இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ்... கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான இந்த காம்பேக்ட் செடான், அதன் முந்தைய மாடலைவிடப் பலமடங்கு மேம்பட்ட தயாரிப்பாக இருந்தது! காரின் அளவுகள் கூடியதால், டூயல் டோன் கேபினின் இடவசதியிலும் பிராக்டிக்காலிட்டியிலும் அசத்தியது. 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 420 லிட்டர் பூட் ஸ்பேஸ் அதற்கான உதாரணம். மேலும் காரின் உட்புறம் முன்பைவிடப் பிரீமியமாகவும் சொகுசாகவும் இருந்தது. அமேஸ் என்னதான் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றாலும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதை வாங்கும்போது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் & மைலேஜ்

நான்குவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில், இரண்டாம் தலைமுறை அமேஸ் களமிறங்கியது நினைவிருக்கலாம். இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின், 90bhp பவர் & 11kgm டார்க்கைத் தருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், இந்த 4 சிலிண்டர் இன்ஜின் வந்தது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல், 100bhp பவர் & 20kgm டார்க்கை வெளிப்படுத்தியது. இதுவே CVT உடனான மாடல், 80bhp பவர் & 16kgm டார்க்கைத் தந்தது.

பெட்ரோல் - மேனுவல் நகரத்தில் 10.94 கிமீ மற்றும் நெடுஞ்சாலைகளில் 15.69 கிமீ மைலேஜ் தந்தால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் நகரத்தில் 10.96 கிமீ மற்றும் நெடுஞ்சாலைகளில் 15.67 கிமீ தூரம் சென்றது. டீசல் - மேனுவல் நகரத்தில் 17.87 கிமீ மற்றும் நெடுஞ்சாலைகளில் 21.47 கிமீ மைலேஜ் கொடுத்தது. டீசல் - ஆட்டோமேட்டிக் என்றால், ஒரு லிட்டருக்கு நகரத்தில் 14.8 கிமீ மற்றும் நெடுஞ்சாலைகளில் 18.9 கிமீ மைலேஜ் வந்தது. மற்றபடி இரு வெர்ஷன்களுமே, 145 கிமீ வேகத்தைத் தாண்டாது. (Speed Lock).

சிறப்பம்சங்கள்

அமேஸின் டாப் வேரியன்ட்களான V அல்லது VX ஆகியவற்றில் ஒன்றைப் பார்ப்பது நலம். ஏனெனில் அதில்தான் 15 இன்ச் அலாய் வீல்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக் கூடிய மிரர்கள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை இருக்கின்றன. பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மாடலில், போட்டி கார்கள் எதிலுமே இல்லாத பேடில் ஷிஃப்ட்டர்கள் இருக்கின்றன. பாதுகாப்பு வசதிகளான 2 காற்றுப்பைகள், ABS, EBD, ISOFIX, பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை, காரின் அனைத்து வேரியன்ட்களிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் எதிலுமே ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் & ரியர் ஏசி வென்ட்கள் கிடையாது என்பது நெருடல்.

பராமரிப்புச் செலவுகள்

2018-ம் ஆண்டில்தான் இந்த அமேஸ் களம் கண்டது என்பதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் உள்ள கார்கள் அனைத்துமே வாரன்ட்டியில்தான் இருக்கும் என்பது பெரிய ப்ளஸ் (3 ஆண்டுகள்/Unlimited கிமீ). ஒருவேளை நீங்கள் பார்க்கும் காரில் நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி பேக்கேஜ் இருந்தால், அது உங்களுக்கு நிச்சயம் போனஸ்தான். தற்போதைய BS-6 வெர்ஷனும், பார்ப்பதற்கு BS-4 மாடல் போலவே இருக்கும் என்பது செம! எனவே வசதிகளில் சில மாறுதல்களைத் தாண்டி, இரு கார்களுமே பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும்.

1 வருடம்/10,000கிமீ எனும் சர்வீஸ் கெடுவைக் கொண்டிருக்கும் அமேஸை ஒருமுறை சர்வீஸ் செய்வதற்கு, பெட்ரோல் மாடலுக்கு 3,500 - 4,500 ரூபாயும், டீசல் மாடலுக்கு 5,000 - 7,500 ரூபாயும் செலவாகும். இதர ஹோண்டா தயாரிப்புகளைப் போலவே இதுவும் நம்பகமான மாடல்தான் என்றாலும், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது இதன் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகம்தான். வீடு - ஆஃபீஸ் - வீடு என உங்கள் பயன்பாடு இருந்தால், பெட்ரோல் வெர்ஷன் ஓகே. நெடுஞ்சாலை/அதிக தூரப் பயன்பாடு இருந்தால், உங்களுக்கு டீசல் வெர்ஷன் நல்ல சாய்ஸ்.

காரில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

என்னதான் தரமான காராக இருந்தாலும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதை வாங்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது நலம். எனவே நீங்கள் பார்க்கும் அமேஸை, கரடுமுரடான சாலைகளில் ஓட்டிப் பாருங்கள். ஏனெனில் அப்போது டேஷ்போர்டில் இருந்து சத்தம் வருவதாக, இந்த காரை வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள். அதேபோல முன்பக்க சஸ்பென்ஷனில் இருந்து அதிகப்படியான சத்தம் வந்தால், Bushing அல்லது Lower சஸ்பென்ஷன் Arms ஆகியவற்றை மாற்ற வேண்டும் என அர்த்தம். இது பர்ஸின் பாரத்தைக் குறைக்காது என்பது ஆறுதல், மற்றபடி நீங்கள் பார்க்கும் காரின் ஃப்யூல் பம்ப், சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்யவும்.

கடந்த ஏப்ரல் 17, 2018 - மே 24, 2018 ஆகிய தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட 7,290 அமேஸை, EPS Sensor Harness-ல் பிரச்னை என ஹோண்டா ரீ-கால் செய்தது. ஒருவேளை உங்கள் முன்னே இந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட கார் இருந்தால், சர்வீஸ் ரெக்கார்டில் அது சரி செய்யப்பட்டுள்ளதா என்பதைச் செக் செய்துவிடவேண்டும். இல்லையெனில் ஸ்டீயரிங் வழக்கத்தைவிட கனமாக இருக்கும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் EPS Column மொத்தத்தையும் மாற்றவேண்டிய நிலை ஏற்படலாம். அமேஸ் ஓரளவுக்குப் புதிய கார்தான் என்பதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இதற்கு 6-8 லட்ச ரூபாய் வரை விலை தரலாம். காருக்குச் சிறப்பான ரீசேல் மதிப்பு இருப்பதால், இதன் விலையை அதிகமாகப் பேரம் பேசி வாங்குவது கொஞ்சம் கடினமே!