போலோ ஹேட்ச்பேக்கின் விலை உயர்ந்த வெர்ஷன்தான் GT TSI. இதிலிருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DCT கூட்டணி, கார் ஆர்வலர்களிடையே பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸுக்கும் துல்லியமான இயக்கத்துக்கும் பெயர் பெற்றவை.

அதனால் குறுகிய காலத்தில் அதிக கி.மீ-க்கு அவை பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியம் அதிகம்! ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனான Hot Hatchback என்பது இதன் கூடுதல் பலம்!

ஒருவர் கைப்படப் பயன்படுத்திய போலோ GT TSI காராக இருந்தால், அதன் சர்வீஸ் ஹிஸ்டரி / கண்டிஷன் நன்றாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஏனெனில் Owner Cum Driver ஆக இருப்பவர்களுக்கு இது ஏற்ற காரும் கூட! மற்றபடி பழைய மாடலாக இருந்தபோதும், ஓட்டுதல் அனுபவம் - கட்டுமானம் மற்றும் கேபின் தரத்தில், போலோ GT TSI இன்றும்கூட லேட்டஸ்ட் கார்களுக்குச் சவாலாக இருக்கிறது. டாப் வேரியன்ட்டான Highline-ல் மட்டுமே கிடைக்கும் இதில், தேவைப்படும் வசதிகள் இருக்கின்றன.

190 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த காரின் மைலேஜும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் இருக்கிறது (நகரம்: 10.5 கிமீ, நெடுஞ்சாலை: 15.9 கிமீ). 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 11 விநாடிகளில் போலோ GT TSI எட்டிவிடும்!

ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக இருந்தாலும், குறைவான பின்பக்க இடவசதி காரணமாக இதில் 5 பேர் நீண்ட நேரம் வசதியாக பயணிக்க முடியாது. மேலும் ஃபுல் லோடில் செல்லும்போது, காரின் தரைப்பகுதி ஸ்பீடு பிரேக்கர்களில் தட்டுப்படும். டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதால், இதன் மைலேஜ் கார் ஓட்டும்விதத்தைப் பொறுத்தே அமையும். இதுபோன்ற கார்கள் விரட்டி ஓட்டப்பட்டிருக்கும் என்பதால், டயர்கள் மற்றும் சஸ்பென்ஷனை ஒருமுறை செக் செய்துவிடவும். DSG கியர்பாக்ஸின் Mechatronics அமைப்பில் கொஞ்சம் சிக்கலுக்கு வாய்ப்புண்டு. அப்படி நேர்ந்தால் 1 லட்ச ரூபாய்வரை செலவு வைக்கலாம். ஒருவேளை ஏபிஎஸ் சென்ஸார் செயலிழந்திருந்தால் (இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் வார்னிங் லைட் ஒளிரும்), ஒரு ஃப்யூஸின் விலையே 4,000 ரூபாய் என்பதைக் கருத்தில் கொள்க. சர்வீஸ் தொகையும் கொஞ்சம் அதிகம்தான்.

எஸ்யூவிகள் எப்போதுமே சொகுசு. எனவே போலோவிருந்து அப்கிரேடு ஆவதற்கு, ஹூண்டாய் க்ரெட்டா நல்ல சாய்ஸ். இதிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு.

ஃபோக்ஸ்வாகன் அளவுக்கு ஹூண்டாயின் டீசல் இன்ஜின் - டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கூட்டணி அதிரடியாக இயங்காவிட்டாலும், பிராக்டிக்கலான ஓட்டுதலுக்கு கேரன்ட்டி. போலோவைவிட அளவில் பெரிசுதான், ஆனால் க்ரெட்டாவின் டீசல் இன்ஜின் அதிக மைலேஜைத் தருவது பெரிய ப்ளஸ் (நகரம்: 11.5 கிமீ, நெடுஞ்சாலை: 16.5 கிமீ). எனவே காரை அடிக்கடிப் பயன்படுத்தும் பட்சத்தில், இங்கே செலவு செய்யும் அதிகத் தொகையை விரைவாகவே மீட்டுவிடமுடியும். க்ரெட்டாவில் 5 பேர் வசதியாக உட்காருவதற்கு இடமிருக்கிறது. பூட் ஸ்பேஸும் அதிகம்.

உயரமான சீட்டிங் பொசிஷன் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (190 மிமீ) - செம! 2015-ம் ஆண்டு அறிமுகமான இந்த மிட்சைஸ் எஸ்யூவி, டீசல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை SX+ வேரியன்ட்டில் மட்டுமே கொண்டிருந்தது. எனவே LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல் மிரர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், 2 காற்றுப்பைகள், ABS - EBD, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, ரூஃப் ரெயில், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் எனப் பல வசதிகள் இங்கே உண்டு.

ஆனால் 6 காற்றுப்பைகள், ESP, VSM, ECM, பார்க்கிங் அசிஸ்ட், HAC, சன்ரூஃப் போன்ற பல சிறப்பம்சங்கள், SX(O)-வில் மட்டுமே கிடைக்கும்.

க்ரெட்டாவில் என்ன விஷயங்களை செக் செய்ய வேண்டும்?

4 வருடங்கள் ஆகியிருப்பதால், டயர்களின் கண்டிஷனை முதலில் சரி பார்க்கவும். அவை சரியாக இல்லையெனில் அதனை மாற்றுவதற்கு 16 இன்ச் வீல்களாக இருந்தால் 25-28 ஆயிரம் ரூபாயும், 17 இன்ச் வீல்களாக இருந்தால் 40 ஆயிரம் ரூபாயும் செலவாகும். தவிர 50,000 கி.மீ-யைக் கடந்திருந்தால், காரின் சஸ்பென்ஷனை முழுமையாகச் சோதித்துப் பார்த்தல் நலம். ஒருவேளை இதைப் புதிதாக மாற்ற வேண்டுமென்றால், அதற்குத் தோராயமாக 22 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில், பிரேக் பேடு வழக்கத்தைவிட வேகமாகவே தனது செயல்திறனை இழந்துவிடும் (புதிய செட்டின் உத்தேச விலை - 5,000 ரூபாய்).

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, பவர் டெலிவரி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். அப்படி திக்கல் திணறலுடன் கார் இயங்கினால், இன்ஜெக்டர்கள் செயலிழக்கும் தருணத்தில் உள்ளன என அர்த்தம். இதனைச் சரிசெய்ய 80,000 ரூபாய் ஆகும். காரின் பாடி அடிபடாமல் இருக்கிறதா என்பதையும் செக் செய்துவிடவும்.