Published:Updated:

வரப்போகும் எஸ்யூவிகள் 2021

இங்கே வாடிக்கையாளர்களிடையே இருக்கிறது. இந்த மாடல்கள் மட்டுமல்ல...2021-ம் ஆண்டில் நம் நாட்டுக்கு வரப்போகும் மற்ற எஸ்யூவிகளின் பட்டியலும் பெரியது.

பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு பிறந்த அதே வேகத்தில் ரெனோ கிகர், எம்ஜி ஹெக்டர் சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட், டாடா சஃபாரி, ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட், டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், ஃபார்ச்சூனர் லெஜெண்டர், மெர்சிடீஸ் பென்ஸ் GLC ஃபேஸ்லிஃப்ட், ஆஸ்ட்டன் மார்ட்டின் DBX எனப் பலவிதமான பட்ஜெட்டில், விதவிதமான எஸ்யூவிகள் படையெடுத்துவிட்டன. அந்தளவுக்கு எஸ்யூவிகள் மீதான மோகம், இங்கே வாடிக்கையாளர்களிடையே இருக்கிறது. இந்த மாடல்கள் மட்டுமல்ல...2021-ம் ஆண்டில் நம் நாட்டுக்கு வரப்போகும் மற்ற எஸ்யூவிகளின் பட்டியலும் பெரியது. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஆடி Q3

ந்த எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனுக்காக, கார் ஆர்வலர்கள் பலர் நம் நாட்டில் காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. கடந்த 2018-ம் ஆண்டிலேயே சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகிவிட்ட Q3, டிசைன் - அளவுகள் - வசதிகள் ஆகிய ஏரியாக்களில் முன்பைவிடச் செமையாக ஸ்கோர் செய்திருந்தது. தனது என்ட்ரி லெவல் எஸ்யூவி எனும் இடத்தை Q2 பிடித்துவிட்டதால், இதற்குக் கொஞ்சம் ப்ரமோஷன் அளித்துவிட்டது ஆடி. பார்க்க மினி Q8 போல இருக்கும் புதிய Q3, முந்தைய மாடலைவிட அதிக இடவசதியைக் கொண்டுள்ளது. அடாப்டிவ் டேம்ப்பர்கள், பார்க் அசிஸ்ட், 12.3 இன்ச் விர்ச்சுவல் காக்பிட், 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Bang & Olufsen ஆடியோ சிஸ்டம், வாய்ஸ் கன்ட்ரோல், ஆப்பிள் & ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி என வசதிகளிலும் முன்னேற்றம் தெரிகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெர்ஃபாமன்ஸ் வேண்டும் என்பவர்களை, RS Q3 திருப்திப்படுத்தும் எனத் தெரிகிறது. பிஎம்டபிள்யூ X1, பென்ஸ் GLA, வால்வோ XC 40 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது ஆடி Q3.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

சிட்ரன் காம்பேக்ட் எஸ்யூவி (C21)

C5 ஏர் க்ராஸின் அறிமுகத்துக்குப் பிறகு, C21 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவியைக் களமிறக்க உள்ளது சிட்ரன். PSA குழுமத்தின் CMP ப்ளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்படும். இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கே உரித்தான க்ராஸ்ஓவர் டிசைன், இதிலும் இருக்கும் என்பது செம. ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், பெரிய அலாய் வீல்கள், தடிமனான பாடி க்ளாடிங் அதற்கான உதாரணம். இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே என்பது நெருடல். ஆனால் 95% உள்நாட்டுப் பாகங்களால் இந்த கார் கட்டமைக்கப்படலாம் என்பதால், அதிரடியான விலையை எதிர்பார்க்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

எம்ஜி ZS டர்போ

ற்கெனவே இருக்கும் எலெக்ட்ரிக் வெர்ஷன் உடன், பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய மாடலையும் களமிறக்க உள்ளது எம்ஜி. டீசல் இன்ஜின் இல்லை என்பதால், இருவிதமான பெட்ரோல் இன்ஜின்களுடன் ZS-யை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகிறது. 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் தவிர (106bhp பவர் - 14.1kgm டார்க்), 111bhp - 16kgm டார்க்கைத் தரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் இருந்தால், டர்போவில் 6 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உண்டு. ASEAN NCAP நடத்திய க்ராஷ் டெஸ்டில், ZS, 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது கவனிக்கத்தக்கது.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

சிட்ரன் C5 ஏர் க்ராஸ்

சிட்ரன் தனது இந்திய இன்னிங்ஸை, இந்த மாடல் கொண்டுதான் தொடங்கவிருக்கிறது. கடந்த ஆண்டிலேயே C5 ஏர் க்ராஸ் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தக் காலதாமதத்துக்குக் கொரோனாதான் முக்கியக் காரணம். மற்ற சிட்ரன் கார்களைப் போலவே, இதுவும் வித்தியாசமான டிசைனுடன் கவர்கிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டில், 5 சீட்களுடன் C5 ஏர் க்ராஸ் நம் நாட்டுக்கு வரவுள்ளது. எனவே எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், Hands Free டெயில் கேட், LED DRL உடனான LED ஹெட்லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், Powered டிரைவர் சீட், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் மீட்டர், டூயல் டோன் கலர் ஆப்ஷன், Diamond Cut அலாய் வீல்கள் என அதிகப்படியான வசதிகளைக் காரில் எதிர்பார்க்கலாம். 180bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. C5 ஏர் க்ராஸ் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படலாம் என்றாலும், சுமார் 30 லட்ச ரூபாய் விலையில்தான் கார் வெளியாகும். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகியவற்றுடன், இந்த சிட்ரன் எஸ்யூவி போட்டி போடும்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஃபோர்ஸ் கூர்க்கா

ஃப் ரோடு பிரியர்களின் வரவேற்பைப் பெற்ற கூர்க்கா, முற்றிலும் புதிய அவதாரத்தில் வர இருக்கிறது. புதிய பம்பர்கள், LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், மாற்றியமைக்கப்பட்ட டெயில் லைட்ஸ் & கிரில் ஆகியவை அதனை உறுதிப்படுத்துகின்றன. புத்தம் புதிய லேடர் ஃப்ரேம் சேஸியில், இந்த ஆஃப் ரோடரைக் கட்டமைத்திருக்கிறது ஃபோர்ஸ். முன்பைவிட கேபின் ரிச்சாகத் தெரிகிறது. டூயல் டோன் ஃபினிஷில் இருக்கும் புதிய டேஷ்போர்ட்டில், டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இருப்பது நைஸ். முன்புபோல 3/5 கதவுகள் மற்றும் 2/4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கூர்க்கா கிடைக்கும். வழக்கமான 2.6 லிட்டர் டீசல் இன்ஜினுடன், பவர்ஃபுல் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினையும் எதிர்பார்க்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஃபோர்டு C எஸ்யூவி

ஹிந்திரா உடனான தனது கூட்டணியின் வெளிப்பாடாக, இந்த C செக்மென்ட் எஸ்யூவி இருக்கும் (தற்போது கூட்டணி முறிந்துவிட்டது தெரிந்ததே). CX757 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட இந்த கார், இரண்டாம் தலைமுறை XUV 5OO-யை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் (ப்ளாட்ஃபார்ம், மெக்கானிக்கல் பாகங்கள்). எனவே எம்ஜி ஹெக்டர், டாடா ஹேரியர் ஆகியவற்றுடன், இந்த ஃபோர்டு எஸ்யூவி போட்டி போடும். Pininfarina-தான் இதன் டிசைனுக்குப் பொறுப்பு என்பதால், ஸ்டைலான வடிவமைப்பு உறுதி. புதிய XUV 5OO-ல் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களை, ஃபோர்டு தனது காரில் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்த 4 சிலிண்டர் இன்ஜின்கள், முறையே 185bhp மற்றும் 190bhp பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிச்சயமாக இருக்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்

ம் நாட்டில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டைத் தொடங்கிவைத்த பெருமை, இந்த காரையே சேரும். என்றாலும் தற்போது வரிசை கட்டி வந்திருக்கும் புதிய போட்டியாளர்களைச் சமாளிக்கும் வகையில், எக்கோஸ்போர்ட்டுக்குப் புத்துணர்ச்சி ஊட்டவிருக்கிறது ஃபோர்டு. காரின் டிசைனில் கணிசமான மாறுதல் இருக்கும் என்றாலும், கூடவே டர்போ பெட்ரோல் இன்ஜினை மறுபடி எக்கோஸ்போர்ட்டில் இந்த நிறுவனம் பொருத்தியிருக்கிறது. மஹிந்திராவின் புதிய mStallion சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்களில் சிறிதான 1.2 லிட்டர் T-GDi இன்ஜின்தான் அது. ஏற்கெனவே இருந்த எக்கோபூஸ்ட் இன்ஜின் மற்றும் போட்டியாளர்களைவிட அதிகமான 130bhp & 23kgm டார்க்கை, இது வெளிப்படுத்துவது செம! மற்றபடி தற்போதைய மாடலில் இருக்கும் BS-6 இன்ஜின்கள் அப்படியே தொடரலாம் என்பதுடன், வசதிகளில் சிற்சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஹூண்டாய் க்ரெட்டா (7 சீட்டர்)

ரண்டாம் தலைமுறை க்ரெட்டாவின் அதிரடியான வெற்றியைத் தொடர்ந்து, அதன் 7 சீட் வெர்ஷனைக் களமிறக்க முடிவெடுத்துள்ளது ஹூண்டாய்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021

இது வேறு பெயரில் வரும் என்பதுடன், எதிர்பார்த்தபடியே டிசைனிலும் மாறுதல் இருக்கும். கூடுதலாக ஒரு வரிசை இருக்கை இடம்பெறும் என்பதால், 5 சீட்டரைவிட இதன் பின்பக்கம் நிச்சயம் வேறுமாதிரிதான் இருக்கும்.

மற்றபடி வசதிகள், இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகியவற்றில், அதிக ஒற்றுமைகளைப் பார்க்கலாம். இதன் டெஸ்ட்டிங்கை, ஹூண்டாய் எப்போதோ தொடங்கிவிட்டது.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஜீப் காம்பஸ் (7 சீட்டர்)

ப்ராஜெக்ட் 598 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட இந்த D செக்மென்ட் எஸ்யூவி, காம்பஸ் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும். ஆனால் 3-வது வரிசை இருக்கை சேர்வதால், இந்த காரின் நீளம் காம்பஸைவிட அதிகமாகவே இருக்கும். மேலும் கூடுதல் இடவசதிக்காக, இது காம்பஸைவிட அதிக வீல்பேஸில் வரும். மற்றபடி காம்பஸ் தவிர, ஹெக்டர் மற்றும் ஹேரியரில் நாம் பார்த்த அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் இதிலும் இருக்கும். என்றாலும், இது அவற்றைவிட அதிக பவரை வெளிப்படுத்தும் (200bhp). 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4 வீல் டிரைவ் சிஸ்டம் இதனுடன் இணைக்கப்படும். இந்த எஸ்யூவியின் டிசைன் மற்றும் வசதிகள், நிச்சயம் காம்பஸைவிட வித்தியாசமாக இருக்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

இசுஸூ V-க்ராஸ் & MU-X (BS-6) வெர்ஷன்கள்

கொரோனா காரணமாக, இந்தியாவில் தான் விற்பனை செய்யும் கார்களின் BS-6 வெர்ஷனை அறிமுகப்படுத்துவதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக இசுஸூ கூறியுள்ளது. எனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இந்த நிறுவனம் நம் நாட்டில் எந்த காரையுமே விற்பனை செய்யவில்லை. லைப்ஸ்டைல் பிக் அப்பான V-க்ராஸ், XL சைஸ் எஸ்யூவியான MU-X ஆகியவற்றின் BS-6 வெர்ஷன்கள், பார்க்க அப்படியே BS-4 மாடல்களைப் போலவே இருக்கும் என்பது நெருடல். சர்வதேச சந்தைகளில் இதன் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், அவை எப்போது இந்தியா வரும் எனத் தெரியவில்லை.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மஹிந்திரா TUV 300 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்

டந்த 2019-ம் ஆண்டில், TUV 3OO சீரிஸ் முதல் ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற்றது நினைவிருக்கலாம். தற்போது இரண்டாம் ஃபேஸ்லிஃப்ட்டில், அவை BS-6 அவதாரத்தில் தடம் பதிக்கவுள்ளன. டெஸ்டிங்கின்போது பலமுறை படம்பிடிக்கப்பட்ட 7 சீட்டர் TUV 3OO, மேம்படுத்தப்பட்ட டிசைன் & வசதிகளுடன் வரப்போகிறது. மேலும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினிலும் மாற்றம் இருக்கலாம். தவிர தோற்றத்தில் சிற்சில மாறுதல்களுடன், TUV 3OO ப்ளஸ்ஸும் களமிறங்க உள்ளது. இதன் நடுவரிசையில் கேப்டன் சீட்கள் மற்றும் கடைசி வரிசையில் பெஞ்ச் சீட் இருக்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

ற்போது விற்பனை செய்யப்படும் ஸ்கார்ப்பியோவைவிட புதிய மாடல் - அளவில் பெரிதாக இருக்கும். மேலும் புத்தம் புதிய பாடி பேனல்கள், மேம்படுத்தப்பட்ட லேடர் ஃப்ரேம் சேஸியில் பொருத்தப்பட உள்ளன. ஸ்கார்ப்பியோவுக்கே உரித்தான டிசைன் தொடரும் என்றாலும், ஃப்ரெஷ்ஷான டிசைனில் கேபின் இருக்கும் எனத் தெரிகிறது. எனவே அதிக வசதிகளை எதிர்பார்க்கலாம். மேலும் இதில் வழக்கமான 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தவிர (140bhp), தாரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் இருக்கும். 2002-ல் செய்த மேஜிக்கை, மஹிந்திரா மறுபடி செய்யுமா? பார்க்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மஹிந்திரா பொலேரோ நியோ

ல ஆண்டுகளாகப் பெரிய மாறுதலின்றி விற்பனை செய்யப்பட்டாலும், பொலேரோவின் மாதாந்திர விற்பனை மஹிந்திராவுக்குப் பிடித்தபடியே அமைந்திருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான். தற்போது புத்தம் புதிய லேடர் ஃப்ரேம் சேஸியில் கட்டமைக்கப்பட்ட பொலேரோவை, அந்த நிறுவனம் இந்த ஆண்டில் வெளியிட உள்ளது. தார் போலவே, இதன் டிசைனிலும் பழைமையும் புதுமையும் சேர்ந்த கலவை இருக்கும். கேபின் முன்பைவிட அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்களுடன் இருந்தால், நன்றாக இருக்கும் மஹிந்திரா.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மஹிந்திரா XUV 3OO mStallion

தில் ஏற்கெனவே BS-6 பெட்ரோல் இன்ஜின் இருந்தாலும், தனது புதிய 1.2 லிட்டர் T-GDi இன்ஜினை XUV 3OO-ல் பொருத்த உள்ளது மஹிந்திரா. mStallion இன்ஜின் சீரிஸைச் சேர்ந்த இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். தற்போது இருக்கும் மாடலைவிட இது 20bhp அதிக பவர் (130bhp) & 3.0kgm அதிக டார்க்கை (23kgm) வெளிப்படுத்தும் என்பது ஸ்பெஷல். ஸ்போர்ட்ஸ் எனும் க்ராஃபிக்ஸுடன், இந்த பவர்ஃபுல் இன்ஜினைக் கொண்ட XUV 3OO, 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது தெரிந்ததே. இதில் சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் கூடிய கேபின், முழுக்கக் கறுப்பு நிறத்துக்கு மாறியிருந்தது. மேலும் பிரேக் கேலிப்பர்களும் சிவப்பாக இருந்தன.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மஹிந்திரா XUV 5OO

டந்த ஆண்டிலேயே வந்திருக்க வேண்டிய கார்.... வழக்கம்போல கொரோனா, காலதாமதத்தை ஏற்படுத்திவிட்டது. டூயல் ஸ்க்ரீன் செட்-அப், ADAS தொழில்நுட்பம், டர்போ பெட்ரோல் & டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் என முழு பலத்துடன் புதிய XUV 5OO களம் காண்கிறது. இரண்டாம் தலைமுறை தாரில் அறிமுகமான 4 சிலிண்டர் டர்போ இன்ஜின்கள்தான் இதிலும் என்றாலும், கூடுதல் செயல்திறனுடன் அவை வரும். Transversely Mounted 2.0 லிட்டர் mStallion பெட்ரோல் இன்ஜின் 190bhp பவரை வெளிப்படுத்தினால், Transversely Mounted 22 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் 180bhp பவரைத் தருகிறது. 6 ஸ்பீடு மேனுவல் தவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கும் இங்கே உண்டு. டாப் வேரியன்ட்களில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மாருதி சுஸூகி ஜிம்னி

ணைய உலகில், கார் ஆர்வலர்களிடையே சமீபத்தில் பலத்த அதிர்வலையைக் கிளப்பிய கார்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தியாவுக்கு, 5 கதவுகளைக் கொண்ட மாடல்தான் வரப்போகிறது. பெரிய கேபின் மற்றும் 5 கதவுகள் இருப்பதால், ஃபேமிலி கஸ்டமர்களுக்கு இந்த மாடல்தான் பிடிக்கும் என்கிறது மாருதி சுஸூகி. LWB அவதாரம், ஜிம்னியின் ஆஃப் ரோடு முகத்துடன் எப்படிச் சேரப்போகிறது என்பதைப் பார்க்க, வி ஆர் வெயிட்டிங்! மற்றபடி லேடர் ஃப்ரேம் சேஸி, Rigid Axles, Low Range Trasfer Case உடனான 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை, 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களுக்குப் பொதுவானவைதான். சியாஸ், எர்டிகா, விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகியவற்றில் இருக்கும் அதே 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின்தான் ஜிம்னியிலும் இருக்கும். தனது நெக்ஸா ஷோரும்களில் இந்த எஸ்யூவியை விற்பனை செய்யவுள்ளது மாருதி சுஸூகி. இதன் உற்பத்தி நம் நாட்டில் தொடங்கிவிட்டது என்றாலும், முதற்கட்டமாக ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

டந்த 2016-ம் ஆண்டில் அறிமுகமான விட்டாரா பிரெஸ்ஸா, காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது தெரிந்ததே! இதன் பலங்கள் புதிய வெர்ஷனிலும் தொடரும் என்பது நைஸ் (கட்டுமஸ்தான டிசைன், அதிக இடவசதி, பெரிய பூட்). Heartect ப்ளாட்ஃபார்மில் புதிய பிரெஸ்ஸா தயாராகும் என்பதால், தற்போதைய மாடலைவிடக் குறைவான எடையில் இது இருக்கும். வழக்கமான 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் தவிர, காலம் சென்ற 1.5 லிட்டர் DDiS 225 டர்போ டீசல் இன்ஜினும், புதிய பிரெஸ்ஸாவில் இடம்பெறலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

மெர்சிடீஸ் பென்ஸ் GLA

ரண்டாம் தலைமுறை GLA, கடந்த ஆண்டிலேயே வந்திருக்க வேண்டிய மாடல். கடந்த மாடலின் ஸ்போர்ட்டியான டிசைனுடன் ஒப்பிடும்போது, புதிய வெர்ஷன் ப்ரீமியமாகக் காட்சியளிக்கிறது. கேபினில் முன்பைவிட அதிக இடவசதியும் சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களைத் தவிர, பவர்ஃபுல்லான AMG GLA 35 வேரியன்ட்டும் பின்னாளில் வெளிவரலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஸ்கோடா கோடியாக் பெட்ரோல்

BS-4 அவதாரத்தில் டர்போ டீசல் இன்ஜினுடன் இருந்த கோடியாக், BS-6 வெர்ஷனில் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வரப்போகிறது. இதிலிருக்கும் 2.0 லிட்டர் TSI இன்ஜின், 190bhp பவரை வெளிப்படுத்துகிறது (டீசல் இன்ஜினைவிட 40bhp அதிகம்). இந்த 4 சிலிண்டர் இன்ஜின், 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி கோடியாக்கின் தோற்றத்தில் மாறுதல் இருக்காது என்றாலும், கூடுதலாகச் சில வசதிகள் வந்தாலும் வரலாம்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஸ்கோடா Kushaq

ஸ்கோடா இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் கார்களில், மிக முக்கியமான மாடல் இதுதான். இந்தியா 2.0 திட்டத்தின் முதல் தயாரிப்பாக வரப்போகும் Kushaq, Localise செய்யப்பட்ட MQB AO IN ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஃபோக்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவிக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருக்கும். விஷன் IN எனும் கான்செப்ட்டாக முதலில் வெளியான இந்த எஸ்யூவி, 4.2 மீட்டருக்கும் அதிக நீளம் - 2,671மிமீ வீல்பேஸுடன் வரும். போதிய இடவசதி கொண்ட Kushaq-ல், 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படும். இவை மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

டாடா HBX

HBX கான்செப்ட்டாக நமக்குப் பரிச்சயமான இந்த மினி எஸ்யூவி, அல்ட்ராஸுக்கு அடுத்தபடியாக ALFA ப்ளாட்ஃபார்மில் தயாராகப்போகும் இரண்டாவது கார். நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்பட உள்ள இதன் Production Version, 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருந்த கான்செப்ட் காரைப் போலவே காட்சியளிக்கும். அனலாக் - டிஜிட்டல் மீட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, Free Standing டச் ஸ்க்ரீன் சிஸ்டம் போன்ற பல வசதிகள் இருக்கும். டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் ஆகியவற்றில் இருக்கும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் தவிர, புதிய பவர்ஃபுல்லான 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனும் இந்த மினி எஸ்யூவி கிடைக்கும். இவை 5 ஸ்பீடு மேனுவல் & AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். இதில் டீசல் இன்ஜின் இல்லாதது மைனஸ் என்றாலும், சில ஆண்டுகளில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

டொயோட்டா Hilux

லகளவில் கட்டுறுதிக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற இந்த பிக்-அப், ஒருவழியாக இந்தியச் சாலைகளில் டயர் பதிக்கப்போகிறது. இனோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் தயாரிக்கப்படும் IMV ப்ளாட்ஃபார்மில்தான் Hilux தயாராகும் என்பதால், அதிலிருக்கும் டர்போ டீசல் இன்ஜின்கள்தான் இதிலும் இருக்கும். கேபின் மற்றும் வசதிகளிலும், அதிக ஒற்றுமைகள் இருக்கலாம். இசுஸூவின் V-க்ராஸுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த பிக்-அப்பை, அசத்தலான விலையில் டொயோட்டா களமிறக்க உள்ளது. ASEAN NCAP நடத்திய க்ராஷ் டெஸ்டில், Hilux, 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது கவனிக்கத்தக்கது.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்

து ஃபேஸ்லிஃப்ட் என்பதால், எதிர்பார்த்தபடியே காரின் டிசைனில் மாற்றங்களைப் பார்க்கலாம். மெலிதான கிரில், மாற்றியமைக்கப்பட்ட LED ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ், புதிய பம்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் அதற்கான உதாரணம். BS-4 டிகுவான் டர்போ டீசல் இன்ஜினுடன் இருந்த நிலையில், BS-6 வெர்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வரப்போகிறது. காரின் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கு ஏதுவாக, இதில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்காது. மேலும் 150bhp பவரைத் தரும் 1.5 லிட்டர் TSI இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணிதான், இந்த 5 சீட்டர் டிகுவானில் இடம்பெறப்போகிறது. தவிர புனேவில் உள்ள தனது தொழிற்சாலையில் ஃபோக்ஸ்வாகன் இந்த காரை அசெம்பிள் செய்யும் என்பதால், முன்பைவிடக் குறைவான விலையில் டிகுவான் கிடைக்கும்.

வரப்போகும் எஸ்யூவிகள் 2021
வரப்போகும் எஸ்யூவிகள் 2021

ஃபோக்ஸ்வாகன் டைகூன்

லத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரப்போகும் இந்த ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பு, ஸ்கோடாவின் Kushaq தயாராகும் அதே MQB AO IN ப்ளாட்ஃபார்மில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த இரு எஸ்யூவிகளும் வெவ்வேறு டிசைனில் ஸ்டைலாக இருந்தாலும், மெக்கானிக்கலாகப் பல ஒற்றுமைகள் உண்டு (இன்ஜின் - கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங், சேஸி). கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் உடனான பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிஜிட்டல் மீட்டர், சன் ரூஃப், LED லைட்டிங் போன்ற லேட்டஸ்ட் வசதிகள் டைகூனின் கேபினில் இருக்கலாம். 95% உள்நாட்டுப் பாகங்கள் காரில் இருக்கும் என்பதால், கட்டுபடியாகக்கூடிய விலை உறுதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு