Published:Updated:

ரா.. ரா… மைலேஜ் மைக்ரா! 3 லட்சம் பட்ஜெட்டில் மைக்ரா எப்படி?

 பழைய கார்: நிஸான் மைக்ரா
பிரீமியம் ஸ்டோரி
பழைய கார்: நிஸான் மைக்ரா

பழைய கார்: நிஸான் மைக்ரா

ரா.. ரா… மைலேஜ் மைக்ரா! 3 லட்சம் பட்ஜெட்டில் மைக்ரா எப்படி?

பழைய கார்: நிஸான் மைக்ரா

Published:Updated:
 பழைய கார்: நிஸான் மைக்ரா
பிரீமியம் ஸ்டோரி
பழைய கார்: நிஸான் மைக்ரா
ரா.. ரா… மைலேஜ் மைக்ரா!
3 லட்சம் பட்ஜெட்டில் மைக்ரா எப்படி?

மாடல்: 2014

வாங்கக் கூடிய விலை : சுமார் 2.75 – 3.0 லட்சம்

ப்ளஸ்: வசதிகள், பெப்பியான இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், சிட்டி டிரைவிங்

மைனஸ்: லேசாக பாடி ரோல் தெரிவது, உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நிஸான் மைக்ராவுக்கு ஒரு ஸ்பெஷல் பெருமை இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியாவில் முதன் முதலில் கீலெஸ் என்ட்ரி வசதி கொண்டு வந்த ஒரு ஹேட்ச்பேக் என்றால், அது நிஸான் மைக்ராதான்.

பழைய கார் மார்க்கெட்டில் நிஸானுக்குப் பெரிய மதிப்பு இல்லைதான்; ஆனால், நிஸான் மைக்ரா அப்போதைய ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் வெற்றிகரமாக வலம் வந்த ஒரு கார். ஸ்விஃப்ட், ஐ10, டட்ஸன், ஃபியட் புன்ட்டோ போன்ற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுத்தது மைக்ரா. சிட்டிக்குள் கட் அடித்து ஓட்டுவதற்கு பெப்பியாகவும், இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும்தான் இதன் பெரிய ப்ளஸ் ஆகப் பார்க்கப்பட்டது. பழைய கார் மார்க்கெட்டில் நிஸான் மைக்ரா வாங்கலாமா?

வரலாறு

நிஸான், 2005–ல்தான் இந்தியாவில் முதன் முதலில் லாஞ்ச் செய்தது. ஆனால், நிஸான் நிறுவனத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த மூத்த ஹேட்ச்பேக் இந்த மைக்ரா. ஜப்பான் நிறுவனமான நிஸான், ஃப்ரெஞ்ச் நிறுவனமான ரெனோவுடன் கூட்டணி வைத்த பிறகு பல்ஸின் நிஸான் பேட்ஜாக மைக்ராவைக் கொண்டு வந்தது நிஸான். அதாவது, பல்ஸும் மைக்ராவும் ஒண்ணு. அப்போது 4.9 லட்சம் முதல் 5.15 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் வந்தது மைக்ரா. BS-6 நார்ம்ஸைச் சமாளிக்க முடியாமல் 3 கார்களில் கை வைத்தது நிஸான். அதில் மைக்ராவும் ஒன்று. இப்போது மார்க்கெட்டில் 3 லட்சத்துக்கு அற்புதமான மைக்ராவைத் தேடிப் பிடித்தால் வாங்கலாம். மைக்ராவை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

எந்த இன்ஜின் பெஸ்ட்?

மைக்ராவில் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் உண்டு. இதன் 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின், சிட்டிக்குள் ஓட்டுவதற்கு சூப்பர் பெப்பியாக இருக்கும். ஆனால், இது 3 சிலிண்டர் இன்ஜின் செட்அப்தான். அதனால், மைலேஜ் பற்றியும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அற்புதமாக இருக்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உண்டு. சில மைக்ரா உரிமையாளர்கள், சிட்டிக்குள் இதை ஓட்டுவது ஜாலியாக இருப்பதாகப் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

சில காலியான நெடுஞ்சாலைகளில் இதன் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்… 6,800rpm வரை இதன் ஆர்பிஎம் மீட்டர் முள் துடிக்கும். இதன் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமன்ஸும் அசத்தல். அதனால், ஓவர்டேக் செய்வது ஈஸியாக இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் இது போடும் சத்தம்தான் கொஞ்சம் தொந்தரவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கேபினுக்குள் அந்தச் சத்தம் படுத்தி எடுக்கவும் செய்யும். எனவே, நீங்கள் பழைய கார் மார்க்கெட்டில், ஹைவேஸில் ஒரு ரெவ் அடித்துப் பாருங்கள்.

இதன் டீசலுக்கு வரலாம். இதிலிருப்பது 1.5 லிட்டர், SOHC, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின். இதன் பவர் 64bhp. டார்க் 160Nm. இதிலும் 5 ஸ்பீடு மேனுவல்தான். வழக்கம்போல் ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் அதே மைக்ராதான். இன்ஜினைப் பொருத்தவரை பெட்ரோலைவிட டீசலைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், பெட்ரோலைவிட அதிகமான 1 சிலிண்டர் மற்றும் நெடுஞ்சாலையில் இதன் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்… 140 கிமீ வரை பறக்க முடியும் இந்த இன்ஜினின் செயல்பாடு… என எல்லாமே ப்ளஸ் ஆகவே சொல்கிறார்கள். சிட்டிக்குள்ளும் பெட்ரோல் மாதிரியே இதன் செயல்பாடு அருமையாகவே இருக்கிறது.

ஆனாலும், மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு மைலேஜ்தானே முக்கியம்! இது பெட்ரோலைவிட அசத்தலமான மைலேஜ் தரும். நமது வாசகர் ஒருவர் நிஸான் மைக்ரா டீசல் வைத்திருக்கிறார். ‘‘இப்போ மைலேஜ் குறைஞ்சிடுச்சு!’’ என்று வருத்தப்பட்டார். ‘‘எவ்வளவு தருது’’ என்றால் சிட்டிக்குள் 18 கிமீ என்கிறார். அதாவது, இதற்கு முன்பு அவருக்கு 18 கிமீ–யைத் தாண்டித் தந்திருக்கிறது என்று அர்த்தம். நெடுஞ்சாலைகளில் 20 – 21 கிமீ தருவதாகச் சொன்னார் அவர். 41 லிட்டர் டேங்க் இருப்பதால்… அடிக்கடி பெட்ரோல் பங்க்குகளில் நிறுத்தத் தேவையில்லை. ஆனால், மைக்ராவின் பெட்ரோல் வேரியன்ட், சுமார் ஆவரேஜாக 14 கிமீதான் தருவதாகச் சொல்கிறார்கள்.

இதில் விண்டோக்களும் பெரிதாக இருப்பதால்… விசிபிலிட்டி பக்காவாக இருக்கிறது. சில ஹேட்ச்பேக்குகளில் பிளைண்ட் ஸ்பாட் ஏற்படும். மைக்ராவில் அப்படி எதுவும் பிரச்னை இருந்ததில்லை.

ரா.. ரா… மைலேஜ் மைக்ரா!
3 லட்சம் பட்ஜெட்டில் மைக்ரா எப்படி?
ரா.. ரா… மைலேஜ் மைக்ரா!
3 லட்சம் பட்ஜெட்டில் மைக்ரா எப்படி?

என்ன குறை?

மைக்ராவில் பெரிதாகக் குறைகள் இல்லை. 140 கிமீ வரை பறந்தாலும், இதன் டைனமிக் லெவல் கொஞ்சம் அசமந்தமாகவே இருக்கிறது. காரணம், இதன் குறைவான எடை. வெறும் 945 கிலோ எடைதான் என்பதால்… நெடுஞ்சாலைகளில் வேகங்களில் போகும்போது கார் ஆட வாய்ப்புண்டு. இதனால் பாடி ரோல் நிச்சயம் தெரியும். அதனால் வேகமாகப் போய் கார்னரிங் செய்வது மைக்ராவில் வேண்டாம். பின் பக்கம் டிரம் பிரேக்ஸ்தான் இருக்கும்.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் கம்மி. வெறும் 150 மிமீதான் என்பதால்.. மேடு பள்ளங்கள்… 5 பேரை ஏற்றி ஃபுல் லோடு அடித்துவிட்டு ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறும்போது கவனம் தேவை. இதன் பூட் ஸ்பேஸ் – வெறும் 251 லிட்டர்தான் என்பதைக் கவனத்தில் கொள்க.

என்ன கவனிக்கணும்?

மற்றபடி சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட ஜாலியாக இருக்கிறது மைக்ரா. காரணம், இதன் லைட் வெயிட் க்ளட்ச். எனவே, நீங்கள் கார் வாங்கும்போது, க்ளட்ச்சில் நன்றாகக் கவனம் வையுங்கள். மிகவும் கஷ்டமாக இருந்தாலோ… பயன்படுத்த கால் வலித்தாலோ… வார்ன் அவுட் க்ளட்ச் என்று அர்த்தம். மைக்ராவின் க்ளட்ச் அசெம்பிளி, பெரிதாக பர்ஸ் பழுக்காது என்றாலும், க்ளட்ச் பிளேட்டுக்குக் காத்திருக்க வேண்டும்.

நாம் ஏற்கெனவே சொன்னபடி வசதிகளில் இது கில்லியாக இருக்கிறது. மிட் வேரியன்ட்டான XL–லிலேயே கீலெஸ் என்ட்ரி, புளூடூத் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதனால், மிட் வேரியன்ட்தானே என்று ஒதுக்கி விடாதீர்கள். ஆனால் இதில் ஸ்டீயரிங் வீலில் மவுன்ட் செய்யப்படும் கன்ட்ரோல்கள் இருக்காது. இதுவே டாப் எண்ட் என்றால், எலெக்ட்ரானிக் விங் மிரர், 4 ஸ்பீக்கர், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், விண்ட் ஸ்க்ரீன் டிஃபாகர் போன்ற ஏகப்பட்ட வசதிகள் கிடைக்கும்.

மைக்ராவில் ஆக்டிவ் என்றொரு வேரியன்ட்டும் உண்டு. அதையும் பார்க்கலாம். மேலும் இதன் சஸ்பென்ஷன் ரிங்குகள் கொஞ்சம் வேலை வைப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் காரை ஓட்டும்போது ‘தட் தட்’ எனச் சத்தம் வருகிறதா என்பதைக் கவனியுங்கள். இன்டீரியர் பிளாஸ்க்டிஸில் கொஞ்சம் கவனம் வையுங்கள்.

‘‘8,500 கிமீ–க்கு ஒரு முறை என் சஸ்பென்ஷனில் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார் ஒரு மைக்ரா உரிமையாளர்.

மைக்ராவில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது – இதன் உதிரி பாகங்கள் பற்றித்தான். உதிரி பாகங்கள் மாற்றத் தேவையில்லாமல் இருக்கும் வரை எந்தத் தொந்தரவும் தராது மைக்ரா. பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறார் மைக்ரா உரிமையாளர். ஒருவர், ‘ஹெட்லைட்டின் பனிவிளக்கின் Bezel உடைந்ததற்கு, ஹெட்லைட் அசெம்பிளியே மொத்தமாக மாற்ற வேண்டியிருக்கிறது’ என்று கவலைப்பட்டார். அதற்கும் காத்திருக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்.

மற்றபடி, பராமரிப்பில் பக்காவாக இருக்கிறது. முதல் கார் வாங்க இருக்கிறீர்கள்… ‘பட்ஜெட்டும் குறைவா இருக்கணும்; மைலேஜும் செமயா தரணும்’ என்பவர்கள், மைக்ரா டீசலை ‘ரா ரா’ என்று தேடி ஓடலாம்.