ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஆட்டோமொபைல் டீலர்கள் என்ன செய்யவேண்டும்?

கார்/பைக் டீலர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்/பைக் டீலர்ஸ்

டிப்ஸ்: கார்/பைக் டீலர்ஸ்

‘நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவே இன்று, நாம் எதை நம்புகிறோமோ அதுவே நாளை என்று எங்கேயோ படித்த ஞாபகம்.

இன்று ஆட்டோமொபைல் துறை சில தற்காலிக விஷயங்களால் துவண்டு கிடக்கிறது. இதெல்லாமே முடிந்த பின் மீண்டும் முழு வீச்சுக்கு வரும்போது பல மாற்றங்களை நாம் காண நேரிடும். பழைய முறைகள் நமக்கு உதவாது, புதிய வழிமுறைகளை மாற்றங்களுக்கு ஏற்ப பின்பற்றவேண்டியது வரும். முக்கியமாக ஆட்டோமொபைல் டீலர்கள்.

பல கிளைகளை வைத்திருக்கும் பெரிய டீலர்ஷிப் முதல் ஒரே ஒரு ஷோரூம் வைத்து நடத்தும் ஆரம்பக்கால தொழிலதிபர் வரை எல்லோருக்கும் உதவும்படியாக சில டிப்ஸ் தொகுத்திருக்கிறோம். ராஜன் வதேரா, ராஜேந்திர பாட்நாகர், ஆஷிஷ் காலே, பவன் கோயங்கா போன்ற ஆட்டோமொபைல் துறை ஜாம்பவான்கள் பகிரும் அனுபவ அறிவுரைகள்தான் இந்த டிப்ஸ்.

  • இந்த லாக்டவுன் முடிந்து வெளியே வந்தாலும் கூட பொதுச் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. இந்த கொரோனாவுக்காக எப்படிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ அதை அப்படியே தொடர்வது அவசியம். அப்போதுதான், ஊழியர்களின் உடல்நலன் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கமுடியும். தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கும் இது பெரிய நம்பிக்கையை தரும்.

கார்/பைக் டீலர்ஸ்
கார்/பைக் டீலர்ஸ்
  • நிறுவனங்கள் சந்திக்கப்போகும் மிகப் பெரிய சவால் சப்ளை-செயின் சேனல் . இந்த சவால் கார்-பைக் உற்பத்தி கம்பெனிகளைவிட டீலர்களைத்தான் பெரிதாகப் பாதிக்கும். அதுமட்டுமில்லை லாக் டவுன் முடிந்த முதல் நாளிலேயே தொழிற்சாலைகள் முழுத் உற்பத்தி திறனோடு செயல்பட முடியாது. அதனால், பைக் அல்லது கார் வாங்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான வெயிட்டிங் பீரியடை சற்றுக்கூட்டிச் சொல்வது நல்லது. மேலும், நீங்கள் சொல்லும் தேதிக்கு ஓரிரு நாள் முன்போ அல்லது பின்போ வாகனம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்களிடம் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில் டெலிவரி தேதியை டீலர்கள், தயாரிப்பாளர்கள், லாஜிஸ்டிக் கம்பெனிகள் என யாராலும் கணிக்கமுடியாது.

  • இந்த லாக்டவுனுக்கு பிறகு ஆன்லைன் வர்த்தகம் என்பதும், ஒர்க் ஃபிரம் ஹோம் என்பதும் புதிய வேலை வழிமுறைகளாக இருக்கப்போகின்றன. ஒர்க் ஃபிரம் ஹோம் என்பதோடு இருக்கும் இடத்திலேயே வேலையை முடிப்பது ஒர்க் ஃபிரம் ஃபீல்டு என்பதும் இனிமேல் சூடுபிடிக்கப்போகிறது.

  • இதற்கு உங்கள் டீலர்ஷிப் தயாராக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அதற்கான சுலபமான வழிமுறைகளைத் தேடலாம்.

  • லாக்டவுன் முடிந்த பிறகு நிச்சயமாக அரசு நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவுச்சங்கிலி, சிறு-குறு தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்தும். இதனால், ஆட்டோமொபைல் துறைக்கு உடனடியான பொருளாதார உந்துதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இப்படிப்பட்ட சூழலில் டீலர்ஷிப்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்போது பலன் இருக்கும். உதாரணமாக சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் விஷயத்தில் டீலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் ரிசோர்ஸ்களை பகிர்ந்துகொள்வது தேவையற்ற முதலீடுகளைக் குறைப்பது புத்திசாலித்தனமான நிதி நிர்வாகத்துக்கு வழிவகுக்கும். சேர்ந்து இருக்கும்போது சர்வைவல் என்பது சற்று இலகுவாகும்.

  • டீலர்ஷிப் மாடலில் மாற்றம் வரப்போகிறது. தற்போது இருக்கும் டீலர்ஷிப் மாடல் என்பது ஒரு தொடர்ச்சியான விற்பனையை மையப்படுத்தியது. ஆனால், கடைசி 15 மாதங்களை எடுத்துப்பார்க்கும்போது டீலர்களின் வளர்ச்சி விகிதம் குறைந்தே காணப்படுகிறது. இதனால், உற்பத்தியாளர்கள் முதல் டீலர்கள் வரை புதிய யுக்திகளை யோசிக்கவேண்டும். ஒவ்வொரு விற்பனையிலும் லாப விகிதத்தை எப்படி அதிகரிக்கவேண்டும் என்ற ஃபார்முலாவை திருத்தி எழுதவேண்டும். தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு விர்ச்சுவல் மற்றும் ஃபிசிக்கல் இந்த இரண்டு விதமான அனுபவத்தையும் தரவேண்டும். இதற்கு டிஜிட்டல் ஏற்பாடுகள் வலிமையாக இருக்கவேண்டும். சில டீலர்கள் ஏற்கெனவே தயாராகியிருப்பார்கள். மீதம் இருக்கும் டீலர்களும் தயாராகவேண்டியது அவசியம்.

showroom
showroom
  • டீலர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் என்பது சவாலான விஷயம். கேஷ் ரிசவ் வைத்திருந்தாலும் அதை தற்போது பயன்படுத்தாமல் அரசு அறிவித்துள்ள மோரடாரியம் பயன்படுத்திக்கொள்ளலாம். லாக்டவுன் முடிந்த உடன் மக்களின் செலவு என்பது அத்தியாவசிய பொருள்களின் மீதே அதிகம் இருக்கும். உடனடியாக வாகனங்களை யாரும் வாங்கமாட்டார்கள். ஆனால், சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் விஷயங்கள் மூலம் வசூலாகும் வருமானம் கைக்கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் போதுமான நிதி பணமாக கையிலிருப்பது நல்லது. இது சேமிப்பு இல்லை. அவசரக் கால நிதி.

டீலர்களுக்கு இருக்கும் பெரிய சவால் லாபம் எடுக்கச் செய்யப்படும் முதலீடுகள் (capital investment) மற்றும் தொழிலாளர்களின் சம்பளம்.

ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ ரேட்டை குறைத்து கடன்களுக்கான வட்டியை குறைக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில் கடன் வாங்குவதை விடச் சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலீடாகப் பயன்படுத்துவது நல்லது.

  • இப்படிச் செய்யும்போது கடன் சார்ந்து இருப்பதைக் குறைத்துக்கொள்ளலாம். எல்லாமே சகஜ நிலைக்கும் திரும்பும்போது அப்போது கடன் சார்ந்து கூடுதல் முதலீடுகளைத் திட்டமிட முடியும்.

  • வாகனங்களைப் பற்றி விசாரிப்பது, முன்பதிவு, வாகன கையிருப்பு, தொழிலாளர்கள் வேலை நேரம், வாகனம் விற்பனையாகும் கால அளவு, இன்வென்ட்ரியின் டெப்ரிசியேஷன் வேல்யூ என ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் பதிவு செய்வது முக்கியமானது.

இன்வென்ட்ரியை கையாளும் விதம் இந்த சூழலில் மிக முக்கியமானது. இது எதிர்காலத்தைத் திட்டமிடவும், நிகழ்காலத்தில் எந்த இடத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கும் தோதாக இருக்கும்.

OEM உடன் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம். அதுவும், லாப நோக்கத்தோடு மட்டுமே அல்லாமல் வேலையைச் சுலபமாக்குவதில் எங்கே சிக்கல் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து அவர்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இதனால், இரண்டு தரப்புக்குமே பிரச்னைகளைக் குறைத்து ஆரோக்கியமாக கம்பெனியை நடத்த உதவும்.