Published:Updated:

அண்ணன் - தம்பி சண்டை... யார் வின்னர்?

Hyundai Venue Automatic
பிரீமியம் ஸ்டோரி
News
Hyundai Venue Automatic

டர்போ பெட்ரோல் போட்டி : கியா சோனெட் VS ஹூண்டாய் வென்யூ

ருவர் புதிதாக காம்பேக்ட் எஸ்யூவி வாங்க உள்ளார் என வைத்துக் கொள்வோம். அந்த செக்மென்ட்டில் கிட்டத்தட்ட 7 கார்கள் இருக்கின்றன. இதில் கொரியத் தயாரிப்பு மட்டுமே 2 கார்கள்.

இந்த இரு கொரிய தயாரிப்புகளில் எது பெஸ்ட் என்பதற்கான விடையை, இந்தக் கட்டுரை உங்களுக்கு அளிக்கும். ஏனெனில் சோனெட் மற்றும் வென்யூ ஆகியவை ஒரே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார்கள். எனவே மெக்கானிக்கல் பாகங்களில் ஒற்றுமை இருந்தாலும், உள்ளே/வெளியே ஏகப்பட்ட வித்தியாசங்கள். இதனால் இவற்றின் ஓட்டுதலிலும் சிற்சில மாற்றங்கள் இருப்பது நிதர்சனமான உண்மையே! கியாவும் ஹூண்டாயும் தங்கள் கார்களில் பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் வேரியன்ட்களை வழங்குவதால், போட்டியைச் சமநிலையில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, டர்போ பெட்ரோல் இன்ஜின் - ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களையே ஒப்பீட்டுக்கு எடுத்துள்ளோம். வெல்லப் போவது அண்ணனா தம்பியா?

Kia Sonet Automatic விலை: GTX+ ரூ.14.78 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
இன்ஜின்: 998சிசி டர்போ, பவர்: 120bhp, டார்க்: 17.2kgm, கி.கிளியரன்ஸ்: 205மிமீ, 
டேங்க்: 45 லிட்டர், பூட் ஸ்பேஸ்: 392 லிட்டர், டச் ஸ்க்ரீன்: 10.25இன்ச்
Kia Sonet Automatic விலை: GTX+ ரூ.14.78 லட்சம் (சென்னை ஆன்ரோடு) இன்ஜின்: 998சிசி டர்போ, பவர்: 120bhp, டார்க்: 17.2kgm, கி.கிளியரன்ஸ்: 205மிமீ, டேங்க்: 45 லிட்டர், பூட் ஸ்பேஸ்: 392 லிட்டர், டச் ஸ்க்ரீன்: 10.25இன்ச்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிசைன்

சிம்பிளான வடிவமைப்பில் கார் வேண்டும் என்பவர்களை, இந்த இரு கொரிய தயாரிப்புகளும் கவராது. வழக்கமான பாணியில் காட்சியளிக்கும் சோனெட், வித்தியாசமான அம்சங்களோடு இருக்கிறது. கியா கார்களுக்கே உரித்தான Tiger Nose க்ரோம் கிரில், LED DRL உடனான பெரிய ஹெட்லைட்ஸ், ஷார்ப் பானெட், உப்பலான வீல் ஆர்ச், மேல்நோக்கி இருக்கும் சி-பில்லர், விண்ட் ஷீல்டில் இருக்கும் கறுப்பு வேலைப்பாடு, டெயில்லைட்டில் உள்ள Heartbeat LED ஆகியவை அதற்கான உதாரணம்.

லேட்டஸ்ட் ஹூண்டாய் கார்களில் காணப்படும் Cascading கிரில் மற்றும் ஸ்ப்ளிட் ஹெட்லைட் டிசைன், வென்யூவின் முன்பக்கத்தை ஸ்பெஷல் ஆக்குகின்றன. மேலே LED பட்டை, கீழே LED DRL உடனான ஹெட்லைட் என இருப்பது நெருடலாக இல்லை. தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் பேக், கியாவின் GT Line பேக்கை நினைவுபடுத்துகிறது. எனவே காரின் Gloss Black கிரில், வீல் ஆர்ச், கதவுகள், ரூஃப் ரெயில், முன்பக்க பிரேக் கேலிப்பர் ஆகியவற்றில் சிவப்பு நிற வேலைப்பாடுகள் எட்டிப் பார்க்கின்றன. வென்யூவின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பக்கம் ஆகியவை, காரின் முன்பக்கத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் சிம்பிளாகவே உள்ளன. இரண்டுக்கும் அளவுகளில் ஒற்றுமை இருந்தாலும், சோனெட் பார்வைக்குக் கொஞ்சம் பெரிய கார் போல உள்ளது (20மிமீ அதிக அகலம், 37மிமீ அதிக உயரம்). முக்கியமாக அந்த எஸ்யூவி ஃபீலிங், கியாவில்தான் மேலோங்கி இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேபின் வடிவமைப்பு

எதிர்பார்த்தபடியே, காரின் உள்ளே நுழைந்தவுடனேயே நம்மை ஈர்த்தது சோனெட்தான். இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் சாவியே, ப்ரீமியம் கார்களைப் போல அமைந்திருக்கிறது. மேலும் உட்புறமும் செல்ட்டோஸ் தந்த அதே உணர்வைக் கொண்டுள்ளது. அதற்கேற்ப 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Bose சவுண்ட் சிஸ்டம் போன்ற பல அம்சங்கள், அந்த மிட்சைஸ் எஸ்யூவியில் இருந்து இங்கே இடம்பெயர்ந்துள்ளன. Knurled பட்டன்களைக் கொண்ட ஸ்டீயரிங், சென்டர் கன்சோல் மற்றும் கியர் லீவரைச் சுற்றியுள்ள Textured ஃபினிஷ், விலை அதிகமான கார்களில் இருப்பதுபோன்ற ஏசி வென்ட்கள், சிவப்புத் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய Leatherette அப்ஹோல்சரி என ஒட்டுமொத்தத் தரத்தில் செல்ட்டோஸுக்கு இணையாக சோனெட் உயர்ந்து நிற்கிறது. இதில் இருக்கும் டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், தெளிவாகத் தகவல்களைக் காண்பிக்கிறது.

Hyundai Venue Automatic - விலை: ரூ.13.66 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)
இன்ஜின்: 998சிசி டர்போ, பவர்: 120bhp, டார்க்: 17.2kgm, கி.கிளியரன்ஸ்: 195மிமீ, டேங்க்: 45லிட்டர், பூட் ஸ்பேஸ்: 350லிட்டர், டச் ஸ்க்ரீன்: 8 இன்ச்
Hyundai Venue Automatic - விலை: ரூ.13.66 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு) இன்ஜின்: 998சிசி டர்போ, பவர்: 120bhp, டார்க்: 17.2kgm, கி.கிளியரன்ஸ்: 195மிமீ, டேங்க்: 45லிட்டர், பூட் ஸ்பேஸ்: 350லிட்டர், டச் ஸ்க்ரீன்: 8 இன்ச்

வென்யூவின் கேபின், User Friendly. 8 இன்ச் டச் ஸ்க்ரீன், பார்வைக்கு வாட்டமான இடத்தில் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் B-பில்லர் கொஞ்சம் மேல்நோக்கி உள்ளதால், ஓட்டுனருக்கு வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. க்ளோவ்பாக்ஸுக்கு மேலே இருக்கும் Shelf-ல், பொருள்களை வைக்க இடமுள்ளது. Textured ஃபினிஷைக் கொண்டிருக்கும் டேஷ்போர்டின் மேல்பகுதி மற்றும் க்ரெட்டாவில் இருந்து பெறப்பட்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவை, கேபினுக்குத் தேவையான ப்ரீமியம் ஃபீலைத் தருகின்றன. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாயின் கேபின் தரம் மிகச் சிறப்பாகவே உள்ளது. ஆனால் அதைவிட, சோனெட்டின் கேபின் தரம் அற்புதமாக இருக்கிறது.

1. வென்யூவில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். யூஸர் ஃப்ரெண்ட்லியான கேபின்.   2. கியர்களுக்கு இடையேயான வேகம் மற்றும் 0-100 வேகப்போட்டியில் வென்யூதான் ஃபர்ஸ்ட்.  3. ஹூண்டாயின் இன்டீரியர் தரம் ஓகே. 4.  DCT கியர்பாக்ஸ் வென்யூவில் வென்டிலேட்டட் சீட்ஸ், பின் பக்கம் ஆர்ம் ரெஸ்ட் கிடையாது.
1. வென்யூவில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். யூஸர் ஃப்ரெண்ட்லியான கேபின். 2. கியர்களுக்கு இடையேயான வேகம் மற்றும் 0-100 வேகப்போட்டியில் வென்யூதான் ஃபர்ஸ்ட். 3. ஹூண்டாயின் இன்டீரியர் தரம் ஓகே. 4. DCT கியர்பாக்ஸ் வென்யூவில் வென்டிலேட்டட் சீட்ஸ், பின் பக்கம் ஆர்ம் ரெஸ்ட் கிடையாது.

சிறப்பம்சங்கள் மற்றும் எர்கனாமிக்ஸ்

தமது கார்களில் இருக்கக்கூடிய வசதிகளில், இந்த இரு கொரிய நிறுவனங்கள் புதிய உச்சத்தை எட்டிவிட்டன. இந்த காம்பேக்ட் எஸ்யூவிகளின் டர்போ பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் மாடல்கள், வேரியன்ட் ரீதியில் கொஞ்சம் வித்தியாசப்படுகின்றன. அதாவது டாப் வேரியன்ட்டான GTX+ல், முன்னே சொன்ன காம்போ சோனெட்டில் கிடைக்கிறது. ஆனால் வென்யூவில் இதே காம்போ, SX+ வேரியன்ட்டில்தான் அதிகபட்சமாக வாங்க முடியும் (SX (O) டாப் வேரியன்ட்டில் டர்போ பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது). இதனால் இந்த இரு காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு இடையே 1.5 லட்ச ரூபாய் விலை வித்தியாசம் நிலவுகிறது. ஆனால் Side & Curtain காற்றுப்பைகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், பின்பக்க வைப்பர், ஆட்டோ Dimming ரியர் வியூ மிரர், LED ஹெட்லைட்ஸ், டிரைவ் & டிராக்‌ஷன் மோடுகள், Leatherette அப்ஹோல்சரி, முன்பக்க Ventillated சீட்கள், பின்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட் என அதனை நியாயப்படுத்தும்படி, சோனெட்டில் அதிக வசதிகளை வாரி இறைத்திருக்கிறது கியா. இதுவே வென்யூவில் 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ESC, ISOFIX, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோ ஹெட்லைட்ஸ், TPMS, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையே உள்ளன. சமீபத்தில்தான் இந்த காரில் Paddle Shifters சேர்க்கப்பட்டது. ஆனால் DCT கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில், பின்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கிடையாது என்பது மைனஸ். டிரைவ் மோடுகள் இல்லவே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரு கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும், e-Sim உடனான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. எனவே காரின் பல்வேறு அம்சங்களை, ஸ்மார்ட்ஃபோன் வாயிலாகக் கன்ட்ரோல் செய்ய முடியும். வென்யூவில் இருக்கும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்த சுலபமாக இருந்தாலும், சோனெட்டின் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் Resolution & Response விஷயத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலும் கியாவில் இருக்கும் 7 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bose சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாயைவிட மேம்பட்டதாக உள்ளது. செல்ட்டோஸில் இருந்த Sound Mood LED Lights, சோனெட்டிலும் தொடர்வது சிறப்பு.

1. சோனெட்டின் இன்டீரியர் தரம், வென்யூவுக்கு ஒரு படி மேலே. இதிலிருப்பது 10.25 டச் ஸ்க்ரீன்.  2. DCT கியர்பாக்ஸ், பவர் டெலிவரி தன்மை. வென்யூ போல் இதில் பேடில் ஷிஃப்டர்கள் இல்லை.  3. ரியர் ஏசி வென்ட் ஓகே. ஆனால், இரண்டிலும் பின் பக்க இட வசதி சுமார்தான்.  4. வென்டிலேட்டட் சீட்கள்தான் சோனெட்டின் ப்ளஸ்.
1. சோனெட்டின் இன்டீரியர் தரம், வென்யூவுக்கு ஒரு படி மேலே. இதிலிருப்பது 10.25 டச் ஸ்க்ரீன். 2. DCT கியர்பாக்ஸ், பவர் டெலிவரி தன்மை. வென்யூ போல் இதில் பேடில் ஷிஃப்டர்கள் இல்லை. 3. ரியர் ஏசி வென்ட் ஓகே. ஆனால், இரண்டிலும் பின் பக்க இட வசதி சுமார்தான். 4. வென்டிலேட்டட் சீட்கள்தான் சோனெட்டின் ப்ளஸ்.

5 பேர் பயணிக்கக்கூடிய காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்றால் இந்த இரு கொரிய கார்களுமே அதற்குச் சரிபட்டுவராது (பின்பக்கத்தில் இருவருக்குத் தேவையான லெக்ரூம் & Shoulder ரூம்தான் உண்டு). ஏனெனில் போட்டி கார்களில் இங்கிருப்பதைவிட அதிக இடவசதி கிடைக்கவே செய்கிறது. இரண்டிலுமே Knee Room & ஹெட்ரூம் பிரச்னையாக இல்லையென்றாலும், சீட்டிங்கில் மாறுதல் தெரிகிறது. அதன்படி வென்யூவின் Seat Squab நீளமாக உள்ளதால், நீண்ட நேரப் பயணங்களின்போது இதில் சொகுசாக உட்கார்ந்து வரமுடியும். சோனெட்டில் பின்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இருப்பதால், ரிலாக்ஸ்டான சீட்டிங் கிடைக்கிறது.

பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, சோனெட்டில் 392 லிட்டரும், வென்யூவில் 350 லிட்டரும் உள்ளன. ஆனால் இரண்டிலுமே ஒரே அளவில் லக்கேஜ் ஏற்ற முடிகிறது. தேவைப்பட்டால் பின்பக்க இருக்கையை மடிக்கலாம் என்றாலும், 60:40 ஸ்ப்ளிட் சீட் இங்கே இல்லாதது பெரிய மைனஸ்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் & ஓட்டுதல் அனுபவம்

சோனெட் மற்றும் வென்யூவில் இருப்பது, 120bhp பவர் மற்றும் 17.2kgm டார்க்கைத் தரும் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். இந்த 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் இன்ஜின், 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்பார்த்தபடியே, FWD அமைப்பைக் கொண்ட இந்த காம்பேக்ட் எஸ்யூவிகளின் ஓட்டுதலில் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. இரு கார்களிலும் இன்ஜின் தனது பணியை அமைதியாகச் செய்வதுடன், குறைவான வேகங்களிலும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது. ஆனால் அதே வேகத்தில், கியர்பாக்ஸின் இயக்கம் கொஞ்சம் ஸ்மூத்தாக இல்லை. என்றாலும், வேகத்துக்கு ஏற்ப கச்சிதமான கியரில் இருக்கும்படி அது பார்த்துக் கொள்கிறது.

போதுமான கி.கிளியரன்ஸ், ஆஃப் ரோடு டிராக்‌ஷன் மோடுகள் இருந்தாலும் இரண்டிலும் ஆஃப்ரோடிங் செய்ய முடியவில்லை.
போதுமான கி.கிளியரன்ஸ், ஆஃப் ரோடு டிராக்‌ஷன் மோடுகள் இருந்தாலும் இரண்டிலும் ஆஃப்ரோடிங் செய்ய முடியவில்லை.

இரு கார்களையும் மாற்றி மாற்றி ஓட்டிப் பார்க்கும்போது, சோனெட்டின் பவர் டெலிவரி கொஞ்சம் தன்மையாக இருப்பதுபோலத் தோன்றுகிறது (உபயம்: 18.3கிமீ அராய் மைலேஜ்). Eco, Normal, Sport என டிரைவிங் மோடுகள் இருப்பதால், தனது தேவைக்கேற்ப ஒருவர் காரை ஓட்டலாம் என்பது பெரிய ப்ளஸ். ஆனால் இங்கே Paddle Shifter வசதி இல்லை.

அதிக வேகத்தில் செல்லும்போது, இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸின் Partnership அற்புதம். இரண்டிலுமே மேனுவல் மோடு இருக்கின்றன என்பதுடன், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் பெர்ஃபாமன்ஸ் உள்ளது. ஆனால் வேகப்போட்டியில் முந்துவது வென்யூதான் (0-100கிமீ வேகம்: 11.54 விநாடிகள்). மேலும் கியர்களுக்கு இடையேயான வேகத்திலும் ஹூண்டாய்தான் லீடிங்கில் உள்ளது. ஆனால் காருக்குள்ளே கேட்கக்கூடிய குறைவான சத்தம் என்கிற விஷயத்தில், சோனெட் கொஞ்சம் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறது. மேலும் கொஞ்சம் அதிக எடையுள்ள ஸ்டீயரிங் மற்றும் சிறப்பான Damping உள்ள சஸ்பென்ஷன் காரணமாக, அதிக வேகத்தில் கியாவின் கையாளுமை மற்றும் நிலைத்தன்மை நன்றாக உள்ளது. இதுவே வென்யூவின் ஸ்டீயரிங் குறைவான எடையில் இருப்பதுடன், கொஞ்சம் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கிறது. எனவே நகர்ப்புறங்களில் ஹூண்டாய் காரை ஓட்டுவது சுலபமாக இருக்கலாம். ஆஃப் ரோடு டிராக்‌ஷன் மோடுகள் இருப்பதை நம்பி, சோனெட்டில் ஆஃப் ரோடிங் செய்ய வேண்டாம் மக்களே! FWD அமைப்பைக் கொண்ட இந்த காம்பேக்ட் எஸ்யூவிகள், சாஃப்ட் ரோடு பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்டவை.

அண்ணன் - தம்பி சண்டை... யார் வின்னர்?

கர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலுமே சோனெட் மற்றும் வென்யூவை ஓட்ட முடியும் என்பது தெரிந்ததுதான். ஆனால் இடவசதி மற்றும் கட்டுறுதியில் இவை போட்டியாளர்களைவிடக் கொஞ்சம் பின்தங்கி உள்ளன என்பதே உண்மை. ஓட்டுதலில் ஒன்றோடொன்று கடுமையாகப் போட்டியிடுகின்றன. அதன்படி வேகத்தில் வென்யூ அசத்தினால், கையாளுமை மற்றும் நிலைத்தன்மையில் சோனெட் ஈர்க்கிறது. ஆனால் Paddle Shifter என்ற ஒற்றை அம்சமே, ஹூண்டாய் வசம் பலரை இழுக்கும் எனத் தோன்றுகிறது. DCT மாடலில் பின்பக்க வைப்பர் போன்ற சில அடிப்படை அம்சங்கள் இல்லாவிட்டாலும், விலை விஷயத்தில் வென்யூ வென்றுவிடுகிறது. அதாவது சோனெட்டின் HTK+ மற்றும் GTX+ ஆகிய வேரியன்ட்களுக்கு இடையே, தனது ஆட்டோமேட்டிக் மாடலைக் கச்சிதமாகப் பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். எதிர்பார்த்தபடியே அதிகப்படியான விலையில் வரும் சோனெட், அது குறையாகத் தெரியாதபடி சிறப்பம்சங்களில் அதிரடித்து விடுகிறது. மேலும் இதனுடன் எஸ்யூவி ஃபீல் மற்றும் ப்ரீமியம் கேபின் ஆகியவை போனஸ்தான். என்னதான் Prize to Size ரேஷியோவில் கியா கொஞ்சம் பின்தங்கினாலும், மினி செல்ட்டோஸ் என்று அழைக்கும் அளவுக்கு, செல்ட்டோஸில் உள்ள பல விஷயங்களைத் தன்வசப்படுத்தியதில் வெற்றி பெற்றுவிட்டது. எனவே அதைவிடச் சுமார் 5 லட்ச ரூபாய் குறைவான விலையில் கிடைக்கும் சோனெட், வெறும் 2 மாதங்களில், 50 ஆயிரத்துக்கும் அதிகமாக புக்கிங் ஆகி துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. வேறென்ன... சோனெட்தான் வின்னர்!