்களும் வருகின்றன.

எக்ஸ்டீரியர்போல இன்டீரியரிலும் மாற்றம் பெரிதாக இல்லை. அப்படியேதான் இருக்கிறது. கிரே-ஆரஞ்சு டூயல் டோன் நிறத்தில் மட்டும் இன்ட்டீரியரில் ஆரஞ்சு நிற வேலைப்பாடுகள் கொடுத்துள்ளார்கள்.

ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின் மென்ட் கொஞ்சம் அப்டேட் ஆகியுள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ டிம்மிங் மிரர் போன்றவை பிரெஸ்ஸாவில் கிடைக்கும் வசதிகள்.

பாதுகாப்பு வசதிகளைப் பொருத்தவரை டூயல் ஏர்பேக்ஸ், ABS-EBD, ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் வார்னிங், ஹை ஸ்பீடு அலெர்ட் போன்றவை வருகின்றன. LXI, VXI, ZXI, ZXI+ என நான்கு வேரியன்ட்களில் வரும் இதில் டாப் 3 வேரியன்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருகிறது. வரும் மார்ச் மாதம் புதிய பிரெஸ்ஸா விற்பனைக்கு வரும். மோ.வி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டும்தான்.