Published:Updated:

Toyota Land Cruiser LC300: முதல்வர் ஸ்டாலினின் ரூ.3.5 கோடி கார்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

LC300 காரில் முதல்வர் ஸ்டாலின்

இதை CBU (Completely Built Unit) முறையில் துபாயிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். மதிப்புமிக்க இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC300 காருக்கு இவ்வளவு டிமாண்ட் ஏன்? இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்.

Toyota Land Cruiser LC300: முதல்வர் ஸ்டாலினின் ரூ.3.5 கோடி கார்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இதை CBU (Completely Built Unit) முறையில் துபாயிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். மதிப்புமிக்க இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC300 காருக்கு இவ்வளவு டிமாண்ட் ஏன்? இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்.

Published:Updated:
LC300 காரில் முதல்வர் ஸ்டாலின்
உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே அதிக வெயிட்டிங் பீரியட் கொண்ட கார் - அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். குளோபலாக 4 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் இதற்குத்தான் - அது, டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC சீரிஸ் கார்கள். இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் லாஞ்ச் ஆனது LC 300. இந்த லேண்ட்க்ரூஸர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் டீலர்ஷிப்புக்கு வரும். அப்படி சென்னை டீலர்ஷிப்புக்கு இந்த LC 300 மொத்தமே 5 கார்கள்தான் வந்திருக்கிறதாம். அதுவும் பணம் இருந்தால் மட்டும் இதை புக் செய்துவிட முடியாது. அதாவது, இது தனவான்களின் கார் மட்டும் இல்லை; கொஞ்சம் மதிப்பு மிக்க மக்களின் காரும்கூட!

தனவான்களை விடுங்கள்; அரசியல்வாதிகளுக்கு இந்த டொயோட்டா மற்றும் LC சீரிஸ் வகை கார்கள் ரொம்பவும் பிடிக்கும்போல! கருணாநிதி (டொயோட்டா அல்ஃபார்டு), ஜெயலலிதா (டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிரேடோ), எடப்பாடி (டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா) என எல்லோருமே டொயோட்டா கார்களில்தான் கெத்தாக வலம் வந்தார்கள். இப்போது ஸ்டாலினும் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC 300 காரில் வலம் வர ஆரம்பித்திருக்கிறார். லேட்டஸ்ட்டாக 2 கோடி ரூபாய் மதிப்பில் லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கிய ஸ்டாலின், இப்போது லேண்ட்க்ரூஸர் LC300 காரில், சில நாLகளாக கோபாலபுரத்தில் இருந்து பர்சனலாக சில நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார்.

இப்போதுதான் இந்த காருக்கு புக்கிங்கை ஆரம்பித்திருக்கிறது டொயோட்டா. சென்னையில் 10 லட்சம் கொடுத்து புக்கிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள் சில முக்கியமான விஐபிக்கள். அந்த 5 விஐபிக்கள் யாரென்று தெரியவில்லை. அப்படியே அவர்கள் புக் செய்தாலும், இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. புக்கிங்கே ஆரம்பிக்காத LC300–யை அதற்குள் எப்படித் தமிழ்நாட்டுச் சாலைகளில் ஓட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர்?

Toyota Land Cruiser LC 300
Toyota Land Cruiser LC 300

இதை CBU (Completely Built Unit) முறையில் துபாயிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஸ்டாலின் இறக்குமதி செய்து வாங்கியதாக இருந்தால்... அவர் தனது கார் நம்பரில் கவனமாக இருப்பார். 2345 என்பதுதான் அவருக்கு விருப்பமான எண். ஒருவேளை – இது தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான காராக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சென்னை டொயோட்டா ஷோரூம்களில் இதை புக் செய்தால், இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.2.25 கோடி. துபாயிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து வாங்கியதால், இதன் விலை சுமார் ரூ.3.5 கோடிக்குள் இருக்கலாம்.

மதிப்புமிக்க இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC300 காருக்கு இவ்வளவு டிமாண்ட் ஏன்? இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • இந்த லேண்ட்க்ரூஸர் காருக்குச் சுமார் 70 வயது ஆகிறது. டொயோட்டாவின் ஆகப்பெரிய சீனியர் கார் இதுதான். 1953–ல் இருந்து லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி கார்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

  • டொயோட்டாவில் இந்த LC 300–க்கு முந்தைய சீனியர் என்றால், LC 200. LC என்பது Land Cruiser என்பதைக் குறிக்கிறது. அதாவது, சாலைகளில் மட்டுமில்லை; எப்படிப்பட்ட நிலங்களிலும் க்ரூஸ் ஆகிச் செல்லும் எஸ்யூவி என்பதுதான் இதன் பொருள். ஸ்டாலின் வைத்திருக்கும் இந்தப் புது LC 300, லேண்ட்க்ரூஸரின் 8–வது ஜெனரேஷன் மாடல்.

  • ஏற்கெனவே சொன்னதுபோல், இதற்கு வெயிட்டிங் பீரியட் ரொம்ப ரொம்ப அதிகம். உலகளவில், 3 முதல் 4 ஆண்டுகள் வரை இதற்குக் காத்திருப்புக் காலம் இருக்கும். இந்த காருக்கு உள்ள டிமேண்ட் மற்றும் செமி கண்டக்டர் சிப் ஷார்ட்டேஜ் போன்றவைதான் இதற்குக் காரணம். ஆனால், இந்தியாவில் 12 மாதங்களில் இந்த காரை டெலிவரி கொடுக்கிறது டொயோட்டா.

LC 300
LC 300
  • உருவத்தில் பெரிய ஆப்பிரிக்க யானையைப் போலவும், கட்டுறுதியில் காண்டாமிருகத்தைப்போலவும் இருக்கும் இந்த கார், டொயோட்டாவின் LC 200 தயாரிக்கப்பட்ட அதே GA-F எனும் ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகிறது. LC 200–யைவிட நீள/அகலங்களில், உயரத்தில் இன்னும் கொஞ்சம் பிரமாண்டமாக இருக்கிறது LC 300. இதன் நீளம் 5 மீட்டருக்கு 15 மிமீதான் குறைவு. பெரிய படகுபோல் செல்லும் இந்த LC 300. இதன் உயரம் 1,945 மிமீ. ஒரு தடவை நடிகர் கமல்ஹாசன், மோட்டார் விகடனுக்காக லேண்ட்க்ரூஸர் காருடன் புகைப்படம் எடுத்தபோது, ‘‘இவ்வளவு உயரமா இருக்கே’’ என்று ஆச்சர்யப்பட்டார்.

  • இதன் வீல்பேஸ் – 2,850 மிமீ. அதாவது, காரின் முன்/பின் பக்க வீல்களுக்கு இடையே உள்ள தூரம். இதை வைத்துத்தான் பயணிகளுக்கு இடவசதியைக் கணக்கிட முடியும். இந்த வீல்பேஸ் இந்த செக்மென்ட்டில் மிகவும் அதிகம். அதனால், கால்களை நீட்டி சொகுசு பஸ்ஸில் உட்கார்வதுபோல் பயணிக்கலாம்.

Toyota LC 300
Toyota LC 300
  • ‘Squarish Design’ எனும் தீம் கோட்பாட்டில் இந்த லேண்ட்க்ரூஸரை டிசைன் செய்திருக்கிறது டொயோட்டா. ஸ்லீக்கான எல்இடி ஹெட்லைட்ஸ், பெரிய அகலமான கிரில், சதுரமான வீல் ஆர்ச்கள், உயரமான ரெஃப்ளெக்டர் மற்றும் விண்டோ லைன்கள் என்று பிரமாண்டமாக இருக்கிறது இதன் டிசைன். அதனாலேயே இதன் ரோடு பிரசன்ஸ் அருமை.

  • இந்தியாவில் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் இந்த டொயோட்டா LC 300 கிடைக்கிறது.

  • சாலைகளில் சீற வேண்டும்; ஹேண்ட்லிங் பக்காவாக இருக்க வேண்டும் என்பதற்காக, முந்தைய LC 200–ல் இருந்து இதன் எடையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள்.

  • ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகள் கொண்ட 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உண்டு. காரைச் சுற்றிலும் 14 JBL ஸ்பீக்கர் கொண்ட சரவுண்ட் சிஸ்டம் இருக்கிறது.

  • குளோபலாக 7 சீட்டர் மாடலில் கிடைக்கும் இந்த லேண்ட்க்ரூஸர் LC 300, இந்தியாவில் 5 மற்றும் 7 சீட்டர் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கலாம்.

  • இதில் ஒயர்லெஸ் சார்ஜிங், கார் ஓட்டும்போது, சாலைகளில் பார்வை விலகாமல் கவனிக்க ஹெட்அப் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யப்படக் கூடிய ஸ்டீயரிங் வீல் போன்ற வசதிகள் உண்டு.

  • இதில் ஃபிங்கர் ப்ரின்ட் ஆத்தரைசேஷன் சிஸ்டத்தை முக்கிய வசதியாகச் சொல்லாம். ஃபிங்கர் பிரின்ட் இருந்தால்தான் காரை ஸ்டார்ட் செய்ய முடியும். அதனால், காரைத் திருடுவது சாதாரண விஷயமல்ல!

  • இதில் அடாப்டிவ் ஹைபீம் லைட்ஸ் உண்டு. எதிரே வரும் பயணிகளுக்கு ஏற்ப தானாகவே இது ஹைபீமை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். லேன் டிரேஸ் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற வசதிகளும் உண்டு.

  • இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை டொயோட்டா லாஞ்ச் செய்யவில்லை. அநேகமாக ஸ்டாலின் கார் டீசலாகத்தான் இருக்க வேண்டும். இதில் இருப்பது 3.3 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின்.

  • இதன் டார்க் 700Nm. நம் ஊர் எஸ்யூவிகளில் அதிகபட்சமாக 400Nm இருக்கும். டார்க், கிட்டத்தட்ட டபுளாகக் கொப்புளிக்கும் இந்த எஸ்யூவியில். நெடுஞ்சாலைகளில் பறப்பதற்காக, இதில் 305 bhp குதிரை சக்தி இருக்கிறது. இதில் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உண்டு. இந்த லேண்ட்க்ரூஸர், ஒரு பெரிய கேரவனையே இழுத்துச் செல்லும் அளவுக்கு ஜாம்பவான்.

  • எஸ்யூவி என்றாலே ஆஃப்ரோடுதான். இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸரில் அது இல்லாமல் இருக்குமா? கார், பெரிய பள்ளத்தில் இருந்து வேகமாக இறங்கினாலும், பம்பர்களில் பெரும்பான்மையாக அடிபடாத அளவு இதன் ஆங்கிள்கள் அற்புதம். பெரிய ஆஃப்ரோடரான இதில் 32 டிகிரி அப்ரோச் ஆங்கிள் உண்டு. இதன் டிப்பார்ச்சர் ஆங்கிள் 26.5 டிகிரி. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் 230 மிமீ. போட்டி எஸ்யூவிகளைவிட இது அதிகம்.

Land Cruiser
Land Cruiser
  • 4 வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக வந்தாலும், இதில் அட்வான்ஸ்டு மல்ட்டி டெரெய்ன் செலெக்ட் சிஸ்டம்… அதாவது டிரைவிங் மோடுகள் உண்டு. Deep Snow, Auto Mode என்று 2 டிரைவிங் மோடுகள் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சாலையே இல்லாத சாலையிலும் இந்த லேண்ட்க்ரூஸர் யோசிக்காது.

  • இதில் 20 இன்ச் அலாய் வீல்கள் உண்டு. எப்படிப்பட்ட வழுக்கும் ஏரியாக்களிலும் கிரிப் கிடைக்கும். நான்கு வீல்களுக்கும் டிஃப்ரென்ஷியல் லாக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது, பாறைகளில் சிக்கிக் கொண்டால்… தேவையில்லாத வீல்களை லாக் செய்து கொண்டால்.. விருட்டென மேலேறும் கார்.

  • இதில் மல்ட்டி டெரெய்ன் மானிட்டர் சிஸ்டம் எனும் வசதி இருக்கிறது. காருக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்ட, காருக்குக் கீழே கேமரா பொருத்தியிருக்கிறார்கள். இதுதான் ரியல் 360 டிகிரி கேமரா.

  • இதில் Revised Control System என்றொரு வசதி உண்டு. இந்த எஸ்யூவியின் வேகத்தை கன்ட்ரோல் செய்யும் வசதி இது. ‘தண்ணீர் மற்றும் சேறு, பாறைகள் நிறைந்த ஆஃப்ரோடுகளில் இதுக்கு மேல் வேகம் போகக் கூடாது ராஜா’ என்று நம்மை அலெர்ட் செய்யும் இந்த சிஸ்டம்.

  • வாடிக்கையாளர்களுக்கு வாரன்ட்டியை அள்ளித் தெளிப்பதில் டொயோட்டா கஞ்சத்தனம் காட்டாது. இந்த காருக்கு 3 ஆண்டுகளும்/1 லட்சம் கிமீ வாரன்ட்டியும் கொடுக்கிறது டொயோட்டா.