ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

இந்தியாவின் டாப் - 10 மைலேஜ் கார்கள்!

மாருதி சுஸூகி டிசையர்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி டிசையர்

டாப் 10 மைலேஜ் கார்கள்

BS-6 பெட்ரோல் கார்களைப் பொறுத்தவரை, அதன் Catalytic Converter அமைப்பு மற்றும் இன்ஜினில் செய்யப்பட்டிருக்கும் மாறுதல்கள் காரணமாக எடை அதிகரித்திருக்கின்றன. இவற்றின் வெளிப்பாடாக, பல மாடல்களில் பவர் - டார்க் - மைலேஜ் ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டுள்ளது. நீங்கள் பார்ப்பது இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப்-5 பெட்ரோல் மற்றும் டாப்-5 டீசல் கார்கள்...

மாருதி சுஸூகி டிசையர் (K12 - 24.12கி.மீ) - டாப் 5 பெட்ரோல் கார்கள்

காம்பேக்ட் செடான் செக்மென்ட்டின் தலயான டிசையர், சமீபத்தில்தான் பேஸ்லிஃப்ட் அவதாரத்தைப் பெற்றது. எதிர்பார்த்தபடியே காரின் முன்பக்கத்தில்தான் அதிக மாற்றம் நடந்திருக்கிறது. இதன் BS-6 வெர்ஷன் கடந்தாண்டிலேயே வந்துவிட்டாலும், இம்முறை முக்கியமான மாற்றம் காரின் பானெட்டுக்குக் கீழே நடந்திருக்கிறது.

மாருதி சுஸூகி டிசையர்
மாருதி சுஸூகி டிசையர்

ஆம், இதில் பெலினோவில் இருக்கக்கூடிய 1.2 லிட்டர் K12C பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வித்தியாசமாக, இதில் டூயல் பேட்டரியுடன் கூடிய SHVS அமைப்பு இல்லை (ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் உண்டு). இதனால் முன்பைவிட 7bhp கூடுதல் பவருடனும், 2.91கிமி அதிக மைலேஜுடனும் டிசையர் கிடைக்கிறது. ஆச்சர்யப்படும் வகையில், மேனுவல் மாடலைவிட (23.26 கிமீ) AMT வெர்ஷன் (24.12 கிமீ) அதிக (அராய் கணக்குப்படி) மைலேஜைத் தருகிறது. ‘இந்தியாவின் எரிபொருள் சிக்கனமான கார்’ என்ற பெருமையை அடைந்திருக்கும் இந்த காம்பேக்ட் செடான், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப்-5 கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 (22.05 கி.மீ)

வ்வொரு மாதமும் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகியின் சிறிய சைஸ் மாடலான இதில் இருப்பது, அந்த நிறுவனத்தின் சிறிய ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க 800சிசி இன்ஜின். 48bhp பவரையும், 22.05 கி.மீ அராய் மைலேஜையும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின் வெளிப்படுத்துகிறது.

மாருதி சுஸூகி ஆல்ட்டோ
மாருதி சுஸூகி ஆல்ட்டோ

குறைவான பராமரிப்புக்கும் அதிக ரீ-சேல் மதிப்புக்கும் பெயர்பெற்ற ஆல்ட்டோ 800, காலத்துக்கு ஏற்றபடி டச் ஸ்க்ரீனுடனும் கிடைக்கிறது. ஆனால் இடநெருக்கடியான கேபின், இந்தக் காரின் பிரதான மைனஸ். ஆல்ட்டோ K10 இன்னும் BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படவில்லை. அநேகமாக இதற்கு மாற்றாகத்தான் எஸ்-ப்ரெஸ்ஸோ களமிறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்: (21.79 கிமீ)

டால் பாய் டிசைனில் இருந்தாலும், இப்போதைக்கு மாருதி சுஸூகியின் 1,000சிசி மாடல்களில் அதிக அராய் மைலேஜைத் தருவது வேகன்-ஆர்தான் (68bhp - 21.79 கி.மீ). பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் வேண்டும் என்பவர்களை, 83bhp பவர் - 20.52 கி.மீ அராய் மைலேஜ் தரும் 1.2 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடல் திருப்திப்படுத்துகிறது. இரு இன்ஜின்களின் AMT மாடல்களும், மேனுவல் கியர்பாக்ஸுக்குச் சமமான மைலேஜையே தருவது ப்ளஸ்.

மாருதி சுஸூகி 
 வேகன்
மாருதி சுஸூகி வேகன்

விலை - மைலேஜ் - இடவசதி ஆகியவற்றில் மனநிறைவைத் தரும் வேகன்-ஆர், அதிகளவில் விற்பனையாவதில் வியப்பேதும் இல்லை. நடப்பு நிதியாண்டில் மட்டும் 1,56,724 பேரை இந்த கார் சென்றடைந்துள்ளது.

மாருதி சுஸூகி/டொயோட்டா கிளான்ஸா (SHVS) - (23.87 கி.மீ) - டாப் 5 பெட்ரோல் கார்கள்

ரு வேறு நிறுவனங்கள் என்றாலும் கார் ஒன்றுதான். அதாவது பெலினோவின் Badge Engineered வெர்ஷன்தான் கிளான்ஸா. ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், Energy Recuperation, பவர் அசிஸ்ட், Integrated ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர், 12V லித்தியம் ஐயன் பேட்டரி ஆகியவற்றை உள்ளடக்கிய 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த இரு கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி

அடிப்படையில் மாருதி சுஸூகியின் தயாரிப்புதான் என்றாலும், ‘மைல்ட் ஹைபிரிட் அமைப்பு கொண்ட இந்தியாவின் விலை குறைவான கார்’ என்ற பெருமை இதற்கு உண்டு! இந்த இரு ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளும், வழக்கமான 1.2 லிட்டர் K12B பெட்ரோல் இன்ஜினுடனும் கிடைக்கின்றன. இது குறைவான 83bhp பவர் - அராய் மைலேஜ் (MT: 21.01 கிமீ, CVT: 19.56 கிமீ) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

ரெனோ க்விட் 1.0 AMT: 22.50 கிமீ

டந்தாண்டில் ஃபேஸ்லிஃப்ட் பெற்ற க்விட், இந்த ஆண்டில் BS-6 வெர்ஷனில் வந்தது. இதில் விநோதமான அம்சம் என்னவென்றால், சிறிய இன்ஜினைவிடப் பெரிய இன்ஜின் அதிக மைலேஜைத் தருகிறது.

ரெனோ க்விட்
ரெனோ க்விட்

ஆம், 800சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி 22.30 கிமீ அராய் மைலேஜைத் தந்தால், 1.0 லிட்டர் இன்ஜின் - AMT காம்போ 22.50 கிமீ அராய் மைலேஜ் தருகிறது. இதுவே 1.0 லிட்டர் - 5 ஸ்பீடு MT இணை, குறைவான 21.70 கிமீ மைலேஜையே வெளிப்படுத்துவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷன் குறைவான மைலேஜைத் தருவதற்கு, காரின் மேம்படுத்தப்பட்ட கட்டுமானம் ஒரு காரணம்.

ஹோண்டா அமேஸ்: (24.7 கி.மீ) - டாப் 5 டீசல் கார்கள்

BS-4 மாடலைப் போலவே அமேஸின் BS-6 வெர்ஷனிலும் இருப்பது 100bhp பவர் - 20kgm டார்க்கைத் தரும் 1.5 லிட்டர் i-DTEC டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான். ஆனால் BS-4 மாடல் 27.4 கிமீ அராய் மைலேஜைத் தந்த நிலையில், BS-6 வெர்ஷன் தருவதோ 24.7 கிமீதான்.

குறைவான மாசை வெளிப்படுத்துவதற்கு, NSC (NOx Storage Catalyst) மற்றும் Silver Thin Coated DPF (STC-DPF) ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே குறைவான செயல்திறனைத் (80bhp பவர் & 16kgm டார்க்) தரும் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலின் மைலேஜிலும் வித்தியாசம் இருக்கிறது (BS-4: 23.8 கிமீ, BS-6: 21 கிமீ).

ஹோண்டா அமேஸ்
ஹோண்டா அமேஸ்

விரைவில் இதே கூட்டணியை, ஜாஸின் BS-6 டீசல் மாடலிலும் எதிர்பார்க்கலாம். ஹோண்டாவின் பெயர் சொல்லும் மாடல்களில் ஒன்றான இது, பிராக்டிக்கலான காம்பேக்ட் செடானாக ஈர்க்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்: (26.2 கி.மீ)

டாடா மற்றும் மஹிந்திரா ஆகியோர், டியாகோ/டிகோர் மற்றும் KUV 1OO NXT ஆகிய கார்களில் இருந்த 3 சிலிண்டர் டீசல் இன்ஜினை, BS-6 விதிகளுக்கு மேம்படுத்தவில்லை. எனவே இப்போதைக்கு நம் நாட்டில் சிறிய BS-6 டீசல் இன்ஜின் இருப்பது கிராண்ட் i10 நியோஸில்தான். அதற்கேற்றபடியே இதன் அராய் மைலேஜ், இங்கிருக்கும் கார்களிலேயே அதிகமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை (26.2 கி.மீ).

ஹூண்டாய் கிராண்ட்
ஹூண்டாய் கிராண்ட்

இந்த 1.2 லிட்டர் Ecotorq டர்போ டீசல் இன்ஜின், 75bhp பவரை வெளிப்படுத்துகிறது. ஸ்டைலான டிசைன், இடவசதிமிக்க கேபின், அதிக சிறப்பம்சங்கள், மனநிறைவைத் தரும் பர்ஃபாமன்ஸ், கொடுக்கும் காசுக்கான மதிப்பு என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் அசத்துகிறது.

ஃபோர்டு ஃபிகோ/ ஆஸ்பயர்: (24.4 கி.மீ)

ந்தப் பட்டியலில் கிராண்ட் i10 நியோஸ் -ஆரா போல இருக்கும் மற்றுமொரு காம்போ, ஃபிகோ - ஆஸ்பயர்தான். கொடுக்கும் காசுக்கான மதிப்பு, பவர்ஃபுல் இன்ஜின்கள், பெரிய சைஸ், சிறப்பான பர்ஃபாமன்ஸ் - மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவுகள், டிரைவர்ஸ் கார் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இந்த ஃபோர்டு கார்கள் இருக்கின்றன.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ

இதில் இருப்பது ஒரே 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் இன்ஜின் – 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான். 100bhp பவர் - 21.5kgm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இது, மல்ட்டிஜெட்டுக்கு அடுத்தபடியாக Flexible ஆன இன்ஜினாக உள்ளது. இதன் BS-4 மாடல் 26.1 கிமீ அராய் மைலேஜ் தந்த நிலையில், BS-6 வெர்ஷன் 24.4 கி.மீயே தருகிறது. மற்றபடி கேபின் இடவசதி, பூட் ஸ்பேஸ், சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் பின்தங்கும் இவை, கொஞ்சம் பழைய மாடல்கள் என்ற உணர்வைத் தரத் தொடங்கிவிட்டது நெருடல்.

டாடா அல்ட்ராஸ்: (25.11 கி.மீ) - டாப் 5 டீசல் கார்கள்

ர்வதேச Global NCAP அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்ததிலேயே பாதுகாப்பான ஹேட்ச்பேக் எனப் பெயரை எடுத்திருக்கும் டாடாவின் அல்ட்ராஸில் இருப்பது, நெக்ஸானில் உள்ள அதே 1.5 லிட்டர் Revotorq டர்போ டீசல் இன்ஜின்தான். டிரைவிங் மோடுகள் இருந்தாலும், பவர் (90bhp) - டார்க் (22kgm) - கியர்பாக்ஸ் (5 ஸ்பீடு) ஆகியவற்றில் கணிசமான வித்தியாசம் தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ்

இந்த நிறுவனத்தின் ALFA ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்தான், தற்போதைக்கு அதன் வகையிலேயே BS-6 டீசல் இன்ஜின் கொண்ட ஒரே கார். ஆனால் ஜாஸ் BS-6 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அடுத்த தலைமுறை i20 ஆகியவற்றில், BS-6 டீசல் இன்ஜின் ஆப்ஷன் வரக்கூடும். இதன் டர்போ பெட்ரோல் JTP வெர்ஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு வெயிட்டிங்!

ஹூண்டாய் ஆரா: (25.35 கி.மீ)

காம்பேக்ட் ஹேட்ச்பேக்கான கிராண்ட் i10 நியோஸில் இருந்து, காம்பேக்ட் செடானாக வளர்ந்ததுதான் ஆரா. எனவே எதிர்பார்த்தபடியே இங்கே அதிக பூட் ஸ்பேஸ் (402 லிட்டர்) கிடைத்திருக்கிறது. ஆனால் இதே காரணத்தால், ஆராவின் எடை, கிராண்ட் i10 நியோஸைவிடக் கொஞ்சம் அதிகம்தான். இந்த இரு கார்களிலும் இருப்பது ஒரே டர்போ டீசல் இன்ஜின்தான் என்றாலும், அந்த அதிக எடையின் தாக்கம் காரின் அராய் மைலேஜில் எதிரொலிக்கிறது (25.35 கிமீ).

ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா

தவிர இரு கார்களில் கேபினும் ஒரே மாதிரி இருந்தாலும், கலர்கள் மற்றும் வசதிகளில் வித்தியாசம் இருக்கிறது. இரட்டை DRL, LED டெயில் லைட்ஸ், புதிய பம்பர்கள் & அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பின்பக்க ஆர்ம் ரெஸ்ட் & Reading லைட், ISOFIX, லெதர் கியர் லீவர், கீலெஸ் சென்ட்ரல் லாக்கிங், 12V பாயின்ட், எலெக்ட்ரானிக் Anti Glare மிரர் & ட்ரிப் மீட்டர், GPS, வாய்ஸ் கமாண்ட், கியர் இண்டிகேட்டர் ஆகியவை அதற்கான உதாரணம்.