Published:Updated:

உங்க காரில் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் வெச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Seat Belt

விதிகளை மீறி எவரேனும் இதுபோன்ற சாதனங்களை வாங்க முற்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

உங்க காரில் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் வெச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!

விதிகளை மீறி எவரேனும் இதுபோன்ற சாதனங்களை வாங்க முற்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

Published:Updated:
Seat Belt

சமீபத்தில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவர் பயணித்த அந்த வாகனத்தின் ஓட்டுநர், மத்திய அமைச்சருக்கு ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார். ‘‘சீட் பெல்ட் போட வேண்டாம்!’’ என்பதுதான் அது. வியப்பாகிப் போன நிதின் கட்கரி, அப்போதுதான் வாகனத்தில் அந்தக் கொக்கி போன்ற அந்தக் கருவியைக் கண்டிருக்கிறார்.

விசாரித்ததில் அது ‘சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்’ எனத் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு ஆக்சஸரீஸ் வாகனத்தில் கிடையவே கிடையாதே என்று நொந்து போன அவர், மக்களின் அலட்சியத்துக்கு ஒரு முடிவு கட்ட நினைத்துத்தான், ஓர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
சீட் பெல்ட்
சீட் பெல்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் ‘சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்’ சாதனத்தின் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடிதம் எழுதியிருக்கிறார்.

சமீப காலத்தில் ஆன்லைன் தளங்களில் வெகுவாக விற்பனையாகி வரும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ்தான் இந்த அலாரம் ஸ்டாப்பர்கள். அதாவது, தற்போதுள்ள கார்களில் சீட் பெல்ட் போடவில்லை என்றால், ‘பீப்’ அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். இந்த அலாரம் கொடுக்கும் சத்தத்துக்காகவே சிலர் வேண்டா வெறுப்பாகவாவது சீட் பெல்ட் மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் இதன் ஐடியா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையும் மீறி சிலர், சீட் பெல்ட்டை முதுகுக்குப் பின்னால் சொருகியெல்லாம் பயணிப்பதையும் பார்த்திருக்கிறோம். இந்த அலாரத்தைத் தடுப்பதுதான் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர். அதாவது, ‘சீட் பெல்ட் போடாமல் அலாரம் சத்தம் இல்லாமல் நிம்மதியாகப் பயணியுங்கள்’ என்று அதன் தாத்பரியத்தையே மாற்றி விற்பனை செய்யப்படும் சாதனம் இது. இவை இ-காமர்ஸ் தளங்களில் 250 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கின்றன.

சீட் பெல்ட்
சீட் பெல்ட்

மத்திய மோட்டார் வாகனச் சட்டப்படி இதுபோன்ற சாதனங்களை விற்பது சட்டவிரோதம். போக்குவரத்து விதிகளை மீறும் செயல்பாடாய் இச்சாதனம் இருப்பதால், இதை வாங்குவதோ விற்பதோ குற்றம். இனி இ-காமர்ஸ் நிறுவனங்களும் சட்டத்தை மீற உதவும் பொருள்களை விற்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி எவரேனும் இதுபோன்ற சாதனங்களை வாங்க முற்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும் என்பதைக் கவனியுங்கள் மக்களே!

மக்களின் அலட்சியத்திற்குத் தீனிபோடும் விதமாய் அமைந்திருக்கும் இந்த ஸ்டாப்பர்களுக்குத் தடை விதிக்கக்கோரி உடனே களத்தில் இறங்கிய நிதின் கட்கரிதான் இப்போது டாக் ஆஃப் தி ஏரியா!

கட்கரியின் கோபம் நியாயமானதுதான்! சீட் பெல்ட் போடுறதுல அப்படி என்னதான் கஷ்டம் ஓட்டுநர்களே, பயணிகளே!

- சுபஸ்ரீ (பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism