Published:Updated:

ஜெய்ப்பூர் டு பாகிஸ்தான்... செலவு 700 ரூபாய்! எலெக்ட்ரிக் காரில் லாங் டிரைவ் செய்வது எப்படி?

Jaipur to Longewala

நீங்க எலெக்ட்ரிக் கார் வெச்சிருக்கீங்களா..? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்! #ElectricCarTour

ஜெய்ப்பூர் டு பாகிஸ்தான்... செலவு 700 ரூபாய்! எலெக்ட்ரிக் காரில் லாங் டிரைவ் செய்வது எப்படி?

நீங்க எலெக்ட்ரிக் கார் வெச்சிருக்கீங்களா..? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்! #ElectricCarTour

Published:Updated:
Jaipur to Longewala
சாதாரணமாக பெட்ரோல்/டீசல் காரில் டூர் அடித்தாலே… ‘இங்க பெட்ரோல் பங்க் இருக்குமா… டீசல் போட முடியுமா’ என்று பதற்றத்துடனேயே கார் ஓட்டுவோம். ஆனால், தனது வீட்டிலிருந்து லோனேவாலா எனும் இந்தியா – பாகிஸ்தான் பார்டர் வரை தனது எலெக்ட்ரிக் காரில் ட்ரிப் அடித்து விட்டு வந்திருக்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆகாஷ்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு 3D ப்ரின்ட் கடை வைத்திருக்கும் ஆகாஷ், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ட்ரிப் அடிக்கத் திட்டம் போட்டார். ஆனால், சில காரணங்களால் டூர் ப்ளான் தடைப்பட்டது. ஆகாஷால் பொறுக்க முடியவில்லை. மனைவியுடன் அந்த டூர் ப்ளானைத் தொடர்வது என்று முடிவெடுத்து, தனது டாடா நெக்ஸான் EV காரை சார்ஜ் போட ஆரம்பித்துவிட்டார்.

2020 கிறிஸ்துமஸ் காலையில் நெக்ஸான், புகையே இல்லாமல் ஆகாஷின் ஜெய்ப்பூர் வீட்டிலிருந்து கிளம்பியது. "எலெக்ட்ரிக் காரில் இவ்வளவு தூரம் போறது சரிப்படலை" என்று வழக்கம்போல் விமர்சனங்கள் வந்ததைக் கண்டுகொள்ளவில்லை. சரியாக நான்கே நாள்களில் திரும்பவும் தனது வீட்டில் நெக்ஸானை சத்தமே இல்லாமல் பார்க் செய்துவிட்டார் ஆகாஷ். அப்போது நெக்ஸானின் ட்ரிப் மீட்டரை செக் செய்தால், சுமார் 1,500 கிமீ ஓடியதாகக் காட்டியது.

மனைவியுடன் ஆகாஷ்
மனைவியுடன் ஆகாஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண IC இன்ஜின் கார்களில்… பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வரலாம். ஆனால், எலெக்ட்ரிக் கார்களில் பெரிய பிரச்னையே சார்ஜிங்தான். ‛சார்ஜ் காலியாகிடுமே’ என்று பார்த்துப் பார்த்துத்தான் பயணிக்க வேண்டும். சரியாக சார்ஜிங் ஸ்டேஷன்களில் பார்க் செய்து சார்ஜ் ஏற்ற வேண்டும்; இரவு சார்ஜ் ஏற்ற வேண்டும். இப்படிப் பல சிக்கல்கள் உண்டு. ஆனால் மிகத் தைரியமாக நான்கே நாள்களில் 1,500 கிமீ பயணித்தது எப்படி? எலெக்ட்ரிக் வாகனங்களில் ட்ரிப் அடிக்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்? நல்ல ரேஞ்ச் கிடைக்க எப்படியெல்லாம் டிரைவ் செய்ய வேண்டும்? ஆகாஷே சொல்கிறார்.

‛‛முதல் நாளில் ஜெய்ப்பூரில் இருந்து புஷ்கருக்குக் கிளம்பினோம். அங்குள்ள என் நண்பர் வீட்டில் இரவு முழுவதும் ஃபுல் சார்ஜ் போட்டேன். அப்புறம் ஜோத்பூர், ஜெய்சால்மர்… அப்புறம் லோனோவாலா.. இதுதான் இந்தியா - பாகிஸ்தான் எல்லை.’’ என்கிறார் ஆகாஷ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக, எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிக்கும்போது, சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். திட்டமிடல் ரொம்பவும் அவசியம். எங்கெங்கே சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிட இன்னொரு சிறந்த வழி - ஒரு எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் மற்றும் கேபிள் கைவசம் இருக்க வேண்டும். இதை ஒரு எலெக்ட்ரோ மீட்டருடன் கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது எதற்கு என்றால், எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதைக் கணக்கெடுக்க. காரணம், திடீரென ஒரு மாலிலோ, ஹோட்டலிலோ 20 நிமிடம் சார்ஜ் போட வேண்டியிருக்கிறது என்றால், இந்த எலெக்ட்ரோ மீட்டர் எவ்வளவு யூனிட் மின்சாரத்தை காருக்குச் செலவழித்திருக்கிறோம் என்பதைச் சொல்லிவிடும். இது அவர்களுக்கு பில் கட்ட உதவியாக இருக்கும். ஆனால், நிறைய இடங்களில் என்னிடம் பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள்.

அதைத் தாண்டி EV கார்களில் பயணிப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய விஷயம் - Earthing Kit. ஏனென்றால், நீங்கள் போகும் இடங்களில் சார்ஜ் போடும்போது, அவர்கள் எர்த் கனெக்ஷன் கொடுத்திருப்பார்களா என்று தெரியாது. இது நமது காருக்கும் சார்ஜிங்குக்கும் மிகவும் பாதுகாப்பு.

Electric Car Tour / டீ பிரேக்
Electric Car Tour / டீ பிரேக்

‛‛ஒவ்வொரு 200 கிமீ-க்கும் ஒரு முறை சார்ஜிங்கைத் திட்டமிட்டேன். ஹோட்டல், காம்ப்ளக்ஸ், நண்பர்களின் வீடு என்று பக்காவாக ப்ளான் செய்தேன். ஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது, சுமார் 10-11 மணி நேரம் சார்ஜ் ஏற்றிவிடுவேன். அப்போதுதான் மறுநாள் நிம்மதியாகப் பயணிக்க முடியும். நான் எங்கே சார்ஜ் போட்டாலும், காப்பர் ஒயர் சுற்றப்பட்ட ஒரு இரும்பு ராடை சார்ஜிங் கேபிளுடன் கனெக்ஷன் செய்து பூமியில் புதைத்து விடுவேன். இதுதான் எர்த். இது பெரிய தொழில்நுட்பமெல்லாம் கிடையாது. லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜ் பிரச்னை இதில் இருக்காது. நமது காரும் பாதுகாப்பாக இருக்கும். நான் இந்தப் பயணத்தில் எர்த்திங்குக்கு நிறைய வழிகளைக் கண்டுபிடித்தேன். கை பம்புகள், GI பைப்புகள், ரெயிலிங்குகள், எலெக்ட்ரிக் போர்டு பிட் என்று பல விஷயங்களை, ஒரு காப்பர் ப்ளேட்டுடன் வைத்து எர்த் போட்டேன். எந்தப் பிரச்னையுமே இல்லை. எலெக்ட்ரிக் கார்களில் பயணிப்பவர்களுக்கு இந்த ஐடியா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!’’ என்கிறார் ஆகாஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைவிட, இந்தப் பயணம் முடிந்தபிறகு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என ஒரு சார்ஜிங் கிட்டையே ரெடி செய்துவிட்டாராம் ஆகாஷ். இதில் எக்ஸ்டென்ஷன் கேபிள் கொண்ட எனர்ஜி மீட்டர், ஒயரிங் சரியாக இருக்கிறதா என்பதைச் சொல்லும் இண்டிகேட்டர், இரும்பு ராடு, காப்பர் ஒயர், காப்பர் ப்ளேட் என்று பல விஷயங்கள் அடங்கிய இந்த கிட்டை ரெடி செய்து பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார் ஆகாஷ். இதன் விலை 9,878 ரூபாயாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் - Tow செய்வதற்கான கயிறு எப்போதுமே காரின் டிக்கியில் இருப்பது நல்லது. எலெக்ட்ரிக் வாகனங்களில் கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது. அதாவது, ஹைவேஸில் போய்க் கொண்டிருக்கும்போது சார்ஜ் இல்லாமல் கார் நின்றுவிட்ட பட்சத்தில்… அதை டோ செய்யும்போது பேட்டரிக்குத் தானாக சார்ஜ் ஏறும். இதைத்தான் ரீ-ஜெனரேட்டிவ் சார்ஜிங் (Re-Gen Charging) என்கிறார்கள். ஒரு கி.மீ. டோ செய்யும்பட்சத்தில், நம் காரின் பேட்டரிக்கு 1.1% சார்ஜ் கிடைக்கும். 1% சார்ஜை வைத்து, 2.5 கிமீ வரை பயணிக்கலாம். எனவே, ஒரு 5 கிமீ Tow செய்தால், இதை வைத்து 15 கிமீ வரை பயணித்துவிடலாம். டோ செய்வதற்கு கம்பெனி சர்வீஸ் ஆட்களையோ, நல்ல உள்ளம் படைத்த நண்பர்களையோ பிடிப்பது நம் சாமர்த்தியம்.

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

பொதுவாக, கார்களின் ரேஞ்ஜை (Distance to Empty) நம்பவே முடியாது. இருக்கிற பெட்ரோலில் அல்லது சார்ஜில் இத்தனை தூரம் போகலாம் என்றால், அத்தனை தூரம் நிச்சயம் பயணிக்க முடியுமா என்று ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.

பொதுவாக, கார் நிறுவனங்கள் ‛இத்தனை கி.மீ. எங்கள் வாகனம் மைலேஜ் தரும்’ என்று ஒரு குறிப்பிட்ட அராய் மைலேஜை க்ளெய்ம் செய்யும். ஆனால், நிச்சயம் அந்த மைலேஜ் கிடைக்காது என்பதுதான் நிதர்சனம். இது ev கார்களுக்கும் பொருந்தும். உதாரணத்துக்கு, நெக்ஸானுக்கு 312 கிமீ ரேஞ்ச் என்று க்ளெய்ம் செய்கிறது டாடா. ஆனால், உண்மையில் நெக்ஸான் வைத்திருப்பவர்கள் 230 கிமீ வரைதான் சொல்கிறார்கள்.

‛‛ஆனால், நமது டிரைவிங் ஸ்டைலை மாற்றினால் இந்த விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும்’’ என்கிறார் ஆகாஷ்.

நிஜம்தான்; IC இன்ஜின் கார்களுக்கே இந்த டிரைவிங் சூட்சுமம் பொருந்தும் எனும்போது, நமது டிரைவின் கண்டிஷனைப் பொருத்து எலெக்ட்ரிக் கார்களில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

‛‛எனக்கு 300 கிமீ வரை கிடைத்தது என் நெக்ஸானில். ஆனால், இதிலும் ஒரு டிரைவிங் சூட்சுமம் இருக்கிறது. உதாரணத்துக்கு, 80 கிமீ-லேயே க்ரூஸ் செய்தீர்கள் என்றால், 200 - 220 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க, ரேஞ்ச் தூரம் குறையும். இதுவே 40 கிமீ வேகத்தில் கிராஜுவல் ஆக்ஸிலரேஷன் கொடுத்தால் 300 கிமீ கிடைக்கும். எனக்கு அப்படித்தான் டாடா சொன்ன ரேஞ்சைவிட அதிகமாகவே கிடைத்தது’’ என்கிறார் ஆகாஷ்.

ஹைவேஸில் 100 கிமீ-லும் பறக்கலாம்
ஹைவேஸில் 100 கிமீ-லும் பறக்கலாம்

மேலும், எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை, இதில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால், நாம் பிரேக் பிடிக்கப் பிடிக்க பேட்டரிக்கு ஆற்றல் போய்க் கொண்டே இருக்கும். அதற்காக சடர்ன் பிரேக்கும் கூடாது; ஹெவி டிராஃபிக்கும் சிக்கல்தான்!

‛‛ஜோத்பூரில் இருந்து ஜெய்சால்மர் போகும்போதுதான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். சாலைப் பணி நடந்து கொண்டிருந்ததால், ஒரே மண் மற்றும் கற்கள். ஆஃப்ரோடு செய்துதான் பயணித்தோம். நல்லவேளை - நெக்ஸான் ஒரு எஸ்யூவி. இருந்தாலும் ஒரு 5 கிமீ-யைக் கடப்பதற்குள்ளேயே ரொம்பத் திணறிப் போனோம். இந்த 5 கிமீ-ல்தான் 10% சார்ஜை வீணடித்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அதனால் அடுத்த டார்கெட் வரை 40 கிமீ வேகத்திலேயேதான் போய் சார்ஜை மிச்சப்படுத்தினேன். ஆனால், வரும்போது சாலை மிகவும் காலியாக இருந்தது. போதுமான சார்ஜிங்கும் இருந்ததால், 100 கிமீ-ல் நெக்ஸானில் பறந்து வந்தது நல்ல அனுபவம்!’’ என்கிறார்.

ஜெய்ப்பூரில் இருந்து லோனோவாலா போய்த் திரும்பவுதற்கு 1,500 கிமீ. இதுவே ஒரு சாதாரண IC இன்ஜின் காரில் பயணித்தால், (15 கிமீ மைலேஜ்னு வெச்சுக்கலாம்) சுமார் 100 லிட்டர் பெட்ரோல் போட வேண்டியிருக்கும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். (நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது ஏறியிருக்கலாம்.) சுமார் 9,300 ரூபாய் பெட்ரோல் செலவு மட்டும் ஆகும். ‛‛ஆனால், எனக்கு 200 யூனிட் சார்ஜ் செலவானது. ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொண்டால், 1,400 ரூபாய்தான் செலவு. ஆனால், பல இடங்களில் பணமே வாங்கவில்லை. எரிபொருளுக்கு என்று நான் செலவு செய்த மொத்தத் தொகை வெறும் 700 ரூபாய்தான். இதுவே சார்ஜிங் ஸ்டேஷன்கள் இந்தியா முழுவதும் வந்துவிட்டால் இன்னும் செலவு குறையும்! என்ன, சரிதானே!’’ என்கிறார் ஆகாஷ்.

அப்புறம் என்ன.. எலெக்ட்ரிக் கார் வெச்சிருக்கிறவங்க… சம்முவம் எட்றா வண்டியனு டூர் கிளம்பிட வேண்டியதுதானே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism