Published:Updated:

பழைய சிட்டி... ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிக் கவலை இல்லை!

ஹோண்டா சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி

யூஸ்டு கார்: ஹோண்டா சிட்டி

பழைய சிட்டி... ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிக் கவலை இல்லை!

யூஸ்டு கார்: ஹோண்டா சிட்டி

Published:Updated:
ஹோண்டா சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி
நம் நாட்டில் புதிய கார்களின் விற்பனை, தற்போது சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இன்னொருபுறம் யூஸ்டு கார்களின் பக்கமும் மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஸ்விஃப்ட், கிராண்ட் i10 போன்ற மிட் காம்பேக்ட் பெட்ரோல் ஹேட்ச்பேக்குகளின் விலையில்,, ஒரு பெட்ரோல் செடானையே யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்க முடியும். இந்த ஏரியாவில் ஹோண்டா சிட்டிதான் தாதா என்பதால் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்), அதன் நான்காவது தலைமுறை மாடலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிட்டியின் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

கடந்த 2014-2017 வரையிலான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சிட்டியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், BS-6 அவதாரத்தில் இன்றும் கிடைக்கிறது. எனவே இந்த சொகுசு காருக்கான உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பார்ப்பதற்கு ஸ்டைலாகக் காட்சியளிக்கும் இந்த மிட்சைஸ் செடான், 2 இன்ஜின் & 3 கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் களம் கண்டது. இதிலிருக்கும் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் (1,497சிசி), 119bhp பவர் & 14.5kgm டார்க்கைத் தருகிறது. வழக்கமான 5 ஸ்பீடு மேனுவல் தவிர, 7 Step CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு ஆப்ஷன்களுடன் இந்த 4 சிலிண்டர் இன்ஜின் இணைக்கப்பட்டது. சத்தமின்றி இயங்கக்கூடிய இந்த NA இன்ஜினை விரட்டியும் ஓட்டலாம். CVT-ல், மேனுவல் கன்ட்ரோலுக்காக பேடில் ஷிஃப்ட்டர்கள் இருப்பது தனிச்சிறப்பு. நகரத்தில் 11 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 16 கிமீயும் மைலேஜ் தரும் சிட்டி. நகர்ப்புற டிரைவர்கள், CVT கொண்ட மாடலை வாங்குவது நலம். கார் ஆர்வலர் என்றால், மேனுவல் மாடலை டிக் அடிக்கலாம்.

பழைய சிட்டி... ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிக் கவலை இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஹோண்டா காரின் நெடிய வரலாற்றில் முதன்முறையாக, இதில்தான் டீசல் இன்ஜின் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் இடம்பெற்ற 1.5 லிட்டர் i-DTEC இன்ஜின் (1,498சிசி), 100bhp பவர் & 20kgm டார்க்கையும் தந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இந்த டர்போ டீசல் இன்ஜின், சீரான பவர் டெலிவரியைத் தன்வசம் கொண்டிருந்தது.

மிட் ரேஞ்சில் பெட்ரோல் இன்ஜின் கொஞ்சம் டல் என்றால், டீசல் இன்ஜின் அங்கேதான் ஸ்கோர் செய்கிறது. என்றாலும் அதன் கரகர சத்தம், இதன் மைனஸ் பாயின்ட்களில் ஒன்று. மற்றபடி நகரத்தில் 14.2 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 19.5 கிமீயும் மைலேஜ் என்பது வாவ்!

சிட்டியின் நான்காம் தலைமுறை காரின் BS-6 வெர்ஷனை, பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வாங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிறப்பம்சங்கள் மற்றும் ஓட்டுதல்

ஓட்டுதலைப் பொறுத்தவரை, திருப்பங்களில் வேகமாகச் செலுத்துவதற்கு ஏற்ற காராக சிட்டி இருக்கிறது. நம் ஊர்ச் சாலைகளைச் சமாளிக்கும்படி சஸ்பென்ஷன் செட்-அப் அமைந்திருக்கிறது. காரின் பின்பக்க இருக்கை செம சொகுசு. இதனுடன் Flat Floor சேரும்போது, பின்னே 3 பேர் உட்காருவதற்கான இடவசதி கிடைத்து விடுகிறது. டூயல் டோன் டேஷ்போர்டில் இருக்கும் சில்வர் & Piano Black ஃபினிஷ், கேபினுக்கு ரிச்சான லுக்கைத் தருகிறது. டாப் வேரியன்ட்களில் இருக்கும் லெதர் அப்ஹோல்ஸரி, ப்ரீமியம் ஃபீலுக்கு வலுச்சேர்க்கிறது. டிரைவர் வசம் இருக்கும்படி அமைந்திருக்கும் சென்டர் கன்சோலில் உள்ள ஏசிக்கான டச் கன்ட்ரோல்கள், அனைவருக்கும் பிடிக்குமா தெரியவில்லை. 510 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஓகேதான். ஆனால் இதன் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் என்பதால் ஸ்பீடு பிரேக்கர்களில் கவனம் தேவை.

பழைய சிட்டி... ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிக் கவலை இல்லை!

E, S, SV, V, VX எனும் 5 வேரியன்ட்களில் வெளியான சிட்டியின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல்கள், SV & VX வேரியன்ட்களில் மட்டுமே கிடைத்தன.

அப்போது விற்பனையான வெர்னாவுடன் ஒப்பிட்டால், இந்த ஹோண்டா வசதிகளில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது. எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில், டாப் வேரியன்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. அதன்படி சிறிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், சன்ரூஃப், Leatherette அப்ஹோல்ஸரி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரிக் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், பின்பக்க ஏசி வென்ட்கள், லெதர் கியர் நாப் ஆகியவற்றை உள்ளடக்கிய VX வேரியன்ட் நல்ல சாய்ஸ். கடந்த 2017-ம் ஆண்டில் வந்த இந்த மிட்சைஸ் செடானின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், ZX எனும் புதிய டாப் வேரியன்ட்டுடன் வந்தது. அதில் பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், LED ஹெட்லைட் & டெயில் லைட், புதிய பம்பர்கள், அலாய் வீல்கள், க்ரோம் கிரில் - காருக்கு ஃப்ரெஷ் லுக்கைத் தருகின்றன.

சிட்டியில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஸ்மூத்தாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏனெனில் இது Lagging/Freezing ஆவதற்குப் வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொள்ளலாம். கரடுமுரடான சாலைகளில் காரை ஓட்டும்போது டேஷ்போர்டில் இருந்து கடாமுடாவெனச் சத்தம் வருகிறதா என்பதைப் பாருங்கள். சீரற்ற தரத்தில் உள்ள ப்ளாஸ்டிக் பேனல்களே இதற்கான காரணி. பானெட், ஃபெண்டர், கதவுகள் ஆகிய பாடி பேனல்கள் சேதமடையாமல் இருக்கின்றனவா என்பதை செக் செய்யவும். ஏனென்றால் இவற்றின் விலை மிகவும் அதிகம். நீங்கள் பார்க்கும் யூஸ்டு கார் டீசல் மாடல் என்றால், அதன் இன்ஜின் சத்தத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்.

பழைய சிட்டி... ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிக் கவலை இல்லை!

இதற்கு நேர்மாறாக, பெட்ரோல் இன்ஜின் செம ஸ்மூத் ரகம். சிட்டியின் நான்காம் தலைமுறை மாடல் அறிமுகமானபோது, அதன் எக்ஸ்-ஷோரூம் விலை 7.42 லட்சத்தில் தொடங்கியது. எதிர்பார்த்தபடியே டாப் வேரியன்ட்களின் விலை, போட்டி கார்களைவிட மிகவும் அதிகமாக இருந்தன. அதே சூழல்தான், இதன் ஐந்தாம் தலைமுறை மாடலிலும் தொடர்கிறது.

நல்ல ரீ-சேல் மதிப்பைக் கொண்டிருக்கும் இந்த ஹோண்டா காரின் விலையை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் அந்தளவுக்குப் பேரம் பேசி வாங்க முடியாது. எனவே 6-8 லட்ச ரூபாய் வரை, உங்களுக்கான காரை நீங்கள் தேர்வு செய்யலாம். வேரியன்ட், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு ஏற்ப காரின் விலை மாறுபடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism