Published:Updated:

சிட்டி, வெர்னா, சியாஸ், ஸ்லாவியா களத்தில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்!

ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

Walk Around : ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

சிட்டி, வெர்னா, சியாஸ், ஸ்லாவியா களத்தில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்!

Walk Around : ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸூகி சியாஸ் ஆகிய கார்கள் களமாடும் மிட் சைஸ் செடான் செக்மென்ட்டில் இதுநாள் வரை வென்ட்டோவை விளையாட விட்டிருந்தது ஃபோக்ஸ்வாகன். இப்போது அந்த இடத்தில் அது இறக்கியிருக்கும் புதிய கார்தான் வர்ட்யூஸ். டெல்லி பிரஹதி மைதானத்தில் ஃபோக்ஸ்வாகன் இதை முதல் முதலாகக் காட்சிப்படுத்தியபோதே சூட்டோடு சூடாக இதை அருகில் சென்று நான்கு பக்கங்களில் இருந்தும் சுற்றிப் பார்த்தோம். உட்கார்ந்தும் பார்த்தோம். ஆனால், ஓட்டிப் பார்க்கவில்லை. `இப்போதைக்கு வாக்-அரவுண்டு’ மட்டும்தான் அன்று ஃபோக்ஸ்வாகன் சொல்லிவிட்டது.

தனது ரேபிட்டுக்கு மாற்றாக ஸ்கோடா அறிமுகப்படுத்திய கார் ஸ்லாவியா. அந்த ஸ்லாவியாவின் ஃபோக்ஸ்வாகன் வெர்ஷன்தான் இப்போது அறிமுகமாகியிருக்கும் இந்த வர்ட்யூஸ். அதனால் ஸ்லாவியா உற்பத்தி செய்யப்படும் அதே MQB A0-IN ப்ளாட்ஃபார்மில்தான் வர்ட்யூஸும் தயாரிக்கப்படுகிறது. அதனால் அகல, நீள, உயரங்களில் இது ஸ்லாவியா போலத்தான் இருக்கிறது. என்றாலும், இந்த செக்மென்ட்டிலேயே வர்ட்யூஸ்தான் நீளமான கார் என்று ஃபோக்ஸ்வாகன் கூறுகிறது. அதாவது - இதன் நீளம் 4,561மிமீ; அகலம் 1,752 மிமீ; உயரம் 1,507 மிமீ; வீல்பேஸ் 2,651மிமீ! இதன் டிக்கியும் 521 லிட்டர் அளவுக்குப் பெட்டி படுக்கைகளை வைக்க தாராளமாக இருக்கிறது.

வெளித்தோற்றம்: எந்த ஃபோக்ஸ்வாகன் காராக இருந்தாலும், முகப்பு என்பது அச்சு அசலாக ஒரே மாதிரிதான் இருக்கும். முன்பக்கத் தோற்றம் என்பது அதற்கு கையெழுத்துப்போல! அதனால் ஃபோக்ஸ்வாகனின் முத்திரை வர்ட்யூஸின் முகப்பில் வியாபித்து நிற்கிறது. ஆனால் அடிப்படை மாறாமல் கிரில், LED ஹெட்லாம்ப், பம்பர் மற்றும் ஏர் டேம் ஆகியவற்றில் கறுப்பு வண்ணத்தை இழையோடவிட்டு, அது கவர்ச்சியைக் கூட்டியிருக்கிறது. க்ரோமின் பயன்பாடு அளவோடு இருந்தாலும் அழகாக இருக்கிறது. காருக்கு ஒரு வண்ணம்; காரின் கூரைக்குக் கறுப்பு வண்ணம் என்ற இரட்டை நிலைப்பாடு இந்தக் காருக்குப் பொருத்தமாக இருக்கிறது. 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்களும், அதில் சிகப்பு வண்ணத்தில் இருக்கும் கேலிப்பர்களும், கறுப்பு வண்ணப் பக்கவாட்டுக் (ORVM) கண்ணாடிகளும் காருக்குக் கம்பீரம் சேர்க்கின்றன. அளவோடு செய்தால்தான் அலங்காரம் அழகாக இருக்கும் என்பதை ஃபோக்ஸ்வாகன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது. காரின் பின்னழகைக் கவனிக்கும்போது, இது நமக்கும் நன்றாகப் புரிகிறது. இருந்தும் இல்லாமல் இருக்கும் ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, டெயில் லாம்பின் டிசைன், அனைத்துக்கும் மேலாக VIRTUS என்று பொறிக்கப்பட்டிருக்கும் பெயரின் எழுத்துரு ஆகியவை காரைக் கச்சிதமாகக் காட்டுகின்றன.

சிட்டி, வெர்னா, சியாஸ், ஸ்லாவியா களத்தில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்!
சிட்டி, வெர்னா, சியாஸ், ஸ்லாவியா களத்தில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்!

உள்ளலங்காரம்: 3 ஸ்போக்ஸ் கொண்ட இதன் ஸ்டீயரிங் வீல் மற்றும் இதன் டேஷ் போர்டு ஆகியவை நவீனமாக இருக்கின்றன. ஆனால், எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆம்! டைகூனில் இருக்கும் பல அம்சங்கள் இதிலும் அப்படியே இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் தாண்டி டேஷ்போர்டு, கதவுகளின் கைப்பிடி, இருக்கைகள் என இழையோடும் சிகப்பு வண்ணம் காருக்கு வேறு ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. அலுமினியத்தில் இருக்கும் பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களின் டிசைன் இதற்கு விலை உயர்ந்த கார்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது.

கை, கால், தலை எல்லாம் எதுவும் இடிக்காமல், மிதமான அளவோடு, நல்ல தரத்தோடு சீட்கள் வசதியாக இருக்கின்றன. டிரைவர் சீட்டில் இருந்து பார்த்தால், சாலை தெளிவாகத் தெரிகிறது. இசை வழிந்தோட 8 ஸ்பீக்கர்கள் கொடுத்திருக்கிறார்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்க 10 இன்ச் தொடு திரை. இதில் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ள, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் `மைஃபோக்ஸ்வாகன் கனெக்டட் ஆப்’ ஆகிய வசதிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. இதெல்லாம் போதாது என்றால், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வென்ட்டிலேட்டட் சீட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங், கூல்டு க்ளோவ் பாக்ஸ், வயர்லஸ் சார்ஜிங், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வைப்பர்ஸ், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஹெட்ரெஸ்ட் ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு: 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்புக்கு அம்சங்கள் கொண்ட இந்த காரில் 6 காற்றுப்பைகள், ESC, டயர் ப்ரஷர் மானிட்டர், ரிவர்ஸ் கேமரா, குழந்தைகளுக்கான ISOFIX சீட்ஸ், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் ஆகியவையும் உண்டு.

இன்ஜின்: 115bhp சக்தியும், 175Nm டார்க்கும் கொண்ட 1.0 லிட்டர் 3 சிலிண்டர் TSI இன்ஜின்தான் வர்ட்யூஸை இயக்குகிறது. மேலும் சக்தி கொண்ட கார் வேண்டுமானால், 150bhp சக்தியும் 250Nm டார்க்கும் கொண்ட 1.5 லிட்டர் 4 சிலிண்டர் TSI இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. இந்த இரண்டு வேரியன்ட்டுகளுக்குமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். 1.0 TSI இன்ஜின் என்றால், கூடுதல் ஆப்ஷனாக 6 கியர்கள் கொண்ட டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷனும் உண்டு. இதுவே 1.5 லிட்டர் TSI இன்ஜின் என்றால் 7 கியர்கள் கொண்ட DCT ஆப்ஷனும் உண்டு. டைனமிக் லைன், பெர்ஃபாமன்ஸ் லைன் என்று இரண்டு வேரியன்ட்களாக வரும் வர்ட்யூஸில் தேர்ந்தெடுக்க ஆறு வண்ணங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் கையாளுமை மற்றும் ஓட்டுதல் அனுபவம், சக்தி, விலை, வாரன்ட்டி ஆகியவை தெரிய வரும்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு வர்ட்யூஸின் முழு சாதக பாதகங்கள் தெரியும்.

சிட்டி, வெர்னா, சியாஸ், ஸ்லாவியா களத்தில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ: 4,561/1,752/1,507 மிமீ

வீல்பேஸ்: 2,651 மிமீ

பூட் ஸ்பேஸ்: 521 – 1050 லிட்டர்

டச் ஸ்க்ரீன் : 10 இன்ச்

கனெக்டட் வசதி: உண்டு

இன்ஜின் : டர்போ 1.5லி 4 சிலி /1.0லி 3சிலி பெட்ரோல் டர்போ

கியர்பாக்ஸ்: 1.0லி – 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் 1.5லி – 6 ஸ்பீடு மேனுவல் / 7 ஸ்பீடு DCT

பவர் : 150bhp/115bhp

டார்க் : 25 kgm / 17.5kgm

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism