Published:Updated:

உலகின் டாப்-6 எக்ஸாட்டிக் கார்கள்!

ஃபெராரி செர்ஜியோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபெராரி செர்ஜியோ

எக்ஸாட்டிக் கார்ஸ்

உலகின் டாப்-6 எக்ஸாட்டிக் கார்கள்!

எக்ஸாட்டிக் கார்ஸ்

Published:Updated:
ஃபெராரி செர்ஜியோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபெராரி செர்ஜியோ

எக்ஸாட்டிக் கார்கள் என்றால் லக்ஸுரி கார்கள்தானே? இல்லை! லக்ஸுரி கார்களைவிட தோற்றத்தில், செயல்திறனில், விலையில் மேம்பட்டவை எக்ஸாட்டிக் கார்கள். இதன் கார்களின் சிறப்பம்சம், இவற்றின் ஆரம்ப விலை, அதாவது குறைந்தபட்ச விலையே இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய். கோடிகளில் இருப்பதால், எக்ஸாட்டிக் கார்கள் லிமிட்டெட் எடிஷனாகத்தான் இருக்கும். அதில் டாப் 6 எக்ஸாட்டிக் கார்களின் பட்டியல் இங்கே!

ஃபெராரி செர்ஜியோ
ஃபெராரி செர்ஜியோ

ஃபெராரி செர்ஜியோ

0 – 100 kph : 2.1 நொடிகள்

இன்ஜின்: V-8 4,499 cc

பவர்: 597bhp

கியர்பாக்ஸ்: 8 ஸ்பீடு டூயல் க்ளட்ச்

டாப் ஸ்பீடு - 202 MPH

விலை: ரூ.23 கோடி

எக்ஸாட்டிக் கார் பட்டியலில் முக்கியமான, சிறப்பான இடம் பிடித்திருக்கும் இந்த ஃபெராரி செர்ஜியோ காரின் எண்ணிக்கை மொத்தமே 6தான்! அதாவது, இது ஒரு கான்செப்ட் கார். மிகவும் பிரத்யேகமாக 6 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் உருவான இந்த காரை வாங்குவதற்கு, தேர்ந்தெடுத்த நபர்களுக்கு முறையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. காரை வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள், தாங்கள் விரும்பும் வகையில் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யும் அம்சத்துடன் உருவாக்கபப்ட்டது இது. 60-களின் க்ளாஸிக் ஃபெராரி டிசைன் அடிப்படையில் இந்த கூபே கார், செம எக்ஸ்க்ளூசிவ்வாக ரீடிசைன் செய்யப் பட்டுள்ளது.

லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட்
லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட்

லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட்

0 – 100 kph : 2 நொடிகள்

இன்ஜின்: 3,746சிசி

பவர்: 780bhp

கியர்பாக்ஸ்: 6 சீக்வென்ஷியல் மேனுவல்

டாப் ஸ்பீடு - 245 MPH

தோராயமான விலை: 21.7 கோடி

W மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் ஹைப்பர்காரான லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட், திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் ஃபிரான்சைஸில் இடம்பெற்றுள்ள மிகவும் விலையுயர்ந்த எக்ஸாட்டிக் கார், லைக்கன் ஹைப்பர்ஸ்போர்ட். சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வருவதுபோல இன்டீரியர், சிஸர் டோர்ஸ், வைரங்கள் பொறிக்கப்பட்ட ஹெட்லைட்ஸ் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள். காண்பதற்கு மட்டும் கனவுலகில் இருப்பதுபோல இல்லாமல், தோற்றத்துக்கு நிகரான கனவுலகத்திலும் நம்மை மிதக்க வைக்கிறது லைக்கன். வெறும் 2 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் அளவுக்கு இதன் பெர்ஃபாமன்ஸ் இருக்கிறது. டைம் மிஷினில் பயணித்து எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்தில் வந்த கார் போன்ற தோற்றம் கொண்ட இந்த எக்ஸாட்டிக் கார், அபுதாபி காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்ட்டன் மார்ட்டின் ஒன்-77
ஆஸ்ட்டன் மார்ட்டின் ஒன்-77

ஆஸ்ட்டன் மார்ட்டின் ஒன்-77

0 – 100 kph : 2.7 நொடிகள்

இன்ஜின்: V 12, 7,312 சிசி

பவர்: 510bhp

கியர்பாக்ஸ்: 6 சீக்வென்ஷியல் மேனுவல்

டாப் ஸ்பீடு - 245 MPH

தோராயமான விலை: 21.9 கோடி

ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களுக்கே உண்டான அனைத்துச் சிறப்பம்சங்களுடன், ஃபெராரி, ஸோண்டா போன்ற எக்ஸாட்டிக் கார்களுக்குப் போட்டியாக உயர்தர பெர்ஃபாமன்ஸுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த லிமிட்டெட் எடிஷன் சூப்பர் கார். இரண்டு சீட்டர், இரண்டு டோர் அம்சங்களைக் கொண்ட கூபே கார், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 98லிட்டர் ஃப்யூல் டேங்க் கொள்ளளவு கொண்டுள்ளது. மல்ட்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு நவீன அம்சங்கள் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. 4.6 மீட்டருக்கு மேல் நீளமும், 2,791 மிமீ வீல்பேஸும் கொண்ட இது, ஒரு 2 சீட்டர் எக்ஸாட்டிக் கார். இதன் சிலிண்டர்களைக் கவனியுங்கள். 12 சிலிண்டர் கொண்ட இது, சுமார் 354 கிமீ வேகத்தில் ஓடாது... பறக்கும்!

பென்ட்லி முல்லினர் பாகலார்
பென்ட்லி முல்லினர் பாகலார்

பென்ட்லி முல்லினர் பாகலார்

0 – 100 kph : 2.3 நொடிகள்

இன்ஜின்: 5,946 சிசி, ட்வின் டர்போ

பவர்: 780bhp

கியர்பாக்ஸ்: 8 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோ

டாப் ஸ்பீடு - 200 MPH

தோராயமான விலை: 12.41 கோடி

ஸ்டைல் மற்றும் செயல்திறனுக்குப் பெயர் பெற்ற பென்ட்லி கார்களுக்கு அறிமுகம் தேவையில்லை. பென்ட்லி நிறுவனம், லிமிட்டெட் எடிஷனான 2021 பென்ட்லி முல்லினர் பாகலார் காரை, தங்களின் முதல் இரண்டு-சீட்டர் காராக ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக இந்தப் பிரம்மாண்டமான அறிமுகம் ரத்தானது. எனவே, டிஜிட்டல் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காரை நேரடியாகப் பார்க்காமலே, 12 கார்களும் புக் ஆகிவிட்டன. பென்ட்லியின் முதல் கூபே கார் என்பது மிகச் சிறப்பான அம்சம். அதிநவீன சொகுசு அம்சங்கள், கவர்ச்சியான மெட்டாலிக் தோற்றம் மற்றும் அரிதான மரத்தில் இருந்து உருவான டேஷ்போர்டு ஆகியவை இந்த காரின் சிறப்பம்சங்கள். கூபே கார், 12 சிலிண்டர், 200-mph, ஓப்பன்-ஏர் மாடல் – இவை அனைத்தும் தனித்துவமான டிரைவிங் அனுபவம் தருகின்றன.

கோய்னிக்செக் ஒன்:1
கோய்னிக்செக் ஒன்:1

கோய்னிக்செக் ஒன்:1

0 – 100 kph : 2.9 நொடிகள்

இன்ஜின்: 4,958 சிசி, ட்வின் டர்போ, V8

கியர்பாக்ஸ்: 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன்

டாப் ஸ்பீடு - 275 MPH

தோராயமான விலை: 12.1 கோடி

உலகின் முதல் மெகா கார் என்று அறிமுகமானது கோய்னிக்செக் ஒன்:1. இந்த மாடல் அறிமுகமானபோது, புகாட்டியின் பிரபலமான சிரான் மாடல் சூப்பர் காருக்கே இது போட்டியாக வந்துவிட்டது என்று நிபுணர்களால் கூறப்பட்டது. மற்ற எக்ஸாட்டிக் கார்கள்போல இல்லாமல், எடை குறைவான, நடுத்தர இன்ஜின் கொண்ட, நீக்கக்கூடிய ஹார்டு-டாப் காராகவும், வெறும் இருபதே நொடிகளில் 0-வில் இருந்து இருந்து 400கிமீ வேகத்துக்குச் செல்லக்கூடிய செயல்திறனும் கொண்டது. உலகின் அதிவேக ஹோமோலாஜிகேஷன் உற்பத்தி கார், Noise கேன்ஸல் செய்யும் சீட் ஆப்ஷன் மற்றும் வலப்புற/இடப்புற டிரைவ் என்று தேவைகேற்ப எப்படி வேண்டுமானாலும் டிரைவிங் கஸ்டமைஸ் செய்யும் தேர்வு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

புகாட்டி வெய்ரான்
புகாட்டி வெய்ரான்

புகாட்டி வெய்ரான்

0 – 100 kph : 3.1 நொடிகள்

இன்ஜின்: 7,993சிசி

பவர்: 987bhp

கியர்பாக்ஸ்: 7 ஸ்பீடு DCT

டாப் ஸ்பீடு - 217 MPH

தோராயமான விலை: 13.7 கோடி

ஆட்டோமொபைல் துறையிலேயே, புகாட்டி வெய்ரான் தயாரிப்பு மிகப் பெரிய அளவில் தொழில்நுட்ப ரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஆனால், எக்ஸாட்டிக் கார்கள் மற்றும் ஆடம்பரக் கார்களுக்கு ஒரு புதிய, உயர்தர பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது இந்த மாடல். இதன் சிறப்பம்சம் இதனுடைய ஆக்ஸிலரேஷன்தான். வெறும் 3.1 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் இந்த புகாட்டி வெய்ரான், 400 கிமீ வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும். இந்தியாவில் புகாட்டி ஓனர்களே இல்லை என்கிறார்கள். ஆனாலும், முகேஷ் அம்பானியின் 170 வகையான கார் கலெக்‌ஷனில், இந்த புகாட்டி வெய்ரானும் உண்டு என்றும் ஒரு தகவல் இருக்கிறது. கவர்ச்சியான, நேர்த்தியான தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிவேக ஆக்ஸிலரேஷன் ஆகியவை புகாட்டியின் சிறப்பம்சங்கள். பைக்குன்னா டுகாட்டி; காருன்னா புகாட்டினு சும்மாவா சொன்னாங்க!