Published:Updated:

பழைய நெக்ஸான்... பார்த்து வாங்குங்க!

டாடா நெக்ஸான்
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா நெக்ஸான்

யூஸ்டு கார்: டாடா நெக்ஸான்

ஸ்டைல் மற்றும் இடவசதியுடன் கூடிய, பிராக்டிக்கலான காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, டாடா நெக்ஸான் சிறந்த ஆப்ஷன். இதன் ஃபேஸ்லிஃப்ட் - BS-6 மாடல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் களமிறங்கியது. எனவே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ்

நெக்ஸானின் BS-4 மாடலில் இருந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள், 110bhp பவரையே வெளிப்படுத்துகின்றன. 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், இதில் உண்டு. 3 சிலிண்டர் இன்ஜினாக இருந்தாலும், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குகிறது. ஆனால் குறைவான வேகங்களில் பவர் டெலிவரி சீராக இல்லை என்பதுடன், பர்ஃபாமன்ஸும் டெக்னிக்கல் விபரங்களுக்கேற்ப அதிரடியாக இல்லை. தவிர, இதன் மைலேஜும் திருப்திகரமாக இல்லை. எடை குறைவான கிளட்ச் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பயன்படுத்த வாட்டமாகவே இருக்கிறது. நெக்ஸானை நகரச்சாலைகளில் ஓட்டுவதற்குச் சுலபமானதாக மாற்றிவிடுகிறது AMT.

பழைய நெக்ஸான்... பார்த்து வாங்குங்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெக்ஸானின் ஓட்டுதல் முறைக்கு ஏற்றபடி, ஸ்மூத்தான 4 சிலிண்டர் டீசல் இன்ஜினின் செயல்பாடு அமைந்திருக்கிறது. 1,400rpm முதல் 4,000rpm வரை பவர் டெலிவரி ஒரே சீராக அமைந்திருப்பது ப்ளஸ். நகர்ப்புறங்களில் கைகொடுக்கும் AMT-ல் உடனுக்குடன் கியர்கள் மாறினாலும், அது ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டாத வரைதான். நெடுஞ்சாலைகளில் ரிலாக்ஸாகச் செல்வதற்கு, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் பெஸ்ட். நகரத்தில் 9 கிமீ (பெட்ரோல்), 14 கிமீ (டீசல்) - நெடுஞ்சாலையில் 13 கிமீ (பெட்ரோல்), 18 கிமீ (டீசல்) மைலேஜ் தந்தது BS-4 நெக்ஸான். AMT மாடல்களிலும் ஏறக்குறைய இதே மைலேஜையே எதிர்பார்க்கலாம். டிரைவிங் மோடுகள், அதன் பெயருக்கேற்ப பர்ஃபாமன்ஸில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேபின் & ஓட்டுதல் அனுபவம்

உயர் ரக Textured ப்ளாஸ்டிக்ஸ், Knitted Roof Liner, ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன், Harman சிஸ்டம் என ப்ரீமியமான அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. முன்பக்க - பின்பக்க இருக்கைகளில் இடவசதிக்குப் பஞ்சமில்லை. Swooping Roofline பின்பக்க ஹெட்ரூமைப் பாதிக்காதது செம! 350 லிட்டர் பூட் ஸ்பேஸ் தவிர, கேபினில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த ஃபிட் & ஃபினிஷ், கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான்

மோசமான சாலைகளைச் சமாளிக்கக் கூடிய விதத்தில், சஸ்பென்ஷன் செட்-அப் அமைந்திருக்கிறது. திருப்பங்களில் பாடி ரோல் குறைவாக இருப்பதுடன், நெடுஞ்சாலைகளில் காரின் நிலைத்தன்மையும் அற்புதம். குறைவான வேகங்களில் எடை குறைவாக இருக்கும் ஸ்டீயரிங், வேகம் செல்லச் செல்ல கனமாக மாறிவிடுவது நைஸ். Global NCAP க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் இந்திய கார்இதுதான்! ஆக, கொடுக்கும் காசுக்கேற்ற மதிப்பானதுதான் இது.

என்னென்ன கவனிக்க வேண்டும்?

கடந்த கால டாடா கார்களுடன் ஒப்பிட்டால், நெக்ஸானின் நம்பகத்தன்மை கூடுகிறது. போட்டி கார்களுக்குச் சமமாகவே, இதன் உதிரிபாகங்களின் விலை இருக்கிறது. ஆனால் டச் ஸ்க்ரீன் Flicker ஆவது, தானாகவே டிரைவிங் மோடுகள் மாறுவது மற்றும் ஹெட்லைட்ஸ் ஆன் ஆவது, சில சமயங்களில் ஹெட்லைட் ஒளிராதது போன்ற புகார்கள் எழுந்ததால், நீங்கள் பார்க்கும் காரின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தை முறையாகப் பரிசோதித்து விடுவது நலம். மேலும் AMT கொண்ட காரை ஸ்டார்ட் செய்தபிறகு, அது ஸ்மூத்தாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அப்படி நடக்காவிட்டால், அதிலிருக்கும் Creep மோடு செயலிழந்து விட்டது என அர்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில், க்ளட்ச்சின் தேய்மானத்தை செக் செய்துவிடவும். ஏனெனில் நெக்ஸானின் க்ளட்ச் அசெம்ப்ளியைப் புதிதாக மாற்ற, 10,000 ரூபாயைத் தாண்டி விடும்! ஸ்டீயரிங்கின் எடை அதிகமாகி, சில நேரங்களில் அது செயல்படாமல் போய் விடுவதாகவும் நெக்ஸானின் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். எனவே காரைத் திருப்பும்போது ஸ்டீயரிங்கின் எடை கணிசமாக அதிகரித்தால், மொத்த யூனிட்டையே மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான்

பழைய நெக்ஸானின் விலை என்ன?

BS-6 நெக்ஸானின் சென்னை ஆன்-ரோடு விலை, 8.25-15.5 லட்ச ரூபாய்வாக்கில் இருக்கிறது (இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் வேரியன்ட் பொறுத்து விலை மாறுபடும்). கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நெக்ஸான், ஓரளவுக்குப் புதிய கார்தான். எனவே யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய மாடல்கள், 30,000 கி.மீ-க்கும் மேலான தூரம் சென்றிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் பெட்ரோல் நெக்ஸான் 6-8 லட்ச ரூபாயும், டீசல் நெக்ஸான் 7-9 லட்ச ரூபாயும் விலை போகின்றன. தற்போது இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்துவிட்ட நிலையில், நீங்கள் பார்க்கும் நெக்ஸானின் விலையைக் கொஞ்சம் குறைத்துக் கேட்கலாம்.