Published:Updated:

``டொயோட்டாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது!”

டாக்காஷி டாக்காமியா
பிரீமியம் ஸ்டோரி
டாக்காஷி டாக்காமியா

விஐபி இன்டர்வியூ: டொயோட்டா துணைத் தலைவர் டாக்காஷி டாக்காமியா

``டொயோட்டாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது!”

விஐபி இன்டர்வியூ: டொயோட்டா துணைத் தலைவர் டாக்காஷி டாக்காமியா

Published:Updated:
டாக்காஷி டாக்காமியா
பிரீமியம் ஸ்டோரி
டாக்காஷி டாக்காமியா

டொயோட்டா கிளான்ஸா அறிமுகமான அதே வேகத்தில், அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்காஷி டாக்காமியா நம்மிடம் பேசினார். அதிலிருந்து சில துளிகள்:

போதும் போதும் என்கிற அளவுக்கு மார்க்கெட்டில் ஆப்ஷன்ஸ் இருக்கும்போது, ஒருவர் ஏன் கிளான்ஸாவை வாங்க வேண்டும்?

முதல் முதலாக கார் வாங்க வரும் இளைஞர்களை, அதிலும் குறிப்பாக ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட்டினெஸை விரும்பும் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கத் துடிப்பான டிசைன், கட்டுப்படியாகக் கூடிய விலை ஆகிய இரண்டும் இதில் இருக்கிறது என்பதால் கிளான்ஸா அவர்களின் முதல் தேர்வாக இருக்கும். மேலும் டொயோட்டா i-Connect ல் இருக்கும் 45 அம்சங்கள் அவர்களுக்குக் கூடுதல் போனஸாக அமையும். 6 காற்றுபைகள், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் நவீனமானது மட்டுமல்ல; அவர்களின் பாதுகாப்புக்கும் துணை நிற்கும் என்பதால், இதையும் அவர்கள் விரும்புவார்கள். டூயல் டோன் டேஷ்போர்டு, அதோடு இயைந்து விளங்கும் இருக்கைகள், ஹலோ கூகுள், ஹே SIRI ஆகிய வாய்ஸ் அசிஸ்டென்ஸ், ஆட்டோ ஏசி, ரியர் ஏசி வென்ட், க்ரூஸ் கன்ட்ரோல், டில்ட் & டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங், UV Protect Glass என இதில் இருப்பது அனைத்துமே இளைஞர்களைக் கவரும் பயனுள்ள அம்சங்கள்தான்.

``டொயோட்டாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது!”

பெருநகரங்களைத் தாண்டி அதற்கு அடுத்திருக்கும் நகரங்களில் வசிக்கும், முதல் முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு After Purchase அனுபவமும் இனிதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை டொயோட்டா பூர்த்தி செய்யும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் இருக்கக் கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டாவுக்கு ஒரு நல்ல இடம் இருக்கிறது. கிளான்ஸா அவர்களின் மனங்களைக் கொள்ளை கொள்வது உறுதி.

மைக்ரோ சிப் தட்டுப்பாடு, கார் நிறுவனங்களுக்குச் சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. டொயோட்டா அதை எப்படி எதிர்கொள்கிறது?

இந்தத் தட்டுப்பாடு எல்லா படிநிலைகளிலும் கார் உற்பத்தித் தொழிலைப் பாதித்திருக்கிறது. என்றாலும் வாடிக்கையாளர்களின் காத்திருப்புக் காலத்தைக் குறைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் நாங்கள் முனைப்போடு செய்துவருகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism