ஃபோக்ஸ்வாகனின் ஆட்டோ எக்ஸ்போ ஸ்டாலில், ரேஸ் போலோ மாடலைத் தவிர, வைக்கப்பட்டிருந்த அத்தனை கார்களும் எஸ்யூவிதான். `டிகுவான்தான் ஏற்கெனவே விற்பனையில் இருக்கிறதே’ என்று பார்த்தால், இங்கே வைக்கப்பட்டிருந்தது டிகுவான் ஆல்-ஸ்பேஸ். அதாவது டிகுவானின் 7 சீட்டர் மாடல்!

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5 சீட் மாடலை நிறுத்திவிட்டு, இந்த `ஆல்-ஸ்பேஸ்’ மாடலைக் கொண்டுவரப் போகிறது ஃபோக்ஸ்வாகன். டிகுவான் ஆல்-ஸ்பேஸின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது காரின் நீளம் அதிகரித்திருப்பது தெரியும். ஆல்-ஸ்பேஸ் மாடல் சாதாரண டிகுவானை விட 215மிமீ நீளம். 110மிமீ வீல்பேஸ் கூடியிருக்கிறது.

டேஷ்போர்டு டிசைன் அப்படியேதான் இருக்கிறது. வீல்பேஸ் கூடியிருப்பதால், 2-ம் வரிசை பயணிகளின் சீட் பின்னால் நகர்ந்து, முன்பைவிட இங்கே அதிக லெக்ரூம் கிடைக்கிறது.

மூன்றாம் வரிசை சீட் குழந்தைகளுக்கானது. பெரியவர்கள் வசதியாக உட்காரும் அளவுக்கு இங்கே இடமில்லை. லக்கேஜ் வைக்க 230 லிட்டர் பூட் ஸ்பேஸ்தான் இருக்கிறது. ஆனால், 3-ம் வரிசையை மடித்து வைத்தால், மொத்தம் 760 லிட்டர் ஸ்பேஸ் கிடைக்கும். 2-ம் வரிசை சீட்டையும் மடித்து வைத்துவிட்டால் மொத்தமாக 1,920 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.

இந்தியாவில் இந்த டிகுவான்தான் போக்ஸ்வாகனின் விலை உயர்ந்த கார். எனவே LED ஹெட்லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெமரி சீட், 360 டிகிரி கேமரா என கிட்டத்தட்ட அனைத்து வசதிகளுமே இதில் இருக்கின்றன. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் காரில் இருக்கும் செமி அட்டானமஸ் டிரைவிங் வசதி இதில் இருக்கிறதா என்பது, முழு வசதிகளின் பட்டியல் வந்தபிறகே தெரியும்.

பழைய டிகுவானில் 143bhp பவர் தரும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இருந்தது. அதற்குப் பதிலாக ஆல்-ஸ்பேஸ் மாடலில், 190bhp பவர் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும்.

இந்த எஸ்யூவி, வரும் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்த காரின் முன்பதிவுகள், ஆட்டோ எக்ஸ்போவிலேயே தொடங்கிவிட்டன. இதன் எக்ஸ்ஷோரூம் விலை 35 முதல் 40 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். கோடியாக், சிஆர்வி உடன் இது போட்டிபோடும்.