Published:Updated:

கிளான்ஸாவுக்கும் பெலினோவுக்கும் முக்கியமான வித்தியாசமே அதுதான்!

கிளான்ஸா
பிரீமியம் ஸ்டோரி
கிளான்ஸா

வாக்–அரவுண்ட்: டொயோட்டா கிளான்ஸா

கிளான்ஸாவுக்கும் பெலினோவுக்கும் முக்கியமான வித்தியாசமே அதுதான்!

வாக்–அரவுண்ட்: டொயோட்டா கிளான்ஸா

Published:Updated:
கிளான்ஸா
பிரீமியம் ஸ்டோரி
கிளான்ஸா
கிளான்ஸாவுக்கும் பெலினோவுக்கும் முக்கியமான வித்தியாசமே அதுதான்!

சென்னை ஆன்ரோடு விலை:

7.50 லட்சம் முதல் 11.30 லட்சம் வரை

ஒரே குடும்பத்தில் நடக்கும் அண்ணன்–தம்பி போட்டிகள் ஆரோக்கியமாக, சுவாரஸ்யமாக இருக்கும். அப்படிப்பட்ட போட்டிதான் டொயோட்டாவுக்கும் மாருதிக்கும் நடக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா – அர்பன் க்ரூஸர், பெலினோ – கிளான்ஸா என்று மார்க்கெட்டில் ஒரே மாடல்கள், நிறுவனங்களின் லோகோவோடு தனித்துவமாக உலா வருவதும், வாடிக்கையாளர் களுக்கு ஒரு இன்பக் குழப்பமாக இருக்கும். மாருதி, பெலினோவை லாஞ்ச் செய்த கையோடு, கிளான்ஸாவையும் டொயோட்டா களமிறக்கி விட்டது. கிளான்ஸாவை ஓட்டவில்லை; ஆனால் சுற்றிச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

கிளான்ஸாவுக்கும் பெலினோவுக்கும் என்ன வித்தியாசம்னு பார்க்கலாம்.

பெலினோவின் பல வசதிகளோடு அப்படியே வந்திருக்கிறது கிளான்ஸா. சில சின்னச் சின்ன முக்கியமான மாற்றங்கள் மட்டும். காஸ்ட்லி கேம்ரியில் இருக்கும் அந்த Esque முன் பக்க கிரில்தான் முதல் வித்தியாசம். பெலினோவில் 3 Element–களுடன் LED DRL இருக்கும்; கிளான்ஸாவில் L வடிவ டிஆர்எல் லைட்கள் இருக்கின்றன. 16 இன்ச் அலாய் வீல்கள், புது டிசைன். மற்றபடி பின் பக்கத்தைப் பொருத்தவரை பெலினோவும் கிளான்ஸாவும் அப்படியே! லோகோ மட்டும்தான் வித்தியாசம்.

உள்பக்கத்திலும் சில ஒற்றுமைகள். ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், செமி ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்க்ரீன் என டேஷ்போர்டு லே–அவுட் ஒன்றாக இருந்தாலும், சட்டென்று கண்டுபிடித்து விடலாம். கிளான்ஸாவின் டாப் எண்டில் கறுப்பு மற்றும் பீஜ் வண்ண லேயர்டு டேஷ்போர்டு இருந்தால், பெலினோவில் கறுப்பு – புளூ தீம் இருக்கும். மற்றபடி ஸ்டீயரிங் வீல் லோகோதான் பெரிய வித்தியாசம். அவ்வளவுதான்.

டொயோட்டாவில் ஏற்கெனவே G மற்றும் V என இரண்டு வேரியன்ட்கள்தான் உண்டு. புது கிளான்ஸாவில் பெலினோ மாதிரியே 4 வேரியன்ட்கள் வந்திருக்கிறது. E, S, G மற்றும் V. டாப் எண்டான V வேரியன்ட்டிலும், பெலினோவின் டாப் மாடலான Alpha –விலும் வசதிகள் லிஸ்ட்டிலும் அதே ஒற்றுமைகள். கிளான்ஸாவிலும் ஹெட்அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, கனெக்டட் வசதிகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், டெலிஸ்கோப்பிக் அட்ஜஸ்ட்மென்ட்டுடன் கூடிய Tilt ஸ்டீயரிங் வசதி, 6 காற்றுப்பைகள், ஆட்டோமேட்டிக்குக்கு ஹில்ஹோல்டு கன்ட்ரோல், ISO-FIX குழந்தைகள் சீட் மவுன்ட்டிங் என அதே வசதிகள்.

இன்ஜின் விஷயத்திலும் சொல்லத் தேவையில்லை. அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்தான் கிளான்ஸாவிலும். 90bhp பவரும், 11.3 kgm டார்க்கும் கொண்ட K12N டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின். இதிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ்தான். ஆம், கிளான்ஸாவும் CVT–ல் இருந்து AMT–க்குக் கீழிறங்கியிருக்கிறது. டொயோட்டா வரலாற்றிலும் பட்ஜெட் AMT கியர்பாக்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் இதுதான். கிளான்ஸாவிலும், பெலினோ மாதிரியே மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இல்லை.

பெலினோவில் இருப்பது மாதிரியே 360 டிகிரி பார்க்கிங் கேமரா
பெலினோவில் இருப்பது மாதிரியே 360 டிகிரி பார்க்கிங் கேமரா
ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே...
ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே...

பெலினோவை ஓட்டியதால், கிளான்ஸாவின் பெர்ஃபாமன்ஸில் வித்தியாசம் தேடத் தேவையிருக்காது. அதே குறைவான பெப்பி பெர்ஃபாமன்ஸ்தான் கிடைக்கும். அட, அராய் மைலேஜ்கூட பெலினோவின் கிமீதான் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேனுவலுக்கு 22.35கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக்குக்கு 22.94 கிமீ!

கிளான்ஸாவின் எடையும், பெலினோவுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 955 கிலோதான் வருகிறது. எனவே, ஓட்டுதலிலும் வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறேன். இதிலும் பழைய கிளான்ஸாவில் இருந்து சஸ்பென்ஷனை ட்வீக் செய்திருக்கிறது டொயோட்டா. ஆனால், நிச்சயம் பழசுக்கும் புதுசுக்கும் முன்னேற்றம் இருக்கும்.

டொயோட்டா, மாருதியை ஒப்பிடும்போது கொஞ்சம் ப்ரீமியம் பிராண்ட். வழக்கம்போல், பெலினோவைவிடக் கொஞ்சம் கூடுதல் விலையிலேயே டொயோட்டா, கிளான்ஸைாவைப் பொசிஷன் செய்திருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் 6.39 லட்சம் முதல் 9.69 லட்சம். இதுவே பெலினோவின் எக்ஸ் ஷோரூம் 6.35 – 9.49 லட்சம். எக்ஸ் ஷோரூமில் வேரியன்ட்டைப் பொருத்து ரூ.4,000 முதல் 20,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கிறது. அப்படியென்றால், ஆன்ரோடில் 15,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை விலை அதிகமாக இருக்கிறது.

பல பேரிடம் விசாரித்தபோது, பெலினோவைவிட கிளான்ஸாவைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக – டொயோட்டா வழங்கும் அந்த வாரன்ட்டியைத்தான் வழக்கம்போல் சொல்கிறார்கள். 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ ஸ்டாண்டர்டாகவும், 5 ஆண்டுகள்/2,20,000 கிமீ வரை எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியாகவும் கிளான்ஸாவுக்கு ஆஃபரை வாரி வழங்குகிறது. இதுவே பெலினோவுக்கு 2 ஆண்டுகள்/40,000 கிமீ ஸ்டாண்டர்டு மற்றும் 5 ஆண்டுகள்/1,00,000 கிமீ வரை எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியும் தருகிறது மாருதி என்பதைக் கவனிக்க!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ : 3,990/1,745/1,500மிமீ

வீல்பேஸ்: 2,520 மிமீ

கெர்ப் எடை: 955 கிலோ

இன்ஜின் : 1.2லி K12N டூயல்ஜெட் பெட்ரோல்

பவர் : 90bhp

டார்க் : 11.3kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல் / 5 ஸ்பீடு AMT

காற்றுப்பைகள்: 6 (டாப் எண்ட்)

360டிகிரி கேமரா: உண்டு

ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே : உண்டு

அராய் மைலேஜ் : 22.35 – 22.94 கிமீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism