Published:Updated:

3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!

ஸ்விஃப்ட் டிசையர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்விஃப்ட் டிசையர்

பழைய கார்: மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர்

3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!

பழைய கார்: மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர்

Published:Updated:
ஸ்விஃப்ட் டிசையர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்விஃப்ட் டிசையர்
3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!

கார் : ஸ்விஃப்ட் டிசையர்

மேக்: மாருதி சுஸூகி

மாடல்: 2013

டைப்: செடான்

எரிபொருள்: டீசல்/பெட்ரோல்

விலை: சுமார் 3.5 – 4 லட்சம்

ப்ளஸ்: நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்புச் செலவு, டீசல் மைலேஜ்

மைனஸ்: தடதடக்கும் உள்பக்கம், சீக்கிரம் தேயும் பிரேக் பேடுகள், பின் பக்க நெருக்கடி

நமக்குத் தெரிந்து ஒரு வாசகரின் கார், வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மறுபடியும் அதை ரீ–சர்வீஸ் செய்து, இன்ஜின் வேலை பார்த்து, பட்டி டிங்கரிங் பார்த்து புத்தம் புதுக் கார் மாதிரி வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதற்கு அவர் பெரிதாகச் செலவழிக்கவில்லை. இன்ஷூரன்ஸும் பெரிதாகப் பழுக்கவில்லை. ‘‘முந்தைய மாதிரியே செமையா இருக்கு சார். வெள்ளத்தில் மூழ்கின கார் மாதிரியே தெரியலை! மைலேஜும் அடிவாங்கும்னு நினைச்சேன். பழசைவிட அதிகமாகவே கொடுக்குது!’’ என்று புளகாங்கிதம் அடைந்தார்.

அந்த காரை 2 ஆண்டுகள் வைத்திருந்து, ரீ–சேல் செய்தார். அப்போதும் பெரிதாக மதிப்பிழக்கவில்லை. போட்டி போட்டே வாங்கினார்கள். அந்த கார், ஸ்விஃப்ட் டிசையர். மாருதி கார்களின் பலமே இதுதான்! வாடிக்கையாளர்களை ஏமாற்றாத கார் என்றே பெயரெடுத்திருக்கிறது மாருதி. அப்படிப்பட்ட டிசையரை பழைய கார் மார்க்கெட்டில் வாங்கலாமா? வாங்கும்போது என்னென்ன கவனிக்கணும்?

2008-ல்தான் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் முதல் ஜெனரேஷனை வைத்து முதன் முதலில் லாஞ்ச் செய்யப்பட்டது டிசையர். அதனால், இதை டிக்கி வைத்த ஸ்விஃப்ட் என்றார்கள் மார்க்கெட்டில். அதேநேரம், ஸ்விஃப்ட்டுக்குக் கிடைத்த அதே வரவேற்பு டிசையருக்கும் கிடைத்தது மாருதிக்குப் பெரிய பலமாகிப் போனது. இதற்குக் காரணம், 4 மீட்டருக்குண்டான சப் 4 மீட்டர் செடானாக இதைக் கொண்டு வந்து, மக்களுக்கு வரியில் கை வைக்காமல் மாருதி புத்திசாலித்தனமாக இதைக் கையாண்டது. இதன் தூக்கலான டிக்கி, பலருக்குப் பிடிக்கவில்லையென்றாலும், பிற்காலத்தில் டாக்ஸி மார்க்கெட்டிலும் இதை நுழைத்து விட்டது மாருதி. இப்போது கூட டிசையர் டூர் என்ற பெயரில் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

அப்போது டீசலுக்கு நல்ல வரவேற்பு. பிறகு, 2012–ல் 1.2லி கே சீரிஸ் இன்ஜினை இதில் ரீப்ளேஸ் செய்தது மாருதி. 2015–ல் ஒரு ஃபேஸ்லிஃப்ட். நடுவில் 2016–ல் AGS எனும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலிலும் டிசையர் வந்தது. இது தவிர, 5 ஸ்பீடு ஏஎம்டி மாடலிலும் வந்தது. 2017–ல் 3–வது ஜெனரேஷன். இப்போது நாம் பார்க்கப் போகும் மாடல், செகண்ட் ஜென் டிசையர் 2013.

இந்த மாடலுக்கு அதிக மவுசு உண்டு. மாருதியைத் தவிர இன்னொரு காரணம், இதிலுள்ள 1.3லி மல்ட்டி ஜெட் ஃபியட் டீசல் இன்ஜின். பெட்ரோல் மாடல் எடுக்கப் போகிறீர்கள் என்றால், கொஞ்சம் லேட்டஸ்ட்டாகப் பாருங்கள். ஆட்டோமேட்டிக் எடுப்பது உங்கள் சாய்ஸ். இதிலேயே டாப் எண்டான Z ட்ரிம் கிடைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

மாருதி டிசையரின் உள்பக்கத் தரம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதீர்கள். இதன் பிளாஸ்டிக் தரம் கொஞ்சம் ப்ரீமியம் ரகமாகவெல்லாம் எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், கையைக் கடிக்காது இதன் பராமரிப்புச் செலவு.

3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!
3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!
3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!
3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!

இங்கே நான் டீசலை ஏன் பரிந்துரைக் கிறேன் என்றால், இதன் மைலேஜுக்காக மட்டுமே! சிட்டிக்குள் ஆவரஜோக 18 கிமீ தரும் இந்த டிசையர். அதேநேரம், ஹைவேஸில் சுமார் 22 கிமீ வரை மைலேஜ் தருகிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆக, டிசையரின் ஹைலைட்டே இதன் மைலேஜ்தான். மேலும், இந்த ஃபியட் இன்ஜினின் பெப்பியான பெர்ஃபாமன்ஸ் கொண்டு ஹைவேஸில் பறப்பது ஜில்லென்ற அனுபவமாக இருக்கலாம். ஆனால், இந்த டீசலில் டர்போ லேக் மட்டும் கொஞ்சம் படுத்தி எடுக்கும். மலைப் பயணங்களில் இது கொஞ்சம் சுணக்கமாக இருக்கலாம்.

இதன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இன்ஜின் பார்ட்னர்ஷிப்பும் பிரமாதம். இப்போது 2020–ல் டீசலை நிறுத்தி விட்டது மாருதி என்பதைக் கவனியுங்கள். பெட்ரோல் மாடல் என்றால், அதற்காக மைலேஜ் நன்கு அடி வாங்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. சிட்டிக்குள் இந்த 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின், சுமார் 16 கிமீ–க்கு மிகாமல் மைலேஜ் தருகிறது.

2017– 2020 டிசையர், L, V, Z, Z+ என்று நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதுவே நாம் பார்க்கப் போவது, LDi, VDi, ZDi என்று 3 வேரியன்ட்களில் கிடைக்கும். இதில் டாப் எண்டில் கொஞ்சம் வசதிகள் அதிகம். அதற்காக இதில் பட்டன் ஸ்டார்ட், டச் ஸ்க்ரீன் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நடு வேரியன்ட்டான VDi–ல் விங் மிரர்களை உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்வது, 4 பக்கமும் பவர் விண்டோக்கள், பழைய சார்ஜிங் ஸாக்கெட், பட்டன் கொண்ட ஆடியோ சிஸ்டம் போன்றவை உண்டு.

டிசையரில் பின் பக்க இடவசதிதான் கொஞ்சம் குறையாகப் பேசப்படக் கூடிய விஷயம். உதாரணத்துக்கு, ஐ20 காரில் இருப்பதுபோன்ற சொகுசு, டிசையரில் கிடைக்கவில்லை என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இந்த செக்மென்ட்டிலேயே குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட கார், ஸ்விஃப்ட் டிசையர்தான். ஆண்டுக்கு 6,000 ரூபாய் மட்டுமே செலவு செய்திருப்பதாக, ஒரு டிசையர் உரிமையாளர் சொல்கிறார். நீங்கள் வாங்கப் போகும் கார், எப்படியும் 70,000 கிமீ–க்கு மேல் ஓடியிருக்கும். அப்படியென்றால், நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் க்ளட்ச் வியர், ஸ்டீயரிங் அசெம்பிளி மற்றும் கியர்பாக்ஸ் அசெம்பிளியை. உங்கள் பட்ஜெட்டில் இருந்து எக்ஸ்ட்ராவாக ஒரு 15,000 ரூபாய் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல், டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உள்ளே ‘தடதட’ அதிர்வுகள் வருகிறதா என்பதைக் கவனியுங்கள். சஸ்பென்ஷன் ஏரியாவிலும் ஒரு கண் இருக்கட்டும். ‘தட் தட்’ என சத்தம் வந்தால்… சஸ்பென்ஷனில் வேலை இருக்கலாம்.

அதேபோல், பிரேக்கில் இருந்து ‘க்ரீச்’ சத்தம் வருகிறதா என்பதையும் கவனியுங்கள். வேகமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது, சில அதிர்வுகள் தெரிகிறதா என்பதையும் நோட் செய்யுங்கள். பெரிதாக ஒன்றும் இருக்காது – Worn out Brake Pad–கள்தான் காரணமாக இருக்கலாம். அடிக்கடி இவை தேய்மானம் பெறுவதாகவும் சொல்கிறார்கள் சிலர். இவற்றுக்கும் பெரிதாகக் கையைக் கடிக்காது என்பது தைரியமான விஷயம். டிஸ்க் பிரேக் இருந்தால், அதிலும் கவனம் தேவை. ரீப்ளேஸ் செய்ய வேண்டியிருந்தால், அதற்கும் சேர்த்து பேரம் பேசலாம்.

3.5 லட்சம் பட்ஜெட்டில் எக்ஸ்ட்ராவாக ஒரு 20,000 – 25,000 எடுத்து வைத்துக் கொண்டால்… புத்தம் புது டிசையரையே நீங்கள் உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வரலாம். காரணம், நீங்கள் வாங்கிப் பயன்படுத்திய பிறகும், உங்கள் டிசையருக்கு மார்க்கெட் வேல்யூ கிண்ணென இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

3.5 லட்சம் பட்ஜெட் கையைக் கடிக்காத டிசையர்!