Published:Updated:

டொயோட்டா ஹைலக்ஸ் புது லைஃப்ஸ்டைல் எஸ்யூவி!

டொயோட்டா ஹைலக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைலக்ஸ்

அறிமுகம்: டொயோட்டா ஹைலக்ஸ்

டொயோட்டா ஹைலக்ஸ் புது லைஃப்ஸ்டைல் எஸ்யூவி!

அறிமுகம்: டொயோட்டா ஹைலக்ஸ்

Published:Updated:
டொயோட்டா ஹைலக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைலக்ஸ்

ஏற்கெனவே நாம் சொல்லியிருந்ததைப் போல, டொயோட்டாவின் லைஃப்ஸ்டைல் பிக்–அப் எஸ்யூவியான ஹைலக்ஸ் அறிமுகமாகிவிட்டது. புக்கிங்கும் தொடங்கிவிட்டது.

நீங்கள் ஒரு ஃபார்ச்சூனர் ரசிகர் என்றால், இந்த ஹைலக்ஸ் நிச்சயம் பிடிக்கும். அமெரிக்காவில் பிக்-அப் ட்ரக்குகள் வைத்திருப்பது மரியாதைக்குரிய விஷயம். அந்த அடிப்படையில் ஃபார்ச்சூனரைப் போன்றதொரு பிக்-அப்புக்கு முதன் முதலில் இந்தியாவில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கியிருக்கிறது டொயோட்டா. ஏற்கெனவே இசுஸூ இருந்தாலும், அதன் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2021 இறுதிவரை இசுஸூவின் ஹைலேண்டரும், டி–மேக்ஸும் சேர்ந்தே 534 கார்கள்தான் விற்பனையாகி இருக்கின்றனவாம்.

ஹைலக்ஸ் – பாடி ஆன் ஃப்ரேமில் கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு 4வீல் டிரைவ் யுட்டிலிட்டி வெஹிக்கிள். இதன் முக்கியமான செல்லிங் பாயின்ட்டே லோடு அடிக்கும் இதன் ஃப்ளாட் பெட்டின் நீளம் மற்றும் அகலம்தான். (நீளமும் அகலமும் சுமார் 1.5 மீட்டர்). இதில் 470 கிலோ லோடு அடிக்கலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் அட்வென்ச்சர் விரும்பிகள், ஊர் சுற்றிகள் – மீன் பிடிக்க… மலையேற… கேம்ப்பிங் அடிக்க… என்று ஸ்போர்ட்ஸ் ஐட்டங்களை இதில் ஏற்றி வலம் வருவார்கள். அந்த அடிப்படையில்தான் இது தயாராகி இருக்கிறது. ‘‘இந்த லைஃப்ஸ்டைலை இந்தியாவில் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறோம். இது எடுபடும் என்று நம்பிக்கை இருக்கிறது!’’ என்கிறார் டொயோட்டாவின் தலைவமை வடிவமைப்பாளர் ஜோங்குசுக்.

இதன் இன்ஜின்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது டொயோட்டா. 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட இது, 204bhp பவரையும், 42.0kgm டார்க்கையும் வெளிப்படுத்த இருக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் வெர்ஷனும் வரவிருக்கிறது. அதன் டார்க் 50kgm. கியர்பாக்ஸும் ஃபார்ச்சூனர் போலவே இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்.

டொயோட்டா ஹைலக்ஸ் 
புது லைஃப்ஸ்டைல் எஸ்யூவி!

அங்கங்கே க்ரோம் வேலைப்பாடுகளுடன், பார்க்கவே கிண்ணென்று இருக்கும் ஹைலக்ஸ் – லைஃப்ஸ்டைல் வெஹிக்கிள் ஆச்சே.. அதனால் வசதிகளும் வேண்டும்! இதில் எல்இடி ஹெட்லைட்ஸ், 18 இன்ச் பெரிய அலாய் வீல்கள், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, சீட்களுக்கு லெதர் அப்ஹோல்சரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், நேவிகேஷன், மலைகளில் கன்ட்ரோல் கிடைத்து இறங்க Down Hill Assist வசதி, 7 SRS காற்றுப்பைகள், VSC, ஹில்ஹோல்டு அசிஸ்ட் என்று பலவித வசதிகள் உண்டு.

இந்திய டிரைவர்களை மனதில் கொண்டு இதன் ஓட்டுதல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, லோ–எண்ட் டார்க் இதில் கும்மென்று கிடைக்கும். உதாரணத்துக்கு, நம் ஊரில் அதிக கியரில் குறைவான வேகத்தில் செல்லும் டிரைவர்கள் உண்டு. அப்போது காரில் சுணக்கம் ஏற்படாமல் கார் ஜிவ்வென்று நகர… ஹைலக்ஸ் கேரன்ட்டி தரும்.

பிக்-அப் ட்ரக் என்றால், ஆஃப்ரோடும் செய்ய வேண்டியிருக்கும். அதனால் ஹைலக்ஸ் – 4வீல் டிரைவ் ஆப்ஷனுடன், மல்ட்டிப்பிள் டிஃப்ரன்ஷியல் லாக்ஸும் கொண்டிருக்கிறது. அதுவும் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன். 5 பயணிகளுடன் லக்கேஜையும் ஏற்றிக் கொண்டு பயணிக்கும்படி இதன் டிசைன் இருக்கிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் 
புது லைஃப்ஸ்டைல் எஸ்யூவி!

30% லோக்கலைசேஷனுடன், கர்நாடகாவில் உள்ள பிடதி தொழிற்சாலையில், CKD முறையில் தயாரிக்கப்பட இருக்கிறது ஹைலக்ஸ். இப்போதைக்கு இசுஸூவின் D-max V-Cross மட்டும்தான் ஹைலக்ஸுக்கு இருக்கும் ஒரே போட்டி. இசுஸூவின் விலை 22.07 லட்சத்தில் இருந்து 25.60 லட்சம் வரை எக்ஸ் ஷோரூமில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஹைலக்ஸ் - CKD முறைக்காகவும், டொயோட்டாவின் பிராண்ட் வேல்யூவுக்காகவுமே சுமார் 35 லட்சத்துக்கு மேலே வரலாம் என்பது நமது கணிப்பு. மற்ற கார்களைப்போலவே 3 ஆண்டுகள்/1 லட்சம் கிமீ வரை வாரன்ட்டி ஹைலக்ஸுக்கும் உண்டு. மார்ச் மாதத்தில் இதன் டெலிவரியைத் தொடங்க இருக்கிறது டொயோட்டா. புது லைஃப் ஸ்டைலுக்குத் தயாராக இருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism