3 லட்சத்துக்கான பழைய கார்களின் டாப்–10 லிஸ்ட்டைப் போன மாதம் பார்த்தோம். பெரும்பாலும் யூஸ்டு கார் வாங்க நினைப்பவர்களின் பட்ஜெட், 4 – 5 லட்சத்துக்குள் இருந்தால், நிறைய ஆப்ஷன்கள் உண்டு. அதேபோல், நிறைய குழப்பங்களும் உண்டு. உதாரணத்துக்கு, ஆல்ட்டோவை 2 லட்சத்துக்குள்ளும் வாங்கலாம்; 4 லட்சத்துக்குள்ளும் வாங்கலாம். எந்த ஆண்டு மாடல், காரின் கண்டிஷன், ஓட்டத்தைப் பொருத்து விலை வித்தியாசம் வேறுபடும். இந்த மாதம் 4 லட்சத்துக்குள் வாங்கக் கூடிய முக்கியமான டாப்–10 கார்கள்... அதன் சாதக/பாதகங்கள் இதோ!

மாருதி சுஸூகி செலெரியோ (பெ)

சூப்பர் ஸ்டார்களின் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புவார்களே... அதுபோல் 4 லட்சத்துக்கு செலெரியோ கிடைக்காமல் திரும்புபவர்கள் இருக்கிறார்கள். யூஸ்டு மார்க்கெட்டின் சூப்பர் ஸ்டார்தான் செலெரியோ. 5.35 லட்சத்தில் இருந்து 6.50 லட்சம் வரை புது செலெரியோவே மார்க்கெட்டில் கிடைக்கும்போது, 4 லட்சத்துக்கு செலெரியோவை வாங்க முண்டியடிக்கும் வாடிக்கையாளர்களைப் பார்த்ததுண்டு. 998 சிசியாக இருந்தாலும், 58bhp பவராக இருந்தாலும், இதன் ஓட்டுதல் நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது. 165 கிமீ கி.கிளியரன்ஸ் கொண்டிருந்தாலும், 4 பேரோடு செலெரியோவில் 140 கிமீ–ல் பறந்த அனுபவம் எனக்கு உண்டு. பின் பக்க இடவசதியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், செலெரியோவைக் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம். ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் உண்டு.

ரெனோ க்விட் (பெ)

க்விட்டில் 800 சிசி மற்றும் 1,000 சிசி என இரண்டு உண்டு. 800 சிசி என்றால், பெர்ஃபாமன்ஸ் கொஞ்சம் இ்ல்லை; ரொம்பவே டல் அடிக்கும். எனவே, விலையை அடித்துப் பேசலாம். ஆனால், மைலேஜ்... மனசு நிறைய வைக்கும். 1 லிட்டர் க்விட்டின் பெர்ஃபாமன்ஸ் கொஞ்சம் அடுத்த லெவல். இரண்டுமே 3 சிலிண்டர் இன்ஜின். நிறைய பேருக்கு இதன் டிசைன் பிடிக்கும். இதன் டாப் வேரியன்ட்டில் பவர் விண்டோஸ், பின் பக்க ஆர்ம் ரெஸ்ட் என வசதிகள் நிறைய. க்விட்டின் மிகப் பெரிய ப்ளஸ்ஸாகச் சொல்லப்படுவது, அதன் 300 லிட்டர் பூட் இடவசதிதான். அதேபோல், க்விட்டின் க்ளைம்பர் என்றொரு மாடல் சிக்கினால் விட வேண்டாம். ஆஃப்ரோடுக்கு ஏற்ப இதன் சஸ்பென்ஷன் செட்–அப்பும், அதிகமான கி.கிளியரன்ஸும் டூர் பார்ட்டிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

1.2 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பிரியோ, ஓட்டுதலில் கெத்து காட்டியது. ஹோண்டா கார்களே அப்படித்தானே! இதன் 86.8bhp பவரும், 10.9kgm டார்க்கும் ஓட்டுதலுக்குப் பெரிதாகத் துணை நிற்கும். இதன் குறைவான எடையும் (915கிலோ) இதற்கு ஒரு காரணம். ஹைவேஸில் இதன் நிலைத்தன்மை அபாரம். வீல்பேஸ் 2,345 மிமீ என்பதால், இடவசதியைக் குறையாகச் சொல்ல முடியாது. இதன் பின் பக்கம் விண்ட்ஷீல்ட் முழுக்க கண்ணாடி என்பது பலரை ஈர்த்தது. பிரியோவை ரிவர்ஸ் எடுப்பது ரொம்ப ஈஸி. ஆனால், அதுவே இதற்கு வில்லனாகியும் போனது. விபத்து நேரங்களில் இது பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் கொண்டனர் வாடிக்கையாளர்கள். மற்றபடி இதன் உள்பக்கத் தரம் ஹோண்டாவுக்கே உரித்தான நற்பெயரைப் பெற்றுத் தந்தது. 3.50 லட்சத்துக்குள் பிரியோ ஒரு நல்ல டீல்!

முதல் பழைய காம்பேக்ட் கார் வாங்க நினைப்பவர்களுக்கு மார்க்கெட்டில் இருக்கும் நல்ல ஆப்ஷன் ஹூண்டாய் கிராண்ட் i10. 70,000 கிமீ–க்கு மேல் ஓடியிருந்தால், இதன் க்ளட்ச் அசெம்பிளி காலியாகும் நிலைமையில் இருக்கலாம். ஹூண்டாய் கார்களில் ஸ்டீயரிங் ஃபீட்பேக், நெடுஞ்சாலையில் கொஞ்சம் பயமுறுத்தும். மற்றபடி வசதிகளில் ஹூண்டாயை அடித்துக் கொள்ள முடியாது. இதன் டாப் எண்டான Asta வேரியன்ட்டில் ஏகப்பட்ட ஃப்யூச்சர்ஸ் உண்டு. கீலெஸ் என்ட்ரி, பவர் ஃபோல்டிங் ரியர்வியூ மிரர்கள், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், ரியர் வைப்பர் போன்றவை உதாரணம். இதன் Kappa VTVT 1,197 சிசி பெட்ரோல் இன்ஜின், 18 கிமீ வரை மைலேஜ் தருகிறது என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் உண்டு. இதன் டாப் ஸ்பீடு 163கிமீ. மற்றபடி ஹூண்டாயின் வசதிகளுக்காகவே கிராண்ட் i10–ஐ டிக் அடிக்கலாம்.

‘கிங் ஆஃப் மிட் சைஸ் செடான் செக்மென்ட்’ என்றால், அது டிசையர்தான். டிசையர் வாங்கப் போகிறவர்கள், 2014–க்கு மேற்பட்ட டிசையரின் செகண்ட் ஜென்னைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு முந்தைய டிசையரின் பின்பக்க உப்பலான தோற்றம் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்த டிசையரில், பின் பக்கம் சுருங்கி விட்டது. இருந்தாலும், பூட் ஸ்பேஸ் 316 லிட்டர் என்பது ஓகேதான். பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர் பெற்ற இந்த பெட்ரோல் இன்ஜின், நகரம் / நெடுஞ்சாலை என இரண்டுக்கும் அருமையாக இருக்கும். இதுவே டீசல் என்றால், கேட்கவே வேண்டாம். இதன் மல்ட்டிஜெட் 1.3 லிட்டர் இன்ஜினின் நம்பகத்தன்மை வேற லெவல். டர்போ லேக் மட்டும் இருக்கும். மைலேஜைப் பற்றியும் கவலை வேண்டாம். இதன் டேங்க் கொள்ளளவு – 42 லிட்டர் என்பதால், லாங் டிரைவில் நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்பத் தேவையில்லை. ஃபர்ஸ்ட் ஓனரா, செகண்ட் ஓனரா என்பதைப் பொருத்து விலையை நிர்ணயம் செய்யுங்கள்.

எக்ஸென்ட்டின் டாப் எண்டான SX வேரியன்ட்டை வசதிகளுக்கு ரெக்கமண்ட் செய்கிறோம். இதன் 1.2 லி, கப்பா VTVT இன்ஜின், செம ஸ்மூத். இதன் பவர் 82bhp. 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் ஸ்மூத். 2 லட்சம் ஓடிய எக்ஸென்ட்டின் இன்ஜினில் இதுவரை பிரச்னையே ஏற்பட்டதில்லை எனும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓட்டுதலில் பாஸ் மார்க் வாங்க முயற்சித்தாலும், இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் இதைத் தடுக்கிறது. 60,000 கிமீ–க்கு மேல் ஓடிய கார் என்றால், சஸ்பென்ஷன் செட்–அப்பிலும், ஸ்டீயரிங் அசெம்பிளியிலும் கவனம் வையுங்கள். வீல்பேஸ், 2,425 மிமீ என்பதால், இடவசதியில் ஓகேதான். ஜிவ்வென ஹைவேஸில் பறந்தாலும், இதன் குறைவான எடை கொண்ட ஸ்டீயரிங், எடை கூட மறுப்பது பயத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி, டீசன்ட்டான மிட் சைஸ் ஃபேமிலி கார் என்றால், டிசையரைவிட எக்ஸென்ட் சரியான சாய்ஸ். பராமரிப்புச் செலவும் மாருதிக்கு இணையாகத்தான் இருக்கிறது. மைலேஜ் வேண்டும் என்பவர்கள், டீசலுக்குப் போகலாம்.

டீசல்/பெட்ரோல் என இரண்டுமே 1.5 லிட்டர் இன்ஜின். சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு இது லாஞ்ச் செய்யப்பட்டபோது, ‘பெரி....ய்ய.... கார்’ என்று விளம்பரம் செய்தார்கள். நிஜம்தான்; அந்த செக்மென்ட்டிலேயே 2,600 மிமீ அதிக வீல்பேஸ் கொண்ட கார், சன்னி மட்டும்தான். கால்களை நீ...ட்டிப் படுத்துக் கொண்டே வரலாம் என்கிற அளவு பின் பக்க இடவசதி. அதனாலேயே Chauffeur Driven கார் என்றும் பெயரெடுத்தது நிஸான். இதன் பூட் ஸ்பேஸும் 490 லிட்டர். ‘‘சிட்டி, வெர்னா போன்ற கார்களுக்கு, சன்னி பெஸ்ட்’’ என்கிறார் ஒரு வாடிக்கையாளர். நெடுஞ்சாலையில் இதன் மைலேஜும் ஒருவர் 23 கிமீ என்று நம்மிடம் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வளவு அம்சங்களுடன் இருந்தாலும், முன் பக்கப் பயணிக்குக்கூடக் காற்றுப்பை இல்லாமல் வந்தது மைனஸ். அதேபோல், ஆஃப்டர் சேல்ஸ் மார்க்கெட்டிலும் சன்னி பின்தங்கியிருக்கிறது. மற்றபடி, பெரிய டூர் அடிக்கும் சின்னக் குடும்பத்துக்கு ஏற்ற சரியான பெரி...ய்..ய கார்!

மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின்கள் (1,172/1,368 சிசி)... ஒரு டீசல் இன்ஜின் (1,248 சிசி) என 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் இருக்கிறது ஃபியட் கிராண்டே புன்ட்டோ. இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டும்தான். ஃபியட் கார்களின் கட்டுமானத் தரம் உலகறிந்தது! இப்போது புன்ட்டோ இருந்திருந்தால், க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியிருக்குமோ என்னவோ...! இதன் டீசல் இன்ஜின், ஓட்டுதலுக்குப் பெயர் பெற்றது. நெடுஞ்சாலையில் இதன் நிலைத்தன்மை அபாரமாக இருக்கும். இதன் வீல்பேஸ் 2,510 மிமீ. எனவே, இடவசதி ஓரளவு டீசன்ட்டாகவே இருக்கும். டீசல் இன்ஜினின் மைலேஜ், நிச்சயம் 18–ஐத் தாண்டலாம். இதன் டேங்க் 45 லிட்டர் என்பது, பெரிய செடான் கார்களில் இருக்கும் கொள்ளளவு. புன்ட்டோவைப் பொருத்த அளவு பெட்ரோலை விட டீசலே எங்களின் ரெக்க மண்டேஷன். என்ன, புன்ட்டோ கார் வாங்கிய வர்கள், இப்போது உதிரி பாகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதுதான் வேதனையான விஷயம்!

வசதிகள் மற்றும் சொகுசுதான் உங்கள் சாய்ஸ் என்றால், வெர்னா இருக்கவே இருக்கு! இதன் ப்ரீமியமான ஸ்டைல், நிச்சயம் ரிச் லுக் கொடுக்கும். வசதிகளும் இடவசதியும் அருமையோ அருமை! நீங்கள் வாங்கப் போகும் வெர்னா, 75,000 கிமீ–க்கு மேல் ஓடியிருக்கிறது என்றால், பவர் ஸ்டீயரிங் ரேக் அசெம்பிளி மற்றும் க்ளட்ச் செட்டில் ஒரு கண் வையுங்கள். இதற்கு முறையே 5,000 ரூபாய் முதல் 15,000 வரை செலவு வைக்கலாம். பின் பக்க சஸ்பென்ஷன் செட்–அப்பிலும் கவனம் தேவை. மேடு பள்ளங்களில் கொஞ்சம் தூக்கிப் போடும்படி இதன் ஓட்டுதல் தரம் இருக்கிறது. என்ன, இதன் பெட்ரோல் காரின் மைலேஜ்தான் அதைவிடத் தூக்கியடிக்கிறது. சிலர் சிங்கிள் டிஜிட்டில் மைலேஜ் வருகிறது என்று கவலைப்படுகிறார்கள் இந்த 1.6 பெட்ரோல் இன்ஜினில். வெர்னாவும் வேணும்; மைலேஜும் வேணும் என்றால், பெட்ரோல் வேணா! டீசலுக்குப் போய் விடுவது நல்லது.

ஒரு தடவை போலோவை ஓட்டினால், வேறு எந்த காரும் ஓட்டப் பிடிக்காது என்பது போலோ உரிமையாளர்களின் கருத்து. இதன் 1.2 MPFi பெட்ரோல் இன்ஜின் 74bhp பவரும், 11.0kgm டார்க்கும் கொண்டிருக்கிறது. ஹைவேஸில் இதன் நிலைத்தன்மையும், கட்டுமானமும் ஆஹா! இதன் பூட் ஸ்பேஸ், 280 லிட்டர், இந்த குட்டி காருக்கு ஓகே! போலோ வாங்கினால், பயப்பட வேண்டிய விஷயம் – இதன் கி.கிளியரன்ஸ். 5 பேர் அமர்ந்து, கார் ஸ்பீடு பிரேக்கர்களில் அடிவாங்கி, ஆயில் சம்ப் உடைந்து சர்வீஸ் சென்டருக்கு அலையும் போலோ உரிமையாளர்கள் உண்டு. போலோவின் காம்பேக்ட் லுக் அதிரடி; பெர்ஃபாமன்ஸ் அதிரடி; அதேபோல், பராமரிப்புச் செலவும் அதிரடிதான். 70,000 கிமீ–க்கு மேல் ஓடிய போலோ என்றால், மெக்கானிக்கை உடன் அழைத்துக் கொண்டு சோதனை போட்டு போலோவை டிக் அடியுங்கள். அதேபோல், பெட்ரோல் காரின் மைலேஜிலும் போலோவில் அதிருப்தியில் இருக்கிறார்கள்.