Published:Updated:

பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…

ரெனோ டஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ரெனோ டஸ்ட்டர்

பழைய கார்: ரெனோ டஸ்ட்டர்

பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…

பழைய கார்: ரெனோ டஸ்ட்டர்

Published:Updated:
ரெனோ டஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ரெனோ டஸ்ட்டர்

ப்ளஸ்: உறுதியான இன்ஜின், டிரைவிங் சொகுசு, ஆஃப்ரோடு தன்மை

மைனஸ்: கோளாறாகும் ஹை ப்ரஷர் பம்ப், க்ளட்ச் வியர், சிட்டி டிரைவிங்கில் கால் வலிக்க வைக்கும் ஹெவி க்ளட்ச்

பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…
பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…

ரெனோவை ஓவர்நைட்டில் ஒபாமா ஆக்கிவிட்டதில் டஸ்ட்டரின் பங்கு பெரியது. பின்னே சும்மாவா... பட்ஜெட் விலையில் ஒரு அசத்தலான எஸ்யூவியுடன் ரெனோ, சரியான கம்பேக் கொடுத்தது. ஒரு கார் ஹிட் என்பது, அந்த காரின் பழைய கார் மார்க்கெட்டின் வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். ஆம், பழைய மார்க்கெட்டிலும் இப்போது செம டிமாண்டாக இருக்கிறது டஸ்ட்டர்.

உங்கள் பட்ஜெட் 6 -7 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு எஸ்யூவி பார்க்கிறீர்கள் என்றால்… டஸ்ட்டரை யோசிக்காமல் டிக் அடிக்கலாம் என்பதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி!

டஸ்ட்டரின் முக்கியமான ப்ளஸ்ஸே – அதன் ஓட்டுதலும் டிரைவிங் சொகுசும்தான். எஸ்யூவிக்கான ஒரு கரடுமுரடான லுக்குடன், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இருக்கும் டஸ்ட்டரைப் பார்க்கும்போது, யாருக்குமே வாங்கத் தோன்றும். ஆனால், நீங்கள் சில விஷயங்களில்தான் கவனமாக இருக்க வேண்டும்.

பெட்ரோலா… டீசலா?

பெட்ரோல்/டீசல் என இரண்டு இன்ஜின்களிலும் டஸ்ட்டர் மார்க்கெட்டில் கிடைக்கும். நம்முடைய ஓட்டு – டீசலுக்குத்தான். காரணம், இந்த பெட்ரோல் இன்ஜின் டஸ்ட்டர், நகரத்தில் சுமாரான மைலேஜ் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள். மேலும், பெட்ரோலின் ரிஃபைன்மென்ட் ஸ்மூத்தாக இருந்தாலும், ஹைவேஸில் பன்ச்சியாக இருப்பதென்னவோ டீசலில்தான்.

மார்க்கெட்டில் டஸ்ட்டரைத் தேடும்போது, இரண்டு டஸ்ட்டர்கள் கிடைக்கலாம். 85bhp மற்றும் 110bhp. இதில் 110Ps மாடல்தான் அனைவரின் சாய்ஸாகவும் இருக்கிறது. இதன் டீசல் பன்ச், ஓட்டுதல் விரும்பிகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதேநேரம், 85bhp மாடலைவிட மைலேஜில் ரொம்பவும் பின்தங்கிவிடவில்லை 110 மாடல். இது நகரத்தில் சுமார் 12 கிமீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 16 கிமீ–யும் தருவதாகச் சொல்கிறார்கள். இத்தனை பெரிய எஸ்யூவிக்கு இது ஓகேதான்.

மார்க்கெட்டில் டஸ்ட்டரைத் தேடும் சிலர், இப்படியும் குறைபட்டுக் கொண்டார்கள். ‘‘ச்சே… இது 7 சீட்டர் மாடலா இருந்தா செமையா இருக்கும்ல!’’

டஸ்ட்டர் மட்டும் 7 சீட்டரில் வந்திருந்தால்… நிச்சயம் ஒரு புரட்சியே ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த மிட்சைஸ் எஸ்யூவி, ஒரு 5 சீட்டர் என்பதால்தான் இத்தனை பெரிய லெக்ரூம், ஹெட்ரூம் போன்ற இடவசதியும், பெரிய பூட்டும், சொகுசும் டஸ்ட்டரில் கிடைக்கிறது.

இதிலேயே நல்ல ஆஃப்ரோடு செய்ய விரும்புபவர்கள், 4X4 மாடலையும் பார்க்கலாம். இதன் அவுட்லுக்கும் 2வீல் டிரைவ் மாடலிலிருந்து நிறையவே வித்தியாசப்பட்டிருக்கும். Blacked out ஹெட்லைட்ஸ், புது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்போர்ட்டியான 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டச் ஸ்க்ரீனில் நேவிகேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வசதிகள் என்று கலக்கும். ஆனால், இதன் விலை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும். இதில் ஏபிஎஸ், இபிடி, ட்ராக்ஷன் கன்ட்ரோல், டூயல் காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உண்டு.

இன்டீரியர் தரம் அருமை. வாட்டர் பாட்டில்கள் வைக்க இடம் குறைவுதான். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை சோதனை போடவும். க்ளட்ச் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது.
இன்டீரியர் தரம் அருமை. வாட்டர் பாட்டில்கள் வைக்க இடம் குறைவுதான். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை சோதனை போடவும். க்ளட்ச் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது.
85bhp, 110bhp டீசல் என இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. மைலேஜுக்கு 85bhp பவர் நல்ல ஆப்ஷன்.
85bhp, 110bhp டீசல் என இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. மைலேஜுக்கு 85bhp பவர் நல்ல ஆப்ஷன்.
6 இன்ச் வீல்கள், போதுமான கி.கிளியரன்ஸ் குட்டி ஆஃப்ரோடு செய்யலாம்.
6 இன்ச் வீல்கள், போதுமான கி.கிளியரன்ஸ் குட்டி ஆஃப்ரோடு செய்யலாம்.
பின் பக்க இடவசதி ஓகே!
பின் பக்க இடவசதி ஓகே!


என்ன குறை?

முக்கியமான மாற்றம் என்று பார்த்தால்… 4வீல் டிரைவின் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் செட்–அப்! இது எப்படிப்பட்ட மோசமான சாலைகளையும் தாங்கும்.

டஸ்ட்டரின் வாடிக்கையாளர்கள், ஓட்டுதலில் குறையாகச் சொல்வது இதைத்தான். ஷார்ட் கியர் ரேஷியோவில் செட்அப் செய்யப்பட்ட இதன் எடை அதிகமான க்ளட்ச், சிட்டிக்குள் டஸ்ட்டரை ஓட்டும்போது, இடது கால் மரத்துப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதுவே அப்படியே நெடுஞ்சாலையில் போகும்போது 110bhp பவர் மாடல், தெறிக்க விடும். ஓட்டுவத்கு இதன் ரிஃபைன்மென்ட்டும் அற்புதம். 0–100 கிமீ–யை இது சுமார் 11.8 விநாடிகளுக்குள் ஸ்ப்ரின்ட் செய்கிறது. இது ஹைவேஸில் க்ரூஸிங் செய்வதற்கான கார் என்பதையே இது காட்டுகிறது.

டஸ்ட்டரில் இன்னொரு குறை – இதன் டர்போ லேக். 2,000ஆர்பிஎம்–முக்குள் இதன் டர்போ லேக், குறைந்த வேகங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்படும். அதுவும் மலைச்சாலைகளில் இது நன்றாகவே கடுப்பேற்றும். இதை நானே உணர்ந்திருக்கிறேன்.

பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…


இதைக் கவனிங்க!

டஸ்ட்டர் வாங்குவதற்கு முன், சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் ஹை ப்ரஷர் டீசல் பம்ப். நீங்கள் கார் பார்க்கும்போது, ஸ்டார்ட் ஆகும்போது க்ராங்க் ஆகத் திணறினாலோ… டெஸ்ட் டிரைவின்போது பவர் கொஞ்சம் தொம்மென்று இருந்தாலோ… ஒருவேளை – டீசல் ப்ரஷர் பம்ப்தான் அதற்கான முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம். சிட்டிக்கு வெளியே அல்லது மலைச் சாலைகளில் ஓடும் கார்களில், டீசல் அடல்ட்ரேஷன் அடிக்கடி நடக்கும் கார்களில், இந்த ப்ரஷர் பம்ப் கோளாறு ஏற்படும். டஸ்ட்டரைப் பார்க்கும்போது, உடன் ஒரு மெக்கானிக்கையும் அழைத்துச் செல்வது நல்லது. காரணம், இன்ஜெக்டர்கள் போன்றவற்றைச் சோதனை போட்டுக் கொள்ளுங்கள். காரணம், ஒரு டீசல் இன்ஜெக்டரின் விலை 32,000 ரூபாய். ப்ரஷர் பம்ப் மாற்ற வேண்டும் என்றால், இதற்காகவே தனியாக 50,000 ரூபாய் வரை எடுத்து வைக்க வேண்டும்.

அதன்பிறகு, க்ளட்ச் அசெம்பிளி. ஏற்கெனவே க்ளட்ச்தான் டஸ்ட்டரின் ஓட்டுதலில் பெரிய சுமை. நீங்கள் வாங்கப் போகும் டஸ்ட்டரின் க்ளட்ச்சை ஒரு முறைக்குப் பலமுறை சோதனை போட மறக்காதீர்கள்! அதிலும் ஹில் சைடு அதிகம் ஓட்டப்பட்ட கார்களில் கவனம். 50,000–க்கு மேல் ஓடியிருந்தால், இதில் அதிக சோதனை தேவை. ஒரு க்ளட்ச் அசெம்பிளி வியரின் விலை 15,000–த்துக்கு மேல் வரலாம்.

அதேபோல், ஏசி கம்ப்ரஸர் பற்றியும் நமது வாசகர் ஒருவர் குறை சொல்லியிருக்கிறார். ஏசி டிரெய்ன் பைப்பில் இருந்து தண்ணீர் லீக் ஆகி, டிரைவர் மற்றும் கோ–டிரைவர் காலடிகளில் சிக்கல் ஏற்பட்டதாகச் சொன்னார். எல்லாவற்றையும்விட இதுதான் செம காஸ்ட்லி. சுமார், 80,000 வரை பில் ஏற்றிவிட வாய்ப்புண்டு. அதற்குத்தான் மெக்கானிக் துணை!

நமது வாசகர் ஒருவர், டஸ்ட்டரின் ஓட்டுதல் பற்றியும், பராமரிப்பு பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 12,000 கிமீ–க்கு ஒரு முறை இதன் சர்வீஸ் செலவு சுமார் 4,500 முதல் 5,500 ரூபாய் வருவதாகச் சொல்கிறார். இதன் மைலேஜ் பற்றியும் அவரே சொல்கிறார்கள். சிட்டிக்குள் 11.8 கிமீ–யும், நெடுஞ்சாலையில் 16.8 தருவதாகவும் சொல்கிறார். டஸ்ட்டரின் ஃப்யூல் டேங்க் கொள்ளளவு 50 லிட்டர் என்பதால், ஒரு நெடுந்தூரப் பயணத்துக்கு டஸ்ட்டர் சிறந்த நண்பனாகவே இருக்கும்.

பழைய டஸ்ட்டர் வாங்கும்போது…
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism