Published:Updated:

பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி கவலையில்லை!

எலெக்ட்ரிக் கார்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப் பெரிய மைனஸ் – இதன் சார்ஜிங் நேரமும், அதற்கான வசதிகளும்தான்.

பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி கவலையில்லை!

எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப் பெரிய மைனஸ் – இதன் சார்ஜிங் நேரமும், அதற்கான வசதிகளும்தான்.

Published:Updated:
எலெக்ட்ரிக் கார்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் கார்
மிகச் சரியாக வெறும் 5 ரூபாய்தான் விலை வித்தியாசம் – பெட்ரோலுக்கும் டீசலுக்கும்! முன்பெல்லாம் டீசல் கார்களுக்குத்தான் நல்ல மவுசு இருந்தது. காரணம், பெட்ரோலைவிட டீசல் விலை பாதி குறைவாக இருக்கும். டீசல் விலை ஏறியது ஒருபுறம் இருக்க, ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த BS-6 மாசுவிதிகள் அமலுக்கு வந்தபிறகு, டீசல் கார்களுக்குக் ‘குட் பை’ சொல்லிவிட்டன.
பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி கவலையில்லை!

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பெட்ரோல் கார்களின் உற்பத்தியைவிட டீசல் கார்களின் உற்பத்தி விலை, கார் நிறுவனங்களின் மேல் துண்டு இல்லை, பெரிய போர்வையையே போர்த்திவிடும். டாடா, ஹூண்டாய், மஹிந்திரா மட்டும் டீசல் இன்ஜினை BS-6 தரத்துக்கு அப்டேட் செய்து வருவதற்கு குடோஸ்.

அப்படியென்றால், இனி சாலைகளில் ஸ்மூத்தான பெட்ரோல் கார்களின் ராஜ்ஜியம்தானா என்றால், இல்லை; ‘நான் அதுக்கும் மேல’ என்று சந்தோஷ ஷாக் கொடுக்க வரவிருக்கின்றன எலெக்ட்ரிக் வாகனங்கள். இது கார்/பைக் என இரண்டுக்குமே பொருந்தும்.

பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி கவலையில்லை!

‘ஒக்கினாவா’ என்றொரு எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், சென்ற 2020 நிதியாண்டில் 10,133 பைக்குகளை விற்று இந்தியாவின் டாப்–10 விற்பனை லிஸ்ட்டில் முதலிடம் பிடித்திருக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் பைக்குகள் சுமார் 7,400 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி யிருக்கின்றன. பெங்களூரை மையமாகக் கொண்ட ‘ஏத்தர்’ என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம், சுமார் 2,900 ஸ்கூட்டர்களை விற்று 3–வது இடத்தில் இருக்கிறது. இது இந்த ஆண்டு இன்னும் அதிகமாகியிருக்கும். இந்த ஸ்கூட்டர்களின் பெரிய ப்ளஸ் – இதற்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மாதிரி ஆயில் சர்வீஸ் தேவையில்லை; இன்ஜின் வேலைகள் இல்லை; சுற்றுச்சூழலைக் காலி பண்ணும் எக்ஸாஸ்ட் இல்லை. மிக முக்கியமாக பெட்ரோலுக்கு பர்ஸைத் திறக்கவே தேவையில்லை. கிட்டத்தட்ட ஒரு ரூபாய் செலவில் 1 கி.மீ போகலாம் என்பது இ–ஸ்கூட்டர்களின் ப்ளஸ். உதாரணத்துக்கு, ஒரு ஏத்தர் ஸ்கூட்டரை முழு சார்ஜ் ஏற்ற 4.30 மணி நேரம் பிடிக்கிறது. இதன் ரேஞ்ச் தூரம் – சுமார் 80 கி.மீ. நம் வீட்டில் ஃபுல் சார்ஜுக்கு 4 யூனிட்களே ஆகும்.

கார்களைப் பொறுத்தவரை நம் ஊரில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் – மஹிந்திரா இ–வெரிட்டோ, டாடா டிகோர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் கோனா, எம்ஜி ZS-EV, ஜாகுவார் I-Pace, மெர்சிடீஸ் பென்ஸ் EQC – இப்படி விரல்விட்டு எண்ணிவிடலாம்தான். இதில் பென்ஸ்தான் ஒரு கோடி ரூபாய் எலெக்ட்ரிக் கார். IC Engine என்று சொல்லக்கூடிய Internal Combustion இன்ஜின் கொண்ட கார்களைவிட, இப்போது எலெக்ட்ரிக் கார்களுக்குத்தான் மவுசும் அதிகமாகிவருகிறது.

பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி கவலையில்லை!

எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப் பெரிய மைனஸ் – இதன் சார்ஜிங் நேரமும், அதற்கான வசதிகளும்தான். IC இன்ஜின் கார்கள்போல், நினைத்த இடத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு வெளியூர் போக முடியாது என்பதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் மிகப் பெரிய சிக்கல். அதையும் தவிடுபொடியாக்கிவிட்டார் கோவையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர். ஹூண்டாயின் கோனா காரில் இவர் கின்னஸ் சாதனையே புரிந்துவிட்டார். தினமும் தன் எலெக்ட்ரிக் காருக்கு சார்ஜ் ஏற்றியபடி, வெறும் ஐந்து நாள்களில், கடல் மட்டத்திலிருந்து 5,731 மீட்டர் உயரம் கொண்ட, உலகின் அதிகமான அல்டிட்யூடில்... 18 அடி பனிச்சரிவில்... மைனஸ் 20 டிகிரி குளிரில்... நேபாளம் கைலாச மலை தாண்டி திபெத் பள்ளத்தாக்கில்கூட கோனாவை ஓட்ட முடியும் என்று சாதித்திருக்கிறார். எலெக்ட்ரிக் கார்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம் என்பதற்கு ஒரு நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார் சுரேஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism