Published:Updated:

இரண்டு ஹைபிரிட்டிலும் வருது டொயோட்டா ஹைரைடர்!

டொயோட்டா ஹைரைடர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைரைடர்

ஃபர்ஸ்ட் லுக்: டொயோட்டா ஹைரைடர்

இரண்டு ஹைபிரிட்டிலும் வருது டொயோட்டா ஹைரைடர்!

ஃபர்ஸ்ட் லுக்: டொயோட்டா ஹைரைடர்

Published:Updated:
டொயோட்டா ஹைரைடர்
பிரீமியம் ஸ்டோரி
டொயோட்டா ஹைரைடர்
இரண்டு ஹைபிரிட்டிலும் வருது டொயோட்டா ஹைரைடர்!

ரொம்ப நாட்களாக கிராண்ட் விட்டாராவின் டொயோட்டா பேட்ஜ் காராக என்ன வரப் போகுது என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். அர்பன் க்ரூஸராக உலவிக் கொண்டிருந்த அந்த எஸ்யூவிக்கு அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Hyryder) எனும் நாமம் சூட்டி தனது பேட்ஜை ஒட்டிவிட்டது டொயோட்டா.

ஆகஸ்ட் மாதம் வரப்போகும் ஹைரைடரின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கலாம்.

ஓவர்சீஸில் ஓடிக் கொண்டிருக்கும் டொயோட்டா காரின் சில பிட்களை அப்படியே இந்த ஹைரைடரில் பொருத்தியிருக்கிறது டொயோட்டா. இரட்டை அடுக்கு கொண்ட எல்இடி டிஆர்எல் அந்த கிரில்லுடன் இணைவது செம! இந்த கிரில்லுக்கு Crystal Acrylic என்று பெயர். ஃபியானோ ஃபினிஷில் நச்சென்று இருக்கிறது. ஒரு க்ரோம் ஸ்ட்ரிப் காரின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை நீண்டு அந்த டிஆர்எல்–லைப் பிரிப்பது அருமை. இதுதான் இந்த இரட்டை அடுக்கு.

எஸ்யூவி என்பதால், ஸ்போர்ட்டியான பம்பர் கொடுத்திருக்கிறார்கள். உயர்த்தி வைக்கப்பட்ட ஏர் டேம், பெரிய ஃபுல் எல்இடி ஹெட்லைட்ஸ் என்று கலக்குகிறது ஹைரைடர். இது ஒரு ஹைபிரிட்; அதனால் ஹைபிரிட் பேட்ஜிங் பக்கவாட்டில், பின்னால் என்று ஜொலிக்கும்.

இரண்டு ஹைபிரிட்டிலும் வருது டொயோட்டா ஹைரைடர்!
இரண்டு ஹைபிரிட்டிலும் வருது டொயோட்டா ஹைரைடர்!

இன்டீரியரைப் பொருத்தவரை அப்படியே மாருதி சுஸூகிதான். டூயல் டோன் இன்டீரியர், லெதர் பொருத்தப்பட்ட டேஷ்போர்டு, 9 இன்ச் டச் ஸ்க்ரீன், க்ரோம் சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ் என்று அப்மார்க்கெட் விஷயங்களாக இருக்கின்றன. ஃபுல்லி ஹைபிரிட் என்றால் பிரெளன் – கறுப்பு என டூயல் டோன் தீமுடனும், மைல்டு ஹைபிரிட் என்றால், ஆல் பிளாக் தீமுடனும் வருகிறது ஹைரைடர். இது ஒரு கனெக்டட் ஹைபிரிட்.

இந்தியாவின் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் முதல் மிட்சைஸ் எஸ்யூவி, இந்த ஹைரைடர். குளோபலாகத் திரியும் யாரிஸ் காரில் இருக்கும் டொயோட்டா e-drive 4th ஜெனரேஷன் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது ஹைரைடர். இதில் 1.5 லிட்டர் TNGA ஆட்கின்ஸன் சைக்கிள் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் இன்ஜின் உண்டு. இது 92bhp பவரும், 122 Nm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினை ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைத்திருக்கிறார்கள். எலெக்ட்ரிக்கில் ஓடினால் இதன் பவர் 79bhp. ஆனால் டார்க் அதிகம்; 141 Nm டார்க். இரண்டிலும் சேர்த்து ஓடினால் 115bhp பவர் கிடைக்கிறது.

177.6V லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறது ஹைரைடரில். உதாரணத்துக்கு சிட்டிக்குள் ஓடும்போது எலெக்ட்ரிக் ரேஞ்ச் தருகிறது. நமது பயணத்தில் கிட்டத்தட்ட 60% தூரத்தை ஹைபிரிட் மோடும், மீதம் 40% தூரத்தை ப்யூர் எலெக்ட்ரிக் மோடும் எடுத்துக் கொள்ளும் என்கிறது டொயோட்டா. இதனால், ஓவர்ஆலாக இதன் மைலேஜ் நிச்சயம் 24 – 25 கிமீ வரும் என்கிறார்கள்.

கூடவே விட்டாரா, XL6, எர்டிகாவில் இருப்பதுபோல், 1.5லி K15C, மைல்டு ைஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட Neo Drive Engine ஆப்ஷனுடனும் வருகிறது ஹைரைடர். இதன் பவர் 103bhp மற்றும் 137Nm. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் வருகிறது.

சன்ரூஃப், 360டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6 காற்றுப்பைகள், டயர் ப்ரஷர் மானிட்டர், ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆல் வீல் டிஸ்க் என்று ஏகப்பட்ட வசதிகளும் ஹைரைடரில் உண்டு.

வழக்கம்போல், மாருதியை விட சூப்பர் வாரன்ட்டியுடன் வரலாம் ஹைரைடர். 3 ஆண்டுகள்/1 லட்சம் கிமீ வாரன்ட்டி.. இதோடு 5 ஆண்டுகள்/2.20 லட்சம் கிமீ–க்கு எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி வசதியும் உண்டு. ஹைபிரிட் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரன்ட்டி தருகிறது டொயோட்டா.

க்ரெட்டா, செல்ட்டோஸ், டைகூன், குஷாக், கிராண்ட் விட்டாரா என்று ஏகப்பட்ட போட்டியாளர்களுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது.