ரெனோ நிறுவனம், தனது ட்ரைபர் AMT மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த கார் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுடன் ஒப்பிடும்போது, இதன் விலை 30,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும்.

ட்ரைபரின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டுக்கு `Easy-R’ என்று பெயர் வைத்துள்ளது ரெனோ. காரின் பின்பகுதியில் வரும் இந்த பேட்ஜைத் தவிர, வெளிப்புறத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லை. சமீபத்தில்தான் ட்ரைபரின் 1.0 லிட்டர் இன்ஜின் BS-6 ஆக மாற்றப்பட்டது. இந்த இன்ஜின் 72bhp பவரையும், 9.6kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

காரின் உள்ளே, AMT கியர்பாக்ஸைப் பயன்படுத்த க்விட்டில் வரும் வட்ட டயல் இல்லாமல், டஸ்ட்டர்போல கியர் லீவர் வருகிறது. கியர்பாக்ஸ் மாறுவதால், ட்ரைபரின் மைலேஜ் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த AMT வெர்ஷனுடன் சேர்த்து ரெனோ 16 இன்ச் வீல் கொண்ட ட்ரைபர் ஒன்றையும் காட்சிக்கு வைத்திருந்தது. டூயல் டோன் நிறங்களும், நீல நிற இன்ட்டீரியரும், கூடவே சில ஆக்ஸசரிகளும்கூட இதில் பொருத்தப்பட்டிருந்தன. ஏற்கெனவே இந்த சிறிய 7 சீட்டருக்கு நல்ல வரவேற்பு. இப்போது, AMT வேறு. நிச்சயம் ரெனோவுக்கு இந்த ட்ரைபர் `Easy-R' நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என்று நம்புவோம். டர்போ பெட்ரோலுக்கு வி ஆர் வெயிட்டிங்!