Published:Updated:

பழைய கார் வாங்கப் போறீங்களா? இரண்டில் எது பெஸ்ட்?

ஹூண்டாய் கிராண்ட் i10
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் கிராண்ட் i10

யூஸ்டு கார் - வேகன் ஆர், கிராண்ட் i10

பழைய கார் வாங்கப் போறீங்களா? இரண்டில் எது பெஸ்ட்?

யூஸ்டு கார் - வேகன் ஆர், கிராண்ட் i10

Published:Updated:
ஹூண்டாய் கிராண்ட் i10
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் கிராண்ட் i10

புதுசோ, பழசோ... முதன் முதலில் கார் வாங்கும் பட்ஜெட் பார்ட்டிகளின் செக்லிஸ்ட்டில் நிச்சயம் வேகன் ஆர் காரும், கிராண்ட் i10-ம் இருக்கும். இந்த கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள், தற்போது வெற்றிகரமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. யூஸ்டு கார் மார்க்கெட்டில், அதன் முந்தைய வெர்ஷன்கள் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

எனவே 2.5 - 3.5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் யூஸ்டு கார் வாங்கும் முடிவில் இருப்பவர்களுக்கு, வேகன்-ஆர் நல்ல சாய்ஸ்தான். ஆனால் கூடுதலாக 1 லட்ச ரூபாய் செலவழித்தால், ப்ரீமியம் அனுபவத்தைத் தரக்கூடிய கிராண்ட் i10 காரை வாங்கிவிட முடியும் என்பது ப்ளஸ். இரண்டுமே பராமரிப்புச் செலவுகளில் உரிமையாளரின் கையைக் கடிக்காதவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாருதி சுஸூகி வேகன்-ஆர்

2014 வேகன்-ஆர் VXi: 2.6 - 3.3 லட்ச ரூபாய்

(உத்தேச சென்னை விலை)

வேகன்-ஆர்... ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப்-10 கார்களில் இடம்பிடிக்கும் கார்! நல்ல இடவசதியுடன் கூடிய பிராக்டிக்கலான ஃபேமிலி கார் எனப் பெயர் பெற்றிருக்கும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் K10 பெட்ரோல் இன்ஜின், நகரப் பயன்பாட்டுக்கு செமையாக உள்ளது.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்
மாருதி சுஸூகி வேகன்-ஆர்

இதை நம்பி வேகன்-ஆரை நெடுஞ்சாலைக்குக் கொண்டு செல்லும்போது, காரின் பலவீனங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது பவர் குறைபாடு தெரிவதுடன், நிலைத்தன்மையும் சுமார் ரகம்தான். மேலும் காரின் டிசைன் மற்றும் கேபின் வடிவமைப்பும், அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! தவிர பிளாஸ்டிக் தரம் மற்றும் கட்டுமானமும், இது பட்ஜெட் கார் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன! பாதுகாப்பு வசதிகளும் மிஸ்ஸிங். இதன் ஃபேன்ஸி வெர்ஷனாகச் சில காலம் விற்பனையான ஸ்டிங்ரே, அலாய் வீல்கள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸோடு விற்பனையானது.

ஹூண்டாய் கிராண்ட் i10

2015 கிராண்ட் i10 Asta O: 3.6 - 4.5 லட்ச ரூபாய் (உத்தேச சென்னை விலை)

துவும் டாப்-10 கார்களில் தவறாமல் இருக்கும் கார்தான்! மிட்சைஸ் காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டைச் சேர்ந்தது என்பதால், எதிர்பார்த்தபடியே வசதிகள் (எலெக்ட்ரிக் மிரர்கள், அலாய் வீல்கள், Cooled க்ளோவ்பாக்ஸ், ரியர் ஏசி வென்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட்) - கேபின் தரம் - ப்ரீமியம் அனுபவம் - பாதுகாப்பு அம்சங்கள் (2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்) ஆகியவற்றில் வேகன்-ஆருக்கு அடுத்த லெவலில் இருக்கிறது கிராண்ட் i10.

ஹூண்டாய் கிராண்ட் i10
ஹூண்டாய் கிராண்ட் i10

மேலும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருப்பதால், பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் கியாரன்ட்டி. தவிர, 4 சிலிண்டர் இன்ஜின் என்பதால், இது ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. ஆனால் வேகன்-ஆரைவிட இது குறைவான மைலேஜைதான் தரும். (வேகன்-ஆர்: 14.7 கிமீ, கிராண்ட் i10: 14கிமீ). நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் பயன்படுத்துவது சிரமமாக இல்லை. கிராண்ட் i10-ல் மெக்கானிக்கலாக எந்தக் கோளாறும் இல்லை. ஆனால் காரில் எலெக்ட்ரிக்கல் அம்சங்கள் அதிகம் என்பதால், அதில் சில பிரச்னைகள் வரலாம். பவர் விண்டோக்கள் செயலிழந்திருந்தால், அதனைச் சரிசெய்ய 1,800 - 2,500 ரூபாய் வரை செலவாகும். எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் வியூ மிரரின் மோட்டாரை மாற்றுவதற்கு 5,500 ரூபாய் வரை ஆகலாம்.

பேட்டரியையும் சோதிப்பது அவசியம். தவிர கார் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொறுத்து, ஸ்டீயரிங் கொஞ்சம் Off-Center ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை கார் ஒரு பக்கமாக இழுத்தால், வீல் அலைன்மென்ட் மற்றும் டயர்களை செக் செய்யவும்.

டயர்கள் பழசாகி இருந்தால், அதனை மாற்றுவதற்கு 16,000 ரூபாய் தேவைப்படும். கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, காரின் சஸ்பென்ஷன் கடாமுடா எனச் சத்தம் போட்டால், பர்ஸ்ஸின் கனம் குறைப்போகிறது என அர்த்தம்.