எலான்ட்ரா... எக்ஸிக்யூட்டிவ் செடான் பிரிவில் பின்சீட்டில் அமர்ந்து செல்வதற்கும், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரை ஓட்டுவதற்கும் ஏற்ற விதத்தில் இருக்கும் ஒரு கார் இது.

சொகுசுக்கும் வசதிகளுக்கும் புகழ்பெற்ற இந்த கார், கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. பிறகு 2019-ம் ஆண்டில் இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இங்கே வெளியானது. கூல்டு முன்பக்க சீட்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், Hands Free டெயில் கேட் போன்ற பல சிறப்பம்சங்களுடன், 6 காற்றுப்பைகள் - ஏபிஎஸ் - EBD - ESP- VSC எனப் பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் எலான்ட்ராவில் உண்டு. இப்படி தொழில்நுட்பத்தில் எகிறியடித்த இந்த கார், அதிக இடவசதி - தரமான கேபின் - சொகுசான ஓட்டுதல் - நிறைய வசதிகள் என பிராக்டிக்கலாகவும் இருந்தது. தவிர போட்டி கார்களைவிடச் சுமார் 2 லட்ச ரூபாய் குறைவான விலையில் எலான்ட்ரா கிடைத்ததுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்! தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த எக்ஸிக்யூட்டிவ் செடானை வாங்கும்போது, என்னென்ன கவனிக்க வேண்டும்

இன்ஜின் - கியர்பாக்ஸ், ஓட்டுதல் அனுபவம்

152bhp பவர் - 19.2kgm டார்க் - 14.6கிமீ அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்திய 2.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர் பெற்றிருக்கிறது (0 - 100 கிமீ வேகம்: 10.46 விநாடிகள்). எனவே எதிர்பார்த்தபடியே மைலேஜில் இந்த மாடல் பின்தங்கி விடுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சிட்டியில் காரை மென்மையாக இயக்கும்போதே 8 கிமீ அளவில்தான் மைலேஜ் கிடைக்கும். இதுவே காரை விரட்டி ஓட்டும்போது, தடாலடியாக 4-5 கிமீ அளவுக்கு மைலேஜ் விழுந்துவிடும்! Normal, Eco, Sport என 3 டிரைவிங் மோடுகள் இருந்தாலும், அவை காரின் மைலேஜில் பெரிய முன்னேற்றத்தைத் தராது.

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எலான்ட்ராவில் இருந்தது என்றாலும், எக்ஸிக்யூட்டிவ் செடான் பிரிவில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கே டிமாண்ட் அதிகம். மேலும் குறைவான விலை காரணமாக, பெட்ரோல் வெர்ஷன்களே அதிகமாக விற்பனையாகின. எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில் இவை நிறையவே இருக்கும்.

எனவே அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்களுக்கு, பிராக்டிக்கலான 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனை எலான்ட்ராவில் வழங்கியது ஹூண்டாய். இது முந்தைய வெர்னா மற்றும் க்ரெட்டாவில் இருந்த அதே 4 சிலிண்டர் இன்ஜின்தான் என்பதுடன் (128bhp பவர் - 26kgm டார்க்), போதுமான செயல்திறனையும் இது கொண்டிருந்தது. ஆனால் பெரிய காரில் சிறிய இன்ஜின் என்பதால், அதிரடியான பெர்ஃபாமென்ஸை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கக் கூடும். மேலும் பெட்ரோல் மாடலில் கிடைக்கும் ஸ்மூத்னெஸ், டீசலில் கிடைக்காது.

இது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வெளிவந்தது என்றாலும், அதன் விலை வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதர ஹூண்டாய் கார்களைப் போலவே இங்கும் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் டல் ரகம் என்பதுடன், பாடி ரோலையும் காருக்குள்ளே இருப்பவர்களால் உணர முடியும்.

என்னென்ன கவனிக்க வேண்டும்?

நாடு முழுக்கப் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க்கைப் பெற்றிருக்கும் ஹூண்டாயின் கார்களைப் பராமரிப்பதில், எந்த நடைமுறைச் சிக்கல்களும் இருக்காது. இது உயரம் குறைவான, அதேசமயம் நீளமான கார் என்பதால், பம்பர்கள் - காரின் அடிப்பகுதி - ரியர்வியூ மிரர்கள் பொருத்தப்பட்ட முன்பக்கக் கதவுகள் ஆகியவை சேதமடைந்திருக்கின்றனவா என்பதைச் செக் செய்யவும்.

இது ப்ரீமியம் கார் என்பதால், இவற்றைச் சரிசெய்ய கொஞ்சம் அதிகமாகச் செலவாகும் என்பதை நினைவில் கொள்ளவும் (உதிரிபாகங்களின் விலையும் காஸ்ட்லிதான்). முன்பக்க பிரேக் பேடுகள் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவை, விரைவாகத் தேய்மானம் அடைவதாகப் புகார்கள் எழுந்தன. எனவே நீங்கள் பார்க்கும் காரில் இவை சரியாக இல்லை என்றால், முன்பக்க சஸ்பென்ஷனை மாற்றுவதற்கு மட்டும் 30,000 ரூபாய் தேவைப்படும்.

மேலும் 4 வீல்களுக்குமான பிரேக் பேடுகள் (10,000 ரூபாய்) மற்றும் டிஸ்க் (17,000 ரூபாய்) ஆகியவற்றை மாற்றுவதும் பர்ஸைப் பதம் பார்க்கக்கூடியவைதான். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் க்ளட்ச்சும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் அதன் கியர்பாக்ஸும் சரியாக இயங்குகின்றனவா என்பதைப் பரிசோதிக்கவும். எலான்ட்ராவின் ஜெனரல் சர்வீஸுக்கு 6,000-8,000 ரூபாய் வரையும், மூன்றாண்டு பழைய காரின் இன்சூரன்ஸுக்கு 13,000-17,000 ரூபாய் வரையும் செலவாகும்.

கடந்த 2018-ம் ஆண்டில், எலான்ட்ராவின் சிறப்பம்சங்களைக் கொஞ்சம் அதிகப்படுத்தியது ஹூண்டாய். வயர்லெஸ் சார்ஜிங், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், Autolink கனெக்ட்டிவிட்டி ஆகியவை அதில் முக்கியமானவை. தற்போதைய ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடும்போது, TPMS - ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி - டூயல் டோன் கேபின் - Branded ஆடியோ சிஸ்டம் போன்ற சில அம்சங்களே இந்த எலான்ட்ராவில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை மற்றும் தீர்ப்பு

மிட்சைஸ் செடான்களுடன் ஒப்பிடும்போது, எக்ஸிக்யூட்டிவ் செடான்களின் விற்பனை எப்போதுமே குறைவாகவே இருந்திருக்கிறது. தற்போது BS-6 விதிகள் அமலுக்கு வந்துவிட்ட பிறகு, கரோலா ஆல்ட்டிஸ் - ஆக்டேவியா போன்ற மாடல்கள் அதற்கேற்றபடி அப்டேட் ஆகவில்லை. அதற்கும் முன்பாகவே ஃப்ளூயன்ஸ் - க்ரூஸ் - ஜெட்டா - Teana ஆகியவை நம்மிடமிருந்து பிரிந்துவிட்டன. எனவே சுமார் 9-10 லட்ச ரூபாய்க்குள், 3 ஆண்டுகள் பழைய எலான்ட்ராவை வாங்கலாம். இதன் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் BS-6 வெர்ஷன்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டதால், விலை விஷயத்தில் இன்னும்கூட கறாராக இருக்கலாம். ஆனால் 2016-ம் ஆண்டில் வெளிவந்த எலான்ட்ரா, இன்றும்கூட பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கிறது. அதுவும் அந்த நீல நிறத்தில் கார் கிடைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்! தற்போது விற்பனை செய்யப்படும் காரில் ஆட்டோ ஹோல்டு வசதி கிடையாது என்பது கவனிக்கத்தக்கது (ஸ்மார்ட் டிரைவிங் மோடு புதுசில் உண்டு). மற்றபடி பல விஷயங்களில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு இணையான அனுபவத்தையே யூஸ்டு காரும் தரக்கூடும். அதுவும் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலையில் என்பது, இந்த டீலை இன்னும் ஸ்பெஷல் ஆக்கிவிடுகிறது.