Published:Updated:

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

CNG Cars
பிரீமியம் ஸ்டோரி
CNG Cars

லிஸ்ட்: சிஎன்ஜி கார்கள்

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

லிஸ்ட்: சிஎன்ஜி கார்கள்

Published:Updated:
CNG Cars
பிரீமியம் ஸ்டோரி
CNG Cars
வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

‘பெட்ரோலுக்கு மாற்று எலெக்ட்ரிக்தான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், சத்தமில்லாமல் ஒரு சாதனையைச் செய்து கொண்டிருக்கிறது ஒரு மாற்று எரிபொருள். அது CNG.

CNG என்றால், Compressed Natural Gas என்று அர்த்தம். தமிழ்நாட்டில் CBG (Compressed Bio Gas) என்கிற பெயரிலும் இது விற்பனையாகிறது. எனவே, CBG என்கிற பெயர்ப் பலகை எந்த பெட்ரோல் பங்க்குகளிலாவது தெரிந்தால்… அங்கே உங்கள் CNG கார்களை நிறுத்தலாம். பொதுவாக, வாயுக்களை லிட்டர் கணக்கில் இல்லாமல், கிலோ கணக்கில் சொல்கிறார்கள். ஒரு கிலோ சிஎன்ஜி–யின் விலை தமிழ்நாட்டில் 60 ரூபாயில் இருந்து 77 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு 20 - 22 கிமீ மைலேஜ் தரும்பட்சத்தில்… சிட்டிக்குள் சிஎன்ஜி வேரியன்ட்டை விட்டால், ஒரு அற்புதமான பட்ஜெட் நண்பன் வேறெதுவும் இல்லை. டிக்கி கொள்ளளவைத் தாண்டி சிஎன்ஜி வேரியண்டுகளில் வேறெந்தக் குறைகளையும் சொல்லிவிட முடியாது. இப்போதைக்கு வேகன்–ஆர், நியோஸ், எர்டிகா, ஆல்ட்டோ, செலெரியோ, டியாகோ, டிகோர் என்று சில மாடல்கள்தான் இருக்கின்றன. இந்த ஆண்டு வெறித்தனமாக சில சிஎன்ஜி கார்கள் வரவிருக்கின்றன. அதில் டாப்–5 என்னனு பார்க்கலாம்.

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸூகி பெலினோ CNG

எதிர்பார்க்கப்படும் விலை: சுமார் 8.5 லட்சம்

மைலேஜ்: சுமார் 25 கிமீ

லேட்டஸ்ட்டாகத்தான் பெலினோவின் அப்டேட்டட் மாடலை வெளியிட்டது மாருதி. ப்ரீமியம் ரகத்தில் சிஎன்ஜி கார்களை விரும்புபவர்களுக்கு மாருதியில்… அதாவது நெக்ஸாவில் ஆப்ஷன் இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க வருகிறது பெலினோ சிஎன்ஜி. 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் மிட் வாடிக்கையாளர்கள் மத்தியில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது பெலினோ. இப்போதே பெலினோவில் மைலேஜ்தான் சொல்லியடிக்கும் ஹைலைட்டாக இருக்கிறது. நகரத்தில் ஆவரேஜாக 18–20 கிமீ தருகிறது என்று சொல்லும் பெலினோ வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெலினோவில் CNG வேரியன்ட் வந்துவிட்டால், மைலேஜில் இன்னும் சொல்லியடிக்கலாம்.

நடப்பில் உள்ள பெட்ரோல் வேரியன்ட் 89bhp பவரிலும், 113Nm டார்க்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. சிஎன்ஜி பெலினோவில் நிச்சயமாக பவர் குறைபாடு இருக்கத்தான் செய்யும். இதன் பவர் 77bhp-யாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் டார்க்கும் 98.5Nm ஆகக் குறையலாம் என்கிறார்கள் சிஎன்ஜி மோடில். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் பெலினோ கிடைத்தாலும், சிஎன்ஜி வேரியன்ட் என்று வரும்போது ஆட்டோமேட்டிக் காலியாகலாம். இவ்வளவு பவர் குறையும்போது, நிச்சயம் மைலேஜும் எகிறியடிக்கலாம். இப்போதே இந்த பெலினோ, 25 – 26 கிமீ மைலேஜ் தரலாம் என்கிறார்கள். இதை பெட்ரோல் மேனுவல் மாடலைவிட சுமார் 1 – 1.5 லட்சம் வரை விலை அதிகமாக பொசிஷன் செய்யலாம் மாருதி. இது ஆட்டோமேட்டிக் அளவு இருக்காது; அதேநேரம் சுமார் 8.5 லட்சத்தில் வரலாம் இந்த பெலினோ CNG.

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் CNG

எதிர்பார்க்கப்படும் விலை: சுமார் 7.5 லட்சம்

மைலேஜ்: சுமார் 25 கிமீ

இப்போதைக்கு டாப் செல்லிங் அட்டவணையில் முதலிடத்தில் இருப்பது மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட்தான். இந்தியாவில் முதல் கார் வாங்கப் போகிறவர்களின் முதல் சாய்ஸ் – ஸ்விஃப்ட்டாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஸ்விஃப்ட்டில்தான் முதன் முதலில் மாருதி, சிஎன்ஜி வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இனியும் தாமதிக்காது மாருதி. ஆரம்பத்தில் பெட்ரோல்/டீசல் என இரண்டு இன்ஜின்களிலும் வந்தது ஸ்விஃப்ட். இரண்டுமே சக்கைப் போடு போட்டன. BS-6 நார்ம்ஸால், இப்போது பெட்ரோல் ஸ்விஃப்ட் மட்டுமதான். சிஎன்ஜியிலும் ஸ்விஃப்ட் வந்தால், மவுசுதானே!

டிசையர் சிஎன்ஜியில் உள்ள அதே ஸ்பெக் விவரங்களோடுதான் ஸ்விஃப்ட்டும் வரும். 1.2லி டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜினுடன் ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜியாக வருகிறது ஸ்விஃப்ட். இதன் பவர் சுமார் 76bhp இருக்கும். டார்க் 96Nm. எனவே, பெரிய பெர்ஃபாமன்ஸ் எதிர்பார்க்க முடியாது. ஆனால் மைலேஜ் அட்டகாசப்படுத்தலாம். சுமார் 25 – 26 கிமீ வரை எதிர்பார்க்கிறார்கள். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் இருக்கும்.

சிஎன்ஜி கார்களில் வசதிகளை எதிர்பார்க்க முடியாது என்பதைப் பொய்யாக்க இருக்கிறது மாருதி. இதில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய் ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே கனெக்டிவிட்டி வசதிகள் உண்டு. எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட் அசெம்பிளி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, ஏபிஎஸ் உடன் இபிடி, இரட்டைக் காற்றுப்பைகள், isofix குழந்தைகளுக்கான மவுன்டட் சீட்கள் என்று பல வசதிகளுடன் வருகிறது ஸ்விஃப்ட் சிஎன்ஜி.

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா CNG

எதிர்பார்க்கப்படும் விலை: 9 – 10 லட்சம்

மைலேஜ்: சுமார் 20 கிமீ

ஹெட்அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா என்று ப்ரீமியம் வசதிகளுடன், பிரெஸ்ஸா இப்போதுதான் செமயாக வந்திறங்கியது. அதற்குள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்ததொரு நல்ல செய்தி! ஆம், சிஎன்ஜி பிரெஸ்ஸாவும் வரவிருக்கிறது. ஆரம்பத்தில் 1.3லிட்டர் டீசல் ஃபியட் இன்ஜினுடன் பிரெஸ்ஸாவை வாங்கத் துடித்தார்கள் வாடிக்கையாளர்கள். BS-6 நார்ம்ஸால் ஃபியட் இன்ஜின் காலியானது. இப்போது பெட்ரோல் மட்டும்தான். லேட்டஸ்ட்டாகத்தான் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி பிரெஸ்ஸாவை, ஸ்பை ஷாட் எடுத்திருந்தார் ஒரு வாசகர். அதன் மூலம்தான் பிரெஸ்ஸா சிஎன்ஜி வருவது உறுதியாகி இருக்கிறது. அதே உயர்த்தி வைக்கப்பட்ட பானெட், சதுரமான வீல் ஆர்ச்சுகள், முன் பக்கம் டிஃப்யூஸர், நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று எஸ்யூவி ஜீனுடன் பிரெஸ்ஸாவின் அவுட்லுக்கில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த பெட்ரோல் இன்ஜின் 103bhp பவரும், 138 Nm டார்க்கும் கொண்டு ஓடப் போகிறது. இதுவே சிஎன்ஜியின் பவர் வழக்கம்போல் குறைகிறது. 91bhp பவரும், 122Nm டார்க்கும் கொண்டு ஓடப் போகிறது சிஎன்ஜி பிரெஸ்ஸா. இதன் மைலேஜும் மாருதியின் பெயரைக் கெடுக்காமல் இருக்கும். சுமார் 20 கிமீ மைலேஜ் தந்தால்… பிரெஸ்ஸா சிஎன்ஜி–க்கு நல்ல மவுசு காத்திருக்கிறது.

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

டாடா அல்ட்ராஸ் CNG

எதிர்பார்க்கப்படும் விலை: சுமார் 7 - 8 லட்சம்

மைலேஜ்: சுமார் 18 கிமீ

டியாகோவில் சிஎன்ஜி மாடலை நாமே ரிவ்யூ செய்திருக்கிறோம். அல்ட்ராஸ் போன்ற 5 ஸ்டார் ரேட்டிங் கார்களில் சிஎன்ஜி வந்தால், எப்படி கெத்தாக இருக்கும்! அந்த ஆசையை நிறைவேற்றப் போகிறது டாடா. இப்போதுதான் அல்ட்ராஸில், காஸ்ட்லியான CVT கியர்பாக்ஸ் கொண்டு வந்தார்கள். இப்போது, அல்ட்ராஸில் CNG வேரியன்ட் வருவதும் உறுதியாகி இருக்கிறது.

பெட்ரோல்/டர்போ பெட்ரோல்/டீசல் என எல்லா வேரியன்ட்களிலும், கிண்ணென ஒரு ஹேட்ச்பேக் வேண்டும் என்றால், அல்ட்ராஸ்தான் சரியான ஆப்ஷன். இப்போது அதே கிண்ணென்ற கட்டுமானத்தில், ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வேரியன்ட்டாக அல்ட்ராஸ், கொஞ்சம் குறைவான பவர் மற்றும் டார்க்கில், பெட்ரோல் இன்ஜினில் வரப் போகிறது. இப்போது இருக்கும் அல்ட்ராஸ் 1.2லிட்டர் NA இன்ஜினில் 3 சிலண்டரில் ஓடும்போது, இதன் பவர் 86bhp மற்றும் 113 Nm டார்க் கிடைக்கிறது. இதுவே சிஎன்ஜியில் ஓடும்போது, இதன் பவர் 72bhpயாகக் குறையும். அதேபோல் டார்க்கும் 95Nm ஆகக் குறையும். CNG வேரியன்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான் கிடைக்கும்.

மற்றபடி அவுட்லுக்கிலும் பாதுகாப்பிலும் வேறெந்த மாற்றங்களும் இருக்கப் போவதில்லை. வசதிகளில் ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங் அவுட்லெட், ஹைட் அட்ஜஸ்டபிள் சீட், ISOFIX மவுன்டட் குழந்தைகள் சீட், இரட்டைக் காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங் சென்ஸாருடன் கேமரா, ஏபிஸ் உடன் இபிடி என்று கலக்க வருகிறது அல்ட்ராஸ். கூடவே 5 ஸ்டார் ரேட்டிங் வேறு! பாதுகாப்பான சிஎன்ஜியாக ஜொலிக்கப் போகிறது அல்ட்ராஸ்.

வரப் போகும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்!

டாடா பஞ்ச் CNG

எதிர்பார்க்கப்படும் விலை: சுமார் 9 – 10 லட்சம்

மைலேஜ்: சுமார் 18 கிமீ

இதை அல்ட்ராஸுக்கு அண்ணன் என்றே சொல்லலாம். அதே 5 ஸ்டார் ரேட்டிங், பாதுகாப்பு வசதிகள் என்று ஒரு பக்கா எஸ்யூவியாக சிஎன்ஜி வேரியன்ட்டில் வரப் போகிறது பஞ்ச். ஹேட்ச்பேக்குக்கு டியாகோ, அல்ட்ராஸ், செடானுக்கு டிகோர், எஸ்யூவிக்கு பஞ்ச் சிஎன்ஜி வருகிறது. பஞ்ச்சின் பானெட்டைத் திறந்தால், 1.2லிட்டர், 3 சிலிண்டர், NA இன்ஜின் அதிரும். அதில்தான் சிஎன்ஜியை ஃபிட் செய்ய இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதுவும் அல்ட்ராஸின் NA இன்ஜினின் பவர் மற்றும் டார்க்கைக் கொண்டிருந்தாலும் (86bhp/113Nm), சிஎன்ஜி–க்கு வரும்போதும் அதே அல்ட்ராஸின் டெக் சமாச்சாரங்களுடன்தான் வரப் போகிறது. 72bhp மற்றும் 95Nm டார்க். ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும் பஞ்ச், சிஎன்ஜி–யைப் பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவலில் மட்டுமே கிடைக்கலாம்.

வசதிகளிலும் அருமையாக இருக்கப் போகிறது பஞ்ச். புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட்ஸ், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர்கள், செமி டிஜிட்டல் கொண்ட 7 இன்ச் மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே ஸ்க்ரீன், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், Puddle Lamps என்று எக்கச்சக்க வசதிகளுடன் வரப் போகிறது டாடா பஞ்ச் CNG. அநேகமாக இந்த பஞ்ச் 18 கிமீ மைலேஜ் கொடுத்தால்… சிட்டிக்குள் ஓட்ட பட்ஜெட் எஸ்யூவி இது மட்டுமாகத்தான் இருக்கும்.